Published:Updated:

ஷேர் ரிசர்ச் ரிப்போர்டை படிப்பது எப்படி?

ஷேர் ரிசர்ச் ரிப்போர்டை படிப்பது எப்படி?

ஷேர் ரிசர்ச் ரிப்போர்டை படிப்பது எப்படி?

ஷேர் ரிசர்ச் ரிப்போர்டை படிப்பது எப்படி?

Published:Updated:
ஷேர் ரிசர்ச் ரிப்போர்டை படிப்பது எப்படி?

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அந்நிறுவனத்தின் பங்கினை வாங்கி, அதன் மூலம் கிடைக்கும் ரிப்போர்ட்டை வைத்துதான் தெரிந்து கொள்ள முடியும். ஒரு சில புரோக்கிங் நிறுவனங்கள் கம்பெனிகளின் செயல்பாடு, எதிர்காலம் பற்றிய ரிப்போர்ட்டுகளைக் கொடுத்தாலும், அவை சாமானியமாய் சிறு முதலீட்டாளர்களுக்கு கிடைத்துவிடாது.

ஷேர் ரிசர்ச் ரிப்போர்டை படிப்பது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ப்போது காலம் மாறிவிட்டது... இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் எல்லா கம்பெனிகளைப் பற்றிய ரிப்போர்ட்டுகளும் இன்டர்நெட்டில் நூற்றுக் கணக்கில் கொட்டிக்கிடக்கிறது. ஒரு கால கட்டத்தில் ரிப்போர்ட் கிடைப்பது பெரிய தலை வலியாக இருந்தது என்றால், இப்போது அளவுக்கு அதிகமாக கிடைப்பதால் அதுவே பெரும் குழப்பத்தை உண்டாக்கி விடுகிறது!

இந்நிலையில் ஒரு ரிசர்ச் ரிப்போர்ட்டை எப்படிப் படிப்பது; டன் கணக்கில் தகவல்கள் கொட்டி கிடந்தாலும் நமக்குத் தேவையான தகவல்கள் எவை எவை; ஒரு ரிப்போர்ட் சூசகமாக ஒரு தகவலைச் சொன்னால் அதை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தெல்லாம் தெரிந்திருந்தால்தான் நல்லது.

##~##
ஒரே கம்பெனியைப் பற்றி ஒரே சமயத்தில் பல்வேறு புரோக்கிங் நிறுவனங்களின்  ரிசர்ச் ரிப்போர்ட்டுகள் கிடைக்கும் போது, நாம் தலைசுற்றித்தான் போய்விடுகிறோம்... இதற்கு எளிதான ஒரு வழியைச் சொல்கிறார் மும்பையில் உள்ள இந்தியா நிவேஷ் நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் விக்னேஷ்... ''அத்தனை ரிப்போர்ட்டுகளையும் கண்டிப்பாகப் படித்து அதன்படி நடக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நம் தேவை என்ன என்று தெளிவாகத் தெரிந்தாலே போதும், பாதிக்கும் மேற்பட்ட ரிப்போர்ட்களை எளிதாகத் தவிர்த்துவிடலாம்.

நமக்கு என்ன தேவை என்பதை எப்படித் தீர்மானிப்பது என்ற கேள்வி எழலாம். நமக்கு எந்த பிஸினஸ் அல்லது எந்த துறை பற்றி ஓரளவுக் காவது தெரியுமோ, அந்த துறை சம்பந்தமான கம்பெனி ரிப்போர்ட்களை மட்டுமே தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். உதாரணமாக, நமக்கு ஐ.டி. துறை பிஸினஸ் பற்றி புரியாது என்றால், அந்த துறை சம்பந்தப்பட்ட ரிப்போர்ட் களைப் படிப்பதை தவிர்த்து விடுவதோடு, அத்துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்வ தையும் தவிர்க்கலாம்'' என்கிறார்.

ஷேர் ரிசர்ச் ரிப்போர்டை படிப்பது எப்படி?
ஷேர் ரிசர்ச் ரிப்போர்டை படிப்பது எப்படி?

சம்பந்தப்படாத துறை என்றால் அதை தவிர்த்துவிடுவது ஒரு வழி என்றால், மணி விஸார்ட் நிறுவனத்தின் இயக்குநர் வெங்கடேஷ் இன்னொரு வழியைச் சொல்கிறார்... இவர் சிங்கப்பூர் பிளாக் ரிவர் நிறுவனத்தின் முன்னாள் ஹெட்ஜ் ஃபண்ட் மேனேஜராகவும் இருந்தவர்.

''ஒரு சில ரிப்போர்ட்களைத் தவிர, பெரும்பாலான ரிப்போர்ட்கள் நேரடியாக அலசி ஆராயாமல் இன்டர்நெட்டில் கிடைக்கும் தகவல்களை அடிப்படையாக வைத்தே எழுதி இருப்பார்கள். கொஞ்சம் சிரத்தை எடுத்தால் நாமே அந்த தகவல்களை தேடிவிடலாம். அதன்பிறகு அந்த பிஸினஸின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை மட்டும் சரியாக கணித்து விட்டால் போதும்'' என்றவர், மேலும் சில தகவல்களையும் கூடுதலாகத் தெரிவித்தார்...

''ரிப்போர்ட்களைக் கொஞ்சம் ஆழமாகக் கவனித்துப் பார்த்தால், அவை அனைத்தும் லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளாகவே இருக்கும். காரணம், அந்தப் பங்குகளில் தான் சந்தையில் அதிகளவு வர்த்தகம் நடக்கும். ஸ்மால்கேப் பங்குகளில் பெரிய வர்த்தகம் நடக்காது. எனவேதான், பல நிறுவனங்கள் ஸ்மால்கேப் பங்குகள் பற்றி ரிப்போர்ட் தருவதில்லை'' என்று சொன்னார் வெங்கடேஷ்.

ஷேர் ரிசர்ச் ரிப்போர்டை படிப்பது எப்படி?
ஷேர் ரிசர்ச் ரிப்போர்டை படிப்பது எப்படி?

இது குறித்து எச்சரிக்கையான இன்னொரு விஷயத்தை சொன்னார் விக்னேஷ்.  

''குறுகிய காலத்திற்கென ஒரு பங்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தால், அந்த ரிப்போர்ட் உங்கள் கைக்கு வருவதற்குள்ளாகவே விலை சிறிதளவு ஏறி இருக்கும். சிறு முதலீட்டாளர்கள் துரத்தும் போது மற்றவர்கள் அந்தப் பங்கை விற்றுவிடலாம். இதனால், முதலீட்டாளர்கள் ஏமாற வாய்ப்பு உண்டு. எனவே, ஒரு நிறுவனத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு மட்டுமே ரிசர்ச் ரிப்போர்ட்டைப் படிக்க வேண்டுமே தவிர, அதை அடிப்படையாக வைத்து வாங்குவது குறித்து முடிவெடுக்கக் கூடாது'' என்றார்.  

ரிசர்ச் ரிப்போர்ட்களைப் பின்பற்றும்போது கவனமாக இருக்க வேண்டிய இன்னொரு விஷயத்தையும் சொன்னார் மணி விஸார்ட் வெங்கடேஷ். ''குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் பங்கு விலை தற்போது 150 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம்... 'அடுத்த ஓராண்டு காலத்தில் இது 200 ரூபாயைத் தொடும்’ என்கிறது ஒரு ரிப்போர்ட்.

இந்த ரிப்போர்ட்படி 150 ரூபாய் பங்கு 200 ரூபாய்க்குச் செல்லும் ஆனால், 150 ரூபாய் பங்கு 100 ரூபாய் அளவுக்கு குறைந்த பிறகே இலக்கு விலையான 200 ரூபாய்க்குச் செல்லும்.

ஷேர் ரிசர்ச் ரிப்போர்டை படிப்பது எப்படி?

இந்த தகவலை பெரும் பாலான ரிப்போர்ட்கள் சொல்வதில்லை! இதனால் சிறுமுதலீட்டாளர்கள் 150 ரூபாய்க்கு வாங்கி 100 ரூபாய்க்குச் சென்றவுடன், அவசரப்பட்டு அதை விற்று, நஷ்டம் அடைகிறார்கள். ரிப்போர்ட்டை நம்பி மட்டுமே அந்தப் பங்கில் முதலீடு செய்ததுதான் அதற்குக் காரணம்!'' என்கிறார்.

ஆக மொத்தத்தில், சம்பந்தப்பட்ட துறையை, நிறுவனத்தைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள மட்டுமே ரிப்போர்ட்டைப் படிக்க வேண்டும். முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்பதை நமது சொந்த முடிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சரியாக இருக்கும்.

- வா.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism