சூரிய வெளிச்சம், ஜன்னல் வழியே சுள் என்று அடித்தது. அப்படியே அந்த வெளிச்சம் படுக்கையில் படுத்திருந்த சம்பத் முகத்திலும் அடித்தது. கண்ணை சுருக்கிகொண்டு, சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தார். மணி காலை 6.45.

அவருக்கு உடம்பெல்லாம் அப்படி வலி. காலை மடக்கி நீட்டினார். கை, தோள் பட்டை என்று வலி எல்லா இடத்திலும் பரவி இருந்தது. கட்டிலில் இருந்து எழுந்திருக்க சலிப்பாக இருந்தது. இந்த வலியில் இருந்து எப்போ மீளப் போறோமோ என்று மனசு ஏங்கியது.

‘நேத்து 40100-க்கு வாங்கின ரெண்டு சில்வர் மெகா லாட் இறங்கி 39900-ல் முடிஞ்சு, ரூ.12,000 லாஸ்ல முடிஞ்சது. இன்னக்கி எப்படி ஓப்பன் ஆகுமோ?’

சம்பத், கொஞ்ச நேரம் அப்படியே கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தார். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. ‘ஒருவேளை சில்வர் (வெள்ளி) கேப் டவுனில் துவங்கினால்?’

இப்படி ஒரு எண்ணம் வந்த வுடன், சம்பத்துக்கு சட்டென்று முழிப்பு வந்தது. மணியைப் பார்த்தார்... 7.30.

சம்பத் சுடர்வேலுவுக்கு வயது 42. தனியார் நிறுவனம் ஒன்றில் கடைசியாக இரண்டு வருடம் வேலை பார்த்து, அது சரி வரவில்லை என்று வெளியே வந்துவிட்டார். அதற்கு முன்பு சில கம்பெனிகளில் ஒரு வருஷம், இரண்டு வருஷம் என்று வேலை பார்த்தார். ஒன்று, இவர் வேலையை விடுவார். அல்லது இவரை வேலையில் இருந்து அனுப்பிவிடுவார்கள்.

இனி யாரிடமும் கைகட்டி வேலை பார்ப்பதில்லை என்று முடிவெடுத்து, முழு நேர கமாடிட்டி டிரேடிங்கில் இறங்கிவிட்டார். கடந்த ஒரு வாரமாக டிரேடிங் செய்து வருகிறார். ஒரு நாள் லாபம்.... ஒரு நாள் நஷ்டம்... என்று ஓடிக் கொண்டு இருந்தது. அது இன்றும் தொடர்கிறது.

பல் தேய்த்து முடித்துவிட்டு, ‘மங்களம்.’...... என்று குரல் கொடுத்தார் சம்பத். அடுத்த இரண்டாவது நிமிடம், அவர் முன் ஆவி பறக்க சுடச்சுட காபி வந்தது.

காபியை குடித்துவிட்டு, காலை கடன்களை முடித்து விட்டு..... ‘மங்களம்’ என்று மீண்டும் குரல் கொடுத்தார். டைனிங் டேபிள் மேல், சுடச்சுட தட்டில் இட்லி, தேங்காய் சட்னி வந்தது. டேபிளுக்கு வந்த வேகத்திலேயே லபக் லபக் என்று முழுங்கினார்.

சடக்கென்று எழுந்தார். ஆபீஸுக்கு போவது போல் பேண்ட், சட்டையெல்லாம் போட்டுக் கொண்டு அடுத்த ரூமுக்கு போனார். அங்கிருந்த டேபிள், சேரில் ஒட்டியிருந்த தூசியைத் துணியினால் தட்டிவிட்டு, சேரில் உட்கார்ந்தார். டேபிள் மேல் இருந்த லேப் டாப்பை ஆன் பண்ணினார். மணியை பார்த்தார். 9.30.

டிவியை ஆன் செய்து, ஆங்கில பிசினஸ் சேனலை ஓடவிட்டார். கமாடிட்டி மார்க்கெட் 10 மணிக்கு

ஆரம்பிக்கும். டிவியில சில்வர் விலை ஏறும் என்று யாராவது சொல்வார்களா என்று பார்க்க ஆரம்பித்தார்.

டிவியில் லிப்ஸ்டிக் பெண்மணி ஒருவர், கமாடிட்டி நிபுணர் மதேஷ் பாதுஷாவை நேர்காணல் செய்துகொண்டிருந்தார். ‘‘பாதுஷா.... இன்னக்கி கமாடிட்டி மார்க்கெட் எப்படி இருக்கும்.? குறிப்பா, புல்லியன் மார்க்கெட் பத்தி சொல்லுங்களேன்’’ என்றார்.

‘‘நேத்திக்கு கோல்ட், சில்வர் இரண்டும் இறங்கிதான் முடிஞ்சது. டாலரும் நேத்து ரொம்ப ஸ்டிராங்காதான் முடிஞ்சி இருக்கு. அதனால இன்னக்கி கோல்ட், சில்வர் இரண்டும் நல்லா இறங்கத்தான் வாய்ப்பு இருக்கு’’ என்றார் பாதுஷா.

சம்பத்துக்கு சுளீர் என்றது. லிப்ஸ்டிக் பெண்மணி டெக்னிக்கல் எக்ஸ்பர்ட்-ஆன துக்காராமை அடுத்து நேர்காணல் செய்யத் தொடங்கினார்.

‘‘இப்ப கோல்ட், சில்வரோட நிலைமை என்ன, நேத்து இறங்கி முடிஞ்சி இருக்கு. இன்னக்கி என்ன நடக்கலாம்?’’ என்று கேட்டார் அந்தப் பெண்மணி.

‘‘சார்ட் என்ன சொல்லுதுனா, கோல்ட், சில்வர் ரெண்டும், நேத்து நல்லா இறங்கி இருக்கு. அதாவது, ஆர்.எஸ்.ஐ.படி பார்க்கும்போது, எல்லாமே இப்ப ஓவர் சோல்ட் இடத்துக்கு வந்திடுச்சி. அதிலும் சில்வர் ரொம்ப இறங்கிடுச்சி. அதனால எப்ப வேணுமின்னாலும் ஒரு புல்பேக் ரேலி வரலாம்’’ என்றார்.

‘‘சார், சிம்ப்ளிலா சொல்லுங்க, கோல்ட், சில்வர் விலை ஏறுமா, இறங்குமா, வாங்கலாமா, விக்கலாமான்னு சொல்லுங்க’’ என்று கேட்டார்.

‘‘கோல்ட், சில்வர் ரெண்டும் ஏறும். அதிலும் குறிப்பா, சில்வர் ரொம்ப இறங்கி இருக்கிறதால, அது கோல்டைவிட ரொம்ப ஸ்டிராங்க ஏற வாய்ப்பிருக்கு’’ என்றார் உறுதியாக.

சம்பத்துக்கு, மனதில் பால் வார்த்தது போல் இருந்தது. டிவியில் தெரிந்த துக்காரமை பாசத்துடன் பார்த்தார்.

மணி 10.00. டிவி சேனலில் மணி அடித்தவுன் கமாடிட்டி மார்க்கெட் வர்த்தகமாகத் தொடங்கியது. சம்பத்துக்கு மனதில் படபடவென்று அடிக்க ஆரம்பித்தது. கோல்ட், சில்வர், குரூட், நிக்கல்... விலைகள் மினுக் மினுக் என்று மாறிக் கொண்டே இருந்தன. சம்பத்தின் கண்கள் சில்வர் விலை என்னவாயிற்று என்று தேட ஆரம்பித்தது.

சில்வர்... சில்வர்... சில்வர்... விலை.... 39.......... 39........ 39700. சில்வர் ஒரு கேப் டவுன்... நேற்றைய முடிவு விலையைவிட 200 புள்ளிகள் இறங்கி துவங்கியுள்ளது.

சம்பத்துக்கு இரண்டு சில்வர் மெகாவுக்கு, இன்றைக்கு மட்டும் ரூ.12,000 கூடுதல் இழப்பு. சம்பத்துக்கு மனசு பகீரென்றது. நேத்து ரூ.12,000 நஷ்டம், இன்றைக்கு ரூ.12,000 நஷ்டம், மொத்தம் ரூ.24,000 நஷ்டம்.

நெற்றியில் சூடு படக்கென்று பற்றிக்கொண்டது. தலை கொஞ்சம் லேசாக கிறுகிறு என்று இருந்தது. இப்ப என்ன பண்றது? இன்னும் இறங்கினால்...? மனதில் பயம் அதிகமானது.

சில்வர் விலை 39700-லிருந்து மெதுவாக இறங்க ஆரம்பித்தது. 39690... 36680... 36670....

அய்யோ, நஷ்டம் அதிகமாகுதே! சம்பத்துக்கு படபடப்பு கூடியது. ‘வித்துடு, வித்திடு!’ சம்பத் டக்கென்று இரண்டு மெகா லாட்டையும் விற்றார். அப்போது விலை ரூ.39,650. இன்றைய நஷ்டம் ரூ.12,000-த்தில் இருந்து ரூ.15,000-மாக மாறியது நேத்து ரூ.12,000 நஷ்டம். இன்று ரூ.15,000 நஷ்டம். ஆக மொத்தம் ரூ.27,000 நஷ்டம்.

சம்பத்துக்கு கண்ணெல்லாம் கொஞ்சம் இருட்டிக்கொண்டு வந்தது. கூண்டில் மாட்டிய எலி போல பரிதாபமாக லேப்டாப் ஸ்கீரினை பார்த்துக்கொண்டு இருந்தார். மனதில் வலித்தது. இனி என்ன செய்ய, என்ன செய்ய......

திடீரென்று மனதில் ஒரு தைரியம் பிறந்தது. சினிமாவில் வில்லன்கிட்டே செமர்த்தியாக அடி வாங்கி மயங்கி விழுந்தபின், திடீரென்று ஹீரோ கண் முழிப்பாறே அதைப் போன்று மீண்டும் எழுந்தார் சம்பத்.

சில்வர் மெகா விலை 39640.... 36630....36610..... என்று குறைந்துகொண்டே இருந்தது. டக்கென்று லேப் டாப்பில் கை வைத்தார். சில்வர் நான்கு மெகா லாட் தைரியமாக வாங்கினார். விலை 39600.

சில்வர் மெதுவாக ஏற ஆரம்பித்தது. 39620....... 39630...... 39650.....

சம்பத் மனதில் சின்னதாக ஒரு மகிழ்ச்சி வந்தது. உள்ளே ஓடிய அந்த வலியிலும், முகத்தில் ஒரு மகிழ்ச்சி. புன்னகை.

மனதில் எண்ணம் ஓடியது. கமான் சில்வர், கமான். விலை 39660, 39670.... 39690.... 39700.... என்று இறங்கியது.

சம்பத் கைகள் கம்ப்யூட்டரில் பாய்ந்தது. நான்கு லாட் சில்வர் மெகா 39700 விற்றாகிவிட்டது. சில்வர் மெகா 39600-ல் நான்கு லாட் வாங்கி, 39700-ல் விற்றதில் ரூ.12,000 லாபம். சம்பத் மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது.

‘‘இப்ப நஷ்டம் கொஞ்சம் குறைஞ்சிடிச்சி. மொத்தம், ரூ.27,000 நஷ்டத்தில் ரூ.12,000 குறைச்சிடுச்சி. மீதி ரூ.15,000 நஷ்டம் இருக்கு. இப்படியே பாத்து பாத்து நஷ்டத்தைக் குறைக்கணும்.’’

சில்வர் விலை 39730.... 39740 .... பின் வேகமாக இறங்கியது. விலை 39660... 39640... 39620... சம்பத் மூளைக்குள் பல்ப் எரிய ஆரம்பித்தது. விலை மீண்டும், முன்பு வாங்கிய இடத்துக்கே வந்தது.

ரெடி சம்பத், ரெடி. இன்னும் ஒரு வாய்ப்பு வரும்போல இருக்கிறது. விலை 39600.... சம்பத் கை லேட்டாப்பில் உள்ளே மடாரென்று புகுந்தது. ‘வாங்கு, வாங்கு, சில்வர் மெகா!’ எண்ணிக்கை என்ற இடம் வரும்போது, சற்றே தயங்கினார், பின்...... ‘போடு.... போடு.... இந்த முறையும் நாலு லாட்டாக வாங்கு!’.

போட்டார். டப்... டப்... என்று என்டர்கீயைத் தட்ட, இப்போது நாலு லாட் சில்வர் மெகா 39600-க்கு வாங்கியாகிவிட்டது.

சம்பத், சில்வர் விலையையே உற்று பார்த்துக்கொண்டு இருந்தார். மகாபாரதத்தில் அர்ச்சுனன் குருவியை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த மாதிரி வெள்ளியின் விலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்.

சில்வர் விலை மேல்நோக்கி நகர ஆரம்பித்தது. வாங்கிய விலை ரூ.39600.

இப்போதைய விலை ரூ. 39620..... 39640.... சம்பத் கை துறுதுறுவென்று இருந்தது. விலை 39660.... 39680....

விக்கலாமா, வேண்டாமா? மனம் துறுதுறுத்தது. விலை 39660... 39680... விலை 39700

போனக்கூட போதும் வித்துடலாம் என்று முடிவெடுத்து விற்பதற்குள் விலை 39800-யைத் தொட்டிருந்தது. ஒரு மெகா லாட்டுக்கு 6,000 ரூபாய் வீதம் மொத்தம் 24,000 ரூபாய் லாபம். உய்ய்ய்ய்... என்று சம்பத்தின் மனசுக்குள் விசில் சத்தம் பறந்தது.

இன்னக்கி நாம நரி முகத்தில தான் முழுச்சி இருக்கணும் என்று நினைத்தார் சம்பத். லாபத்தை நினைக்க நினைக்க அவருக்கு இனிப்பாக இருந்தது. ஆனால், இந்த லாபம் நிலைக்குமா?

பாடம்: டிரேடிங்கில் உறுதியான லாபம் கிடைக்கும் என்று நம்பி இறங்கி செய்யக்கூடாது. அப்படி நம்பி இறங்கினால், நஷ்டம் வரும் போது நம்மால் அதை தாங்கிக் கொள்ள முடியாது!

(அடுத்த இதழில் பார்க்கலாம்)