?என் பெற்றோரின் பெயரில் கனரா வங்கியில் 9.10% வட்டி விகிதத்தில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்திருந்தேன். இப்போது வங்கி கொடுக்கிற வட்டி விகிதம் குறைந்து விட்டதால் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. 9 - 10% வரை வட்டி தருகிற நல்ல பாதுகாப்பான முதலீடு எது?

மோகன் ராஜ்,

எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர்.

“வங்கிகளில் உள்ள சேமிப்பு மற்றும் வைப்புநிதி போன்றவற்றுக்கு மாற்றாக அதைவிட சிறிது அதிக வருமானம் தருகிற, ரிஸ்க் குறைவான முதலீட்டுத் திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்டில் உள்ளன. பிர்லா சன்லைஃப் மீடியம் டேர்ம் அல்லது ஷார்ட் டேர்ம் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி கார்ப்பரேட் ஃபண்ட், ஐசிஐசிஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்தால் 9% முதல் 12% வரை வருமானம் கிடைக்கும்.”

?ஒரு நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை பூா்த்தி செய்யாதபோது, அந்த நிறுவனத்தின் பங்கு எவ்வளவு விலை இறங்கும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

பால்ராஜ்,

க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட், ருபீடெஸ்க் கன்சல்டன்சி.

“பொதுவாக, ஒரு நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில், அதன் பங்குகள் சுமார் ஒரு வார காலம் முன்னதாகவோ அல்லது முந்தைய நாளிலிருந்தோ ஏறத் தொடங்கிவிடும். அப்போது அதன் தேவைப்பாடு இயல்பு நிலையிலிருந்து சற்று அதிகமாக காணப்படும். அதற்கேற்ப அதன் விலையும் சிறிது சிறிதாக ஏறிக்கொண்டிருக்கும். காலாண்டு முடிவுகள் வெளியாகும் நாளன்று அதன் முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதபோது தேவை மற்றும் விநியோக (Demand & Supply) அடிப்படையில் இறங்கத் தொடங்கிவிடும். இந்த இறக்கம் என்பது அந்த முடிவுகளின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.

பெரும்பாலும் அதன் எதிர்பார்ப்புக்கேற்ப எவ்வளவு விலை ஏறியதோ, அதே அளவுக்கு இறங்கவும் வாய்ப்புண்டு. ஒருவேளை அந்த முடிவுகள் மிக மோசமானதாக இருந்தால், அதன் பாதிப்புக்கேற்ப பங்கு விலை இன்னும் அதிகமாக கீழிறங்கும். ஆனால், இந்த விலைச் சரிவு நிலையானதல்ல. தவிர, இந்த விலைச்சரிவை அளவீடு செய்ய துல்லியமான அளவுகோல்களும் கிடையாது. நீண்டகால முதலீடு செய்பவர்கள் வெறும் காலாண்டு முடிவுகளை மட்டும் வைத்து அந்த நிறுவனத்தின் எதிர்காலத்தை முடிவு செய்வது சரியாக இருக்காது. சுமார் 5 வருட கால வருடாந்திர முடிவுகளை வைத்து ஆராய்ந்த பின்னரே ஒரு நிறுவனத்தின் முழுமையான செயல்திறனைக் கணிக்க முடியும்.”

?நான் தற்போது நான்கு கிரவுண்ட் நிலம் வாங்கினேன். அந்த நிலத்தில் இன்னும் மூன்று வருடங்களுக்கு கட்டடம் கட்டப் போவதில்லை. காலி நிலத்துக்கு வரி கட்ட வேண்டி வருமா?

செந்தில்,

சிஏ.ஜி.என்.ஜெயராம், ஆடிட்டர், கார்த்திகேயன் & ஜெயராம் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ், ஈரோடு.

“புதியதாக வாங்கியுள்ள 4 கிரவுண்ட் நிலத்துக்கு 10.4.15 முதல் செல்வ வரி சட்டம் 1957 (Wealth tax act 1957) ரத்து செய்யப்பட்டதால் வரி ஏதும் இல்லை. ஆனால், தாங்கள் வாங்கியுள்ள சொத்து, மாநகராட்சிகள், சிறப்பு தர நகராட்சிகள் (A GRADE) அல்லது முதல் தர நகராட்சிகள், மாநகராட்சிகள் (B GRADE) அல்லது இரண்டாம், மூன்றாம் நிலை நகராட்சிகள், ஊரகப் பகுதிகள் (C GRADE) இவற்றில் எங்கு அமைந்திருக்கிறதோ, அதைப் பொறுத்து மாநகராட்சி அல்லது நகராட்சிக்கு காலி இட வரி செலுத்த வேண்டும்.”

?என் வயது 26. மாத வருமானம் ரூ.34,000. என்னால் மாதம் ரூ.5,000 முதலீடு செய்ய முடியும். நீண்ட காலத்தில் நல்ல வளர்ச்சி அடையக்கூடிய டாக்ஸ் சேவிங் ஃபண்ட் அல்லது பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகளை பரிந்துரை செய்யுங்கள்

கார்த்திகேயன்,

ஸ்ரீகாந்த், நிதி ஆலோசகர்.

“உங்களது வயது மற்றும் முதலீட்டு தேவையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, நீங்கள் பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி திட்டங்களான ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட், பிர்லா சன் லைஃப் எம் என் சி ஃபண்ட், எல் அண்ட் டி இந்தியா புரூடென்ஸ் ஃபண்டில் (பேலன்ஸ்டு ஃபண்ட்) எஸ்ஐபி முறையில் பிரித்து முதலீடு செய்தால் நீண்ட காலத்தில் நல்ல பலனை பெற முடியும்.”

?பங்கு வர்த்தகம் செய்யும்போது பல விதமான கட்டணங்களைக் கட்ட வேண்டும் என்கிறார்கள். என்னென்ன கட்டணங்களைக் கட்ட வேண்டும்?

சண்முகம்,

தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

“பங்கு வர்த்தகம் செய்யும்போதும், நீண்ட காலத்தில் நீங்கள் பங்குகளை வாங்கி, விற்கும்போதும், நீங்கள் பங்கின் விலையைத் தாண்டி செய்யவேண்டிய செலவுகளை சொல்கிறேன்.

1.செபி டேர்ன்ஓவர் டாக்ஸ் - 0.002% (உங்கள் டேர்ன்ஓவர் மீது விதிக்கப்படும் டாக்ஸ்: (வாங்கிய / விற்ற பங்கின் விலையை, வாங்கிய / விற்ற பங்குகளின் எண்ணிக்கையோடு பெருக்கினால் வரும் தொகைதான் டேர்ன்ஓவர்), 2. எக்ஸ்சேஞ்ச் டிரான்சாக்ஷன் டாக்ஸ் - 0.0015%,3. ஸ்டாம் டியூட்டி - 0.001%, 4. புரோக்கரேஜ் - 0.01% - 0.05% மாறுபடும். நீங்கள் செலுத்தும் புரோக்கரேஜ் மீது விதிக்கப்படும் டாக்ஸ், 5. சர்வீஸ் டாக்ஸ் - 14%,6. சுவாச்பாரத் செஸ் - 0.5%., 7. கிரிஷி கல்யாண் செஸ்- 0.5% (ஜூன் 2016-ல் இருந்து).மேற்சொன்ன அத்தனை டாக்ஸும் வசூலிக்கப்பட்ட விவரங்கள், உங்களுக்கு புரோக்கர் அனுப்பும் கான்ட்ராக்ட் நோட்டில் தெளிவாக குறிக்கப்பட்டிருக்கும். வாங்கும்போது இந்த தொகை, நீங்க கட்டவேண்டிய பணத்தில் சேர்க்கப்படும். விற்கும்போது இந்த தொகை, உங்களுக்கு வரவேண்டிய பணத்தில் இருந்து கழித்துக்கொள்ளப்படும்.”

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.