பிசினஸில் ஜெயிப்பதற்கு தனிப்பட்ட குணாதிசயங்கள் (Personal traits), உள்ளார்ந்த அறிவுத்திறன் (Native Intelligence) ஆகியவை மட்டும் இருந்தால் போதாது; வேறு சில விஷயங்களும் வேண்டும் என்று சொல்லி இருந்தேன். அந்த வேறு சில விஷயங்களில், தலைமைப் பண்புகள் (Leadership traits) சார்ந்த சில விஷயங்கள் மிக முக்கியமாக இருக்க வேண்டும்.

நீண்ட கால சிந்தனை வேண்டும்!

பிசினஸின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு, இன்றைக்கு நாம் ஆரம்பிக்கும் பிசினஸ் 50 ஆண்டுகள், 100 ஆண்டுகள் என காலம் கடந்து நிற்க வேண்டும் என்கிற சிந்தனை நிச்சயம் வேண்டும். இன்றைக்கு நாம் ஆரம்பிக்கும் பிசினஸ் கொஞ்சம் மெதுவாக வளர்ந்தாலும், நீண்ட காலத்தில் அது நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்க வேண்டும். குறுகிய காலத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டால் பிசினஸில் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியாது.

இன்றைக்கு 100 ஆண்டுகள் தாண்டி நிற்கிற நிறுவனங்களைப் பாருங்கள். அந்த நிறுவனங்கள் தரத்துக்கும், வாடிக்கையாளர் சேவைக்கும், காலத்துக்கேற்ப மாறும் தன்மைக்கும் முக்கியத்துவம் தருகிற நிறுவனங்களாக இருந்திருக்கும். ஆனால், வேகமாக வளரத் துடிக்கும் நிறுவனங்கள் தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவையைவிட வேறு சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கும்.

உதாரணமாக, சில நிறுவனங்கள் வியாபாரத்தைப் பெருக்குவதற்கு அதிகமான தள்ளுபடியைத் தரலாம். தள்ளுபடி தந்து வியாபாரம் செய்வது தவறில்லை. ஆனால், தள்ளுபடி தந்துகொண்டே போனால், லாபம் குறையவே செய்யும். எனவே, அதிகமான லாபத்துக்கு என்ன வழி என்பதைக் கண்டறிந்து, அதன் படி பிசினஸை வளர்த்தெடுப் பதன் மூலம் நீண்ட காலத்தில் நாம் நிலைத்து நிற்க முடியும்.

வேகமும், பாசிட்டிவ் அணுகுமுறையும் வேண்டும்!

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு வேகமும், பாசிட்டிவ்வான சிந்தனையும் வேண்டும். நீண்ட காலம் நிலைத்து நிற்கிற மாதிரியான நிறுவனத்தைக் கட்டி எழுப்பப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஆமை வேகத்தில் செயல்படக் கூடாது. பிசினஸில் புதிதாக உருவாகும் வாய்ப்புகளை எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதைக் குறித்து வேகமாக முடிவெடுக்க வேண்டும். நிறுத்தி, நிதானமாக யோசித்தாலும், காலத்தில் முடிவெடுக்காமல் ஜவ்வு மாதிரி இழுத்து செயல்பட்டால், நம்மைத் தேடி வரும் வாய்ப்புகள் கைநழுவிப் போய்விடும்.

அதே போல, புதிய வாய்ப்புகள் வரும்போது அதை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை நமக்குள் இருப்பதுடன் அந்த நம்பிக்கையுடன் நாம் உழைக்கவும் செய்ய வேண்டும். அந்த வேலை நடக்காது; அது சரிப்பட்டு வராது; அவர்களை நம்பி எந்தவிதமான பயனும் இல்லை என்று அவநம்பிக்கை யுடன் எப்போதும் பேசிக் கொண்டிருக்கக் கூடாது.

வேண்டும் வித்தியாசமான செயல்பாடு!

வித்தியாசம்தான் ஜெயிக்கும் என்கிற நம்பிக்கை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அவசியம் வேண்டும். இந்தத் தொழில்தான் என்றில்லை எந்தத் தொழிலாக இருந்தாலும், அதை எப்படி வித்தியாசமாக செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும். ஊரில் உள்ள 10 இட்லிக் கடை களுடன் 11-வது இட்லிக் கடையை வைத்தாலும், 24 மணி நேரமும் சுடச்சுட இட்லி, 4 சட்னிகளுடன் இட்லி, 5 பொடி களுடன் இட்லி என ஏதாவது ஒரு வகையில் உங்கள் தயாரிப்பை வித்தியாசப்படுத்தித் தந்தால், மக்கள் உங்களை கவனிக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் காட்டுகிற வித்தியாசம் ஆரம்பத்தில் சிலருக்கு பிடிக்கும். பிற்பாடு பலருக்கும் பிடிக்க அதுவே காரணமாக அமையும்.

ஐடியாக்களின் அபார சக்தி!

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஐடியாக்களின் அபார சக்தியை உணர்ந்தவர் களாக இருக்க வேண்டும். வித்தியாசமாக யோசித்து நாம் பெறுகிற ஐடியாக்கள்தான் நம் பிசினஸை பெரிய அளவில் வளர்க்கும். இந்த ஐடியாக்கள் ஐந்து, பத்து என்கிற அளவில் நமக்கு இருக்கக் கூடாது. 50, 100 என ஒரு ஐடியா வங்கியே நம் மனதில் இருக்க வேண்டும்.

காரணம், நாம் ஒரு ஐடியாவை செயல்படுத்தத் தொடங்கியவு டன், மற்றவர்கள் அதை காப்பி அடித்துவிடுவார்கள். நம்மிடம் மிகச் சில ஐடியாக்களே இருந்தால், நமக்கும் மற்றவர் களுக்குமான வித்தியாசம் இல்லாமலே போய்விடும். இந்த ஆபத்தைத் தடுக்கவே நிறைய ஐடியாக்கள் நம்மிடம் இருக்க வேண்டும்.

புதுப்புது ஐடியாக்களுக்கு எங்கே போவது என்கிறீர்களா? உங்கள் வாடிக்கையாளர்களுடன், உங்கள் பணியாளர்களுடன் என அனைவருடனும் பேசுங்கள். வித்தியாசம் பார்க்காமல் அனைவருடனும் பேசினால், உங்களுக்கு புதிய ஐடியாக்கள் மழையாக வந்து கொட்டும்.

பணம் ஒரு பிரச்னை அல்ல!

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பணம் ஒரு பிரச்னை என்று எப்போதும் நினைக்க மாட்டார்கள். பல சமயங்களில் பிசினஸ் செய்பவர்கள் பணத்துக்காக அலைவதில் தங்கள் பெரும் பகுதி நேரத்தை செலவு செய்து கொண்டிருப்பார்கள். காரணம், பணத்தைத் திரட்டுவதற்கான புதிய வழிமுறைகள் அவர்களுக்கு தெரியாமலே இருந்திருக்கும். உதாரணமாக, பணத்தை முதலீடு செய்ய நினைக்கும் நம் நண்பர் ஒருவரை ஏன் பார்ட்னராக சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் ஆரம்பித்து, பணத்தைத் திரட்ட பல வழிகள் உள்ளன. இவற்றைப் பற்றி யோசித்து ஐடியாக்களை உருவாக்கினால், பணத்துக்காக எந்த நேரமும் அலைய வேண்டிய அவசியம் நமக்கு இருக்காது.

பணத்தின் அருமை தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்!

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பணத்தின் அருமை தெரிந்தவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்துக்கு எவ்வளவு செலவழிக்கிறோம் என்று துல்லியமாக தெரிந்து வைத்திருப்பர்கள். இவ்வளவு பணம் செலவழித்தால், இவ்வளவு லாபம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்திருப்பார்கள். பணம்தான் நிறைய இருக்கே என்று அதை எப்போதும் அள்ளிவிடக் கூடாது.

நேரத்தின் அருமை தெரிந்து செயல்படுவது முக்கியம்!

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் நேரத்தின் அருமையை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்களாக இருப்பார்கள். பணத்தின் முக்கியத்துவத்தை அறிந்த அளவுக்கு நமக்கு காலத்தின் முக்கியத்துவம் தெரிவதில்லை. சில சமயம் அஜாக்கிரதையாக பணத்தை இழந்துவிட்டு, பிற்பாடு அதை யோசித்து யோசித்து செலவழிக்கிறோம். ஆனால், காலத்தை பல சமயம் தவறவிட்ட பின்னும், அதே தவறையே திரும்பத் திரும்ப செய்கிறோம்.

பெரிய வெற்றியைப் பெற்ற ஜாம்பவான்களைக் கூர்ந்து கவனித்தால், அவர்கள் தனது நேரத்தை மட்டுமல்ல, மற்றவர்களின் நேரத்தையும், குறிப்பாக, பணியாளர்களின் நேரத்தை மதித்து நடக்கிற தன்மையை பெற்றவர்களாகவே இருப்பார்கள்.

நிர்வாகத் திறமை (High on Execution Capability)

தலைமைப் பொறுப்பில் இருக்கிறவர்களுக்கு நிர்வாகத் திறமை மிக அதிகமாக இருக்க வேண்டும். இந்த வேலையை இவரிடம் கொடுத்தால், சரியாக முடித்துத் தருவார் என்பதை கச்சிதமாக முடிவெடுக்கும் திறமை வேண்டும். எந்த வேலையை யாரிடம் ஒப்படைத்திருந்தாலும் அந்த வேலை சரியாக நடக்கிறதா என குறிப்பிட்ட இடைவெளிக் கொருமுறை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வேலை எங்காவது தடைபடும் பட்சத்தில் அதற்கான மாற்றுத் திட்டத்தையும் வைத்திருக்க வேண்டும். நான் ஏற்கெனவே சொன்ன 4 டிசிப்ளின் ஆஃப் எக்ஸிக்யூஷன்படி (4DX) நடந்தால், நம் இலக்குகளை நம்மால் நிச்சயம் அடைய முடியும்.

கோட்பாடு (Values)

நிறுவனத்தை நீண்ட காலத்துக்கு தொடருவதற்கான கோட்பாடுகளை உருவாக்க வேண்டியது மிக முக்கியம். இந்த கோட்பாடுகளை நம் அலுவலக ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். அந்த கோட்பாடுகளை நாம் பின்பற்று வதுடன், நமது ஊழியர்களும் பின்பற்றும் வகையில் வழிநடத்த வேண்டும். நல்ல கோட்பாட்டை பின்பற்றுகிற அதே நேரத்தில், தவறான மதிப்பீடுகளை களையவும் தயங்கக்கூடாது.

கோட்பாடுகள் எப்படிப்பட்ட தாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக, தவறான தகவல் எதுவும் தர மாட்டோம் என்பதை ஒரு நிறுவனம் தனது கோட்பாடாகக் கொள்ளலாம். நான் சொன்ன இந்த விஷயங்கள் அனைத்தையும் கர்மசிரத்தையாகப் பின்பற்றி னால் பிசினஸில் ஜெயிப்பது நிச்சயம்!

இந்திய நிறுவனங்களில் ஆர்.ஓ.இ உயர்கிறது!

இந்திய நிறுவனங்களின் ரிட்டன் ஆன் ஈக்விட்டி (Return On Equity - ROE) என்று அழைக்கப்படும் ஆர்.ஓ.இ அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது என்று லண்டனைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு வங்கியான ஹாங்காங் ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் (HSBC) தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

ஆர்.ஓ.இ என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகள் மூலம் திரட்டிய பணத்திலிருந்து எவ்வளவு லாபம் சம்பாதிக்கிறது என்பதை சொல்லும் ஒரு அளவீடு. கடந்த 2007-ம் ஆண்டுக்குப்பிறகு இந்தியாவின் ஆர்.ஓ.இ 20 சதவிகிதத்திலிருந்து சரிந்து 13 சதவிகிதமாக குறைந்தது. அதன்பிறகு 2015-ல் இந்தியாவின் ஆர்.ஓ.இ 14.1 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. அதாவது, 15 சதவிகிதத்தில் நிலைபெற்று வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.