வாழ்வாதாரத்துக்கு தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் பெரும்பாலான சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள்(எஸ்எம்இ) எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை ‘நிதி’ ஆதாரம்தான். எந்தவொரு தொழிலிலும் வெற்றியடைய வேண்டுமென்றால் நிதி நிலைமை, எப்போதும் நிலையாக இருப்பது மிக முக்கியம்.

அதற்கு உதவக்கூடிய ஒன்று இன்ஷூரன்ஸ். பொதுவாகவே அனைத்து பிசினஸ்களுக்கும் இன்ஷூரன்ஸ் அவசியம். அதிலும் எதிர்பாராத பேரிழப்புகளைத் தாங்குவதற்கு எஸ்எம்இகளுக்கு இன்ஷூரன்ஸ் மிக மிக அவசியம்.

ஏனெனில் எஸ்எம்இ்கள் பெரும்பாலும் சொத்துகளை விற்றோ கடன் வாங்கியோ தொழில் தொடங்குகிறார்கள். நஷ்டத்தைத் தவிர்த்து தொடர் வளர்ச்சியைச் சாத்தியப்படுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உண்டு. எனவே எஸ்எம்இகளுக்கு இன்ஷூரன்ஸ் எந்தளவுக்கு முக்கியம் என்பதையும், எஸ்எம்இ இன்ஷூரன்ஸை பொறுத்தவரை என்னவெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதையும் பிர்லா சன்லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் எஸ்எம்இ பயிற்றுநர் விஜய்குமார் சிலிகுரி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“ஒரு நிறுவனத்தின் முதலாளி், அவரின் குடும்பம், ஊழியர்கள், அவர் தம் குடும்பங்கள், வாடிக்கையாளர்கள்

என அனைவரையும் இணைக்கும் விஷயம்தான் இன்ஷூரன்ஸ். எனவே ஒரு பிசினஸ் பாதிக்கப்பட்டால் யார் யாருக்கெல்லாம் பாதிப்பு வருமோ அவர்களையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இன்ஷூரன்ஸ் பாலிசிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சரியான இன்ஷூரன்ஸ் பாலிசிகள்தான் இவர்கள் அனைவரின் நிதி சார்ந்த பாதுகாப்பையும் எதிர் காலத்தையும் உறுதி செய்யும்.

யாருக்கு என்ன இன்ஷூரன்ஸ்?

என்ன பிசினஸ், முழு ஓனரா, பார்ட்னர்ஷிப்பா, மதிப்பு மற்றும் முதலீடு எவ்வளவு, எதிர்கால தேவை, ரிஸ்க் ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொன்றிற்குமான இன்ஷூரன்ஸ் பாலிசி, பிரீமியம் வேறுபடும். எந்தவொரு இன்ஷூரன்ஸ் நிறுவனமாக இருந்தாலும், இதுதான், இவ்வளவுதான் பிரீமியம் என்று கூறினாலோ, அட்டவணையாக வழங்கினாலோ உஷாராக இருங்கள். எப்படி மருத்துவர் நோயாளிகளைச் சோதிக்காமலேயே மருந்துகளைப் பரிந்துரைக்க முடியாதோ, அப்படித்தான் இன்ஷூரன்ஸும் அதற்கான பிரீமியமும். நிறுவனத்தை பார்வையிடாமல், அது பற்றிய விவரங்கள் தெரியாமல் முடிவு செய்வது தவறாகும்.

ஒரு எஸ்எம்இ தன்னுடைய 10 கோடி ரூபாய் பொருள் அபாயத்தில் இருக்கிறது என்றால், அதில் ரூ. 10 லட்சத்துக்கு மட்டும் இன்ஷூரன்ஸ் எடுப்பது என்பது சரியான முடிவு அல்ல. இன்ஷூரன்ஸின் பலன், எடுப்பவரின் தேவையை முழுமையாக நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும். தனிநபர் தேவைகளுக்கான இன்ஷூரன்ஸ், பிசினஸ் தொடர்பான ரிஸ்க்குகளுக்கு இன்ஷூரன்ஸ், சொத்துகளுக்கான இன்ஷூரன்ஸ் என தேவைகள் சார்ந்து இன்ஷூரன்ஸ்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

கீமென் மற்றும் பார்ட்னர்ஷிப் இன்ஷூரன்ஸ்!

நிறுவனரோ அல்லது அதி முக்கிய ஊழியரோ, அவரால் ஓரு பிசினஸ்க்கு ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிப்பதற்காக எடுக்கப்படும் இன்ஷூரன்ஸ் கீமென் இன்ஷூரன்ஸ். இந்த இழப்பு அந்த நபர் இறந்தாலோ அல்லது பிசினஸில் இருந்து வெளியேறினாலோ ஏற்படலாம். பார்ட்னர்ஷிப்பில், ஒரு பார்ட்னர் இறக்க நேரிட்டாலோ அல்லது பிசினஸை விட்டு வெளியேறினாலோ பார்ட்னர்களின் குடும்பத்திற்கு எந்தப் பிரச்னையும் வராமல் இருக்கும் வகையில் பார்ட்னர்ஷிப் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.

சொத்துகளுக்கான இன்ஷூரன்ஸ்!

இயற்கைச் சீற்றங்கள், விபத்துகள் போன்றவற்றால் நிறுவனத்தின் சொத்துகள் ஏற்படுத்தும் பிசினஸ் நஷ்டத்தை ஈடுகட்ட இந்த இன்ஷூரன்ஸ் உதவியாக இருக்கும். ஆனால் அவற்றின் மதிப்பும், அவை ஏற்படுத்தக்கூடிய இழப்பின் மதிப்பும் சரியாகக் கணக்கிடப்பட்டு அதற்கேற்ப இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட வேண்டும். உதாரணமாக, ரூ. 10 கோடி மதிப்புள்ள ஓர் இயந்திரத்துக்கு பிரீமிய செலவைக் குறைப்பதற்காக ரூ. 5 கோடிக்குப் பாலிசி எடுத்தால், பாதிப்பு ஏற்படும்போது அதற்கான இழப்பீடும் குறைவாகவே கிடைக்கும்.

தீ விபத்து மற்றும் சிறப்பு அபாய காப்பீடு!

பெரும்பாலான அசம்பாவிதங்கள் தீ காரணமாகவே நடப்பதாலும், இழப்பு அதிகம் என்பதாலும் இந்த இன்ஷூரன்ஸ் கட்டாயம் எடுக்க வேண்டும். இதில் நஷ்டத்திற்கு சரியான க்ளெய்மைப் பெற, நாம் சமர்ப்பிக்கும் நஷ்டக் கணக்கை உறுதி செய்யும் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்க வேண்டும். மேலும் பாலிசி எடுக்கும்போதே எந்த மாதிரியான அபாயங்களுக்கு இழப்பீடு தரப்படும் என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

திருட்டுக்கான இன்ஷூரன்ஸ்!

அலுவலகத்தில் திருட்டு நடப்பதாலும், திருட்டு நடக்கும் போது பொருட்கள் உடைக்கப் படுவதாலும் ஏற்படும் இழப்புகளை இந்த இன்ஷூரன்ஸ் மூலம் சமாளிக்க முடியும். ஆனால், வெளியில் இருந்து யாரோ ஒருவர் திருடினால்தான் இழப்பீடு கிடைக்கும். நிறுவனத்தில் வேலை பார்ப்பவரே திருடினால் இழப்பீடு கிடைக்காது.

இயந்திரம் செயலிழத்தலுக்கான இன்ஷூரன்ஸ்!

இயந்திரங்கள் பெரும்பாலும் விலை உயர்ந்தவையாகவும், இயந்திரங்கள் செயலிழப்பதால் ஏற்படும் நஷ்டம் தொழிலையே முடக்கிவிடும் நிலை இருப்பதாலும் இந்த இன்ஷூரன்ஸ் கட்டாயம் எடுப்பது நல்லது. அதே போல்தான் எலக்ட்ரானிக் பொருட்களுக்கான இன்ஷூரன்ஸும். எலக்ட்ரானிக் பொருட்கள் அடிக்கடி பிரச்னைகளுக்குள்ளாக வாய்ப்பு உள்ளது. அதனால் ஏற்படும் நஷ்டத்திலிருந்து தப்பிக்க இந்த இன்ஷூரன்ஸ் உதவியாக இருக்கும்.

பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் சேதாரத்துக்கான இன்ஷூரன்ஸ்!

ஒரு பிசினஸ் சார்ந்த கட்டடங்கள், இயந்திரங்கள் மற்றும் கழிவுகள் போன்றவற்றால் பொதுமக்களுக்கு சேதாரம் அல்லது உயிரிழப்பு ஏற்படுமாயின் அதற்கு அந்தத் தொழில்முனைவோர்தான் பொறுப்பாவார். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளைத் தருவதற்கு இந்த இன்ஷூரன்ஸ் மிக முக்கியம். இதனால் கையிலிருந்து பணம் விரயமாவதைத் தடுக்கலாம்.

பிசினஸ் லாஸ் இன்ஷூரன்ஸ்!

இயந்திரங்கள் செயலிழப்பதாலோ, ஊழியர்கள் ஸ்ட்ரைக் செய்வதாலோ அல்லது இயற்கை சீற்றங்களாலோ தொழில் நடக்காமல் முடங்கிப் போவதால் ஏற்படும் லாப இழப்பை சரிகட்ட இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க வேண்டும். தடைபட்ட தொழிலை மீண்டும் தொடர ஆகும் காலத்தை சமாளிக்கவும் தொழில் நம் கையைவிட்டுப் போகாமல் இருக்கவும் இது உதவும்.

மரைன் - கார்கோ டிரான்ஸிட் இன்ஷூரன்ஸ்!

மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தியான பொருள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வழியில் சேதமடைந்தாலோ அல்லது திருடுபோனாலோ அதற்கு இழப்பீடு பெற இந்த இன்ஷூரன்ஸ் உதவுகிறது.

ஊழியர் மற்றும் நிறுவனர்களுக்கான இன்ஷூரன்ஸ்!

ஊழியரிடமிருந்து நிறுவனப் பணத்தை யாரேனும் திருடினால் சில நிபந்தனைகளுக்குட்பட்டு, சரியான காரணங்கள் நிரூபிக்கப்படுமாயின் ஃபிடிலிட்டி உத்தரவாத இன்ஷூரன்ஸ் மூலம் க்ளெய்ம் வழங்கப்படும்.

மேலும் நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்காக குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ், குரூப் பெர்சனல் ஆக்சிடென்ட் இன்ஷூரன்ஸ், மற்றும் டிராவல் இன்ஷூரன்ஸ் போன்றவற்றை எடுப்பது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பிசினஸ் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்” என்று முடித்தார்.

ஒரு நிறுவனத்தைப் பெரும் நஷ்டத்திலிருந்து காப்பாற்ற கூடியது இன்ஷூரன்ஸ். ஆனால் பொதுவாக எஸ்எம்இ-கள் பலரும் இன்ஷூரன்ஸ் என்றால் ரொம்பவே தயங்குவார்கள் என்கிறார் பாரத் ரீ இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அருணாசலம்.

“பல ஆயிரம் கோடிகளில் லாபம் பார்க்கும் நிறுவனங்களே தங்கள் நிதி நிலையை உயர்த்திக்கொள்ள இன்ஷூரன்ஸ், வரி சேமிப்புத் திட்டங்கள் போன்றவற்றைத் தேடி தேடி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எஸ்எம்இ்கள் இருக்கின்ற நிலையில் இது வேறா? வீண் செலவு என்றே நினைக்கிறார்கள். இது தவறு.

இன்ஷூரன்ஸை ஒரு செலவாகக் கருதாமல், அதனைப் பாதுகாப்புக்கான முதலீடாகக் கருத வேண்டும்” என்றவர் எஸ்எம்இகள் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார்.

1. தொழிலைப் பொறுத்தவரை எப்போதும் முன்னேற்பாடாக தகுதியான இன்ஷூரன்ஸை எடுத்துவிட வேண்டும்.

2. தொழில் கடன் வாங்கியுள்ள நிலையில் வங்கியில் ஏதேனும் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டு அதற்கான பாலிசி பிரதியையும் வாங்கி சரிபார்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

3. எந்த இன்ஷூரன்ஸாக இருந்தாலும், பிரீமியத் தொகையைக் குறைப்பதற்காக தவறான தகவல்களைக் கொடுத்தால் பிரச்னை என்று வரும் போது க்ளெய்ம் தொகை மறுக்கப்படவோ, குறையவோ வாய்ப்புள்ளது.

4. பாதிப்பு ஏற்பட்டதும் முதலில் இ-மெயில் மூலம் பாலிசி எண்ணைக் குறிப்பிட்டு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டும். பின்னர் அவர்கள் அனுப்பும் சர்வேயரிடம் பாதிப்பை நிரூபிக்கும் ஆவணங்களைச் சரியாக சமர்ப்பிக்க வேண்டும். அவை இழப்பு ஏற்பட்ட விதத்தையும், அவற்றின் மதிப்பையும் (value), அளவையும் (Quantum) உறுதிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். சர்வேயர் வருவதற்கு முன்பே பாதிப்புகளை புகைப்படமும் வீடியோவும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

5. இன்ஷூரன்ஸ் இருக்கிறதே, க்ளெய்ம் கிடைத்துவிடும் என்று அலட்சியமாக இருக்காமல், நஷ்டத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை தொழில்முனைவோர்கள் எடுக்க வேண்டும். உதாரணத்திற்கு தண்ணீர் தேங்கியிருக்கும் சமயத்தில் இயந்திரங்களை இயக்கக் கூடாது. மீறும்பட்சத்தில் க்ளெய்ம் மறுக்கப்படும்.” என்றார்.

நிபுணர்கள் கூறியபடி, எஸ்எம்இகள் தங்களுக்குத் தேவையான இன்ஷூரன்ஸ் பாலிசிகளைச் சரியாக தேர்ந்தெடுப்பதன் மூலம் தொழிலில் நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன், தங்களது தொழிலை வெற்றி பாதையில் தொடர்ந்து உற்சாகத்துடன் செயல்படுத்த முடியும் என்பது நூறு சதவிகிதம் உண்மை!