புத்தகத்தின் பெயர் : த 15 இன்வேல்யூபிள் லாஸ் ஆஃப் குரோத் (The 15 Invaluable Laws of Growth)

ஆசிரியர் : ஜான் சி மேக்ஸ்வெல் (John C Maxwell)

பதிப்பாளர் : Hachette Book Group USA

ஜான் சி மேக்ஸ்வெல் எழுதிய ‘த 15 இன்வேல்யூபிள் லாஸ் ஆஃப் குரோத்’ எனும் தனி மனித வளர்ச்சிக்கான பதினைந்து சட்டதிட்டங்களைச் சொல்லும் புத்தகம் குறித்துப் பார்ப்போம்.ஆற்றல் என்ற சொல் எல்லா மொழிகளிலுமே பிரம்மிப்பான ஒரு சொல்லாகும்.

நம்பிக்கையை வளர்க்கக் கூடிய, வெற்றிக்கு உறுதியளிக்கிற வார்த்தை அது. ஒரு மனிதனாக உங்களுடைய ஆற்றல் எவ்வளவு என்று எண்ணிப்பாருங்கள். உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். என்ன ஒரு பாசிட்டிவ்வான எண்ணம் அந்த வேளையில் வருகிறது.

உங்களுடைய உபயோகிக்கப் படாத ஆற்றல் எவ்வளவு இருக்கும் எனக் கேட்டால் என்ன சொல்வீர்கள்? ஆற்றலுக்கு எதிர் மறை வார்த்தை உபயோகிக்கப் படாத ஆற்றல் இல்லையா? மனிதன் தன் மனதில் நினைப்பதை செய்து முடிக்கத் தேவையான ஆற்றலை உள்ளடக்கியவன். ஏதாவது ஒரு காரணத்தினால் அவன் நினைத்த காரியத்தை முடிக்க முடியாமல் போனால் அவனுக்குள் இருக்கும் அதற்குண்டான ஆற்றலே உபயோகிக்கப்படாத ஆற்றல்.

வளர்ச்சி என்றால் என்ன? உங்களுடைய வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை தெரிந்துகொள்ள சுய விழிப்பு உணர்வை வளர்க்கவேண்டும். சிறந்த மனிதனாக மாற உங்களுடைய நடவடிக்கைகளை சிறப்பானதாக நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டும். உங்களுடைய பணியிடத்தில் உயர்வுபெற உங்களுடைய வேலைத்திறனை வளர்க்க வேண்டும். நல்லதொரு குடும்ப அங்கத்தினராகவும், நல்லதொரு நண்பனாகவும் திகழ உறவுகளை வளர்க்க வேண்டும். உங்களுடைய நிதி நிலைமையை மேம்படுத்தவும் பண ரீதியான இலக்குகளை அடையவும் பணம் குறித்த விழிப்பு உணர்வும் அதுகுறித்த அறிவையும் நீங்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். உங்கள் ஆன்மாவை மேம்படுத்த நீங்கள் உங்கள் ஆன்மீக செயல்பாடுகளை வளர்க்க வேண்டும். இதுபோல பல்வேறு மனிதர்களின் நோக்கங்களுக்கும் இலக்கு களுக்கும் ஏற்றாற்போல் வளர்ச்சி என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிற ஒரு விஷயம். ஆனால் அந்த வளர்ச்சிக்குத் தேவையான வரைமுறைகள் ஒரே மாதிரியானவைதான்.

இந்தப் புத்தகம் எப்படி ஒரு சரியான வளர்ச்சிப் பாதையில் செல்வது என்பதற்கான பதினைந்து விதிகளைச் சொல்கின்றன என்கிறார் ஆசிரியர்.

ஆசிரியரின் நண்பர் ஒருவர் உன்னுடைய தனிமனித வளர்ச்சிக்கான திட்டம் என்ன என்ற கேள்வியை கேட்டாராம். அந்தக் கேள்விதான் என்னை மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்கச் செய்தது என்கிறார் ஆசிரியர்.

சாமான்யமாக இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. கடந்த மூன்று வருடத்தில் நான் என்னென்ன விஷயங்களைச் செய்தேன் என்று சொன்னேன். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தேன் என்று சொன்னேன். என்னுடைய இலக்குகள் என்னென்ன என்று சொன்னேன். எப்படி அதிகப்படியான மனிதர்களை சென்றடைவதற்குத் தேவையான விஷயங்களை நான் தற்சமயம் செய்துவருகிறேன் என்று சொன்னேன். இது எல்லாமே நான் என்ன செய்துவருகிறேன் என்பதைச் சொல்வதாகவே அமைந்தது.

கடைசியாய், நான் பெரிதாக வளர்வதற்கான திட்டம் எதையும் கைவசம் வைத்திருக்கவில்லை என்பதை நான் ஒப்புக் கொண்டேன். எப்படி இதுகுறித்து சிந்திக்காமல் போனேன். இது பெரிய தவறாயிற்றே என அப்போது நான் உணர்ந்தேன்.

வேலை, உழைப்பு, இலக்கு என்றெல்லாம் சிந்தித்த நான் அதையெல்லாம் அடைய கடின உழைப்பு என்ற ஸ்ட்ராட்டஜியை மட்டுமே வைத்திருந்தேன். கடின உழைப்பு என்னை நான் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு சென்று விடும் என்று நான் நம்பிக்கொண்டிருந்தேன். வெறுமனே கடின உழைப்பை வைத்துக்கொண்டு வெற்றிபெற முடியாது என எனக்கு அப்போது தெரியவில்லை. பார்க்கும் வேலையில் மூழ்கிப்போய் விட்டால் வெற்றிகிடைக்கும் என்பது உறுதியில்லை. தனி மனித முன்னேற்றமே வளர்ச்சியை கொண்டுவரும் என்பதை நண்பர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார். இலக்குகளை நிர்ணயித்து அதற்காக கடினமாக உழைத்தால் அதனைச் சென்றடையலாம் என்பது நிஜம். அது இலக்கை அடையும் வெற்றியைத் தருமே தவிர அபரிமிதமான வளர்ச்சியைத் தராது.

மாறாக தனிமனித வளர்ச்சி என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு நம்முடைய செயல்பாடுகள் இருந்தால், அந்த வளர்ச்சியினால் இலக்குகளை சுலபத்தில் அடையலாம் என நான் புரிந்துகொண்டேன். நம்மில் பெரும்பான்மையான வர்கள் வாழ்க்கைச் சூழ்நிலை களை முன்னேற்றமடையச் செய்ய மிகவும் விரும்புகிறோம். ஆனால், தனிமனித முன்னேற்றத்துக்கு பெரிய அளவில் விருப்பம் கொண்டிருப்ப தில்லை. ஏனென்றால் தனிமனித முன்னேற்றம் வாழ்வில் மற்ற விஷயங்களை சுலபத்தில் முன்னேறச் செய்துவிடும் என்பதை நாம் அறியாமல் இருப்பதனால்தான். தனிமனித வளர்ச்சிக்கான 15 விதிகளை விளக்குகிறார் ஆசிரியர்.

முதல் விதி: தனிமனித முன்னேற்றம் காணவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல் படவேண்டும். நான் தானாக முன்னேறிவிடுவேன், எப்படி வளர்வது எனத் தெரிய வில்லை, இப்போதைய நிலையில் இதையெல்லாம் ஆரம்பிக்க முடியாது, நல்ல வழியை முதலில் கண்டுபிடித்துவிட்டு அப்புறமாக ஆரம்பிப்போம்; இப்போதைக்கு அதில் எனக்கு நாட்டமில்லை என்பது போன்ற காரணங்களை நாம் இந்த செயலுக்கான சாக்குப்போக்காக சொல்வோம் என்கிறார் ஆசிரியர்.

இரண்டாவது விதி: நம்மைப்பற்றி நாம் துல்லியமாக தெரிந்து கொள்ளவேண்டும். வளர்ச்சிக்கு முதல் வழி நாம் எந்த நிலையில் இருக்கிறோம் எனத் தெளிவாக உணர்ந்திருப்பதாகும்.

மூன்றாவது விதி: முதலில் உங்களை நீங்கள் மனக் கண்ணாடியில் தெளிவாகப் பார்க்கவேண்டும். அதன் பின்னரே உங்களுக்குள்ளான முன்னேற்றம் எவற்றிலெல்லாம் சாத்தியம் எனத் தெரிந்து நடை முறைப்படுத்த முடியும்.

நான்காவது விதி : கொஞ்சம் நின்று நாம் வந்த பாதையை திரும்பிப் பார்க்கவேண்டும். வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் கொஞ்சம் ஓய்வும் தேவை. அந்த ஓய்வின்போது கொஞ்சம் திரும்பிப் பார்க்கும்போது பல கேள்விகளை நாம் கேட்க முடியும். அந்தக் கேள்விகளுக்கு கிடைக்கும் விடைகள் நம்மை வளர்த்துக்கொள்வதில் இன்னமும் சிரத்தை செலுத்த வைப்பதாய் இருக்கும்.

ஐந்தாவது விதி:  எண்ணத்தில் மாற்றமில்லாமல் நிலையாய் இருக்க வேண்டும். மோட்டிவேஷன் நம்மை ஒரு பாதையில் பயணிக்கச் செய்கிறது. ஆனால், ஒழுக்கமோ வளரச் செய்கிறது. சின்னச்சின்ன ஒழுங்குகள் நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் போது வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.

ஆறாவது விதி : நாம் இருக்கும் சூழலை வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஏழாவது விதி :  செயல்திட்ட மாதிரிகளை கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும். வளர்ச்சியை அதிகப்படுத்த சரியான செயல் திட்டங்கள் உதவும். உங்களுடைய அன்றாட நடைமுறை ஒழுங்குகளே நீங்கள் வெற்றி பெறுவீர்களா அல்லது தோல்வியடைவீர்களா என்பதை தீர்மானிக்கிறது.
எட்டாவது விதி : வலியின் வலிமை. கெட்ட அல்லது பாதகமான விஷயங்களை சரியான அணுகுமுறையில் கையாள தெரிந்தவர்கள் வேகமாக வளர்கின்றனர்.

ஒன்பதாவது விதி : ஏணிப்படி தத்துவம். தனிமனித பண்பு ரீதியான வளர்ச்சி என்பது அவர்களுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஓர் ஏணியாக இருக்கிறது.

பத்தாவது விதி : ரப்பர் பேண்ட் விதி. எங்கேயிருக்கிற நாம் இன்றைக்கு என்னவாக இருக்கிறோம் என்பதன் வித்தியாஷத்தை உணர்ந்து டென்ஷனாக இருக்கும் வரையே வளர்ச்சி இருக்கும். அந்த டென்ஷன் குறைந்து போனால் வளர்ச்சியும் குறைந்துபோகும்.

பதினோராவது விதி : வர்த்தக பரிமாற்றம் பற்றி புரிந்து கொள்வது அவசியம். ஒன்றை விட்டால்தான் மற்றொன்றை அடைய முடியும் என்பதை நன்றாக புரிந்துகொண்டால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம்.

பன்னிரெண்டாவது விதி :  பேரார்வம் கொண்டிருக்க வேண்டும். ஏன், எப்படி என்ற கேள்விகளே வளச்சிக்கான சிறந்த தூண்டுகோள்களாக செயல்படும்.

பதிமூன்றாவது விதி: ஒரு முன்னுதாரணத்தை வைத்துக்கொண்டு அதுபோல் செயல்பட நினைக்க வேண்டும். நாம் ஒரு முன்னுதாரணத்தை மனதில்கொண்டே அதுபோல் முன்னேற்றம் அடையவேண்டும் என்ற எண்ணத்தினுடனேயே செயல்பட்டு முன்னேறவேண்டும் என்கிறார்.

பதினான்காவது விதி: விரிவாக்கம் தேவை. நிறைய வேலை செய்வது பயன்தரும் என்பதை விட்டுவிட்டு, எந்த வேலை அதிகப் பயன்தரும் என்பது குறித்து சிந்தியுங்கள். நிஜமாகவே அதிக பலன் கொடுக்கும் விஷயங்களை மட்டுமே அன்றாடம் செய்ய ஆரம்பித்தால் வளர்ச்சி என்பது நிச்சயம்.

கடைசி விதி : பங்களிப்பு அவசியம். ஆரம்பத்தில் நான் மட்டும் முன்னேற்றமடைய வேண்டும் என்ற சுயநலம் தலை தூக்கினாலும் நாளடைவில் வளர்ச்சி கைகூட ஆரம்பிக்கும் போது மற்றவர்களுக்கும் உதவும் வகையில் நம் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். ஓர் அணையைப் போல் இருக்காதீர்கள். ஒரு நதியைப் போல் இருங்கள். நீங்கள் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்றால் நீங்கள் கட்டாயம் வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும்தானே என்று முடிக்கிறார் ஆசிரியர்.

வளமான வளர்ச்சி அடைய நினைக்கும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது.

-நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)