கடந்த இதழில் வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான படிவங்கள், மாறுதல்கள் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்த இதழில் மின்னணு வரிக் கணக்கு (இ - ஃபைலிங்) பற்றி விரிவாகப் பார்ப்போம். இது மிக முக்கியமான பகுதி. இ - ஃபைலிங் (E filing) வசதியினால், நமக்கு வசதியான நேரத்தில், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யமுடியும்.

முன்பெல்லாம் மணிக்கணக் காக இன்கம் டாக்ஸ் ஆஃபீசில் ஸ்பெஷல் கவுன்டர்களில் நின்று நொந்த நாட்கள், இனிமேல் இல்லை - அதெல்லாம் மலையேறிவிட்டது.

கடைசி தேதியில் இரவு 12 மணிக்குக் கூட உங்கள் வீட்டில் இருந்தபடியே ரிட்டர்னை ஃபைல் செய்ய முடியும்! அதற்காக அது வரைக்கும் காத்திருக்க தேவை இல்லை.

இதற்கு http://incometaxindiaefiling.gov.in/ என்ற இணைய தளத்துக்கு (web site) க்குள் சென்று மேலே குறிப்பிட்டுள்ள குயிக் இ ஃபைலிங் (quick e filing) ஐ க்ளிக் செய்ய வேண்டும். இதற்கு உங்களின் பான் எண் தேவை. இதுதான் உங்களின் யூசர் ஐடி. இத்துடன் நீங்களே கொடுக்கும் பாஸ்வேர்ட், பின் உங்கள் பிறந்த தேதியும் கொடுத்தால், அங்கே காட்டப்படும் கோட் நம்பரையும் (கேப்பிட்சா) தந்தால் நீங்கள் உள்ளே நுழைந்து விடுவீர்கள்.

இப்போது முதலில் செய்ய வேண்டியது உங்களின் படிவம் 26ஏஎஸ்(Form 26AS) ஐ பார்க்க வேண்டும். இதன் நோக்கம் உங்களிடமிருந்து பிடிக்கப்பட்ட டிடிஎஸ், சரியாக காட்டப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வது. சரியாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் குயிக் இ ஃபைலிங்க்கு செல்லலாம். இந்த வசதி நீங்கள் நிரப்ப வேண்டிய படிவம் ஐடிஆர் 1 அல்லது ஐடிஆர் 4எஸ் ஆக இருந்தால் மட்டுமே. அப்படி அல்லாமல் ஐடிஆர் 2 அல்லது ஐடிஆர்4ஆக இருந்தால் நீங்கள் டவுன்லோடு ஆப்ஷன் -க்கு சென்று சரியான படிவத்தை தர விறக்கம் செய்ய வேண்டும்.

குயிக் இ ஃபைலிங் என்னும்போது நீங்கள் உங்கள் மதிப்பீட்டு ஆண்டு (Assessment year) தேர்வு செய்து பின்

கேட்கப் படும் கேள்வி - டேடா பேஸ் அல்லது முந்தையை ஆண்டின் வருமான வரி கணக்காக அல்லது புதிதாக ஒன்றா ... இதில் ஒன்று தேர்வு செய்யவேண்டும்.முதல் இரண்டு தேர்வு செய்தால் பாதி விவரங்கள் தாமாகவே பூர்த்தி செய்யப்பட்டுவிடும். நிரப்பப் படாத சிவப்புக்குறி காண்பிக்கும் விவரங்களை நீங்கள் பூர்த்தி செய்யவேண்டும். எல்லா சிவப்பு குறியிட்ட விவரங்களும் பூர்த்தி செய்யப்படாவிட்டால் ரிட்டர்ன் அப்லோட் செய்ய முடியாது குயிக் இ ஃபைல் செய்யாமல், படிவம் தரவிறக்கம் செய்து பண்ணும்போது, இதே போல் பூர்த்தி செய்யவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை எக்ஸ் எம்எல் (XML) என்னும் ஃபார்மெட் இல் சேவ் (save) செய்து அதை அப்லோட் செய்யவேண்டும். குயிக் இ ஃபைல் செய்யும்போது இது தேவை இல்லை. நேரடியாக அப்லோட் ஸ்க்ரீன் வரும். அதை க்ளிக்கினால் போதும்.

இந்த வகையில் அப்லோட் செய்யப்பட்ட படிவங்களில் உங்கள் டிஜிட்டல் கையெழுத்து இருக்காது. ஆகையால் நீங்கள்தான் இந்தப் படிவத்தை சமர்ப்பித்தீர்கள் என்பதற்கு ஒரே ஆதாரமாகிறது ஐடிஆர் 5 (ITR 5). இதனை அனுப்புவதற்கு சில வழிகள் உள்ளன

1. ஆதார் அட்டை வழி : இதற்கு நீங்கள் உங்கள் ஆதார் அட்டை எண்ணை, வருமான வரியுடன் லிங்க் செய்திருக்க வேண்டும்.அப்லோட் செய்த வுடன் ஒரு ஒன் டைம் பாஸ்வேர்ட் உங்களுக்கு அனுப்பப்படும். இதை வைத்து உங்கள் ஐடிஆர்- ஐ நீங்கள் சரி பார்க்க முடியும். தனியாக ஐடிஆர் 5 எடுத்து அனுப்ப வேண்டாம். இந்த இவிசி (EVC -electronic Verification code) ஆதார் வழியாக சரி பார்க்கும்போது ஐந்து நிமிடங்களுக்கே செல்லு படியாகும்.

2. வருமான வரியின் இ ஃபைலிங் வலைதளம் வழியாக இவிசி செய்வதற்கு வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த இவிசி கோட் உங்கள் மொபைல் நம்பர் அல்லது இமெயிலுக்கு வரும் இந்த கோட் 72 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும்.

3. நெட் பேங்கிங் வழி – இதன் மூலம் உங்கள் வருமான வரி தளத்தை அணுகினால் இவிசி கோட் உங்கள் மொபைல் நம்பர் அல்லது இமெயிலுக்கு வரும் இந்த கோட் 72 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும்.

4. ஏடிஎம் (ATM) – ஏடிஎம் கார்டு உங்களின் செல் நம்பருடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த முறை சாத்தியம். மற்றவையெல்லாம் மேலே கூறியபடிதான்.

இப்படி இவிசி உருவாக்காமல் அப்லோட் செய்யப்பட்ட ரிட்டன்க்கு ஐடிஆர்5 ஐ பிரின்ட் எடுத்து கையெழுத்திட்டு பெங்களூரில் உள்ள மத்திய பரிசீலனை அலுவலகத்துக்கு (CPC Office)அனுப்பவேண்டும்.

முகவரி : Income Tax Department – CPC, Post Bag – 1, Electronic City Post Office, Bangalore - 560 100, Karnataka.

செய்ய வேண்டியவை... செய்யக்கூடாதவை!

வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது செய்ய வேண்டிய விஷயங்கள், செய்யக்கூடாத விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

1. ஆதார் முறையில் பதிவேற்றம் செய்யும்போது ஆதாரில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் வருமான வரித் துறைக்கு கொடுத்த விவரங்க ளிலிருந்து மாறுபட்டிருந்தால், பதிவேற்றம் செய்ய முடியாது. உதாரணமாக ஆதாரில் உங்கள் பெயர் ராகவன் சேதுராமன் என்றும் வருமானவரியில் எஸ்.ராகவன் என்றும் இருந்தால் பதிவேற்றம் செய்ய முடியாது. இதை ஆதாரிலோ அல்லது வருமான வரித்துறை தகவல்களிலோ சரி செய்ய வேண்டும்.

2. டிடிஎஸ் பிடிக்கும் நிறுவனங் களுக்கு 31 மார்ச் வரையிலான தொகையை உங்கள் கணக்கில் பதிவேற்றம் செய்ய 15 மே வரையில் நேரம் உள்ளது. ஆனாலும் இதற்குள் செய்ய படாமல் போய்விடுகிறது. அதனால் உங்களின் 26ஏஸ் உங்கள் டிடிஎஸ்- ஐ சரியாகக் காண்பிக்காது. நீங்கள் கொடுக்கும் வரித் தொகையும், 26ஏஸ் இல் காட்டப்படுவதும் மாறுபட்டால், ரிட்டர்ன் ஃபைல் செய்யும்முன் அந்த நிறுவனத்திடம் சரி செய்யச் செய்யுங்கள்.

3. தற்போது 26 ஏஎஸ்- ல் உங் களுக்கு கணக்கில் இல்லாத தொகை தவறுதலாக காட்டப் பட்டிருந்தால் நீங்கள் அதை உங்கள் படிவத்திலேயே சுட்டிக் காட்ட ஏதுவாக இடம் உண்டு.

4. எல்லா படிவங்களிலும் உங்கள் வங்கிக் கணக்குகளை காட்டப்பட இடம் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால், இன்றைய தேதியில் எல்லாவற்றை யும் சொல்லாமல் போனால் அபராதம் ஏதுமில்லை. ஆனாலும் தற்போது வங்கிக் கணக்குகளும் பான் எண் வைத்து இணைக்கப் பட்டுள்ளதால் நீங்கள் காட்டாத வங்கிக் கணக்குகளும் வருமான வரித் துறைக்கு தெரியும். ஆகவே உங்கள் வருமானவரிப் படிவம் ஸ்க்ரூடினி செக் செய்ய எடுத்துக் கொள்ளப்படக்கூடும். சென்ற வருடம் வரை உங்கள் பெயர் ஜாயின்ட் அக்கவுன்ட்டில் இருந்தாலும்கூட சொல்லப்பட வேண்டும் என்று இருந்தது. ஆனால் இந்த வருடம், முதல் ஹோல்டராக இருக்கும் வங்கிக் கணக்கை மட்டும் காட்டினால் போதும்

5. போன வருடம் ஒரு வீடு மட்டும் இருந்தால் ஐடிஆர்1, ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தால் ஐடிஆர் 2 என்று கூறப்பட்டது. ஆனால் இந்த வருடம் இரண்டுக்கு மேற்பட்டு இருந்தாலும் ஐடிஆர்1 இல் பதிவு செய்யலாம்.

6. வரி விலக்குக்கு உட்பட்ட வருமானம் (Exempted income) ரூ. 5,000 அல்லது குறைவாக இருந்தால் மட்டுமே ஐடிஆர்1 என்று இருந்தது. இப்போது ரூ. 5,000க்கு மேல் இருந்தாலும் ஐடிஆர்1 -லேயே செய்யலாம்.

7. டெபாசிட்டுக்களிலிருந்து வரும் வட்டி வருமானத்துக்கு வரிச்சலுகை கிடையாது. செக்ஷன் 10இன் கீழ் கொடுக்கப் பட்டுள்ள ரூ. 10,000 வரையிலான வரி விலக்கு சேமிப்புக் கணக்கில் கிடைக்கும் வட்டிக்கு மட்டும் தான். ஆகவே ரிட்டர்ன்ஸ் ஃபைல் செய்யும்போது எல்லா வட்டி விவரங்களையும் (அதற்கு form 15ஜி /ஹெச் கொடுக்கப் பட்டிருந்தாலும்) காண்பிக்க வேண்டும்.

இனி இந்தியா வளரும் நாடு இல்லை!

இப்போது இந்தியாவைப் பற்றி நாம் பொருளாதார ரீதியாக குறிப்பிடும்போது இந்தியா ஒரு வளரும் நாடு என பொத்தாம் பொதுவாகச் சொல்வதுண்டு. இனி அப்படி குறிப்பிட முடியாது. தற்போது உலக நாடுகளை, மொத்த தேசிய வருமானத்தை (Gross National Income) அடிப்படையாகக் கொண்டு நான்கு விதமாக உலக வங்கி பிரித்துள்ளது.

குறைந்த வருமான பொருளாதார நாடுகள் (Low Income Economy), குறைந்த நடுத்தர வருமான பொருளாதார நாடுகள் (Lower Middle Income Economy), உயர் நடுத்தர வருமான பொருளாதார நாடுகள் (Upper Middle Income Economy) மற்றும் மேல் பொருளாதார நாடுகள் (Top Economy) என நான்கு பிரிவுகளாக உலக நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இப்படி வகைப்படுத்தியதில் இந்தியா, ‘குறைந்த நடுத்தர வருமான பொருளாதாரம்’ என பிரிக்கப்பட்டுள்ளது. இப்போது வரை ‘வளரும் நாடு’ என பொதுவாக அழைக்கப்பட்ட இந்தியா இனி ‘குறைந்த நடுத்தர வருமான நாடு’ என வகைப்படுத்தப்படும் என்பது சற்று அதிர்ச்சியான தகவல்தான்.