இன்றைக்கு பலரின் கனவுகளில் முக்கியமாக இருப்பது அழகான சொந்த வீடு தான். முன்பெல்லாம் வீட்டைக் கட்டினோமா , உறவினர்கள். நண்பர்களை அழைத்து புதுமனை புகுவிழா நடத்தி பால் காய்ச்சினோமா. குடி புகுந்தோமா என்று இருப்போம். ஆனால் இன்றைக்கு அப்படியில்லை.

நமது கனவு இல்லத்தைப் பற்றி பலவிதமான விருப்பங்கள் இருக்கிறது. எல்லாவற்றிலும் புதுமை மற்றும் வித்தியாசத்தை விரும்புகிறோம். படுக்கையறை, பூஜை அறை, சமையலறை இப்படித்தான் இருக்க வேண்டும், குளியலறைக்கு இந்த வகையான டைல்ஸ் போட வேண்டும். ஹாலுக்கு இந்த வண்ணத்தில் பெயின்ட் அடிக்க வேண்டும், வாசல் கதவும், ஜன்னலும் இந்த மரத்தில் செய்ய வேண்டும் என்று ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை இருக்கிறது.

அது மட்டுமில்லாமல் நண்பர்களின் வீடு, ஹோட்டல் அல்லது வேறு இடங்களுக்கு செல்லும்போது நம்மையும் அறியாமல் அந்த இடத்தின் உள் அலங்காரங்கள் நம்மைக் கவர்கிறது. நாமும் வீடு கட்டும் போது இதேமாதிரி இன்டீரியர் டெக்கரேஷன் செய்ய வேண்டும் என ஆசைப் படுகிறோம்.

இப்போதெல்லாம் வீட்டைக் கட்ட செய்கிற செலவுகளைவிட இன்டீரியர் டெக்கரேஷன் செய்வதற்காக அதிகமாக செலவு செய்ய தயாராக இருக்கிறோம். வீடுகள் மட்டுமின்றி ஹோட்டல் கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள், கடைகள், அலுவலகங்கள், மருத்துவ மனைகள் என்று இன்டீரியர் டெக்கரேஷன் தொழிலுக்கான வாய்ப்புகள் பெருகி கிடக்கிறது.

இன்றைக்கு இன்டீரியர் டெக்கரேஷன் தொழிலில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது, இதன் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஆம்பா இன்டீரியரின் நிறுவனர் பிரபாகரனிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

இந்தியாவைப் பொறுத்த வரையில் தரமான இன்டீரியர் டிசைனர்கள் குறைவாகவே உள்ளனர். ஆனால் நாளுக்கு நாள் புதிதுபுதிதாக வீடுகளும், ஹோட்டல்களும், மால்களும் உருவாகிக்கொண்டே இருப்பதால் இந்தத் துறைக்கான ஆட்களின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு கட்டடத்தின் வெளித்தோற்றம் எவ்வளவு முக்கியமோ அதைவிட அதன் உள் தோற்றமும் மிக முக்கியம். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பெரிய பெரிய ஹோட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் முதற்கொண்டு நண்பர்கள், உறவினர்களை கவருவதற்காக மக்களும் வீட்டின் உள் தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் இந்தத் தொழிலில் முதலீடு செய்வது பாசிட்டிவ்வாக இருக்கும்.

நாம் எங்கு வேண்டுமானாலும் அலுவலகத்தை திறக்கலாம். நல்ல ஆடிட்டர் ஒருவரை அணுகினால்

போதும், அவரே அலுவலகம் திறப்பதற்கான லைசென்ஸ் முதற்கொண்டு அனைத்தையும் செய்து தந்து விடுவார்.

சிறிய அளவில், தரமான இன்டீரியர் டெக்கரேஷன் அலுவலகத்தை ஆரம்பிக்க இரண்டு லட்ச ரூபாய் இருந்தாலே போதுமானது. குறைந்தபட்சம் 400 சதுர அடி இடம் தேவை. பொதுவாக இன்டீரியர் டெக்கரேஷனுக்கான ஆட்களை அதிகமாக ஆன்லைனில்தான் தேடுகிறார்கள். அதனால் நமக்கென்று ஓர் இணையதளம் இருக்க வேண்டும். வாடிக்கை யாளரை நம்மை நோக்கி வரவைக்கும் செயல்பாடுகள் அனைத்தும் ஆன்லைன் வழியாக இருப்பது அவசியம்.

இந்தத் தொழிலைப் பொறுத்தவரை இன்டீரியர் டெக்கரேஷனுக்காக ஆர்டர் கொடுத்தவரிடமே பணத்தைப் பெற்று டெக்கரேஷனுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்பதால் இதில் மறுபடியும் மறுபடியும் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. குளியலறை, சமையலறை, ஹால் போன்றவற்றின் மாடல் நம் அலுவலகத்தில் இருக்க வேண்டும். இந்த மாடல்களுக்கும், இணையதளத்தை வடிவமைக்கவுமே முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

அது மட்டுமில்லாமல் இந்தத் தொழிலை அடிப்படையாக வைத்து உள் அலங்காரங்களுக்குத் தேவையான மரப்பொருள்கள், பெயின்ட், கலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கான டீலராகவும் நாம் இத் தொழிலை விரிவாக செய்ய முடியும். நாமே டீலராகவும், இன்டீரியர் டெக்கரேட்டராகவும் இருப்பதால் கூடுதலாக சம்பாதிக்கவும் முடியும்.

பெரும்பாலானவர்கள் வீட்டை வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் வடிவமைக்கவே விரும்புகின்றனர். வாஸ்து சாஸ்திரத்தையும் நாம் முறைப்படி தெரிந்து வைத்திருந்தால் இன்னும் சிறப்பானது.

ஆன்லைன்தான் இந்தத் தொழிலில் ஹைலெட். அதனால் நம் இணையதளத்தை நன்றாக புரமோஷன் செய்ய வேண்டும். எல்லா வகையான வாடிக்கை யாளர்களையும் ஆன்லைனில் சந்திக்க வேண்டியிருப்பதால் அவர்களுடன் நம் தொழிலைப் பற்றி விவரிக்க ஆங்கிலம் தெரிந்து வைத்திருப்பது நல்லது. அதுமட்டுமில்லாமல் இன்டீரியர் டெக்கரேஷனுக்காக பயன் படுத்துகிற பொருள்களைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்கிற அளவுக்கு நம்மிடையே திறமை இருக்க வேண்டும்.

மற்ற தொழில்களைப் போலவே இந்த பிசினஸிலும் வாடிக்கையாளர் சேவைதான் முதன்மையானது. ஒரு

வீடு கட்டிய பிறகு கடைசியாக இருக்கக்கூடிய வேலைதான் இந்த இன்டீரியர் டெக்கரேஷன். பெரும்பாலானவர்கள் கட்டடத்தைக் கட்டி முடித்து, புதுமனை புகு விழாவுக்கும் தேதியை முடிவு செய்து அழைப்பிதழ் கூட அடித்த பின் தான் நம்மிடம் வருவார்கள். அதனால் அவர்களுக்கு குறித்த காலத்துக்குள் வேலையை முடித்துக் கொடுக்க வேண்டும். பில்டர் சில நேரம் வீடு கட்ட தாமதப் படுத்தியிருந்தால்கூட நாம் சொன்ன தேதிக்குள் வேலையை முடித்துக்கொடுக்க வேண்டும். நாம் வேலையை முடித்துக் கொடுத்தப் பிறகுதான் வீட்டு உரிமையாளர் புதிதாக குடிபோக முடியும் என்பதால் குறித்த காலத்துக்குள் வேலையை முடிப்பது மட்டுமில்லாமல் தரமாக செய்து கொடுப்பதும் இந்தத் தொழிலில் முக்கியமானது. இதுதான் வாடிக்கையாளரை மகிழ்ச்சியடைய செய்யும்.

ஒரு வகையில் இன்டீரியர் டெக்கரேஷனும் நெட்வொர்க் பிசினஸ்தான். நம்முடைய சேவை தரமானதாக , நவீனமாக எல்லோரையும் கவர்வதாக இருந்தாலே போதும். வாடிக்கையாளர்களே நாம் இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து வந்துவிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் நம்மீது வைத்திருக்கிற நம்பிக்கையை எந்தவிதத்திலும் சீர்குலைத்து விடக்கூடாது.

இத்தொழிலுக்கான வாய்ப்புகள் நாலாப்பக்கமும் விரிவடைந்துகொண்டே செல்கிறது. அதற்கேற்ற மாதிரி சந்தையில் புதிது புதிதாக மெட்டீரியல்களும் வந்து கொண்டிருக்கிறது. நாம் எப்போதும் அப்டேட்டாக இருக்க வேண்டும். ஏனென்றால் வாடிக்கையாளர்கள் நம்மை விடவும் அப்டேட்டாக இருக்கிறார்கள். அவர்கள் லைட்டிங் அல்லது வீட்டுக்குத் தேவையான பொருட்களைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் போதே, நாம் அதைப் பற்றிய ஒரு விவரத்தை கொடுத்துவிட்டால் வாடிக்கையாளரை சுலபமாக கவர்ந்துவிட முடியும். நாம் அணுகிய நபர் அப்டேட்டாக இருக்கிறார். புதுமையாக செய்வார் என்ற நம்பிக்கையும் நம்மீது வரும்.

நாம் எந்த அளவுக்கு உழைப்பைக் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு இந்தத் தொழிலில் சம்பாதிக்க முடியும். சதுர அடிக் கணக்கில் செய்து கொடுக்கப்படும் இந்தத் தொழிலில் எடுக்கும் கான்ட்ராக்ட்டுகளைப் பொறுத்து, எல்லாச் செலவுகள் போக குறைந்தபட்சம் மாதம் ரூ.25,000 லிருந்து 50,000 வரை வருமானம் ஈட்ட முடியும்.

இந்த பிசினஸை பொறுத்த வரை புதிது புதிதாக டிசைன் களை வடிவமைக்க, அதைச் செயல்படுத்த என வேலைக்கு ஆட்கள் தேவைப்படும். நமக்கு சரியான ஆட்கள் கிடைத்து விட்டாலே போதும் இந்தத் தொழிலில் பாதி ஜெயித்த மாதிரிதான்.

இன்டீரியர் டெக்கரேஷன் சேவைத் துறையில் சூப்பர் வருமானம் தரும் ஒரு நல்ல பிசினஸ். இதை தொழில் என்று பார்க்காமல் பலரின் கனவுகளை, ஆசைகளை நிறைவேற்றுகிறோம் என்ற அடிப்படையில் செய்ய வேண்டும்” என்று முடித்தார்

குறைந்த முதலீட்டில் பலரின் கனவுகளை நிறைவேற்றுகிற இந்த தொழிலை செய்யலாமே!

படங்கள் : மீ.நிவேதன்