பதஞ்சலியின் பதார்தா உற்பத்தி ஆலையை சுற்றிப் பார்ப்பதற்கான அனுமதி பெறுவதே திருப்பதி ஏழுமலை யானை, வைகுண்ட ஏகாதசி அன்று பொது தரிசனம் வழியில் சென்று தரிசிப்பதற்கு சமமாக இருக்கிறது; அவ்வளவு கெடுபுடி.

மூன்றடுக்கு செக்யூரிட்டி!

பதார்தா உற்பத்தி ஆலையில் நுழைந்தவுடன் ஒரு தற்காலிக ஐடி வழங்கப்படுகிறது. அதில் நம் மொத்த விவரங்களும் இருக்கும். குறிப்பாக, பதஞ்சலி ஆஸ்ரமத்திலிருந்து நம்மைப் பரிந்துரைத்தவர் மற்றும் நாம் பதார்தா ஆலையில் யாரை சந்திக்க வேண்டும் என்பது வரை எல்லா விவரங்களும் இருக்கிறது. யாரை சந்திக்க வேண்டும் என்று ஏற்கெனவே அனுமதி வாங்கி இருக்கிறோமோ, அவரை மட்டும் தான் நாம் சந்திக்க முடியும், சந்திக்க வேண்டும். இது எச்சரிக்கை அல்ல, கட்டளை.

அதற்குப் பிறகும் முக்கியமான இரண்டு நுழைவாயில்களை கடந்த பிறகு தான் நிர்வாக அலுவலகத்தை அடைய முடிகிறது. இதில் முதல் நுழைவாயிலில்தான் சி.ஐ.எஸ்.எஃப். (CISF) என்றழைக்கப்படும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் கடுமையாகப் பாதுகாக்கிறார்கள்.

மொத்தம் 150 ஏக்கர் ஆலையை பதஞ்சலி நியமித்தி ருக்கும் 250-க்கும் மேற்பட்ட செக்யூரிட்டி கார்டுகள் பாதுகாக்கிறார்கள். அது மட்டுமின்றி பல இடங்களில் 360 டிகிரி செக்யூரிட்டி கேமராக்கள் வேறு. நம் போன்கள் அல்லது கேமராக்களை தொட்டாலே ஆஃப் செய்யுமாறு காரசாரமான உத்தரவுகள் வருகின்றன.

நமக்கு பரிந்துரைக்கப் பட்டிருந்த நபரிடம் ஆலையை பற்றி கேட்கத் தொடங்கு வதற்குமுன் “விகடன்தான் தமிழகத்திலிருந்து, பதஞ்சலி ஆலையைக் காண வந்திருக்கும் முதல் பத்திரிகை’’ என்ற வாழ்த்துக் களோடு, நம் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தொடங்கினார்.

உற்பத்தி ஆலை!

இந்த ஆலை நான்கு விதமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. 1. உணவுப் பொருட்கள், 2. காஸ்மெட்டிக் பொருட்கள், 3. சவன்பிராஷ், செரிமான உணவுகள் மற்றும் ரெடி டு சர்வ் உணவுகள், 4. ஆயுர்வேத மருந்துகள்.

இந்த ஆலையிலிருந்து எந்த விதமான குப்பைகளும் வெளியேறுவது இல்லையாம். ஆக ஜீரோ வேஸ்ட் டெக்னா லஜியின் அடிப்படையில் இயங்கு கிறார்களாம். உதாரணமாக, கற்றாழை சதைப் பகுதி மருந்து மற்றும் மற்ற உணவுகளுக்கு பயன்படுத்தப்பட்டு, நார் மற்றும் தோல் பகுதி கைவினைப் பொருட்களைத் தயாரிக்கவும், மருந்துகளைத் தயாரிக்கவும், விலங்குகளுக்கான உணவு தயாரிக்கவும் பயன்படுத்து கிறார்களாம். இவர்களுக்குத் தேவையான தண்ணீரை இவர்களே சுத்திகரித்து எடுத்துக் கொள்கிறார்களாம்.

ஆலையில் ஆட்களும், வேகமும்!

இந்த ஆலையில் 10,000 பேருக்கு மேல் வேலை பார்க்கிறார்கள். இவர்கள் டெட்ரா பேக்கிங் இயந்திரங் களைக் கொண்டு ஒரு மணி நேரத்துக்கு (65 மிலி பேக்குகள்) 27,000 பாக்கெட்களை தயாரிக்க முடியுமாம். பெரிய 200 மிலி டெட்ரா பேக்குகளில் ஒரு மணி நேரத்துக்கு 7,000 பாக்கெட்களை தயாரிக்க முடியுமாம். ஒரு நாளில் பதஞ்சலி ஆலைக்கு சராசரியாக 80 டன் சர்க்கரை தேவைப்படுமாம். கிட்டதட்ட இங்கு பயன்படுத்தப் படும் இயந்திரங்களில் பெரும்பாலானவைகள் 100% தானியங்கி இயந்திரங்களாம்.

குவாலிட்டி கன்ட்ரோல்!

ஒவ்வொரு ஆலைக்கும் ஒரு தனி லேப் இருக்கிறது. அந்த ஆலையிலிருந்து வெளிவரும் பொருட்களின் தரம் நிர்ணயிக்கப் பட்ட வரையறையில் இருக்கிறதா என்பது இந்த முதன்மை லேப்களில் சரி பார்க்கப்படு கின்றன. அதற்குப் பிறகு, மாஸ்டர் லேப் என்றழைக்கப்படும் ஃபைனல் லேப்பில் மீண்டும் அதன் தரம், நிறம் போன்றவைகள் சரிபார்க்கப்பட்ட பிறகுதான் ட்ரக்குகளில் ஏற்றுவதற்கு அனுமதிக்கப் படுகிறதாம்.

ஆராய்ச்சிக் கூடம்!

பதஞ்சலியிடம் 200-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் புதிய பொருட்கள் மற்றும் மருந்துளைக் கண்டுபிடிப்பதற்கு உழைத்து வருகிறார்களாம். இந்த விஞ்ஞானிகள் குழுவை இதுவரை அங்கு வேலை செய்பவர்கள்கூட நேரில் கண்டதில்லையாம். அந்த அளவுக்கு ரகசியமாக வைத்திருக் கிறார்களாம். அதோடு தனியாக பதஞ்சலி பயோ ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், பதஞ்சலி ரிசர்ச் ஃபவுண்டேஷன் மற்றும் பதஞ்சலி யுனிவர்சிட்டி போன்றவைகளும் இருக்கின்றன. இதற்கும் ஆச்சார்யா பால கிருஷ்ணாதான் தலைவர்.

குடோன்!

தயாரித்த பொருட்கள் அல்லது தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை பத்திரமாக வைப்பதற்கும் பெரிய அளவில் 1 லட்சம் சதுர அடியில் குடோன்கள் இருக்கிறது.

அதோடு பிரத்யேகமாக குளிர்சாதன குடோன்களும் அதே அளவில் இருக்கிறது. மிக பிரத்யேகமாக மூலிகை குடோன்களை நிர்மாணித்திருக் கிறார்கள். இந்த மூலிகை குடோன்களில் 550-க்கும் மேற்பட்ட மூலிகைகளை நன்கு சார் எடுத்து அவற்றைத் தனித்தனி யாக பாட்டில்களில் அடைத்து வைத்திருக்கிறார்களாம். இப்படி சாராக எடுத்து வைத்துக் கொள் வதால் வேதிவினை மாற்றங்கள் பெருமளவில் தடுக்கப்படும். அதன் தரமும் அப்படியே நீண்ட நாட்களுக்கு இருக்குமாம். அதோடு மற்ற பொருட்களை வைக்க இடமும் கிடைக்குமாம்.

ஹம் சர்வம் (எல்லாம் நாங்களே)!

பதஞ்சலி நிறுவனம் பெரும்பாலும் மற்றவர்களுக்கு லாபம் கொடுக்கும் விதத்தில் மக்களுக்கு சென்றடைகிறது. விலை அதிகரிக்கும் அனைத்துச் செலவுகளையும் அவர்களே செய்து காசை மிச்சப்படுத்திக் கொள்கிறார்கள். எளிமையாக சொல்ல வேண்டுமானால், மற்றவர் களோடு லாபத்தைப் பகிர்ந்து விலையை அதிகரிக்க விடாமல் தானே அனைத்தையும் செய்து மற்றவர்களைவிட குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இப்படி விலையைக் குறைக்க சுமாராக 37 பிரிவுகளில், பதஞ்சலி தொழில்களை பிரித்து நடத்துகிறதாம்.

உதாரணமாக, போக்குவரத்து. நாள் ஒன்றுக்கு 100 - 125 ட்ரக்குகளுக்கு மேல் சரக்குகள் ஏற்றப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்பப்படுமாம். என்றாவது கூடுதல் ட்ரக்குகள் உடனடியாக வேண்டுமென்றால், அப்போது தான் வெளியாட்களை நியமிப்பார்களாம். ஆக 125 ட்ரக்குகளைக் கொண்ட பதஞ்சலி டிரான்ஸ்போர்ட் என்கிற இவர்களின் துணை நிறுவனம் மூலமாக அனைத்துப் பொருட்களும் அனுப்பப்படு கிறதாம். ட்ரக்குகளுக்கு தேவையான டீசல் பதஞ்சலி டீசல் பம்புகள் மூலம் நிரப்பப்படுமாம்.

தங்களுக்கு தேவையான சாயப் பொருட்கள் அல்லது கலர் லிக்விட்களைகூட வெளியிலிருந்து காசு கொடுத்து வாங்குவதில்லை. இயற்கையான முறையில் இவர்களே தயாரித்துக் கொள்கிறார்களாம். அதற்கும் தனியாக ஆலை இருக்கிறதாம்.

பொருட்களைத் தயாரிப்பதில் முத்திரை பதித்த பதஞ்சலி நிறுவனம், புதுமையான மார்க்கெட்டிங் டெக்னிக்கு களைப் பின்பற்றி வருகிறது. இந்த மார்க்கெட்டிங் உத்திகள் தந்த பலன்தான் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே சுனாமி போல ரீடெய்ல் துறையில் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. அப்படி என்ன புதுமையான மார்க்கெட்டிங் உத்திகளை பதஞ்சலி பின்பற்றுகிறது, எப்படி தன் போட்டியாளர்களைவிட குறைவான விலைக்கு பொருட்களை தருகிறது?

5 ரூவா பிரம்மாஸ்திரம்!

இன்றைய தேதிக்கு இந்தியாவில் 5 ரூபாய்க்கு ஜூஸ் தரும் நிறுவனங்கள் மிகக் குறைவு. அதிலும் ஓரளவுக்கு நல்ல பிரபல மான பிராண்டுகள் என்றால் பார்லே அக்ரோவின் ஃப்ரூட்டி மற்றும் கவின்கேரின் மா போன்ற பொருட்களைச் சொல்லலாம். இந்த வெற்றிடத்தைக் கண்டுகொண்ட பதஞ்சலி, 5 ரூபாயில் ஜூஸ் தருகிறேன் என்று களம் இறங்கி இருக்கிறது. தொடக்கத்தில் பதஞ்சலியும் 200 மில்லி பேக்குகளைத்தான் தயாரித்தது நினைவு கூறத்தக்கது.

10 ரூவா பாசுபதாஸ்திரம்!

ஒரு காலத்தில் இந்தியாவில் ரூ.5-க்கு பிஸ்கட் கிடைக்கும் என்றால் நம்பமாட்டார்கள் அதை உடைத்து மார்க்கெட்டிங் செய்தது பார்லே அக்ரோ. அதை இன்னும் வெற்றிகரமாக அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்று பிரிட்டானியாவை நடுங்க வைத்தது ஐடிசி. அந்த 5 ரூவா ஃபார்முலாவை, அப்படியே தன் ஜூஸ்களுக்கு கனகச்சிதமாக பொருத்திவிட்டு பிஸ்கட்களுக்கு 10 ரூபாயை கையில் எடுத்து விளையாடத் தொடங்கி இருக்கிறது. தனது குறைந்தபட்ச பிஸ்கட் பாக்கெட்களின் விலை ரூ.10-ஆக நிர்ணயித்து பிஸ்கட்களை விற்று வருகிறது. விலையைக் குறைத்து இன்னும் இறங்கி போட்டி போடுவதைவிட ஒரு நிலையான விலையில் அளவை அதிகப்படுத்தி விளை யாடுகிறது. (பார்க்க அட்டவணை)

பதஞ்சலியின் பிராண்ட் ஊர்தி!

ஹரித்வார். இமாலயம் செல்லும் யாத்ரிகர்களுக்கான நுழைவாயில். அங்கு தினமும் காலை, மாலை கங்கா நதிக்கு பூஜை நடப்பது வழக்கம். அந்த பூஜை சமயத்தில் சராசரியாக ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கூடுகிறார்கள். அந்த தருணத்தில் கோவிலுக்குள் நடக்கும் பூஜை ஒரு பெரிய டிவியில் காண்பிக்கப் படுகிறது. அந்த டிவியில்தான் 70 சதவிகிதத்துக்கு மேற்பட்ட யாத்ரிகர்களின் கவனம் இருக்கிறது. பூஜை நடக்கும் மொத்த 20 - 30 நிமிடங்களில் 4 முறையாவது பதஞ்சலியின் விளம்பரம் வந்துவிடுகிறது. ஆக பக்திமயமான தருணத்தில் பதஞ்சலி மனதில் பதிந்துவிடுகிறது.

பாபா பிராண்ட்...!

பொதுவாக, ஒரு பிராண்டுக்கு யாரை பிராண்ட் அம்பாசிடராக நியமிப்பார்கள்? மக்களுக்கு தெரிந்த முகமாக இருப்பவர்கள் தானே! இங்கு பாபாவே உலகம் அறிந்த ஒரு முகமாகத்தானே இருக்கிறார். தன் பிராண்ட் இமேஜை அப்படியே பதஞ்சலி பொருட்களுக்கும் திருப்பிவிட்டு விடுகிறார்.

பதஞ்சலியின் பொருட்களை விற்பதற்காக பாபாஜி ஃபாலோ செய்யும் மார்க்கெட்டிங் உத்திகளை அடுத்த இதழில் பார்ப்போம்!

(தொடரும்)