நீங்கள் பத்து வருடமாக சம்பாதிக்கிறீர்களே... எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறீர்கள்..?

இந்தக் கேள்வியை உங்கள் பக்கத்து வீட்டு நண்பரிடமோ, விருந்துக்கு வந்த உறவினரிடமோ கேட்டுப் பாருங்கள். ‘‘வருமானமெல்லாம் வரத்தானப்பா செய்யுது; ஆனா ஒண்ணும் மிச்சத்துக்கு வழிய காணலேயப்பா...” என்பதுதான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும்.

நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்தால் கடைசியாக ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் பளிச்சென்று தெரியும். அவர்களுக்கு இம்மியளவுகூட பணத்தை நிர்வகிக்கவோ, கையாளவோ தெரியவில்லை என்பதுதான் அது.

நமக்குப் பள்ளியிலோ, கல்லூரியிலோ பணம் என்பது என்ன, அதை எவ்வாறு பெருக்குவது, பணவீக்கம் என்பது என்ன என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பதில்லை. நம்முடைய பெற்றோர்களும் முதலீட்டைப் பற்றி அதிகமாக தெரிந்திருக்க வில்லை.

கணவனும் மனைவியும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை எப்படி பொத்திப் பாதுகாத்து அவர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக பெருக்குவது..? அதற்குத்தான் மூன்றாவது கண் உங்களுக்குத் தேவை.

யார் அந்த மூன்றாவது கண்?

பொதுவாக, நம் இரண்டு புறக் கண்களுக்கு புலப்படாத பல விஷயங்கள் நம் அகக் கண்ணாகிய புத்தி என்னும் மூன்றாவது கண்ணுக்குப் புலப்படும் என்பார்கள். அதனால்தான் எந்தக் காரியத்தையும் அலசி ஆராய்ந்து யோசித்து செய் என்பார்கள் பெரியவர்கள். அந்த அளவுக்கு உங்கள் பொருளாதார நிலையை அலசி ஆராய்ந்து உங்களுக்கு முதலீட்டுக்கான மூன்றாவது கண்ணாக இருக்கக் கூடியவர்கள்தான் நிதி ஆலோசகர்கள்.

சரியாக முதலீடு செய்ய தகுந்த வழிகாட்டலை செய்து உங்கள் பணத்தை பல மடங்காக்கும் நிதி ஆலோசகரின் தேவை முதலீடு செய்ய விரும்பும் நம் அனைவருக்குமே மிக மிக அவசியம். இன்று ஒரு நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு சி.எஃப்.ஓ. (Chief Finanancial Officer) எவ்வளவு முக்கியமோ, அதே போல ஒரு குடும்பத்தின் நிதி நிலைமையை உயர்த்த நிதி ஆலோசகர் என்ற சி.எஃப்.ஓ. முக்கியம். ஏன் முக்கியம் என பார்ப்போம்.

இம்பல்ஸிவ் பையிங்!

இன்று பலரும் பார்த்தவுடன் (Impulsive Buying) ஒரு பொருளை தேவையே இல்லா விட்டாலும் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்; அந்த எண்ணத்தை ஒரு நாள் தள்ளிப் போட்டால் பல பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க முடியும். முதலீட்டிலும் அப்படித்தான். தேவை இல்லாத முதலீட்டிலிருந்து உங்களை தடுப்பவர் நிதி ஆலோசகரே.

நேரம், துணிவு!

முதலீடு என்ன கம்ப சூத்திரமா... நாமே பார்த்துக் கொள்ளலாம் என பலரும் நினைப்பார்கள். முதலீட்டாளரே செய்யும் போது அவர்கள் முதலில் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். மேலும் சந்தை ஏறி இறங்கி கொண்டிருந்தால் முதலீடு செய்வதற்கு பெரும்பாலும் தைரியம் வராது. இதில் கிடந்து அல்லாடி கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களுடைய வேலையில் செலவிட்டால், பதவியில் உயர்வு பெற்று சம்பளம் உயர வாய்ப்புள்ளதே. இதைத்தான் ஆங்கிலத்தில் PENNY WISE POUND FOOLISH என்று சொல்வார்கள். முதலீட்டாளர் களின் நேரத்தை காப்பாற்றித் தருகிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

மயக்கும் மாயை!

நம்முடைய முதலீடு பெரும்பாலும் நம்மைச் சுற்றி உள்ளவர்களது செயல்பாட்டை சார்ந்தே இருக்கும். மேலும், ஒருவர் ஒரு முதலீடு சரி இல்லை என்றால் நாம் அப்படியே நம்பி அதை தவிர்ப்பதுண்டு. பக்கா லாபம் வரும் முதலீடு என்றால் யோசிக்காமல் நம்பி பணத்தை போடுவதும் உண்டு. மேலும், பணவீக்கத்தை பற்றி யாரும் அறிந்து கொள்ள முயல்வதில்லை. நண்பர்கள் பலர் நான் 2008-ல் வாங்கிய வீடு இரு மடங்காகி உள்ளது என்று சொன்னவுடன் அது பெரிய முதலீடு என்று நினைத்துவிடுகிறோம். எட்டு வருடத்தில் இரண்டு மடங்கு என்பது 9% கூட்டு வட்டிதான். மேலும், அதை விற்கும்போது அதற்கு வரி கட்டவேண்டும் என்பதும் பலருக்குத் தெரிவ தில்லை. இத்தகைய மாயை களிலிருந்து நம் முதலீட்டை சரியான பாதைக்குத் திருப்பு கிறவர்கள் நிதி ஆலோசகர்களே.

மின்னும் தங்கம்!

பலரும் தங்கம் விலை தாறுமாறாக ஏறி உள்ளது என்று சொல்வதுண்டு. உண்மை நிலை அப்படி இல்லை. இதை நீங்கள் நம்பவில்லை எனில் ஒரு சின்ன கணக்கை செய்து பாருங்கள். ஒரு 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் வேலைக்கு சேர்ந்தபோது ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன, உங்களின் அப்போதைய சம்பளத்தில் எத்தனை கிராம் வாங்க முடிந்தது என கணக்குப் போட்டுப் பாருங்கள்; உங்களின் இன்றைய சம்பளத்தில் எத்தனை கிராம் தங்கம் வாங்க முடிகிறது என்றும் பாருங்கள். கண்டிப்பாக இன்று சில மடங்குகள் அதிகமாகத்தான் தங்கம் வாங்கியிருப்பீர்கள். அதாவது தங்கத்தின் மதிப்பு குறைந்ததால் தான் உங்களுக்கு அதிக தங்கம் கிடைத்திருக்கிறது. அப்படிப் பார்க்கும்போது தங்கம் சூப்பர் முதலீடு அல்ல என்கிற இந்த நிஜத்தை உங்களுக்கு புரிய வைப்பவர் நிதி ஆலோசகரே.

அடிமையாக்கும் இஎம்ஐ!

முழுப் பணத்தையும் தராமல் ஒரு பொருள் வாங்க முடிகிறது என்றால், ஏதோ அந்த பொருள் இலவசமாகவே நமக்கு கிடைத்து விட்டதைப் போல நினைப்ப வர்கள்தானே நாம். நம்மிடம் பணம் வருவதற்கு முன்பே ஒவ்வொன்றையும் வாங்கிப் பழகினால் பணம் வந்தவுடன் அதற்கான வட்டியைத்தான் கட்ட முடியுமே தவிர, பணத்தைச் சேர்க்க முடியாது. எவ்வளவு சம்பாதித்தும் சேர்க்க முடியவில்லை என்ற எண்ணம் இதனால்தான் வருகிறது. இஎம்ஐ எதற்கு அவசியம், எதற்கு அவசியமில்லை என சரியாகக் கணிப்பவர்கள்தான் நிதி ஆலோசகர்கள்.

எங்கே ஓட்டை?

பலரும் சொல்லக்கூடிய ஒரு விஷயம், என்னிடம் பணம் இல்லை என்பதுதான். அப்படி சொல்கிறவர்கள் இரண்டு மணி நேரம் நிதி ஆலோசகரிடம் உட்கார்ந்து அதைப் பற்றி விவாதித்தால், எங்கு ஓட்டை இருக்கிறது என்று கண்டறிந்து வீணாகும் பணத்தை முதலீட்டுக்கு ஒதுக்கமுடியும். அதற்கு நேரம் செலவிட வேண்டும், பலரும் அதை செய்ய தயங்குகிறார்கள் என்பதே நிஜம்.

இரு மடங்கு முதலீடு!

ஒருவர் வரும் 20 ஆண்டுகளில் ரூ.100 முதலீடு செய்வதாக எடுத்துக்கொண்டால், நிதி ஆலோசகரின் உதவியுடன் அவர் ரூ.200 முதலீடு செய்வதற்கு வாய்ப்புள்ளது. மேலும், 100 ரூபாய்க்கான கூட்டு வட்டியை கவனிக்கவேண்டும். தனி நபராக செல்வத்தைப் பெருக்குவதைக் காட்டிலும் வழிகாட்டுதலுடன் செயல்படுவது இரட்டிப்பு பலனைக் கொடுக்கும்.

இலக்கு நோக்கிய திட்டம்!

நிறைய பேர் என்ன செய்கிறார்கள்? 500 ரூபாயை ஆர்.டி-யில் போடுவோம், 1,000 சீட்டுக் கட்டுவோம் என்ற அளவில்தான் முதலீட்டை திட்டமிடுகிறார்கள். நமக்கான இலக்குகள், அதற்கான தேவைகளை அறிந்து திட்டமிட்டுத்் தருபவர்கள் நிதி ஆலோசகர்களே.

சரியான வழிகாட்டி!

ஒரு சிறுவன் நெருக்கடியான சாலையைக் கடக்கும் போது அவனுடைய அப்பாவின் கையை கெட்டியாக பிடித்துக்கொள்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். முதலீடு குறித்த சிக்கலான முடிவுகளை எடுக்கும்போது, நீங்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் நிதி ஆலோசகரின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். அவர் இரண்டு அடி முன்னால் செல்வார்... இரண்டடி பக்கவாட்டில் செல்வார்... பின்பு இரண்டடி பின்னாலும் நகர்வார்... ரோட்டை கடக்க முன்னாடி செல்லாமல் இப்படி செய்கிறாரே என்று கையை விட்டால் உங்களால் எதிர்பக்கம் செல்ல முடியாது. அதாவது, உங்களுடைய இலக்குகளை அடைவது கடினம்.

நிதி ஆலோசகருக்கு உங்களின் இலக்கை அடைவதற்கான வழி முறை தெரியும்; ஆனால், டிராஃபிக் அவருடைய கையில் இல்லை. அதேபோல சந்தையின் ஏற்ற இறக்கங்களை யார் ஒருவராலும் தவிர்க்க முடியாது. ஆனால் அதை லாவகமாக கடக்க வேண்டுமானால், நிதி ஆலோசகரின் உதவியினால் மட்டுமே முடியும்.

குறைவான செலவு... கூடுதலான பலன்!

நாம் படிப்பு, வேலை என எது ஒன்றை அடைய வேண்டுமானாலும் அதற்காக நிறைய உழைக்கிறோம்; பணம் செலவு செய்கிறோம். அப்படி இருக்கும்போது நம் பணத்தை நிர்வகித்து பல மடங்காக பெருக்கித் தரும் நிதி ஆலோசகரின் உதவிக்கு செலவு செய்வதில் மட்டும் ஏன் தயக்கம்..?

மிகக் குறைந்த செலவில் உங்கள் பணத்தை பல மடங்காகப் பெருக்க திட்டமிட்டுக் கொடுப்பவர் நிதி ஆலோசகர்தான். குறைந்த செலவில் கூடுதல் பலனை அடைவதில் உங்களுக்கு என்ன தயக்கம்?

ஆறை நூறாக்கி சரியான இலக்கை அடைய நமக்கு மூன்றாவது கண் மிக முக்கியம் என்பதை மறக்காமல் இருப்போம்!