நம் நாட்டில் பெரும்பாலானோருக்கு தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. அரசும் சுய தொழில்களை ஊக்குவித்து வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கவே விரும்புகிறது. ஆனால், தொழில் தொடங்கவும், அதை வெற்றிகரமாக வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதற்கான சூழலும் எல்லோருக்கும் எளிதில் வாய்ப்பதில்லை.

தொழிலுக்கு முதலீடு தேவைப் படுகிறது. அது இல்லாதபட்சத்தில் கடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் கொடுக்கின்றன. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கொடுக்கும் கடனுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால் சிறு தொழில்முனைவோர்கள் தொழில் கடனுக்கு வங்கிகளையே நம்பி இருக்கிறார்கள். ஆனால் வங்கிகளோ சிறு தொழில் முனைவோர்களுக்கு அவ்வளவு எளிதில் கடன் வழங்குவதில்லை.

வங்கிகள் ஏன் எஸ்எம்இகளுக்கு கடன் வழங்கத் தயங்குகின்றன என்கிற கேள்விக்கு விரிவாக பதில் அளித்துப் பேசினார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் பவன் குமார் பஜாஜ். சென்னையில் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சமீபத்தில் நடத்திய கருத்தரங்கில் அவர் இது குறித்து பேசினார்.

பெரிய கார்ப்பரேட்டுகள்தான் காரணம்!

“ஒரு வங்கிக்குக் கடன் கொடுப்பதன் மூலம்தான் அதிக வருவாய் கிடைக்கிறது. சேவையின் மூலம் கிடைக்கும் வருவாயைக் காட்டிலும் கடன் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய்தான் வங்கிக்கு அதிகம். அப்படியிருக்க வங்கிகள் கடன் வழங்க ஏன் தயங்க வேண்டும்? இதற்கு முதற்காரணம் இங்குள்ள பெரிய நிறுவனங்கள் வாங்கியக் கடனை சரியாகத் திருப்பிச் செலுத்தாததுதான். இதனால் வாராக் கடன் சுமை அதிகரித்து, வங்கிகளுக்குக் கடன் வழங்கப் பணம் இல்லாத நிலை உண்டாகிறது.

இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் தங்களுக்குள் நிலவும் போட்டியில் ஜெயிக்கவும், சந்தையைப் பிடிக்கவும், தங்களின் மதிப்பைச் செயற்கையாக உயர்த்தவும் வங்கிகளிடமிருந்து கடன்களை வாங்கிக் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்து விடுகின்றன. இதனால் கடந்த சில வருடங்களாகவே ஸ்டீல், உட்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட் மற்றும் பவர் என அனைத்துத் துறைகளும் மந்த நிலையைச் சந்தித்துள்ளன.

அவற்றுக்கான தேவை இல்லாத சமயத்திலும், தங்களுடைய பிசினஸின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்துக்கும், விளம்பரத்துக்கும் மற்றும் ஆராய்ச்சிக்கும் என மொத்தப் பணத்தையும் செலவு செய்து விட்டு, வருவாய் ஈட்ட முடியாமல் நஷ்டமடைந்துவிடுகின்றன. பின்னர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கின்றன.

வங்கித் துறை சிறப்பாக செயல்படவில்லை!

வாராக் கடன் சுமை அதிகரித்து சில ஆண்டுகளாக வங்கித் துறையே பெரும் சிக்கலில் தவிக்கிறது. வங்கித் துறை சிறப்பாக செயல்பட முடியாமல் நஷ்டங்களைச் சந்தித்து வருகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் வங்கித் துறையின் வளர்ச்சியில் பிரதிபலிக்கும். எனவே, அரசும் ரிசர்வ் வங்கியும் இந்த நிலையைச் சமாளிக்கும் வகையில் தங்களது கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது. அவை வங்கித் துறைக்கு அழுத்தம் தரத் தொடங்கின.

இதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான். கடன் வட்டிவிகிதத்தைக் குறைக்க முடியாத நிலை, சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதத்தைக் குறைப்பது, கடன் வழங்குவதில் கெடுபிடிகளை நெருக்குவது எனச் சிக்கலை சமாளிக்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது.

எஸ்எம்இ-கள்தான் தயாராக வேண்டும்!

வங்கிகளின் வாராக் கடனில் 80% பெரிய நிறுவனங்களுடையது. 20 சதவிகிதமே சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்ந்த கடன்கள். மேலும், பெரிய நிறுவனங்களிடமிருந்து கடனை வசூலிப்பதைக் காட்டிலும் சிறு, நடுத்தர நிறுவனங்களிடமிருந்து கடனை வசூலிப்பது வங்கிகளுக்கு அவ்வளவு பிரச்னையாக இல்லை. ஆனாலும் வங்கிகள் கடன் வழங்க மறுக்கவே செய்கிறது. ஏனென்றால் பெரிய நிறுவனங்கள் சரியாக செயல் படாவிட்டாலும் கடன் வாங்க விண்ணப்பிப்பதற்கான அத்தனை ஆவணங்களையும் நடைமுறைகளையும் தெளிவாகச் செய்துவிடுகின்றன. அதனால் அவற்றுக்கு கடன் வழங்க மறுப்பு தெரிவிப்பதற்குத் தகுதியான காரணங்கள் எதுவும் இருப்பதில்லை.

ஆனால், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் பெரும்பாலும் தனிநபரிடம் பத்திரத்தில் கையெழுத்து போட்டு பணம் வாங்கிச் செல்வதைப் போலவே, வங்கிக் கடனையும் அணுகுகிறார்கள். சொந்தமாகத் தொழில் செய்கிறார்கள் என்பதைத் தவிர அவர்களுக்கு முறையான வளர்ச்சியை நோக்கி தங்கள் தொழிலை எப்படி எடுத்துச் செல்வது என்பது தெரியவில்லை. எஸ்எம்இகள் தங்களுடைய அக்கவுன்ட்டிங், டாக்கு மென்டேஷன் போன்றவற்றில் காட்டும் அலட்சியம்தான் பெரும்பாலும் கடன் மறுக்கப் படுவதற்கான காரணம்.

எஸ்எம்இ-கள் தங்களுக்கு வங்கிகள் நிச்சயமாக கடன் தர வேண்டும் என்று விரும்பினால் முதலில் தொழில் செய்வது தொடர்பான ஆவணங்கள், வருவாய் குறித்த ஆவணங்கள் போன்றவற்றை முறையாக வைத்திருக்க வேண்டும். வங்கிகள் எதிர்பார்க்கும் ஆவணங்களைச் சரியாக சமர்ப்பித்துவிட்டாலே போதும். மேலும், உங்களுடைய தொழில், முதலீடு மற்றும் எப்படி தொழிலை வளர்க்கப் போகிறீர் கள் என்பது குறித்தும் தெளிவான பார்வை இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்குக் கடன் வழங்கலாம் என்ற நம்பிக்கை வங்கியினருக்கு வரும்.

வங்கிகள் விதிமுறைகளின் படிதான் கடனை வழங்க முடியும். கண்ணை மூடிக் கொண்டு கேட்பவருக்கெல்லாம் கடன் வழங்கிவிட முடியாது. வாராக் கடன் அதிகரித்து வரும் நிலையில் கடன் வாங்குபவர் சரியான விதிமுறைகளின்படி கடனுக்கு விண்ணப்பிப்பதோடு, கடனைத் திருப்பிச் செலுத்து வதிலும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் மீண்டும் கடன் தேவைப் பட்டால் கேட்க முடியும்.

இப்போதெல்லாம் வங்கிகளே சிறு, குறு நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குகின்றன. எனவே, தொழில் முனைவோர்கள் தங்களின் வளர்ச்சியை மனதில் கொண்டு அனைத்தையும் சட்ட நடை முறைப்படி பதிவு செய்து, ஆவணங்களைச் சரியாக நிர்வகித்து வந்தால், எந்த வங்கியும் கடன் தர முடியாது என்று சொல்லாது.

நோக்கியாவின் கதையை மறந்துவிடாதீர்கள்!

மொபைல் போன்கள் இந்தியா வில் பிரபலமாகிக் கொண்டிருந்த போது கொடி கட்டிப் பறந்த நோக்கியா நிறுவனம், இன்று எங்கே? நோக்கியாவின் கதையைத் தொழில் செய்யும் ஒவ்வொருவரும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நம் தொழிலுக்கான சந்தையைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். சந்தையின் தேவை என்ன என்பதைப் பொறுத்து நம்மை நாம் மாற்றிக்கொண்டால் மட்டுமே பிசினஸில் நிலைத்து நிற்க முடியும்” என்று முடித்தார் பவன் குமார் பஜாஜ்.

அவர் கூறியபடி, வங்கித் துறையின் முக்கிய நோக்கமே தொழில் செய்ய நினைப்பவர் களுக்கு கடன் வழங்குவதுதான் எனவே, சரியான ஆவணங்கள் மற்றும் தெளிவான பிசினஸ் பார்வையுடன் அணுகினால் ஒவ்வொரு தொழில் முனைவோரும் எளிதில் கடன் பெற முடியும்.

படங்கள்: மீ.நிவேதன்