பரபரப்பான இன்றைய வாழ்க்கையில் பலருக்கும் சாப்பிட்ட தட்டைக் கூட கழுவ நேரமில்லை. இதனால்தான் ஹோட்டல்களில் மட்டுமல்ல, நம் வீடுகளிலும் எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் தட்டின் மேல் ஒரு பாலீதின் தாளை வைத்து அதில் உணவைப் பரிமாறி சாப்பிடுகிறோம். சாப்பிட்டுவிட்டு அந்தத் தாளை அப்படியே தூக்கி வீசிவிடுகிறோம்.

இந்த மாதிரியான பாலீதின் தாளில் வைத்த உணவைச் சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல்வேறு விதமான நோய்கள் கோளாறுகள் ஏற்படுகிறது. தவிர, பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச் சூழலுக்கும் பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படு கின்றன. மிகச் சில ஹோட்டல் களில் வாழை இலையில் உணவை வைத்து தருவதால் பலரும் அங்கு உணவருந்த விரும்பி வருகிறார்கள்.

இன்றைக்கு மக்களிடம் உடல் நலம் குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் விழிப்பு உணர்வு ஏற்பட்டிருப்பதால், உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்த நினைக்கிறார்கள். அந்த வகையில் இன்று பலருக்கும் பயன்படும் ஒரு பொருளாக மாறியிருக்கிறது பாக்கு மட்டை.

ஒரு காலத்தில் இதனால் எந்தவித பயனுமில்லை என்று நினைத்து குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பாக்கு மட்டைதான் ,இன்றைக்கு நாம் தேடினாலும் அரிதாகவே கிடைக்கிற ஒரு பொக்கிஷமாக மாறியிருக்கிறது. கோவில்களில் பிரசாதம் வழங்கு வதிலிருந்து பெரிய பெரிய ஹோட்டல்களில் சிற்றுண்டி, பஃபே முதற்கொண்டு திருமணம் போன்ற நிகழ்வுகளில்கூட உணவைப் பரிமாறுவதற்காக பாக்கு மட்டையைப் பயன்படுத்து வதை நாம் பார்க்கிறோம்.

ஒரு நவீன தொழில்நுட்பத் துடன், லேட்டஸ்ட் வடிவில் பாக்கு மட்டை தட்டுகளை உற்பத்தி செய்கிற ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டுமெனில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், என்னென்ன பொருட்கள் அவசியமாக இருக்க வேண்டும், இந்தத் தொழிலில் இருக்கிற பிசினஸ் வாய்ப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி சேலம், கோரிமேட்டில் உள்ள விநாயகா பிளேட்ஸ் அண்ட் கப்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பழனிசாமியிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

‘‘இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், இயற்கை விவசாயம் என்று இன்றைக்குப் படித்தவர்கள் முதற்கொண்டு எல்லோருமே இயற்கையை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறோம். பல இடங் களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இயற்கை சார்ந்த பாக்கு மட்டையில் உருவாகும் தட்டுகளுக்கு நிச்சயமாக பெரிய தேவை இருக்கும். முன்பைவிட இன்றைக்கு பாக்கு மட்டை தட்டுகளுக்கானத் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், உற்பத்தி குறைவாகத்தான் உள்ளது. இதனால் இந்தத் தொழில் முக்கியத்துவம் பெறுகிறது.

நம்முடைய முன்னோர்கள் வெளியே போகும்போது பாக்கு மட்டையில்தான் உணவை கட்டி எடுத்துச் செல்வார்கள். அவர்கள் செய்ததைதான் நாம் கொஞ்சம் அழகுபடுத்தி அழகான பாக்கு மட்டை தட்டுகளை செய்கிறோம். பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக பாக்கு மட்டை இருக் கிறது. மிக நேர்த்தியாக, நமக்கு வேண்டிய அளவில் அழகான தட்டுகளை பாக்கு மட்டையில் மட்டும்தான் உருவாக்க முடியும்.

நம்முடைய நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுவதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை. பாக்கு மட்டை தட்டுகளை தயாரிக்கும் போது எந்தவிதமான கெமிக்கல் களையும் பயன்படுத்துவதில்லை என்பதால் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்த தீங்கும் இல்லை, கையில் வைத்து சாப்பிடுவதற்கு ஏதுவாகவும், சாப்பிட்ட பிறகு அப்புறப்படுத்த சுலபமாகவும் இருக்கும் இந்த பாக்கு மட்டைத் தட்டுகளை உற்பத்தி செய்யும் தொழிலில் முதலீடு செய்வது சிறப்பான ஒன்றாகும்.

இந்தத் தொழிலை புதிதாக ஆரம்பிக்க அருகிலுள்ள சிறு தொழில் மையத்துக்குச் சென்று பதிவு செய்து சான்றிதழைப் பெற்றாலே போதுமானது. இந்தத் தொழில் குடிசைத் தொழிலுக்கு கீழ் வருவதால், மின்சார மானியமும் நம்மால் பெற முடியும்.

பாக்கு மட்டை தட்டுகளை தயாரிக்க மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மெஷின் தேவைப் படுகிறது. ஐந்து மெஷின் கள் சேர்ந்து ஒரு யூனிட் ஆகும், இந்த ஐந்து மெஷின்களில் இருந்து 4, 6, 8, 10, 12 இஞ்ச் அளவுள்ள பாக்கு மட்டை தட்டுகளை நம்மால் தயாரிக்க முடியும்.

ஒரு நல்ல தரமான பாக்கு மட்டை தட்டு களை உற்பத்தி செய்கிற ஒரு யூனிட்டைத் தொடங்க ரூ.2.50 லட்சம் தேவைப்படும். எந்த இடத்தில் வேண்டுமானாலும் இந்தத் தொழிலை தொடங்கலாம். சுமார் 500 சதுர அடி இடம் இருந்தாலே போதுமானது.

பாக்கு மட்டையில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றி சுத்தம் செய்ய தண்ணீரில் அரை மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். அதனால் தண்ணீர் வசதி நன்றாக உள்ள இடம் இருந்தால் சிறப்பானது.

வீட்டில் இருந்தே ஓய்வு நேரத்தில் பெண்கள் மற்றும் ஊனமுற்றோர்கள்கூட எளிதில் இயக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மெஷின்கள் இப்போது கிடைக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு பேர் வேலைக்குத் தேவைப்படுவார்கள்.

இந்தத் தொழிலுக்குத் தேவையான முக்கியமான மூலப்பொருள் பாக்கு மட்டைகள் தான். சேலம் பக்கத்தில் உள்ள ஆத்தூர், வாழப்பாடி, மேட்டுப் பாளையம் மற்றும் கேரளா, கர்நாடகாவிலும் பாக்கு மட்டைகள் கிடைக்கிறது.

மழைக் காலத்தில் பாக்கு மட்டைகள் கிடைப்பது சிரமமானது. அதனால் மழைக் காலத்துக்கு முன்பே பாக்கு மட்டைகளை வாங்கி பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது.

திருமணம் போன்ற நிகழ்வு களுக்கு 12 இஞ்ச் அளவுள்ள தட்டுக்களையும், சுற்றுலாவுக்கோ, வெளியூர்களுக்கோ செல்லும் பயணிகளுக்கு 10 இஞ்ச் அளவுள்ள தட்டுக்களையும், அன்னதானக் கூட்டங்களுக்கு 8 இஞ்ச் அளவுள்ள தட்டுக்களையும், கோவில்களில் பிரசாதங்கள் வழங்கவும், பானி பூரி கடைகளுக்காகவும் 4, 6 இஞ்ச் அளவுள்ள தட்டுக்களையும் மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

அன்னதான விழாகள், கேட்டரிங் தொழில் செய்பவர்கள், கடைகள், கோவில்கள்தான் பாக்கு மட்டைகளை வாங்குவதற்கு முக்கியமான வாடிக்கை யாளர்கள். டெல்லி, அசாமில் இருக்கும் பானி பூரி கடைகள்கூட 4,

6 இஞ்ச் பாக்கு மட்டை தட்டுகளை வாங்குகிறார்கள்.
பாக்கு மட்டை தட்டுகளுக்கு வெளிநாடுகளிலும் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. அதனால் இந்தத் தொழிலில் ஏற்றுமதிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

வாடிக்கையாளர்கள் முன்பே ஆர்டர் கொடுத்து காத்திருந்து பாக்கு மட்டைகளை வாங்கிப் போகும் சூழல்தான் இப்போது நிலவுகிறது. இயந்திரங்களை விற்பனை செய்கிற நிறுவனங்களே பாக்கு மட்டை தட்டுக்களை வாங்கிக் கொள்கிறது. அதனால் இந்தத் தொழிலுக்கு பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்ய அலைய வேண்டியதில்லை.

வேலை செய்கிற ஆட்களுக்கு கொடுத்த சம்பளம் போக மாதம் ரூ.25,000 வரை வருமானம் ஈட்ட முடியும்’’ என்று முடித்தார் பழனிசாமி.

நாளுக்கு நாள் தேவை அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்தத் தொழிலை செய்யலாமே!

படங்கள்: எம்.விஜயகுமார்