பிறந்தது ஜெயின் குடும்பத்தில். படித்தது கெமிக்கல் என்ஜினீயரிங். தன் குடும்பத்தில் அதுவரை யாருமே பெரிதாக பிசினஸ் செய்ததில்லை என்ற போதிலும் மருந்து தயாரிக்கும் தொழிலில் இறங்கி, பெரிய வெற்றி கண்டவர் ஸ்ட்ரைட் ஷாசன் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் எஸ்.அபயகுமார். சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் அவரை சந்தித்தோம். அவர் வாழ்க்கைக் கதையை அவரே சொன்னார்.

மகாராஷ்டிரா டு சென்னை!

‘‘எங்கள் பூர்வீகம் ராஜஸ்தான். எனது தந்தை சங்கர்லால், மகாராஷ்டிராவில் விவசாயம் செய்து வந்தார். 1935-ல் அவர் வேலை தேடி சென்னைக்கு வந்தார். ஒரு துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். பிற்பாடு மளிகைக் கடை ஒன்றை ஆரம்பித்தார். சென்னையிலேயே திருமணம் செய்துகொண்டு, இங்கேயே தங்கிவிட்டார். அவருக்கு தனது தொழில் தவிர, சமூக சேவையில் ஆர்வம் அதிகம். தி.நகர் வியாபாரிகள் சங்கத்தில் அவர் பல ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக் கிறார். தவிர, ஜெயின் சங்கத்திலும் சேர்ந்து பல நல்ல காரியங்களைச் செய்தார்.

என் தந்தைக்கு நாங்கள் மூன்று மகன்கள். முதல் மகனை டாக்டருக்கும், இரண்டாவது மகனாகிய என்னை கெமிக்கல் என்ஜினீ யரிங்கும், மூன்றாவது மகனை சி.ஏ.வும் படிக்க வைத்தார்.

நான் 1975-ல் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித் தேன். படிக்கிற காலத்திலேயே ஒவ்வொரு கோடை விடுமுறை யின்போதும் ஏதாவது ஒரு பெரிய கம்பெனியில் ‘அப்ரண்டிஸ்’-ஆக வேலை பார்ப்பேன். இ-மெயில் வசதி இல்லாத அந்தக் காலத்தில் கம்பெனி களுக்கு தபால் அனுப்பி, அனுமதி பெறுவது பெரிய வேலையாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ‘அப்ரண்டிஸ்’ பயிற்சி முடிந்தவு டன், ரயிலில் 100 ரூபாய்க்கு டிக் கெட் எடுத்து, இந்தியா முழுக்க பல ஊர் களுக்குச் சென்று பார்ப்பேன். நமது நாட்டை நன்கு புரிந்து கொள்ளவும் பிற்பாடு தொழில் தொடங்கி நடத்தவும் இந்த ‘அப்ரண்டிஸ்’ பயிற்சியும், பயணமும் எனக்கு மிக உதவின.

முதல் தொழில்..!

படிக்கிற காலத்திலேயே ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள மும்பை சென்றேன். மும்பை ஓபராய் ஹோட்டலில் நன்கு முடி வெட்டுவார்கள் என்று கேள்விப்பட்டு, அங்கு சென்றேன். எனக்கு முடி வெட்டியவரிடம் பேசிக் கொண்டிருந்தபோதுதான், அவர் சென்னையைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. ‘சென்னை யிலேயே நீங்கள் சலூனை ஆரம்பிக்க வேண்டியதுதானே!’ என்று நான் அவரிடம் சொல்லப் போக, அவரும் உடனே சென்னைக்கு வந்துவிட்டார். அவருக்கு ஒரு இடத்தைப் பிடித்து சலூனை ஆரம்பித்துத் தந்தேன்.

40 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஸ்டெப் கட்டிங்’ என்பது மிகப் பிரபலம். அந்த ஸ்டெப் கட்டிங்கை இந்த சலூன் மூலமாக நாங்கள் அறிமுகப்படுத்தினோம். கல்லூரியில் படிக்கிற காலத்தில் நான் ஆரம்பித்த முதல் தொழில் என்றால் இந்த சலூன்தான்.

என் குரு..!

நான் படித்து முடித்தவுடன் எனக்குத் திருமணம் நடந்தது. அடுத்த ஆண்டு எனக்கு பெண் குழந்தை பிறந்தது. சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சியில் நான் இறங்கினேன். நான் செய்ய நினைக்கும் மூன்று தொழில்களை என் தந்தை முன்பு வைத்தேன். அவற்றைப் பற்றி எல்லாம் கேட்டு விட்டு, அவருடைய நண்பரான ராம் குரூப்பின் ஸ்தாபகத் தலைவர் ஆர்.தியாகராஜனிடம் என்னை அனுப்பி வைத்தார்.

என் தொழில் ஐடியாக்களை கேட்டுவிட்டு, வேறொரு ஐடியா தந்தார் அவர். ‘‘நான் மருந்து தயாரிக்கும் கம்பெனி ஒன்றை ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறேன். இந்த கம்பெனியை நீ கொஞ்சம் பார்த்துக்கொள். தொழிலை நன்கு கற்றுக் கொண்ட வுடன், நீயே ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கலாம்’’ என்றார். அவர் சொன்னதை அப்படியே செய்தேன். அன்று முதல் இன்று வரை என் பிசினஸ் குரு என்றால் அவர்தான். தொழில் ரீதியாக எனக்கு வரும் சந்தேகங்கள் அனைத்துக்கும் அவரிடம்தான் யோசனை கேட்பேன்.

பெற்றோர் பெயரில் தொழிற்சாலை..!

அந்தக் காலத்தில் நமக்குத் தேவையான 80 சதவிகிதமான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். இதனால் மருந்துகளுக்கானத் தட்டுப்பாடு மிக அதிகமாக இருந்தது. இந்த நிலையில், நம் நாட்டில் மருந்து உற்பத்தியை அதிகரிக்க சர்வதேச காப்புரிமைகள் இந்தியாவில் செல்லுபடி ஆகாது என்று அறிவித்தார் அப்போது பிரதம ராக இருந்த இந்திரா காந்தி. இதனால், இந்தியாவில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் நிறைய உருவாக ஆரம்பித்தன. நானும் ஷாசன் என்கிற பெயரில் மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினேன். என் அப்பாவின் பெயர் சங்கர்லால்; அம்மாவின் பெயர் சுந்தர்பாய். இந்த இரண்டு பெயர்களில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்களைச் சேர்த்து ஷாசன் என்று பெயர் வைத்தேன். தொழில் தொடங்க 5 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப் பட்டது. இதில் ரூ.3 லட்சம் என் தந்தையார் தந்தார்.

மீதமுள்ள ரூ.2 லட்சத்தை நானாலால் பட் என்பவரிடம் இருந்து எனது நிறுவனத்தின் 40 சதவிகித பங்குகளைத் தந்து வாங்கினேன்.

வேளச்சேரியில் அரை ஏக்கர் நிலத்தில் எனது முதல் தொழிற் சாலை உருவானது. நோவல்ஜின், அனால்ஜின் மருந்து தயாரிக்கத் தேவையான மூலப்பொருளை நாங்கள் தயாரிக்கத் தொடங்கி னோம். சில ஆண்டுகளிலேயே எங்கள் தொழில் நல்ல வளர்ச்சி கண்டது. இந்த அரை ஏக்கர் போதாது; இன்னும் பெரிதாக தொழிலை விரிவுபடுத்த நினைத்த தோம். பாண்டிச்சேரியில் காலாப் பேட்டையில் இரண்டாவது தொழிற்சாலையை 1985-ல் தொடங்கினோம். பிற்பாடு கடலூரிலும் ஒரு தொழிற் சாலையைத் தொடங்கினோம்.

மருந்து ஏற்றுமதி!

நரசிம்மராவ் பிரதமராகி தாராளமயமாக்கலைக் கொண்டு வந்தபின், இந்தியாவில் தயாரா கும் மருந்துகளை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்தார்கள். இது நல்ல வாய்ப்பாக இருக்கவே, அமெரிக்காவுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்ய US FDA-விடம் இருந்து அனுமதி வாங்கினோம். தமிழகத்தின் சார்பில் இந்த அனுமதியை முதன் முதலாக வாங்கியது நாங்கள்தான்.

எங்கள் தொழில் நல்ல முறை யில் நடந்ததால், 1994-ல் ரூ.200 கோடி அளவுக்கு டேர்ன் ஓவர் எட்டியது. தொழிலை இன்னும் பெரிதாக வளர்த்தெடுக்க ஐ.பி.ஓ. வர முடிவு செய்தோம். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இரண்டு புதிய தொழில்கள்!

தொழில் நன்கு வளர்ந்து வந்தபோது எங்கள் குடும்பத்தில் ஒரு முக்கியமான முடிவெடுத் தோம். இதை ஆங்கிலத்தில் ‘Owner managed to managing owenership’ என்பார்கள். அதாவது, நாங்கள் செய்துவந்த தொழிலை புரஃபஷ னல்களிடம் ஒப்படைத்து விட்டு, அவர்களுக்கு வழிகாட்டுகிற வேலையை மட்டும் செய்வது என்று முடிவெடுத்தோம்.

இந்த முடிவுக்குப் பிறகு, எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. எனவே, வேறு புதிய தொழில் களைத் தேட ஆரம்பித்தேன். இரண்டு தொழில்களில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். ஒன்று, எனது மகள் ஆரம்பித்த அனிமேஷன் நிறுவனம். லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், ஸ்பைடர் மேன் போன்ற பல ஹாலிவுட் படங்களுக்கு என் மகள் நடத்திவந்த ஸ்டூடியோ வில்தான் அனிமேஷன் செய் தார்கள். இதைப் பார்த்த சோனி நிறுவனம் எனது மகள் நடத்தி வந்த நிறுவனத்தை வாங்க முன்வந்தது. அந்த நிறுவனத்தை நாங்கள் முழுமையாக விற்க விரும்பாததால், 51 சதவிகிதப் பங்குகளை மட்டும் விற்றோம். சில மாதங்களுக்குப் பிறகு அந்த நிறுவனத்தை சோனி விற்க நினைக்க, அதை நாங்களே திரும்ப வாங்கிக் கொண்டோம்.

தொப்புள் கொடி ரத்தம்!

நான் மருந்து உற்பத்தித் தொழிலைச் செய்ய ஆரம்பித்தபின் அடிக்கடி அமெரிக்காவுக்கு செல்வேன். அப்படி ஒருமுறை போய் வரும்போது ஒரு வித்தியாசமான விஷயம் என் கவனத்தைக் கவர்ந்தது. குழந்தை பிறந்தவுடன் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் இருக்கும் தொப்புள் கொடியை நாம் அறுத்தெறிந்து குப்பைத் தொட்டியில் வீசிவிடு கிறோம். ஆனால், அமெரிக்காவில் அந்த ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து, பிற்பாடு அதே குழந்தைக்கோ அல்லது அந்தக் குடும்பத்துக்கோ தேவை எனில் பயன்படுத்துவதைப் பார்த்தேன். அது மாதிரி நாம் ஏன் இந்தியாவில் செய்யக் கூடாது என்று நினைத்து ‘லைப் செல்’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கினேன். கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நிறுவனம் நன்கு வளர்ந்திருக்கிறது. இன்றைக்கு இந்தத் துறையில் உலக அளவில் முக்கியமான நிறுவனமாக மாறியிருக்கிறது லைப் செல் நிறுவனம்.

நஷ்டத்திலிருந்து லாபத்துக்கு!

இந்த நிறுவனங்களைத் தொடங்கி நடத்திவரும் வேளையில், ஃபுரபஷனல்களிடம் கொடுத்த ஷாசன் நிறுவனம் சிலபல நிர்வாகத் தவறுகளால் பல கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்தது. இந்த நஷ்டம் அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காகவும் தொழிலாளர் நலன் காக்கவும் நாங்களே மீண்டும் அந்த நிறுவனத்தை ஏற்று நடத்த முடிவெடுத்தோம். நான் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்று ஒரே ஆண்டில் நஷ்டத்தை கணிசமாகக் குறைத்தேன். அடுத்த சில ஆண்டு களில் நஷ்டத்தை முழுவதுமாக ஒழித்துக் கட்டிவிட்டு, நிறுவ னத்தை லாபத்துக்கு கொண்டு வந்தேன்.

2004-ல் விசாகப்பட்டிணத்தில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நான் உருவாக்கினேன். இதைப் பார்த்த என் நண்பர் ஸ்ட்ரைட் ஆர்கோ நிறுவனத்தின் சி.இ.ஓ அருண்குமார், அந்த தொழிற்சாலையைத் தனக்குத் தரும்படி கேட்டார். அந்த தொழிற்சாலையை அப்படியே அவருக்குத் தராமல், நாங்கள் இருவரும் பார்ட்னராக சேர்ந்து, நடத்தத் திட்டமிட்டோம். அதன் பின்பு எங்கள் சாஷன் நிறுவ னத்தை அவருடைய ஸ்ட்ரைட் நிறுவனத்துடன் இணைத்து விட்டோம்.

புதிய தொழில்முனைவோர்கள்!

இதுவரை 30, 40 தொழில்களைத் தொடங்கிவிட்டேன். புதிய பிசினஸ் முயற்சிகளைப் பற்றி எப்போதும் யோசித்தபடியே இருக்கிறேன். பல இளைஞர்கள் புதிய பிசினஸ் ஐடியாக்களுடன் என்னைச் சந்திக்கிறார்கள். இந்த தொழில் ஐடியாக்களின் பலம், பலவீனம் என்ன, அந்தத் தொழில் ஒரே இடத்தில்தான் நடத்த முடி யுமா அல்லது பல இடங்களில் நடத்த முடியுமா, அதை எப்படி ஸ்கேல்-அப் செய்ய முடியும் என்பதை உன்னிப்பாக கவனிப்பேன். அடுத்து முக்கிய மாக, அந்தத் தொழில் ஐடியாவை சொல்பவரே அந்த தொழிலை நன்றாக நடத்துவாரா, ஒருவேளை அவருக்கு அந்தத் திறமை இல்லை எனில் அந்தத் திறமை உடைய புரஃபஷனல்களை எப்படிக் கொண்டு வரலாம் என்று பார்ப்பேன்.

இதை எல்லாம் ஆராய்ந்தபின், ஒரு ஃபைனான் ஸியல் ஸ்டேட்மென்ட் தயாரிப்பேன். அந்தத் தொழிலில் நல்ல கேஷ் ஃப்ளோ இருக்கும், எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி காண வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே அதில் முதலீடு செய்வேன். நான் தேடு வது ஒரு நல்ல ஜாக்கியைத்தான். நல்ல ஜாக்கி கழுதையைக்கூட குதிரையாக்கிவிடுவார்.

இப்படித்தான் ஒவ்வொரு புதிய தொழிலையும் நான் செய்கிறேன். நானோ மெடிசன், நானோ டெக்னாலஜி, ரோபாட் டிக்ஸ், ஏரோநாட்டிக்ஸ் போன்ற வைதான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தொழில்கள். இவற்றில் நிறைய சாதிக்க வேண்டும் என்பதே என் கனவு.

எதிர்காலக் கனவுகள்!

இப்போது எனக்கு 62 வயதாகிறது. சமூகத் தொண்டு செய்வதில் என் ஆர்வம் அதிகரித் திருக்கிறது. சென்னை தி.நகரில் சங்கர்லால் சுந்தர்பாய் ஷாசன் ஜெயின் மகளிர் கல்லூரியை நல்லபடியாக நடத்தி வருகிறேன். 2005-ல் வெறும் 105 மாணவி களுடன் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் இன்று 4000 மாணவிகள் படிக்கின்றனர்.

லிபரல் எஜுகேஷனைக் கற்றுத் தரும் ஒரு பெரிய கல்லூரியை பாண்டிச்சேரியில் அடுத்த ஆண்டு முதல் தொடங்க இருக்கிறோம். ஒருவரிடம் இருக்கும் உள்ளார்ந்த திறமையை வெளிக் கொண்டு வந்து, ஒரு குறிப்பிட்ட துறையில் முழுமையாகத் தயார் செய்வதே இந்தக் கல்வி நிறுவனத்தின் நோக்கம். இதுமாதிரி நிறைய சமூகத் தொண்டு செய்ய வேண்டும் என்பதே என் ஆசை’’ என்று முடித்தார் அபயகுமார்.

லட்சியத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்!

‘‘உங்களுக்குப் பிடித்த லட்சியத்தை உருவாக்கிக் கொண்டு, அதற்காக கடுமையாக உழையுங்கள். நிச்சயம் ஜெயிப்பீர் கள்’’ என்றபடி நமக்கு விடை தந்தார் எஸ்.அபயகுமார்!

படங்கள்: ப.சரவணகுமார்.

கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

1. வெற்றிகரமான ஒரு பிசினஸுக்கு ‘கேஷ் ஃப்ளோ’ என்பது மிக முக்கியம். இந்த ‘கேஷ் ஃப்ளோ’ நன்றாக இருக்கிற மாதிரி பார்த்துக் கொண்டால், நீங்கள் பணத்துக்காக அலைய வேண்டிய அவசியமே இருக்காது.

2. நாம் ஆரம்பிக்கும் அத்தனை தொழிலும் நிச்சயம் ஜெயிக்கும் என்று நினைக்கக் கூடாது. தோல்வி வரும்போது மனம் தளராமல் உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஆனால், இந்தத் தொழில் சரிபட்டு வராது என்பது தெரிந்தும் அதை தொடர்ந்து செய்யக் கூடாது. அதை மூடுவதற்கோ அல்லது அடுத்தவருக்கு விற்பதற்கோ தயங்கக் கூடாது.

3. நம்மைவிட புத்திசாலிகளை வேலைக்கு நியமித்து, கண்காணிக்கிற வேலையை மட்டும் நாம் செய்தால் போதும். நம்மைவிட புத்திசாலிகள் நம்மிடம் வேலை பார்த்தால், நம் வேலை குறையும். அந்த நேரத்தை நாம் வேறு வகையில் செலவழிக்க முடியும்.

4. தரத்துக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். தரத்தை தாரக மந்திரமாக ஏற்று, அதன்படி தினமும் நடக்க ஆரம்பித்துவிட்டால், வாழ்க்கையில் என்றைக்கும் பிரச்னை இல்லை. தரத்தை என்றைக்கு தவறவிடுகிறோமோ, அன்றிலிருந்து நமக்கு எப்போதும் பிரச்னைதான்.

5. எப்போதும் மற்றவர்களுடன் பேசிக் கொண்டே இருங்கள். உங்கள் பிரச்னைக்கான தீர்வுகள், புதிய ஐடியாக்கள் மற்றவர்களிடம் இருந்து கிடைக்கும்.