புத்தகத்தின் பெயர்: த மில்லியனர் ஃபாஸ்ட் லேன் (The Millionaire Fastlane)

ஆசிரியர்: எம்.ஜே.டிமார்க்கோ

பதிப்பாளர்: Viperion Publishing

ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான பருவம் என்றால் அது 18 வயது முதல் 40 வயது வரையிலான காலகட்டம்தான். பணம் வைத்திருந்தால் மட்டுமே வாழ்க்கையை சுவாரஸ்யமாக வாழ முடியும். 65 வயதினில் பணம் இருந்து என்ன உபயோகம்? பணம் குறித்த உங்கள் கனவெல்லாம் சிறிய வயதிலேயே நனவாக வேண்டும். அதற்கு என்ன வழி..?

எம்.ஜே.டிமார்க்கோ எழுதிய ‘த மில்லியனர் ஃபாஸ்ட்லேன்’ புத்தகம் விவேகமான சம்பாத்தியத் துக்கான வழிவகைகளைச் சொல்கிறது. இந்த உலகத்தில் ஒரு மனிதன் தன்னைப் பணக்காரனாக ஆக்கிக்கொள்வதற்கான வழிகள் என்ன தெரியுமா?

பள்ளிக்குச் சென்று ஒழுங்காய் படித்து, பட்டம் பெற்று, நல்ல வேலையைப் பெற்று, சம்பளத்தில் கணிசமாய் சேமித்து, பிஎஃப், பென்ஷன் பிளான், வீடு, நகை என பல முதலீடுகளைச் செய்து, சிக்கனமாய் தேடித் தேடி தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கிச் சேமித்து வாழ்வதுதான் என்கிறீர்களா?

அதுதான் இல்லை. இது ஒருவர் பணக்காரராவதற்கு இருக்கும் மிக மிக மந்தமான வழி, இதை விட மெதுவான வழி வேறு எதுவும் இருக்க முடியாது. இப்படிச் சிக்கனமாக வாழ்ந்து காசு சேர்த்து முதலீடுகளை பக்காவாக செய்து வாழ்ந்தால், 60, 65 வயது வாக்கில் மட்டுமே நீங்கள் பணக்காரராக ஆவீர்கள்.

நீங்கள் தற்சமயம் வேலைக்குப் போய் அல்லது தொழில் செய்து சம்பாதித்த போதும் பணக் கஷ்டத்தில் இருக்கிறீர்களா? இதனைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்விக்குப் பதில் சொல்லி இருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர்.

நீங்கள் தற்போது செய்துவரும் தொழிலை/வேலையை உடனடியாக நிறுத்தவேண்டும் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆமாம், அது உங்களுடைய பணத் தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. இதனைத் தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களால் ஒருபோதும் பணக்காரராக முடியாது என்கிறபோது, அதை தொடர்ந்து செய்து என்ன புண்ணியம் என்று கேட்கிறார் ஆசிரியர்.

கிட்டத்தட்ட 300 வகையான பணம் சம்பாதிக்கும் வேறுபாடு களை விளக்குகிறது இந்தப் புத்தகம். நீங்கள் தற்சமயம் செய்துவரும் பணியை சீர்தூக்கிப் பார்த்து இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வேறு படுத்துதல் வழிகளை அமல் படுத்தினால் நீங்களும் சம்பாதிக்க லாம் பல கோடி என்கிறார் ஆசிரியர்.

சாதாரணமாக நாம் வாழும் வழிமுறை (மேலே சொன்ன 65 வயதில் பணக்காரராகத் திகழும் முறை) நம்முடைய தனிமனித சுதந்திரத்தை நீங்கள் ஓடியாடும் காலத்தில் வாங்கிக் கொண்டு 65 வயதில் அந்த சுதந்திரத்தை (பிஎஃப், பென்ஷன், கிராஜ்விட்டி என்ற பணமாக) உங்களுக்கு திருப்பிக் கொடுக்கும் பண்டமாற்று வழிமுறையாகும்.

இந்தப் பாதையில் செல்ல முற்பட்டால் முப்பதுக்கும் மேற்பட்ட வருடத்துக்கு நீங்கள் வேலையையோ/தொழிலையோ கஷ்டப்பட்டு சுமக்க வேண்டி யிருக்கும். இந்தப் பாதை மனிதனின் கனவுகளை சிதைக்கிற வல்லமை கொண்ட ஒரு முட்டாள்தனமான பண்டமாற்று வியாபாரமாகும். இதற்கு மாற்றாக சரியான பாதையில் பயணித்தால், உங்கள் கனவுகளும் கைகூடும், காசு பணமும் சேரும் என்கிறார் ஆசிரியர்.

பணத்துக்கான பயணம் என்பது பெரியதொரு சாலை. இந்தச் சாலையில் ஓரமாக நடந்து செல்பவர்கள் பலர். ஸ்லோ லேன் என்னும் மெதுவான பாதையில் பயணம் செய்பவர்கள் சிலர். வேகமாக பயணம் செய்யவல்ல ஃபாஸ்ட் லேனில் பயணம் செய்பவர்கள் மிகச் சிலரே. இவர்கள் அனைவருமே பணம் என்னும் இலக்கினை நோக்கியே பயணிக் கின்றனர் என்ற போதிலும் இவர்களுடைய பயணத்தின் வேகம் கணிசமாக மாறுபடுகிறது. எல்லோரும் மனிதர்கள்தானே, எல்லோரும் வேகமாகச் செல்ல விரும்ப வேண்டுமல்லவா, ஏன் சிலர் மட்டும் நடை பயணத்திலும் சிலர் ஜெட் வேகத்திலும் செல்கின்றனர், என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றுகிறது இல்லையா? அதற்கான காரணத்தினைப் பார்ப்போம்.

பொதுவாக, மனிதர்களின் மனதில் பின்வரும் விஷயங்கள் குறித்த எண்ணங்களே அவர்கள் பணம் சம்பாதிப்பதில் எந்த வகைப் பாதையில் பயணம் செய்கின்றனர் என்பதை நிர்ணயம் செய்வதாக உள்ளது என்கிறார் ஆசிரியர்.

கடன் குறித்த எண்ணம், நம்முடைய நேரத்தின் அருமை பெருமை, படிப்பும் அதன் பலனும் குறித்த எண்ணம், நம் வாழ்வில் பணத்தின் பங்களிப்பு, நம் அடிப்படை தேவைகளுக்கான வருமானத்தை நாம் எப்படி ஈட்டுகிறோம் என்பது, சொத்துக் களை எப்படி சேர்ப்போம் என்ற எண்ணம், செல்வம் என்றால் என்ன என்பது குறித்த புரிதல், செல்வம் சேர்ப்பதற்கான ஃபார்முலா, பணத்துக்கான நம்முடைய பயணத்தில் நாம் சென்று சேர வேண்டிய இடம், நம்முடைய பணரீதியான விஷயங்களின் மீதான நமக்கு இருக்கும் பொறுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் ஆற்றல், நம் வாழ்க்கைப் பற்றிய புரிதல் மற்றும் உள் உணர்வு என்பதே அவையாகும்.

மேலே சொன்ன விஷயங்கள் குறித்த வெவ்வேறு விதமான பார்வையே எந்தப் பாதையில் நாம் பயணிக்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது. ஒவ்வொரு பாதையில் பயணிப்பவரும் மேலே சொன்ன விஷயங்கள் குறித்து எந்த வகையான புரிதலு டன் செயல்படுகிறார் என்பதையும் விரிவாகச் சொல்லி உள்ளார் ஆசிரியர்.

உதாரணத்துக்கு, இவர்கள் மூவரில் பாதசாரியிடம் உங்கள் பணம் நோக்கிய பயணப் பாதையில் நீங்கள் சென்று சேர வேண்டிய இடம் எது என்ற கேள்வியைக் கேட்டால், ‘அட, நீங்க வேற! இருக்கிற இடத்தில் இருக்கவே வேகமாக நடக்க வேண்டியிருக்கிறது’ என்பார்கள். ‘இன்றைய நாளைப் பற்றியே கவலைப்பட நேரமில்லை. இதில் நாளை எங்கே போகப் போகிறேன்’ என்பதைப் பற்றி யோசிக்க எங்கே நேரமிருக்கிறது, என்னும் வகை நபர்கள் இவர்கள்.

ஸ்லோ லேனில் செல்பவரிடம் கேட்டால், ‘அந்திம காலத்தில் செளகரியமாக இருப்பதற்கான காசு பணம் ஈட்டுவதுதான் என் இலக்கு’ என்பார்கள். ஃபாஸ்ட் லேனில் போகும் நபர்களை கேட்டால், ‘வாழ்நாள் முழுக்க பெரிய அளவில் தன் உழைப்பின்றி தொழிலிருந்தோ அல்லது தன் முதலீடுகளில் இருந்தோ வரும் வருமானம் (பேஸிவ் இன்கம்) என்பதே என் இலக்கு’ என்பார்கள்.

நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம்மை பணத்தை நோக்கிப் போகும் சாலையில் பாதசாரி யாகவே நம்மை வைத்திருக்கும் வண்ணமே கருத்துகளைச் சொல்வார்கள். இதையெல்லாம் தாண்டி நம் பயணம் வேகம் எடுக்கவேண்டும். மனிதர்கள் அனைவருமே அதிவேகத்தில் இந்தப் பயணத்தை மேற்கொள்ளத் தகுதி வாய்ந்தவர்களே.

எப்படி அதீத சக்திகளைக் கொண்டிருக்கும் காரை நீங்கள் வாங்கி வைத்திருந்தாலும் கரடுமுரடான பாதையில் வேகமாக போக முடியாதோ, அதே போல்தான் மனிதனின் நிலைமையும். வேகமாகச் செல்வ தற்கான திறன் இருந்த போதிலும் சில சமயங்களில் தேர்ந்தெடுக்கும் பயணப் பாதையே தடைக் கல்லாக மாறி வேகம் பிடிக்க வைக்காமல் பார்த்துக் கொள் கிறது. சரியான பாதையில் நம் பயணத்தை அமைத்துக் கொண்டால் மட்டுமே நம்மால் செல்வம் சேர்க்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் இவ்வளவு சொல்கிறாரே, இதை எல்லாம் சொல்வதற்கு இவருக்கு என்ன தகுதி என்று கேட்கிறீர் களா? முதல் மில்லியன் டாலரை 31 வயதில் சம்பாதித்து 37 வயதில் ரிட்டையரானவர் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

இந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருக்கும் வழிகள் ஏற்கெனவே வாழ்ந்துகொண்டிருக்கும் நம் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தாலும் மாற்றவல்லது. பணம் சம்பாதித்தல் குறித்த பல்வேறு நுணுக்கமான விஷயங்களை விவரிக்கும் இந்தப் புத்தகத்தை அனைவருமே ஒரு முறை படிக்கலாம்.

- நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

சிமென்ட் கம்பெனியாக மாறும் சோப்பு கம்பெனி!

வாஷிங் பவுடர் நிர்மா, வாஷிங் பவுடர் நிர்மா - இந்த விளம்பரத்தைப் பார்க்காதவர்கள் இருக்கவே முடியாது. முப்பது ஆண்டுகளாக சோப்பு பவுடர் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த இந்த நிறுவனம், சிமென்ட் தயாரிக்கும் லஃபார்ஜ் ஹோல்சிம் நிறுவனத்தை வாங்குவதன் மூலம் கூடிய விரைவில் சிமென்ட் உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாறப் போகிறது. லஃபார்ஜ் ஹோல்சிம் நிறுவனம் தனது சிமென்ட் தயாரிக்கும் தொழிலை விற்க முடிவு செய்தது. இதனை வாங்குவதற்காக ஜே.எஸ்.டபிள்யூ சிமென்ட், அஜய் பிரமில் உள்பட பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டன. ஆனால், எதிர்பார்க்காத விதத்தில் நிர்மா நிறுவனம், லஃபார்ஜ் ஹோல்சிம் நிறுவனத்தை ரூ.9,400 கோடி தந்து வாங்க விருப்பம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது!