நம் நாட்டின் வருமான வரி வசூலை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. முந்தைய ஆண்டுகளில் கணக்கில் காட்டாத வருமானம் மற்றும் சொத்து இருந்தால் அவற்றுக்குரிய வரியைக் கட்டி ஒழுங்கு முறைபடுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வருமான வரி முதன்மை ஆணையர் என்.சங்கரன் ஐஆர்எஸ் விளக்கிச் சொன்னார்.

‘‘கடந்த நிதி நிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் ‘தானாக முன்வந்து வருமானம் தெரிவிக்கும் திட்டத்தை’ (Income Declaration Scheme, 2016) அறிவித்தார். இந்தத் திட்டம் குடியரசு தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு அமலுக்கு வந்து உள்ளது. முந்தைய ஆண்டுகளில் சரியான வருமானத்தை அறிவிக்காத அனைத்து நபர்களும் ‘தானாக முன்வந்து வருமானம் தெரிவிக்கும் திட்டம் 2016’ மூலம் தங்களின் கணக்கில் காட்டாத வருமானம் மற்றும் சொத்து விவரங்களைத் தெரிவித்து வரி கட்டலாம்.

இந்தத் திட்டம் நிதி ஆண்டு 2015-16 மற்றும் அதற்கு முந்தைய நிதி ஆண்டுகளில் கணக்கில் காட்டாத வருமானம், சொத்துகள் மற்றும் முதலீடுகளுக்குப் பொருந்தும். இதில் அசையும் மற்றும் அசையா சொத்துகள், குறிப்பாக வீடு, மனை, நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், தங்கம் - வெள்ளி போன்றவற்றில் செய்யப்பட்ட முதலீடுகளும் அடங்கும்.

2016, ஜூன் 1-லிருந்து செப்டம்பர் 30 வரையிலான நான்கு மாதங்களுக்கு இந்தத் திட்டம் அமலில் இருக்கும். வருமானம் அல்லது சொத்து மதிப்பின் மீது 30% வரி, 7.5% கிருஷி கல்யாண் செஸ், மற்றும் அபராத வரி 7.5% ஆக மொத்தம் 45% வரி வசூலிக்கப்படும். இந்த வரியில் 25%-ஐ 2016 நவம்பர் 30க்குள்ளும், மீதி 25% வரியை 2017 மார்ச் 31-ம் தேதிக்குள்ளும் கட்டிக் கொள்ளலாம். மீதி வரியை 2017 செப்டம்பர் 30 -ம் தேதிக்குள் கட்டி விட வேண்டும். ஆனால், கணக்கில் காட்டாத சொத்து மற்றும் வருமான விவரத்தை 2016 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தெரிவித்துவிட வேண்டும்.” என்றவர் இந்தத் திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தாது என்பதையும் சொன்னார்.

‘‘ஊழலில் சேர்த்த வருமானம் அல்லது சொத்து விவரங்களை இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவிக்க இயலாது. கறுப்புப் பண சட்டம் 2015 கீழ் வரும் வெளிநாட்டு சொத்து அல்லது வருமானத்தை இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவிக்க இயலாது. முந்தைய மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான நடவடிக்கை கள் நிலுவையில் இருந்தால், அந்த மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான விவரங்களை இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவிக்க இயலாது. ஏற்கெனவே தெரிவிக்கப்படாத விவரங்கள் வரி விதிப்புக்கு உள்ளாகியிருந்து அது மேல்முறை யீட்டில் நிலுவையில் இருப்பவர் களும் இந்தத் திட்டத்தின் கீழ் விவரங்களைத் தெரிவிக்க இயலாது. ஆனால், அந்தக் குறிப்பிட்ட விவரங்கள் தவிர்த்து, முந்தைய ஆண்டுகளுக்கான விவரங்களைத் தெரிவிக்க இயலும். எந்த நபரிடமும் சர்ச் அண்ட் சர்வே (Search and Survey) நடவடிக்கைகள் நிலுவையில் இருந்தால், இந்தத் திட்டத்தின் கீழ் விவரங்களைத் தெரிவிக்க இயலாது” என்றவரிடம் , யாரிடம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டோம்.

‘‘கணக்கில் காட்டாத வருமான விவரங்களை சிலர் வெளிப் படையாகத் தெரிவிக்க தயங்கு வார்கள். அவர்கள் படிவம் 1-ஐ வருமான வரித் துறை இணைய தளத்தில் (www.incometaxindia.gov.in) நிரப்பித் தரலாம். அதே நேரத்தில், தொடர்புடைய வருமான வரி ஆணையரிடமும் இந்தப் படிவத்தை நிரப்பித் தரலாம்.

வருமான விவரம் தெரிவிக்கப் பட்ட நாளிலிருந்து 15 தினங்களில் வருமான வரித் துறையிடமிருந்து பதில் (படிவம் 2) வரும். வரியை நவம்பர் 30-ம் தேதிக்குள் கட்ட வேண்டும். இதனை படிவம் 3 மூலம் மேற்கொள்ள வேண்டும். அடுத்து 15 நாள்களில் வருமான வரித் துறையிடமிருந்து, கணக்கில் காட்டாத வருமானத்துக்கு வரி கட்டிய விவரத்துடன் சான்றிதழ் (படிவம் 4) வரும்.

இந்தத் திட்டத்தின் கீழ் விவரங்களை தாக்கல் செய்யும் போது முதன்மை வருமான வரி ஆணையர் அல்லது வருமான வரி ஆணையரால் விசாரணை எதுவும் நடத்தப்பட மாட்டாது. அதேநேரத்தில், ஏற்கெனவே ஏதாவது முந்தைய மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான நடவடிக்கை கள் நிலுவையில் உள்ளதா என்று மட்டும் விசாரணை நடத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவிக்கப்படும் வருமான விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் வரும் வருமானம், சொத்து வடிவில் இருந்தால் 1 ஜூன் 2016 அன்று சொத்தின் சந்தை மதிப்பு வெளியிடப்படாத வருமானமாக கருதப்படும். இதற்கென வருமான வரித் துறையால் அறிவிக்கப் பட்டுள்ள மதிப்பீட்டாளர் களிடம் சான்றிதழ் வாங்கித் தர வேண்டும்’’ என்றவரிடம், இந்தத் திட்டத்தின் கீழ் வரி செலுத்து வோருக்கு என்ன நன்மை என்றோம்.

‘‘இந்தத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட வருமான அறிவிப்பு விவரங்கள் குறித்து, வருமான வரி அல்லது சொத்து வரிச் சட்டத்தின் கீழ் விசாரணை அல்லது மீள் ஆய்வு நடத்தப் படாது. மேலும், இந்த விவரம் யாருக்கும் தெரிவிக்கப் படாது. ரகசியம் காக்கப்படும் என்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை. இந்தத் திட்டத்தில் தெரிவிக்கப் படும் சொத்துகளுக்கு, செல்வ வரியில் இருந்து விலக்கு அளிக்கப் படும். இதேபோல், பினாமி சட்டத்தி லிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.

தனிநபர், இந்துக் கூட்டுக் குடும்பம், என்ஆர்ஐ, நிறுவனம், அறக்கட்டளை என யாரிடமும் கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்து இருந்தாலும் இந்தத் திட்டத்தின் மூலம் தெரிவிக்கலாம். செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கில் காட்டாத வருமான விவரங்களை தெரிவிக்காத பட்சத்தில், வருமான வரித் துறை யினரால் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் வரி, வட்டி, அபராதம் இதர தண்டனைக்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

கணக்கில் காட்டாத வரு மானம், சொத்து இருந்தால், வரி கட்டி அதனை உங்களின் உரிமையாக்கிக்கொள்ள இது நல்ல வாய்ப்பு.

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்