Published:Updated:

‘டிரெஸ்ஸிங் அண்ட் மேக் ஓவர்’... பலே பிசினஸ் ஆகும் பாரம்பர்யம்!

‘டிரெஸ்ஸிங் அண்ட் மேக் ஓவர்’... பலே பிசினஸ்  ஆகும் பாரம்பர்யம்!
பிரீமியம் ஸ்டோரி
‘டிரெஸ்ஸிங் அண்ட் மேக் ஓவர்’... பலே பிசினஸ் ஆகும் பாரம்பர்யம்!

பிசினஸ் ஸ்பெஷல்!

ம்மில் பலர் நமது கலா சாரத்தை மறந்து மேற்கத்திய நாகரிகத்தில் மோகம் கொண்டுள்ள இன்றைய காலகட்டத்தில், வெளி நாட்டினருக்கு நம் கலாசாரத்தின் அழகியலைச் சேர்ப்பதையே ஒரு தொழிலாகச் செய்துவருகிறார் சென்னையில் உள்ள ‘எத்னிக் போட்டோகிராஃபி’ நிறுவனத்தின் உரிமையாளர் சங்கீதா ராமசுவாமி.

‘‘எனக்கும் என் கணவருக்கும் பயணங்கள் ரொம்பப் பிடிக்கும். வருஷா வருஷம் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு ட்ரிப் அடிச்சுடுவோம். போற இடங் களைச் சுத்திப்பார்க்கறது மட்டும் இல்லாம, அந்தந்த நாட்டு மக்களின் கலாசாரம், வாழ்க்கைமுறைனு எல்லாத்தைப் பற்றியும் தெரிஞ்சுக்கிறது ரொம்பவே வித்தியாசமான அனுபவம். அப்படி நாங்க போய்வந்த நாடுகளில் ஜப்பானும் ஒண்ணு.

‘டிரெஸ்ஸிங் அண்ட் மேக் ஓவர்’... பலே பிசினஸ்  ஆகும் பாரம்பர்யம்!

ஜப்பான்ல ஒரு புது அனுபவம் கிடைச்சது. அதாவது அங்க வாழும் மக்களின் கலாசாரத்தை கண்ணால பார்க்கிறது மட்டும் இல்லாம அனுபவிச்சு ரசிக்கிற வகையில் ‘டிரெஸ்ஸிங் அண்ட் மேக் ஓவர்’ எனும் வித்தியாசமான பிசினஸ் கான்செப்ட் அங்க இருந்துச்சு. அதாவது, நம்மள மாதிரி டூரிஸ்ட்களுக்கு அவங்க கலாசார உடை, மேக்கப் எல்லாம் போட்டு புகைப்படங்கள் எடுத்துத் தர்றது. அதுக்காக ஒரு தொகை வசூல் செய்தாங்க. நானும் என் கணவரும் அந்த நாட்டு டிரெஸ்ல முழுசா ஜப்பானியர்களாவே ஃபீல் பண்ணினோம். அந்த அனுபவம் சந்தோஷமா மட்டும் இல்லாம பொக்கிஷ நினைவாவும் மனசில் சேகரமாச்சு.

அதிலிருந்து நான் எந்த நாட்டுக்கு போறதுன்னாலும். அதுக்கு முன்னாடி, அந்த நாட்டுல ‘டிரெஸ்ஸிங் அண்ட் மேக் ஓவர்’ கான்செப்ட் இருக்கானு கூகுள்ல செக் பண்ணிட்டுதான் போறேன். இதுமாதிரி பாங்காங்லகூட போட்டோ எடுத்துக்கிட்டோம்’’ எனும் சங்கீதா இதை தனது தொழிலாகக் கையிலெடுத்த தருணத்தைப் பகிர்ந்தார்.

‘டிரெஸ்ஸிங் அண்ட் மேக் ஓவர்’... பலே பிசினஸ்  ஆகும் பாரம்பர்யம்!

‘‘நம்ம ஊருக்கு வரும் வெளிநாட்டினர், தங்களோட வெஸ்டர்ன் டிரெஸ்ஸை போட்டுக்கிட்டு, நெற்றியில் குங் குமம், தலையில் மல்லிகைப்பூ என்று நம்மோட கலாசார அடையாளங்களை ஆசையா பண்ணிட்டிருப்பாங்க. அப்போதான், `ஜப்பான்ல கிடைச்ச அனுபவத்தை நாம ஏன் நம்ம ஊருக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தரக்கூடாது?'னு யோசிச்சேன். என்னோட மாமியார், கணவர்னு எல்லாரும் மீடியா சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறதால என்னோட ஐடியாவுக்கு ஊக்கம் கொடுத்தாங்க. அப்படி ஒரு வருஷத்துக்கு  முன்னாடி ஆரம்பிச்சு வளர்ந்து நிக்கிறது தான், என்னோட இந்த ‘எத்னிக் போட்டோகிராஃபி’ ஸ்டூடியோ.

‘டிரெஸ்ஸிங் அண்ட் மேக் ஓவர்’... பலே பிசினஸ்  ஆகும் பாரம்பர்யம்!

இப்போ வெளிநாட்டுல இருந்து வரும் சுற்றுலா பயணிகள், அவங்க ஊர்ல இருந்து கிளம்புறதுக்கு முன்னாடியே எங்களோட ‘டிரெஸ்ஸிங் அண்ட் மேக் ஓவர்’ கான்செப்ட் பற்றி ஆன்லைனில் தெரிஞ்சுக்கிட்டு, அதிலேயே அட்வான்ஸ் புக்கிங்கும் பண்ணிடறாங்க’’ என்றபோது, இரண்டு மடங்கு உற்சாகம் அவர் குரலில்.

‘‘வெளிநாட்டினருக்கு புடவை கட்டி, பொட்டு, பூ, வளையல், ஒட்டியாணம், பின்னல், ஜடைன்னு முழுசா அலங்காரம் பண்ணும்போது அது தொடர்பா அவங்க கேட்கிற கேள்விகளுக்கு விளக்கம் கொடுப்போம். கோலம் போடுவது, விளக்கு ஏற்றுவதுனு அவங்களை போஸ் கொடுக்கச் சொல்லும்போது நம்மோட அந்தப் பாரம்பர்ய பழக்கவழக்கங்கள் பற்றி அவங்களுக்கு எடுத்துச் சொல்வோம். அப்போ எல்லாம் `ஆச்சர்யம், பிரமிப்பு, மரியாதை'னு அவங்க நம்ம கலாசாரத்தை ்கொண்டாடும்போது, எங்களுக்கு ரொம்பவே பெருமையா இருக்கும்.

‘டிரெஸ்ஸிங் அண்ட் மேக் ஓவர்’... பலே பிசினஸ்  ஆகும் பாரம்பர்யம்!

இது பிசினஸ் என்பதையும் தாண்டி, நம்ம நாட்டுப் பெருமையை ஒளிப்படங்களில் கோத்து உலகம் முழுக்க அனுப்பிவைக்கிற கலை ஆர்வமும்கூட! அதனால, ஆத்ம திருப்தி நிறைய நிறைய கிடைக்குது.’’

- ரசித்துச் சொல்கிறார் சங்கீதா!

- இந்துலேகா.சி