Published:Updated:

பயிற்றுவிக்கலாம்... பணம் அள்ளலாம்!

பயிற்றுவிக்கலாம்...  பணம் அள்ளலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பயிற்றுவிக்கலாம்... பணம் அள்ளலாம்!

பிசினஸ் ஸ்பெஷல்!

பயிற்றுவிக்கலாம்... பணம் அள்ளலாம்!

பிசினஸ் ஸ்பெஷல்!

Published:Updated:
பயிற்றுவிக்கலாம்...  பணம் அள்ளலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பயிற்றுவிக்கலாம்... பணம் அள்ளலாம்!
பயிற்றுவிக்கலாம்...  பணம் அள்ளலாம்!

தாவது ஒரு வேலைக்குச் செல்வதைவிட, ஒரு வேலைவாய்ப்பை நாமே உருவாக்கிக்கொள்வது மிகவும் சிறந்தது. அதற்கு எளிமையான வாய்ப்புகளை உருவாக்கித் தரக்கூடியவை, கற்றல் சார்ந்த வகுப்புகள் எடுப்பது. ‘நான் கத்துக்கிட்டேன். அதை மத்தவங்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறேன். நிறைவான வேலை, வளமான வருமானம்னு சந்தோஷமா இருக்கேன்’ என்று கூறும் இந்தப் பெண்களின் வார்த்தைகள், அனுபவங்கள் நமக்கு உத்வேகமாக  இருக்கும்.

‘‘எக்ஸ்ட்ரா கரிக்குலர்... எக்ஸ்ட்ரா வருமானம்!’’

தன் சென்டரில் பரதநாட்டியம் கற்றுக்கொடுப்பதோடு, இன்னும் சில வகுப்புகளையும் இணைத்து அதை வெற்றிகரமான தொழிலாகக் கையாள்கிறார், சென்னையைச் சேர்ந்த மோனிஷா.

‘‘இன்னிக்கு படிப்பைத் தாண்டி தங்களோட பிள்ளைங்களுக்கு குறைந்தது ரெண்டு எக்ஸ்ட்ரா கரிக்குலர் திறன்களாவது இருக்கணும்னு நினைக்காத பெற்றோர்களே இல்லை. அந்த எண்ணம்தான், என் தொழிலின் வெற்றிக்குக் காரணம். நான் பரதநாட்டிய டான்ஸர். என் கணவர் வெஸ்டர்ன் டான்ஸர். விஸ்காம் முடிச்சிட்டு சினிமா துறையில் வேலைபார்த்துட்டு இருந்தேன். ஆனாலும் பரத நாட்டிய வகுப்புகள் எடுக்கிறதுதான் எனக்கு விருப்பமா இருந்தது. இடப்பற்றாக்குறை ஏற்படுற அளவுக்கு வீட்டுக்கு நிறைய பேர் பரதம் கத்துக்க வந்தாங்க. கீழ்ப்பாக்கத்தில் ஒரு சென்டர் போட்டப்போ, அதே சென்டரில் என் கணவர் வெஸ்டர்ன் டான்ஸ் சொல்லிக்கொடுத்தார். சென்டருக்கு அட்வான்ஸ், வாடகை மற்றும் கடின உழைப்புதான் இதில் முதலீடு. தொடர்ந்து வயலின், கிட்டார், ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்ற வகுப்புகளையும்... அதற்குண்டான பயிற்சியாளர்களை அமர்த்தி ஒருங்கிணைச்சேன். இப்போ என் சென்டர் நல்லா போயிட்டிருக்கு. நீங்களும் முயற்சி செய்யுங்க... நிச்சயம் வெற்றிபெறலாம்!

ஏதாவது ஒரு வேலைக்குச் செல்வதைவிட, ஒரு வேலைவாய்ப்பை நாமே உருவாக்கிக்கொள்வது மிகவும் சிறந்தது. அதற்கு எளிமையான வாய்ப்புகளை உருவாக்கித் தரக்கூடியவை, கற்றல் சார்ந்த வகுப்புகள் எடுப்பது. ‘நான் கத்துக்கிட்டேன். அதை மத்தவங்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறேன். நிறைவான வேலை, வளமான வருமானம்னு சந்தோஷமா இருக்கேன்’ என்று கூறும் இந்தப் பெண்களின் வார்த்தைகள், அனுபவங்கள் நமக்கு உத்வேகமாக  இருக்கும்.

ட்யூஷன்... டக்கரான லாபம்!

பயிற்றுவிக்கலாம்...  பணம் அள்ளலாம்!

தன் வீட்டிலேயே மாணவர்களுக்கு ட்யூஷன் கற்றுக்கொடுத்து தனக்கான வருமானத்தை நிறைவாக ஈட்டி வருகிறார் தேனியைச் சேர்ந்த சித்ராதேவி.

‘‘எங்க வீட்டுல மூணு பெண்கள். அதனால என்னை ப்ளஸ் டூ-வுக்கு மேல படிக்கவைக்கல. கல்யாணத்துக்கு அப்புறம் என் கணவர் என்னை பி.ஏ., ஆங்கில இலக்கியம் படிக்கவெச்சார். அப்புறம்தான் ட்யூஷன் எண்ணம் வந்தது. உறவினர்களோட குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சு, அப்படியே நிறைய பெற்றோர்கள் என்னைத் தேடிவர ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ மாலை நேரங்களில் நான் ரொம்ப பிஸி.

இது போட்டி அதிகம் உள்ள தொழில்தான். ஆனா, ஒவ்வொரு மாணவருக்கும் சிறப்பு கவனம்கொடுத்து மெனக்கெட்டால் போட்டியில் சுலபமா முந்திடலாம். எப்போதும் கற்றலில் இருக்கிறதால, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகறதும் எளிமையா இருக்கும். இன்னிக்கு சமச்சீர், மெட்ரிக், சி.பி.எஸ்.இ-னு ஒவ்வொரு சிலபஸுக்கும், வகுப்புக்கும் ஏற்ப ட்யூஷன் ஃபீஸ் வாங்குறாங்க. ட்யூஷன் சென்டரில் மாதம் லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கும் சீனியர் டீச்சர்ஸும் இருக்கிறாங்க. நோட் பண்ணிக்கோங்க!’’

``இனி எல்லாம் லாங்குவேஜ் கிளாஸ் மயம்தான்!''

பயிற்றுவிக்கலாம்...  பணம் அள்ளலாம்!

ஓர் ஆர்வத்தில் ஹிந்தி பயின்ற சென்னையைச் சேர்ந்த ஜான்சன் கலையரசி, இப்போது பிஸியான ஹிந்தி மொழிப் பயிற்சியாளர்.

‘‘நான் எம்.காம் பட்டதாரி. கல்லூரியில் படிக்கும்போது ஹிந்தி கத்துக்கிட்டேன். சரி, ஒரு விஷயத்தை முழுமையா பண்ணுவோமேனு, அப்படியே ஹிந்தியில் எம்.ஏ., பி.எட் வரை முடிச்சுட்டேன். திருமணம், குழந்தைகள்னு ஆனதும் வேலைக்குப் போக முடியல. சில தொழில்களைத் தொடங்கலாம்னு நினைச்சப்போ, அதுக்கெல்லாம் முதலீடு தேவையா இருந்தது. அப்போதான் என் கணவர், ‘நீ ஹிந்தி கிளாஸ் எடு’னு சொன்னார்.

ஆரம்பத்தில் எங்க வீட்டில் ஹிந்தி கிளாஸ் எடுத்தேன். நல்லா டெவலப் ஆனதும் ஒரு சென்டர் போட்டுட்டேன். ரிட்டர்ன் ஹிந்தி, ஸ்போக்கன் ஹிந்தினு அவங்கவங்களோட தேவைக்கு ஏற்ப சொல்லிக்கொடுக்கிறேன். சிரமமான வேலை இல்ல... ஆனா, சூப்பரான வருமானம். இப்போ இருக்கிற பிள்ளைங்க தமிழ், ஆங்கிலத்தைத் தவிர ஹிந்தி, ஃபிரெஞ்ச், ஜெர்மன்னு குறைந்தது நாலு மொழிகளாச்சும் தெரிஞ்சுக்க நினைக்கிறாங்க. மேலும் மேற்படிப்பை முடிச்சு அயல்நாடுகளில் வேலைவாய்ப்புனு போகும்போது, ஃபாரின் லாங்குவேஜ் ஸ்கில் அவங்களுக்கு அவசியத் தேவையா இருக்கு. அதனால, இனி எல்லாம் லாங்குவேஜ் கிளாஸ் மயம்தான். வேற்றுமொழியைப் படிங்க, கிளாஸை ஆரம்பிங்க, வருமானம் அள்ளுங்க!’’

‘‘மாத்தி யோசிங்க!’’

பயிற்றுவிக்கலாம்...  பணம் அள்ளலாம்!

தான் கற்றுக்கொண்ட யோகக்கலையையே தன் தொழிலாக மாற்றியிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் பரணி. ‘‘பி.என்.வொய்.எஸ் (Bachelor of Naturopathy and Yoga Science) படிப்பை முடிச்சுட்டு, ஆரம்பத்தில் இயற்கை மருத்துவத்தை மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கிறதில் நிறைய சிரமப்பட்டேன். பெரிய வருமானம் இல்லை. யோகக்கலை கற்றிருந்ததால, சின்னதா மாத்தி யோசிச்சு, திருவான்மியூர்ல ஒரு யோகா சென்டர் ஆரம்பிச்சேன். யோகாவை கலையா மட்டுமில்லாமல், நான் படிச்ச படிப்போட தொடர்புபடுத்தி பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையா சொல்லிக்கொடுத்தேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. பெரிய முதலீடு எல்லாம் இதுக்குத் தேவைப்படல. ஆனா, இப்போ திருப்தியான வருமானமும் கிடைக்குது. வாரத்தில் ஐந்து நாட்கள் யோகா கிளாஸ் எடுப்பேன். மூன்று வயது குழந்தைகள் முதல் 60 வயது முதியவர்கள் வரை பயிற்சிக்கு வருவாங்க. அவங்கவங்களோட தேவைக்கு ஏற்ப பயிற்சிகள், அதுக்குத் தகுந்த கட்டணம். வந்த வருமானத்தில், இப்போ கேளம்பாக்கத்தில் மற்றொரு கிளினிக் ஆரம்பிச்சிருக்கேன். பெண்கள், தங்களுக்குத் தெரிஞ்ச விஷயத்தையே கொஞ்சம் மாத்தி யோச்சா தொழில் ஆக்கிடலாம்!’’

சு.சூர்யா கோமதி

படங்கள்: வீ.சக்தி அருணகிரி, ரா.வருண் பிரசாத்