ரமணன் புதிதாகத் திருமணம் ஆனவர். மனைவி கற்பகம், நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர். எனவே, குடும்பத்தின் கஷ்ட நஷ்டம் அறிந்தவர். ரமணன் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்திக்கொண்டு இருந்தார். இந்த வியாபாரத்தில் நல்ல அனுபவம் இருந்ததால், மாதம் எப்படியும் ரூ.70,000 - ரூ.80,000 சம்பாதிப்பார்.

நல்ல வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார் ரமணன். கடையில் நேரம் கிடைக்கும் போது டிவி போட்டு பார்ப்பார். அப்போது ஷேர் மார்க்கெட் ஏறியது, ஷேர் வாங்கியவர் களுக்கு இன்றைக்கு இத்தனை கோடி லாபம் என்று அறிவிப்பாளர் சொல்லும்போது, ரமணன் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. காலம் செல்லச் செல்ல ஷேர் மார்க்கெட் ரமணனையும் பற்றிக் கொண்டது. அது என்ன ஷேர் மார்க்கெட், அதில் எப்படி கோடி கோடியாக லாபம் சம்பாதிக்கிறாங்க என்றெல்லாம் யோசிப்பார். அப்போதே அதையும் மறந்துவிடுவார்.

ஆனால், முதல்முறையாக அம்பலவாணனை சந்தித்த போது அவருக்குள் ஷேர் மார்க்கெட் தீ பற்றிக்கொண்டது.

அம்பலவாணன் மெக்கானிக்கல் கடை வைத்திருக்கிறார். எப்போதாவது வண்டிகள் ரிப்பேருக்கு வரும். ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க, ரமணன் கடைக்குத்தான் வருவார். அப்படித்தான் இருவருக்கும் பழக்கம்.

அன்று ரமணன் கடைக்கு அம்பலவாணன் வந்தபோது டிவி பார்த்துக்கொண்டு இருந்தார்.

“சார், நான் சொல்ற சேனலைக் கொஞ்சம் போடுங்க சார், ஜிஎஸ்டி பில் பாஸ் ஆயிடுச்சாம். ஷேர் மார்க்கெட் ஏறியிருக்கான்னு பார்ப்போம்?’’ என்றார்.

அம்பலவாணன் கேட்ட சேனலைப் போட்டார் ரமணன்.

“சார், நீங்க ஷேர் மார்க்கெட்ல டிரேட் பண்றீங்களா, எனக்கு அது பத்தி ஒண்ணும் தெரியாது’’ என்றவுடன் உற்சாகமானார் அம்பலவாணன்.

“சார் ரொம்ப சிம்பிள் மேட்டர். உங்களுக்கு ஷேர் மார்க்கெட்ல டிரேட் பண்ணனும்னா சொல்லுங்க. நான் உங்களுக்கு அக்கவுன்ட் ஓப்பன் பண்றேன்’’ என்றார்.

ரமணன் ‘உம்’ என்றார். அடுத்த நாளே ரமணனுக்கு ஒரு புரோக்கர் ஆபீஸிலிருந்து அழைத்து வந்தது. டீமேட்

கணக்கு தொடங்கத் தேவையான அத்தனை டாக்குமென்ட்டு களிலும் கையெழுத்துப் போட்டார். அத்தனை இடங்களில் கையெழுத்துப் போடும்போது ரமணனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

சின்னச் சின்னதாக ட்ரேட் செய்ய ஆரம்பித்த ரமணனுக்கு தினமும் ரூ.200, ரூ.300 என்று லாபம் வரவே அந்த கிக் அவரை நன்கு தொற்றிக்கொண்டது.அம்பலவாணனுக்கு போன் போட்டார்.

“சார், இன்னும் நல்ல லாபம் பார்க்கணும் சார். அதுக்கு வழி சொல்லுங்க?’’ என்று கேட்டார் ரமணன்.

“அப்ப காலைல ஒரு 9.30 – 10.30 மணிக்குள்ள மார்க்கெட் நல்லா மூவ் ஆகும். அப்புறம் சாயந்திரம் 2.30 மணியிலிருந்து 3.30 மணிக்கு நல்லா மூவ் ஆகும். அப்ப டிரேட் பண்ணுங்க’’ என்றார்.

ரமணனுக்கும் அது நல்ல விஷயமாகப் பட்டது. அப்படி செய்யத் தொடங்கியதில், முதல் வாரத்தில் அவருக்கு ரூ.1,000 லாபம் கிடைத்தது. பலே, இப்படியே போன ஒரு பத்து நாள்ல, ஐயாயிரம் போட்டு ஐயாயிரம் எடுத்துடலாம் போல இருக்கே என்று கணக்குப் போட ஆரம்பித்தார்.

அடுத்தடுத்த நாட்கள் தொடர்ந்து டிரேடிங் செய்த போது, ஒரு நாள் காலையில் ரூ.300 லாபம் வந்தது. அப்புறம் அடுத்த டிரேடிங்கில் அந்த ரூ.300 போனது. நோ லாஸ், நோ பிராபிட்தானே என்று தன்னைத் தானே தேற்றிக்கொள்ளவார். இரண்டாவது வாரமும் லாபம் இல்லை.

அடுத்தடுத்த நாட்களில் ரமணனின் டென்ஷன் அதிகரிக்க ஆரம்பித்தது. அடுத்த இரண்டு வாரங்களில் தினம் சுமார் ரூ.500 நஷ்டப்பட ஆரம்பித்தார். மொத்தமாக ரூ.5,000 லாஸ் ஆனது.

ரமணனுக்கு இப்போது கொஞ்சம் குழப்பமாக இருந்தது.அம்பலவாணனுக்கு போன் அடித்து வரவழைத்து விஷயத்தைச் சொன்னார்.

‘‘என்ன சார், ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்கிறீங்க? மார்க்கெட்ல மிஸ்டேக் இருந்தா, உங்களுக்கு முதல் வாரம் லாபம் வந்திருக்குமா? மார்க்கெட்னா ஏத்த இறக்கம் இருக்கத்தான் செய்யும். நம்மதான் அதைச் சமாளிக்கணும்’’ என்று ஒரு பழுத்த அனுபவஸ்தர் மாதிரி பேசினார்.

ரமணனுக்கு அவரது விஸ்தாரமான அறிவுரையை எல்லாம் கேட்க பொறுமை இல்லை. ‘‘சார், இப்ப என்ன பண்றது? முதல்ல அதைச் சொல்லுங்க’’ என்று பரபரத்தார்.

‘‘இப்ப ரூ.5,000 நஷ்டம் ஆயிடுச்சி. இதை எப்படி சரிபண்றது?’’

‘‘முன்னாடி 100 ஷேர் வாங்கி வியாபாரம் பண்ணீங்க இல்ல. இப்ப 200 ஷேர் வாங்கி வியாபாரம் பண்ணுங்க’’ என்றார்.

‘‘அப்ப எவ்வளவு ரூபா போடணும்?’’ என்று கேட்டார் ரமணன். ‘‘10,000 ரூபாய் போடுங்க. இழந்த ரூ.5,000-ஐ எடுத்திடலாம்’’ என்று தெம்பாக ஐடியா தந்தார் அம்பலவாணன்.

ரமணனும் அப்படியே செய்தார். இப்போது ரூ.10,000 போட்டு டிரேடிங் செய்தார். அதன்பிறகு டென்ஷன் இரு மடங்காக உயர்ந்தது. முன்பு ரூ.1,000 நஷ்டம் வந்தால், இப்போது ரூ.1,500 நஷ்டம் வர ஆரம்பித்தது. ஒரு நாள் கொஞ்சம், ஒரு நாள் அதிக எண்ணிக்கை என்று மாற்றி மாற்றி வியாபாரம் செய்தபோதும் நஷ்டம் வருவதைத் தவிர்க்க முடிய வில்லை. அடுத்த ஒரு மாதத்தில் ரூ.10,000 நஷ்டமானது.

திரும்பவும் அம்பலவாணனை அழைத்தார். ‘‘முதலீட்டை அப்படியே டபுளாக்குங்க.

நஷ்டத்தை எடுத்திடலாம்’’ என்றார் வழக்கம்போல.

ரமணனுக்கும் வேறு வழி தெரியவில்லை. அவர் சொல்வதை அப்படியே பின்பற்ற ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக நஷ்டம் கூடி, ஆறு மாதத்தில் ரூ.2 லட்சத்தை இழந்தார்.

ரமணனின் டென்ஷனை உணர்ந்த அவர் மனைவி கற்பகம் என்ன பிரச்னை என்று விசாரித் தார். ஆனால், ரமணனால் மனம்விட்டு பேச முடியவில்லை.

நஷ்டப்பட்ட இரண்டு லட்சத்தை எப்படித் திரும்ப எடுப்பது என்று தெரியாமல் தவித்தார். ஒருநாள் புரோக்கர் கம்பெனியில் வேலை பார்த்த டீலர் ரமேஷிடமும் அதுபற்றி சொல்லிப் புலம்பினார். ரமேஷ் உஷாரானார். ரமணின் தொழில், வருமானம் பற்றி விசாரித்தார். செம கைதான், இந்த பார்ட்டியை விட்டுவிடக்கூடாது என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார்.

‘சார், உங்களைப் பார்த்தா பாவமாத்தான் இருக்கு. எனக்கு ஹெட் ஆபிஸல இருந்து ஃப்யூச்சர்ஸ் கால் வரும். அது விஐபி கஸ்டமருக்கு மட்டும்தான் சொல்வேன். நீங்க ரூ.5 லட்சம் போட்டு ஆரம்பிங்க. விட்ட ரூ.2 லட்சத்தை எடுத்திடலாம்’’ என்றார்.

ரமேஷின் வார்த்தைகளைக் கேட்டு தலை அசைத்து வைத்தார். அவர் சொன்னபடிரூ.5 லட்சத்தைப் போட்டார். புரோக்கர் ஆபிஸிலிருந்து டீலர் ரமேஷ் தினமும் கூப்பிட்டு ஃப்யூச்சர்ஸ் கால் கொடுப்பார். இரண்டு நாளா தினம் ரூ.5,000வீதம் மொத்தம் ரூ10,000 லாபம். மனதில் பல்ப் எரிந்தது. எப்படியும் விட்ட இரண்டு லட்சம் ரூபாயை எடுத்திடலாம் என்ற நம்பிக்கை வந்தது ரமணனுக்கு.

ஆனால், அடுத்தடுத்து வந்த நாட்கள் ரமணனுக்கு அவ்வளவு சாதகமாக இல்லை. ஃப்யூச்சர்ஸ் வியாபாரத்தில் ஒரு நாள் ரூ.5,000 லாபம், மறுநாள் ரூ.10,000 நஷ்டம் என்று வந்தது. டீலர் ரமேஷிடம் கேட்டால், ‘‘அதான் நேத்து லாபம் வந்திச்சில்ல சார். அந்த மாதிரி வரும் பண்ணுங்க’’ என்றார். அடுத்த இரண்டு மாதத்தில் ரமணனுக்கு 5 லட்சமும் நஷ்டமானது. ஆட்டோமொபைல் வியாபாரத்தில் வரும் லாபத்தை, ஃப்யூச்சர்ஸ் டிரேடிங்கில் போட்டார். பத்து மாதத்தில் ரூ.10 லட்சம் நஷ்டம் ஆனது.

அடுத்த ஒரு வருடம் தொடர்ந்து ஃப்யூச்சர்ஸ் வியாபாரம் செய்தார். வருட முடிவில் மொத்தமாக ரூ.20 லட்சம் நஷ்டம். இவ்வளவு நஷ்டப்பட்ட பிறகு ரமணனுக்கு தொழிலும் மனம் ஒட்டவில்லை. டிரேடிங்கிலும் மனம் செல்ல வில்லை. ரமணன் மனம் முழுவதும் இந்த ரூ.20 லட்சத்தை எப்படி மீட்பது என்றே யோசிக்க வைத்தது.

ஒரு கட்டத்தில் இந்த ஷேர் மார்க்கெட் நமக்கு சரிவராது என்று முடிவெடுத்தார் ரமணன். சரி, இந்த ரூ.20 லட்சத்தை எப்படி எடுப்பது என்று தெரியவில்லை. அங்கு இங்கு விசாரித்தார். சிலர், கமாடிட்டியில வியாபாரம் பண்ணுங்களேன்; விட்டதை எடுத்திடலாம் என்றார்கள்.
பின் கமாடிட்டி டிரேடிங்கில் இறங்கினார் ரமணன். தன் ஆட்டோமொபைல் கடையில் இருந்து வரக்கூடிய வருமானத்தில் இருந்து மாதம் ரூ.50,000, ரூ.60,000, ரூ.70,000 என எடுத்து எடுத்து டிரேடிங்கில் போட்டு சுமார் ரூ50 லட்சத்தை லாஸ் செய்து விட்டார்.

ஒரு நிலையில் அவர் இத்தனை நாளும் நடத்திவந்த ஆட்டோ மொபைல் கடையே அவரிடமிருந்து கைநழுவிப் போனது. கடந்த சில ஆண்டுகளில் அவர் வாழ்க்கை முழுவதையும் தொலைத்த பெரும் சோகத்துடன் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார் ரமணன்.

பாடம்: அளவோடு டிரேடிங் செய்யும் போது அது நம் கட்டுப்பாட்டில் இருக்கும். அளவுக்கு அதிகமாக டிரேடிங் செய்யும்போது, நாம் எடுக்கிற ரிஸ்க் மிக அதிகமாக இருக்கும். அப்போது வரும் நஷ்டத்தை நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது!

(தொடர்வோம்)