பிளாக் டிக்கெட் உஷார்!

சமீபத்தில் குடும்பத்துடன் சினிமாவுக்குப் போனோம். கூட்டம் அலைமோதியது. நான் ஏற்கெனவே ரிசர்வ் செய்யவில்லை. கவுன்ட்டரில் டிக்கெட் கிடைப்பது ரொம்ப கஷ்டம் என்று தெரிந்தும் குழந்தைகள் வற்புறுத்தவே, வரிசையில் நின்றேன். ஆனால், மிகக் குறைந்த நபர்களுக்கே கவுன்ட்டரில் டிக்கெட் கொடுத்தார்கள். ஏற்கெனவே முன்பதிவு ஆகிவிட்டதாகச் சொல்லிவிட்டார்கள். சரி, வீட்டுக்குப் போகலாம் என்றால் குழந்தைகள் ஒப்புக் கொள்ளவில்லை. என்ன செய்வது என்று குழம்பிப்போய் நிற்கும்போது, யாரோ ஒருவர், ‘‘சார் , 4 டிக்கெட் இருக்கு. 100 ரூபாய் டிக்கெட் 300 ரூபாய்’’ என்றார். கொஞ்சம் யோசித்த நான், ‘‘குடும்பத்தோட கிளம்பி வந்தாச்சு. காசு போனாலும் பரவாயில்லை; வாங்கி படத்தைப் பார்த்துடுவோம்’’ என பணத்தைக் கொடுத்து டிக்கெட்டை வாங்கினேன். கூட்ட நெரிசலைக் கடந்து உள்ளே சென்றோம். டிக்கெட்டை என்ட்ரன்ஸில் கொடுத்ததும், ‘‘என்ன சார், காலை காட்சிக்கு வாங்கின டிக்கெட்டுல இப்ப வர்றீங்க?’’ என்று கேட்டார். டிக்கெட்டை வாங்கிப் பார்த்தபோதுதான் அவசரத்தில் நான் செய்த தப்பு புரிந்தது. பணமும் போச்சு; படமும் போச்சு... ஏமாற்றத்துடன் நாங்கள் வீடு திரும்பினோம்.

-பார்த்திபன், கோவை

உபத்திரவமான உதவி!

நாங்கள் ஃப்ளாட்டில் குடியிருக்கிறோம். எங்கள் பக்கத்து போர்ஷனுக்கு வயதான தம்பதியர் குடிவந்தனர். மகன் டெல்லியில் வேலையில் இருப்பதாகச் சொன்னார்கள். எங்களுடன் அவர்கள் கொஞ்ச நாட்களிலேயே நன்றாகப் பழகிவிட்டார்கள். சில சமயம் கடைக்குப் போகும்போது, பணத்தைக் கொடுத்து ஏதாவது வாங்கி வரச் சொல்வார்கள். வயதானவர்களாயிற்றே என நானும் முடிந்த உதவிகளை செய்வேன். ஒரு சமயம், ஒரு கவர் ஒன்றைக் கொடுத்து, ‘‘இதில் ரூ.5,000 இருக்கு; நீங்கள் ஆபிஸ் போயிட்டு வர்றப்ப அண்ணாச்சி கடையில குடுத்துடுங்க’’ என்று சொல்லவே, வழக்கம் போல வாங்கி பைக்குள் வைத்துக்கொண்டேன். மாலையில் கடைக்குச் சென்று கவரைத் தந்தேன். ‘‘சார், மூவாயிரம்தான் இருக்கு’’ என்றார் அண்ணாச்சி. நான் வீடு திரும்பியவுடன் முதியவரைச் சந்தித்து விஷயத்தை சொன்னேன். ‘‘இல்லையப்பா, அஞ்சாயிரம் கொடுத்தேனே... நீ உன் செலவுக்கு ஏதாவது எடுத்திருப்பே. நல்லா யோசித்துப் பாரு...’’ என்றார். எனக்கு சுரீர் என்றது. எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் என் பணம் இரண்டாயிரத்தைப் போட்டுக் கொடுத்தேன். உதவி செய்யும்போதும் கவனமா இருக்கணும் போல!

-ரமேஷ், சென்னை

ஏலச்சீட்டு... போயே போச்சு!

எங்கள் தெருவில் ஒரு பெண் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். நிறையப் பேர் அவரிடம் நம்பிக்கையாக சீட்டு கட்டி வந்தனர். நானும் மாதம் 1,000 ரூபாய் கட்டும் சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தேன். சீட்டுப் பணத்தை எடுத்து நகை வாங்கினேன். என்னைப் பார்த்து, என் உறவுப் பெண்கள் இருவர் தங்களையும் அந்த சீட்டுத் திட்டத்தில் சேர்த்துவிடுமாறு சொன்னார்கள். என் கணவர், ‘‘வேண்டாம்’’ என்று சொன்னதைக்கூட கேட்காமல், நான் அவர்களை அந்தப் பெண்ணிடம் சீட்டுத் திட்டத்தில் சேர்த்துவிட்டேன்.

எட்டு மாதம் வரை சரியாகத்தான் போனது. திடீரென ஒருநாள் சீட்டுப் பிடிக்கும் அந்த பெண் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். அந்தப் பெண்ணுடைய வீட்டில், வெளியூரில் வேலை பார்க்கும் அவர் மகன் மட்டும்தான். அவரிடம் கேட்டால், ‘‘இதைப் பத்தியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது; பணம் கொடுத்ததுக்கு ஏதாவது பில் ஆதாரம் இருந்தால் நிச்சயமாக திரும்பக் கொடுத்துவிடுகிறேன்’’ என தனது முகவரியைக் கொடுத்துவிட்டுப் போனார். ஆனால், எங்களிடம் எந்த ரசீதும் இல்லை. உறவுப் பெண்கள் வேறு இப்போது முகம்கொடுத்து பேசுவதே இல்லை!

-மாலதி, ஈரோடு

சில்லறை முக்கியம்!

நான் சமீபத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு அரசு பஸ்ஸில் சென்றேன். டிக்கெட் கட்டணம் ரூ.325-தான். என்னிடம் 1,000 ரூபாய் நோட்டாக மட்டுமே இருந்தது. சலித்துக்கொண்டே வாங்கிய நடத்துனர், டிக்கெட்டைத் தந்துவிட்டு, ‘‘மீதமுள்ள பணத்தை பிறகு வாங்கிக்குங்க’’ என்றபடி என் டிக்கெட்டின் பின்பகுதியில் குறித்துக் கொடுத்தார். நான் அன்று பூராவும் அலைந்ததால், உடனே தூங்கி விட்டேன். திடீரென விழிப்பு வர பஸ் சென்னை பெருங்களத்தூர் வந்துவிட்டது. நான் தாம்பரம் செல்ல வேண்டும் என்பதால், அவசரமாக இறங்கிவிட்டேன். வீட்டுக்குப் போனவுடன், சில்லறை வாங்கலையே என ஞாபகம் வர, அன்றே கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் சென்று விசாரித்தேன். டிக்கெட்டை முன்னும்பின்னும் பார்த்தவர்கள், ‘‘எந்த கண்டக்டர்னு கண்டுபிடிக்க முடியலையே’’ என்றார்கள். அங்கும் இங்கும் அலைந்த பின்னும், யாரும் சரியான விவரம் சொல்லவில்லை. அன்றுமுதல், இனி பஸ் ஏறும்முன் கட்டாயம் சில்லறை வைத்திருக்க வேண்டும் என்கிற முடிவை எடுத்தேன்.

-தனசேகரன், மதுரை

உங்கள் அனுபவங்களையும் வாசகர் கார்னர் பகுதிக்கு எழுதலாம்... navdesk@vikatan.com