Published:Updated:

ஆன்லைன் விற்பனை... ஆச்சர்யப்படுத்தும் 4 டிரெண்டுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆன்லைன் விற்பனை... ஆச்சர்யப்படுத்தும் 4 டிரெண்டுகள்!
ஆன்லைன் விற்பனை... ஆச்சர்யப்படுத்தும் 4 டிரெண்டுகள்!

சித்தார்த்தன் சுந்தரம்

பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் விற்பனை... ஆச்சர்யப்படுத்தும் 4 டிரெண்டுகள்!

விநாயகர் சதுர்த்தியில் ஆரம்பித்து பொங்கலோடு முடியும் ஐந்து மாத பண்டிகைக் காலத்தை சரியாகப் பயன்படுத்தி பெரிய அளவில் விற்பனை செய்து வந்தன இந்தியா முழுக்க உள்ள வணிக நிறுவனங்கள். கடந்த சில ஆண்டுகளாக சில ஆன்லைன் நிறுவனங்களும் போட்டி போட்டு பெரிய அளவில் பொருட்களை விற்கத் தொடங்கிவிட்டன. இந்த வருடம் ஆன்லைன் நிறுவனங்கள் செய்த விற்பனையை வைத்துப் பார்க்கும்போது சில  சுவாரஸ்யமான போக்குகள் (trends) தெரிய வருகின்றன. அந்தப் போக்குகள் இதோ:

சிறுநகரங்களும் ஆன்லைன் பிடியில்!

அமேசான் நிறுவனம் ஐந்து நாட்களுக்கு நடத்திய விற்பனையின்போது நாட்டில் உள்ள மொத்த பின்கோடுகளில் 90 சதவிகித பின்கோடுகளில் இருந்து ஆர்டர் வந்திருந்ததாம். புதிய நுகர்வோர்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தினர் இரண்டாம், மூன்றாம் அடுக்கு நகரங்களைச் சேர்ந்தவர்கள். அமேசானுக்குக் கிடைத்த மொத்த ஆர்டர்களில் 65 சதவிகிதமானோர் பத்து லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வாழ்பவர்கள்.

ஆன்லைன் விற்பனை... ஆச்சர்யப்படுத்தும் 4 டிரெண்டுகள்!

குறைந்த தள்ளுபடி, அதிக விற்பனை!

ஆன்லைன் ஸ்டோர்கள் அதிக தள்ளுபடி கொடுப்பதன் மூலம் தங்களது விற்பனை பாதிக்கப்படுகிறது என்று `ஆஃப்லைன்’ வணிகர்கள் சில மாதங்களுக்கு முன்பு புகார் செய்ததை அடுத்து, மார்ச் மாதத்திலிருந்து தாங்கள் கொடுக்கும் தள்ளுபடி அளவை ஆன்லைன் ஸ்டோர்கள் ஒரு `கட்டுக்குள்’ கொண்டுவந்திருந்தன. என்றாலும், அதனால் விற்பனை அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை என்பது ஆச்சர்யமான விஷயம். முன்பு கொடுத்த அளவு தள்ளுபடி கொடுக்கவில்லை என்றாலும் பெரும்பாலான பொருட்கள் ஆஃப்லைன் ஸ்டோர் விலையைவிட குறைவுதான். எனினும், கையில் இருக்கும் பணத்தை எல்லாம் போட்டு வாடிக்கையாளர்களுக்கு பெரும் சலுகை அளித்து வருகின்றன. முதலீடு தீர்ந்துவிட்டால், சலுகையும் குறைந்துவிடும். அதுவரை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் நிறுவனங்களை தேடி ஓடிவருவதை யாரும் தடுக்க முடியாது.

ஆன்லைன் விற்பனை... ஆச்சர்யப்படுத்தும் 4 டிரெண்டுகள்!

குறைந்தது ‘கேஷ் ஆன் டெலிவரி’!

ஆன்லைனில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை இந்த முறை அதிகம். பணம் செலுத்த `கேஷ் ஆன் டெலிவரி’யைத் தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான பாதுகாப்பினை வங்கிகள் மேம்படுத்தியிருப்பதும், பல நிறுவனங்கள் பாதுகாப்பான வாலட் சேவை ஆரம்பித்திருப்பதும் இதற்கான காரணங்களாக இருக்கக்கூடும்.

ஆன்லைன் விற்பனை... ஆச்சர்யப்படுத்தும் 4 டிரெண்டுகள்!

விலை ஒரு பொருட்டல்ல!

இந்த வருட விற்பனையில் அதிகமாக விற்ற பொருட்கள் `பிக் டிக்கெட் அயிட்டங்கள்’ என்று சொல்லப்படக்கூடிய விலை அதிகம் உள்ள தொலைக்காட்சிப் பெட்டி, ரெப்ரிஜிரேட்டர், மொபைல்

ஆன்லைன் விற்பனை... ஆச்சர்யப்படுத்தும் 4 டிரெண்டுகள்!

போன் (ஃப்ளிப்கார்ட்டில் `பிக் பில்லியன் டே’ விற்பனையை ஆரம்பித்த முதல் ஒரு மணிநேரத்தில் ஒரு வினாடிக்கு 100 ஃபோன்கள் என்கிற அளவுக்கு ஆர்டர் வந்ததாம்!) ஆகும். ஃப்ளிப்கார்ட்டைப் பொறுத்தவரை, டெலிவிஷன் விற்பனையில் `வூ டெலிவிஷன்’ (Vu Television) க்குத்தான் முதலிடம். இந்த டிவியின் சராசரி விலை ரூ.25,000. 

பெரிய சாதனங்களின் விற்பனை கடந்த ஆண்டைவிட 10 மடங்கு அதிகமென்று அமேசான் கூறியிருக்கிறது. ஃப்ளிப்கார்ட்டைப் பொறுத்தவரை, வாஷிங் மெஷின், ரெஃப்ஜிரேட்டர் விற்பனை கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகம் எனத் தெரிய வந்திருக்கிறது.

அமேசானின் பங்கு அதிகரிப்பு!

ஆன்லைன் விற்பனை... ஆச்சர்யப்படுத்தும் 4 டிரெண்டுகள்!



ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல், அமேசான் ஆகிய மூன்று நிறுவனங்களில், பல முதலீட்டு நிறுவனங்கள் கோடி கோடியாக முதலீடு செய்திருக்கின்றன. ஆன்லைன் விற்பனையில் அமேசானின் மார்க்கெட் ஷேர் 14 சதவிகித்திலிருந்து 22 சதவிகித மாக உயர்ந்திருக்கிறது. ஃப்ளிப்கார்ட்டின் மார்க்கெட் ஷேர் 43 சதவிகிதத்திலிருந்து 37 சதவிகிதமாகவும், ஸ்நாப்டீல் 19 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாகவும் குறைந்திருக்கிறது. இந்த நிறுவனங்களின் மொத்த மார்க்கெட் ஷேர் கிட்டத்தட்ட 73 சதவிகிதம் ஆகும். இந்த ஐந்து நாட்களில் கிடைத்த ஆர்டர்களை நிறைவேற்றுவதில் கிட்டத்தட்ட 30,000 பேரை ஈடுபடுத்திய தாக ஃப்ளிப்கார்ட் அறிவித்திருக்கிறது. 

நமது ஆண்டு விற்பனை சீனாவில் ஒரு நாள் விற்பனை!

நம் நாட்டில் ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனையாகும் பொருட்கள், சேவைகளின் மதிப்பு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர்கள் (சுமாராக ரூ.66,000 கோடி). ஆனால், சீனாவின் அலிபாபா நிறுவனம் கடந்த வருடம் `சிங்கிள்ஸ் டே’ (திருமணம் ஆகாமல் இருக்கும் சீன இளைஞர், இளைஞிகள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 11-ம் தேதியன்று `சிங்கிள்ஸ் டே’யைக்  கொண்டாடி வருகிறார்கள்) அன்று மட்டும் கிட்டத்தட்ட 14.3 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களை விற்று உலக சாதனை படைத்தது. அதாவது அலிபாபாவின் ஒரு நாள் விற்பனை, நமது ஓராண்டு ஆன்லைன் விற்பனையைவிட அதிகம்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு