Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! ஆயில் & மெட்டல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கமாடிட்டி  டிரேடிங்! ஆயில் & மெட்டல்
கமாடிட்டி டிரேடிங்! ஆயில் & மெட்டல்

ஜெ.சரவணன்

பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி  டிரேடிங்! ஆயில் & மெட்டல்

ந்த வாரத்தின் கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும் விலையின் போக்கு குறித்து விளக்குகிறார் இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் முருகேஷ்குமார்.

கச்சா எண்ணெய்!

கடந்த சில வாரங்களாகவே கச்சா எண்ணெய் ஏற்ற இறங்கங்களுடனேயே வர்த்தகமாகி

கமாடிட்டி  டிரேடிங்! ஆயில் & மெட்டல்

வருகிறது. கடந்த வாரத்திலும் புதன்கிழமை அன்று, பேரல் கச்சா எண்ணெய் முந்தைய நாளைக் காட்டிலும் 1.5 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்து 51.80 டாலரைத் தொட்டது.
 
அமெரிக்க எண்ணெய் உற்பத்தி பெருமளவு குறைக்கப்பட்டதும், பிற எண்ணெய் உற்பத்தி நாடுகளும் கணிசமாக உற்பத்தியைக் குறைக்க முன்வந்ததும்தான் இந்த ஏற்றத்துக்கு காரணம். வரும் நவம்பர் 30-ம் தேதி நடக்கும் எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

டாலரின் மதிப்பு சற்றுக் குறைந்ததும் விலை ஏற்றத்துக்கு ஒரு காரணம் ஆகும். ஆனால், அடுத்த இரண்டு நாட்களிலேயே மீண்டும் இறங்கி, 50.55 டாலருக்கு வர்த்தகமானது. இதற்கு காரணம், சீனாவின் பொருளாதார டேட்டாவும் டாலரின் மதிப்பும்  வலிமை அடைந்ததே. மேலும், ஆசிய நாடுகளின் ஜிடிபி குறையும் என்ற கணிப்பும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமர்வில் உற்பத்தியைக் குறைக்கும் முடிவு நிறைவேற்றப்பட்டாலும், பொருளாதார காரணிகளால் கச்சா எண்ணெய் விலை ஏற்றமடைவது தடுக்கப் படலாம்.

தங்கம்!

கமாடிட்டி  டிரேடிங்! ஆயில் & மெட்டல்



தொடர் இறக்கத்தில் இருந்த தங்கம், கடந்த வாரத்தில் சிறிய ஏற்ற இறக்கங்களுடன் வர்த்தக்கமானது. திங்கட்கிழமை அன்று அதற்கு முந்தைய நாள் விலையான 1,250 டாலரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றமடையத் தொடங்கியது. வியாழன் அன்று ஒரு அவுன்ஸ் தங்கம் அதிகபட்சமாக 1,270 டாலரைத் தொட்டது. இதற்கு சீனாவில் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்ததும், தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததுமே காரணம். ஆனாலும் இந்த ஏற்றம் ஒரு மாதத்தில் இருந்த உச்சத்தைவிட மிகக் குறைவுதான்.

இந்த நிலையில், வெள்ளி அன்று மீண்டும் இறங்கி 1,260 டாலர் என்ற நிலையில் வர்த்தகமானது. டாலர் வலிமை அடைந்ததே இந்த இறக்கத்துக்கு காரணம். டாலர் குறியீடு ஏழு மாத உச்சத்தை எட்டியுள்ளது. மேலும், அமெரிக்காவில் தங்கத்தை மறுவிற்பனை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால்  வேலை இல்லாதவர்களில் பலர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்திருப்பதால் இந்த இறக்கம் வரும் வாரத்திலும் நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி!

கமாடிட்டி  டிரேடிங்! ஆயில் & மெட்டல்



தங்கத்தைப் போலவே, வெள்ளியும் கடந்த வாரத்தில் ஏற்றத்தைச் சந்தித்து, வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் முந்தைய வாரத்தில் இருந்த நிலைக்கு இறங்கி வர்த்தகமானது. கடந்த வாரம் திங்கள் அன்று 17.40 டாலராக இருந்த ஒரு அவுன்ஸ் வெள்ளி, புதனன்று அதிகபட்சமாக 17.75 டாலர் நிலையை எட்டியது. இது கிட்டதட்ட 2% உயர்வு. எம்சிஎக்ஸ் சந்தையில் ஒரு கிலோ வெள்ளி ஃப்யூச்சர்ஸ் ரூ.156 உயர்ந்து ரூ.42,350-க்கு வர்த்தகமானது. ஆனால், வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் இறங்கி, 17.46 டாலர் என்ற நிலையில் வர்த்தகமானது.

காப்பர்!

கமாடிட்டி  டிரேடிங்! ஆயில் & மெட்டல்



காப்பர் வர்த்தகம் கடந்த சில மாதங்களாகவே இறக்கத்தின் போக்கிலேயே நீடிக்கிறது. கடந்த வாரத்தில் 2.6%  வரை இறக்கம் அடைந்தது. ஜூலையில்  ஒரு கிலோ காப்பர் ரூ.340-ஆக இருந்தது. தற்போது எம்சிஎக்ஸ் சந்தையில் ஒரு கிலோ காப்பர் ரூ.318 என்ற நிலையில் வர்த்தகமாகிறது. இது ரூ.311 என்ற நிலையை சப்போர்ட்டாகக் கொண்டுள்ளது.

கமாடிட்டி  டிரேடிங்! ஆயில் & மெட்டல்

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

அக்ரி கமாடிட்டி பகுதியைப் படிக்க http://bit.ly/2eYLg4A

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு