Published:Updated:

"9 காலாண்டுகளாக வளர்ச்சி கண்டு வருகிறோம்!’’ - லட்சுமி விலாஸ் வங்கி...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"9 காலாண்டுகளாக வளர்ச்சி கண்டு வருகிறோம்!’’ - லட்சுமி விலாஸ் வங்கி...
"9 காலாண்டுகளாக வளர்ச்சி கண்டு வருகிறோம்!’’ - லட்சுமி விலாஸ் வங்கி...

சோ.கார்த்திகேயன்

பிரீமியம் ஸ்டோரி
"9 காலாண்டுகளாக வளர்ச்சி கண்டு வருகிறோம்!’’ - லட்சுமி விலாஸ் வங்கி...

ங்கிப் பங்குகள் என்றாலே ஒதுங்கி இருக்கிறார்கள் முதலீட்டாளர்கள். காரணம், வங்கிகளின் வாராக் கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதே. இந்தப் பிரச்னையினால் பல வங்கிகளின் வளர்ச்சி, கடந்த பல காலாண்டுகளாகவே இறக்கத்தில் இருக்கிறது.
 

"9 காலாண்டுகளாக வளர்ச்சி கண்டு வருகிறோம்!’’ - லட்சுமி விலாஸ் வங்கி...


ஆனால், லட்சுமி விலாஸ் வங்கி மட்டும் இதில் வித்தியாசம். கடந்த ஓராண்டு காலத்தில் இந்த வங்கியின் பங்கு விலை சுமார் 70 சதவிகிதத்துக்கு மேல் வளர்ச்சிக் கண்டிருக்கிறது. தனியார் வங்கிகளில் இந்த அளவு வளர்ச்சி கண்ட வங்கி வேறு எதுவும் இல்லை.
 
 மேலும், கடந்த வாரம் வெளியான இந்த நிதி ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டில் இந்த வங்கியின் லாபம் சுமார் 44% அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில், இந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் என்.எஸ்.வெங்கடேஷ் நமக்கு அளித்த பேட்டி இனி:

கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லட்சுமி விலாஸ் வங்கி, வருகிற 2016 நவம்பர் 3-ம் தேதி அன்று 90-ம் ஆண்டை நிறைவு செய்யப்போகிறது.  வங்கியின் செயல்பாடுகள் இப்போது எப்படி உள்ளன?

‘‘1926-ம் ஆண்டிலிருந்து தமிழகத்தை மையமாக வைத்து இயங்கிவரும் ஒரே ஒரு வங்கி லட்சுமி விலாஸ் வங்கி மட்டுமே. இந்த வங்கி கரூரில் ஆரம்பிக்கப்பட்டாலும்,   2014-ல் இதன் கார்ப்பரேட் அலுவலகம் சென்னைக்கு மாற்றப்பட்டது. அந்தக் காலத்தில் ஒரே ஒரு  கிளையைத் தொடங்கி, அந்த வங்கியின் நெட்வொர்க்கை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து, இப்போது 460 கிளைகளுடன் சிறப்பாக இயங்கி வருகிறோம். வருமானம், நிகர லாபம், செயல்பாட்டு லாபம், வேலைவாய்ப்பு உருவாக்கம் என அனைத்திலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறோம்.”

"9 காலாண்டுகளாக வளர்ச்சி கண்டு வருகிறோம்!’’ - லட்சுமி விலாஸ் வங்கி...

கடந்த ஒரு வருடத்தில் மற்ற வங்கிகளைவிட லட்சுமி விலாஸ் வங்கி பங்குகளின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதற்கு காரணம் என்ன?

‘‘வங்கியின் கடந்த ஒன்பது காலாண்டு முடிவுகளைப் பார்த்தாலே தெரியும், ஏன் லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன என்று. ஒவ்வொரு காலாண்டும் வங்கியின் நிகர லாபம், செயல்பாட்டு லாபம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நிகர வட்டி விகிதத்தை மிகச் சரியாகப் பராமரித்து வருகிறோம். கடந்த ஒன்பது காலாண்டிலும், தொடர்ச்சியாக நிகர வட்டி வருவாய் 20 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு காலாண்டும் வங்கியின் லாபம் கிட்டத்தட்ட 50% அதிகரித்து வருகிறது. இந்த காரணத்தினால்தான் லட்சுமி விலாஸ் வங்கிப் பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கிக் குவிப்பதால், இதன் தேவை உயர்ந்து, இதன் பங்குகள் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.”

கடந்த ஓராண்டாக வங்கியின் செயல்பாடு எப்படி இருக்கிறது? வங்கியில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன?

‘‘இந்த ஆண்டு வங்கியின் நிர்வாகக் குழுவில் பல புதிய உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக பார்த்தசாரதி முகர்ஜி பதவியேற்றுள்ளார். புதிய நிர்வாகக் குழு வந்ததற்குப்பிறகு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறோம். கடந்த ஒரு ஆண்டில் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிக், தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தி வருகிறோம். இந்திய வங்கித் துறையிலேயே எங்கள் வங்கியின் மொபைல் பேங்கிங் வசதிதான் சிறந்தது எனலாம். சிறந்த மொபைல் பேங்கிங்காக சமீபத்தில் புனேவில் விருதும் கிடைத்தது. கார்ப்பரேட் பேங்கிங்கைக் குறைத்துவிட்டு, ரீடெய்ல், விவசாயம், எம்எஸ்எம்இ-க்கு அதிக முக்கியத்துவத்தை அளித்து, வங்கியின் வளர்ச்சியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.”

ரிசர்வ் வங்கி வட்டி குறைத்தும், வங்கிகள் அதற்கான பலன்களை மக்களுக்கு அளிக்காமல் இருப்பது ஏன்?

“ரிசர்வ் வங்கி 0.25% வட்டி விகிதத்தைக் குறைத்தால், வங்கியும் 0.25% வட்டியைக் குறைக்க முடியாது. இதற்கு சில  காரணங்கள் இருக்கின்றன.

வங்கிக்கு வங்கி டெபாசிட் பெறும் விகிதம் மாறுபடுகிறது. வங்கியின் டெபாசிட் எல்லாம் ஃபிக்ஸட் டெபாசிட்களாக இருக்கின்றன. டெபாசிட்தாரர்களுக்கு நாங்கள் அளிக்க ஒப்புக் கொண்ட  வட்டி விகிதத்தைத் தந்தே ஆகவேண்டும்.

அதுமட்டுமின்றி, கடனுக்கான தேவை அவ்வளவாக இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கடன் கேட்டால்தான்  வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கும். ஆனால், அதுபோன்ற சூழல் எதுவும் தற்போது இல்லை. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது,  வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கக் காலதாமதம் ஆகின்றன.”

"9 காலாண்டுகளாக வளர்ச்சி கண்டு வருகிறோம்!’’ - லட்சுமி விலாஸ் வங்கி...

தற்போது வங்கிகள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?

‘‘வங்கியில் பணிபுரியும் ஊழியர்களின் திறமையில் பல்வேறு வித்தியாசங்கள் காணப்படுகின்றன. சிலர் அதிக திறனுடனும், சிலர் குறைந்த திறனுடன் பணிபுரிகின்றனர். இதற்காகப் புதிதாக சேருபவர் களுக்குச் சிறந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பொதுத் துறை வங்கிகளில் வாராக் கடன் அதிகரித்துக் காணப்படுவது பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதற்குப் பொருளாதார வளர்ச்சி இல்லாததே காரணம்.”

உங்களுடைய பங்குதாரர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

“கடந்த காலத்தைப் போல, வரும் காலங்களிலும் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை நிச்சயம் அளிப்போம். முதலீட்டாளர்களும் வரும் மாதங்களில் எங்களுடைய வங்கியின் செயல்பாட்டை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.”

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு