Published:Updated:

தினமும் வட்டி... 30 நிமிடத்தில் வங்கிக் கணக்கில் பணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தினமும் வட்டி...  30 நிமிடத்தில்  வங்கிக் கணக்கில் பணம்!
தினமும் வட்டி... 30 நிமிடத்தில் வங்கிக் கணக்கில் பணம்!

ஃபண்ட் முதலீட்டில் புது வசதிமு.சா.கெளதமன்

பிரீமியம் ஸ்டோரி

நீங்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு 8% வட்டி; திரும்ப எடுக்க நினைத்தால், 30 நிமிடங்களில் பணம் உங்கள் கணக்குக்கு வந்துவிடும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா..! ஆச்சர்யமே வேண்டாம். இன்றைக்கு இது உண்மை ஆகியிருக்கிறது. ரிலையன்ஸ், டிஎஸ்பி பிளாக் ராக் ஃபண்டுகள் இந்த வகை ஃபண்ட் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கின்றன. இதுகுறித்து ஃபார்ச்சூன் பிளானர்ஸ் இன்வெஸ்ட்மென்ட் (பி) லிட் நிறுவனத்தின் இயக்குநர் பா.பத்மநாபனிடம் கேட்டோம். அவர் விரிவாகச் சொன்னார். 

தினமும் வட்டி...  30 நிமிடத்தில்  வங்கிக் கணக்கில் பணம்!

  தற்போதைய முறை!

‘‘சாதாரணமாக லிக்விட் ஃபண்டுகள், அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள் போன்ற மணி மார்க்கெட் ஃபண்டுகளில் ஆன்லைனிலோ அல்லது ஏஜென்ட், டிஸ்ட்ரிபியூட்டர்கள் மூலமாகவோ முதலீடு செய்ய சில மணி நேரங்கள் முதல் ஒரு நாள் வரை ஆகலாம். அதேபோல், முதலீடு செய்த பணத்தைத் திருப்பி எடுத்துக் கொள்ள, ரிடெம்ஷன் படிவத்தை நிரப்பிக் கொடுத்து வங்கிக் கணக்குக்கு பணம் வர குறைந்தபட்சம் ஒரு நாள் வரை நேரம் தேவைப்படும். இது மணி மார்க்கெட் ஃபண்டுகளுக்கு மட்டுமே. மற்ற வகை ஃபண்டுகளுக்கு சில தினங்களாகும்.

தற்போது இந்த முறையையே மாற்றி அதிவிரைவாக முதலீடு செய்யவும், பணத்தைத் திரும்ப எடுக்கும்போது அது விரைவாக நம் கணக்கில் வந்துசேரவும் ரிலையன்ஸ் மற்றும் டி.எஸ்.பி பிளாக் ராக் போன்ற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சில புதிய வசதிகளைக் கொண்டு வந்திருக்கின்றன. இது முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

  ரிலையன்ஸ் சிம்ப்ளி சேவ்!

முதலீடு செய்வதற்குத் தேவையான கே.ஒய்.சி (உங்கள் வாடிக்கையாளர்களை தெரிந்துகொள்ளுங்கள்) ஆவணங்களை சமர்ப்பித்தபின் (ஆன்லைனில்) மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்குவதாக இருந்தால், கே.ஒய்.சி எல்லாம் அதிலேயே பதிவேற்றம் செய்துவிடலாம்.

தினமும் வட்டி...  30 நிமிடத்தில்  வங்கிக் கணக்கில் பணம்!

உதாரணமாக,  ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதாக இருந்தால், ரிலையன்ஸ் சிம்ப்ளி சேவ் (Reliance Simply save) என்கிற அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொள்ளவும். பணத்தை இந்த அப்ளிகேஷன் மூலமாக, ரிலையன்ஸ் மணி மேனேஜர் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இதில் முதல்முறையாக பணம் போடுபவர்கள் குறைந்த பட்ச முதலீடாக ரூ.5,000 செய்யவேண்டி இருக்கும். அதன்பிறகு குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். முதலீடு செய்யப்படும் தொகை அடுத்த 30 நிமிடங்களுக்குள் யூனிட்களாக வரவு வைக்கப்படும். யூனிட்களை விற்கச் சொல்லிய, அடுத்த 30 நிமிடங்களுக்குள் வங்கிக் கணக்குக்கு பணம் வந்துவிடும். 

 டிஎஸ்பி பிளாக் ராக் மணி மேனேஜர்!


டி.எஸ்.பி நிறுவனத்தின் வலைதளம் மூலம் டி.எஸ்.பி பிளாக் ராக் மணி மேனேஜர் ஃபண்டில் முதல்முறையாக 10,000 ரூபாயும், அதன்பிறகு குறைந்தபட்சமாக 500 ரூபாயும் முதலீடு செய்யலாம். டி.எஸ்.பி நிறுவனமானது, முதலீட்டாளர் செய்யும் முதலீடுகளை அடுத்த சில நிமிடங்களில் யூனிட்களாக ஒதுக்கித் தந்து விடுகிறது. விற்கச் சொல்லிய சில நொடிகளிலேயே யூனிட்கள் நம் வங்கிக் கணக்கில் பணமாக மாறிவிடுகிறது. மணி மார்க்கெட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய நுழைவு, வெளியேறும் கட்டணங்கள் கிடையாது.

  எவ்வளவு எடுக்க முடியும்?


ரிலையன்ஸில் ஒரே நேரத்தில், ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 50 சதவிகிதப் பணத்தையும், டி.எஸ்.பி திட்டத்தில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 95 சதவிகிதம் அல்லது 2 லட்சம் ரூபாய் பணத்தையும் திரும்ப எடுக்கலாம். ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஏடிஎம் கார்டு வழங்கப்படுகிறது. வங்கிகளின் விசா (VISA) ஏடிஎம் கார்டுபோல, இந்த கார்டையும் பயன்படுத்தலாம். ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் ஏடிஎம் மூலம் அதிகபட்சமாக 50% அல்லது ரூ.50,000 பணத்தை எடுக்கலாம்.

தற்போதைக்கு குறைந்தபட்சமாக ரிலையன்ஸ் ஃபண்டில் ஒரு முறைக்கு 500 ரூபாயும், டி.எஸ்.பி ஃபண்டில் ஒரு முறைக்கு 100 ரூபாயும் திரும்ப எடுக்கலாம். இந்த ஃபண்டுகளில் ஆண்டுக்கு சுமார் 8% வட்டியும் கிடைக்கும்” என்றார் பத்மநாபன்.

இனி, உங்கள் உபரிப் பணத்தை இதுபோன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்து வைக்கலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு