நஷ்டம் தந்த கூட்டணி!

கடந்த ஆடி மாதத்தில் எங்கள் ஊரில் உள்ள பெரிய கடை ஒன்றில், ஏராளமான சலுகைகளை வழங்கியிருந்தார்கள். ‘பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பர்ச்சேஸ் செய்யும் எல்லோருக்கும் 1,000 ரூபாய் மதிப்புள்ள பொருள்களை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்’ என்று அறிவிப்பு செய்திருந்தனர்.

நான் ரூ.5,000 வரைக்கும் பர்ச்சேஸ் செய்திருந்தேன். ‘500 ரூபாய்க்கு பரிசுப் பொருளை கொடுங்கள்’ என்றேன். அவர்கள், ‘10,000 ரூபாய்க்கு பர்ச்சேஸ் செய்தால்தான் பரிசு’ என்றார்கள். என்னைப் போலவே இன்னொரு பெண்மணி 6,000 ரூபாய்க்கு பர்ச்சேஸ் செய்திருந்தார். அவரிடம் பேசி, இரண்டு பேரின் பொருட்களையும் ஒரே பில்லாகப் போட்டோம். பிறகு பரிசுப் பொருட்களை வாங்கி இருவரும் பிரித்துக்கொண்டோம்.

வீட்டுக்கு வந்ததும் பார்த்தால் நான் வாங்கிய 3,000 ரூபாய் மதிப்புள்ள சேலையில் பெரிய கிழிசல் இருந்தது. கடைக்குச் சென்று மாற்றிக்கொள்ளலாம் என்றால் பில் இல்லை. அந்த பெண்மணியிடம் பில்லை கொடுத்துவிட்டேன். 500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு முன்பின் தெரியாதவரிடம் கூட்டு சேர்ந்து, 3,000 ரூபாய் நஷ்டம்.

-பிரீத்தி, சென்னை

கடன் கொடுத்தாலும் கஷ்டம்தான்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பூர்வீக நிலம் விற்ற வகையில் ரூ.5 லட்சம் பணம் கிடைத்தது. எனது சித்தப்பா மகன் அப்போது வீடு கட்டிக் கொண்டிருந்தார். என்னிடம் நிலம் விற்ற பணம் இருப்பதைத் தெரிந்து கடனாகக் கேட்டார். வங்கி டெபாசிட் வட்டியைவிட 2% அதிகமாகத் தருவதாகச் சொன்னார். நானும் பணத்தை எடுத்துக் கொடுத்தேன்.

சமீபத்தில் அவனுடைய குடும்பத்தில் ஏதோ பிரச்னை. கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்டார்கள். அவன் சென்னைக்குச் சென்று விட்டான். எனக்கு பணம் தேவைப்படவே, அவனுடைய மனைவியிடம் கேட்டேன். அவளோ, ‘உங்களிடம் பணம் வாங்கினாரா...’ என அதிர்ச்சியுடன் கேட்டாள். பிறகு அவனுடைய சென்னை முகவரியை வாங்கிக்கொண்டு தேடிச் சென்று பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ‘நீங்கள் சொல்லும் நபர் கடந்த மாதம்தான் மும்பைக்கு பணி மாறுதல் ஆகி விட்டதாகக் கூறிச் சென்றார்’ என்றார்கள். எனக்கு மயக்கமே வந்துவிட்டது.

-மாணிக்கம், பெரம்பலூர்

நெரிசல்... தவிப்பு... இழப்பு!

நாங்கள் சமீபத்தில் குடும்பத்துடன் மதுரைக்கு உறவினர் ஒருவரின் வீட்டுத் திருமணத்துக்கு சென்றோம். பேருந்தில் சரியான கூட்டம். பக்கத்தில் இருந்த பெரியவர் ஒருவர், ‘குழந்தையை யாரிடமாவது கொடும்மா’ என்றார். உடனே பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி குழந்தையை வாங்கிக்கொண்டார். அடுத்த நிறுத்தத்தில் இன்னும் கூட்டம் ஏறவே, குழந்தையை சரியாகப் பார்க்க முடியவில்லை. அவ்வப்போது சிரமப்பட்டு எட்டிப்பார்த்துக் கொண்டேன்.

ஒரு வழியாக மதுரை வந்து சேர்ந்தோம். அந்த பெண்மணி குழந்தையைக் கொடுத்துவிட்டு அவசரமாகச் சென்றுவிட்டார். நாங்கள் மண்டபத்துக்கு வந்ததும் உடை மாற்றிக்கொண்டு, குழந்தைக்கும் உடை மாற்றும்போதுதான் கவனித்தேன். குழந்தையின் கழுத்தில் போட்டிருந்த தங்க செயினைக் காணவில்லை. எனக்கு நன்றாகப் புரிந்தது. அந்த பெண்மணிதான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங் களில் நகையை மண்டபத்துக்குச் சென்று அணிந்து கொள்ளலாமே!

-தேன்மொழி, திண்டுக்கல்

சின்ன விஷயம், பெரிய லாபம்!

ஆறு மாதங்களுக்கு முன் என் நண்பர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றோம். நண்பரின் வீடு பார்க்க பசுமையாக இருந்தது. நாம் தூக்கிப்போடும் பிளாஸ்டிக் டப்பாக்கள், குடங்கள், பக்கெட்டுகளில் எல்லாம் மண் நிரப்பி செடி வைத்திருந்தார். பூக்களும், காய்கனிகளுமாக பார்க்கவே மனதுக்கு இதமாக இருந்தது. என்னைவிட என் மனைவிக்குத்தான் ஆச்சர்யம் அதிகம். என் நண்பரின் மனைவியிடம், நிகழ்ச்சி முடிந்த பிறகு வெகுநேரம் அதுபற்றி பேசிக்கொண்டிருந்தாள்.

உடனே வீட்டுக்கு வந்ததும் பரணியில் கிடந்த பழைய பிளாஸ்டிக் சாமான்களை எல்லாம் எடுத்து தொட்டிச் செடிகளை வாங்கி வந்து வளர்க்க ஆரம்பித்தாள். தினம் தினம் புதிதாக ஏதாவது செய்து கொண்டே இருந்தாள். எனக்கே ஆச்சர்யம். ஆறே மாதங்களில் எங்கள் வீட்டினை ரம்மியமாக மாற்றிவிட்டாள். இன்னொரு முக்கியமான விஷயம், எங்கள் வீட்டு பட்ஜெட்டில் இப்போது மாதம் 400 முதல் 500 ரூபாய் வரை மிச்சம் ஆகிறது. தேவையான காய்கறிகளில் பாதி மொட்டைமாடி தோட்டத்தி லேயே கிடைத்துவிடுகிறதே. நேரம் ஒதுக்க முடிந்தவர்கள் இதுபோல செய்தால் வீடும் பசுமையாகும், பணமும் மிச்சப்படும்.

-சுந்தர், கோவை

உங்கள் அனுபவங்களையும் வாசகர் கார்னர் பகுதிக்கு எழுதலாம்... வாசகர் கார்னர், நாணயம் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை -600 002 மெயில் : navdesk@vikatan.com