?என் பிபிஎஃப் கணக்கு மூலம் எனக்கு ரூ.5 லட்சம் கிடைக்கும். இப்போது ரூ.10 லட்சம் வீட்டுக் கடன் உள்ளது. பிபிஎஃப் பணத்தில் வீட்டுக் கடனைச் செலுத்தலாமா அல்லது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா?

சிவகுமார், திருப்பூர்.

சா.பாரதிதாசன், நிதி ஆலோசகர்.

“அந்தப் பணத்தை வீட்டுக் கடனுக்கு செலுத்தி விடுவதே நல்லது. செலுத்தும் போது வங்கித் தரப்பில் இருந்து மாதத் தவணையை குறைக்கிறீர்களா அல்லது கடன் காலத்தை குறைக்கிறீர்களா என்று கேட்பார்கள். வீட்டுக் கடனுக்கு செலுத்த வேண்டிய மாதத் தவணையைக் குறைக்கலாம். அதாவது, இப்போது மாதம் 10,000 ரூபாய் செலுத்தினால், இனி ரூ.5,000 செலுத்தும் நிலையை ஏற்படுத்த லாம். மீதி 5,000 ரூபாயை எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.”

?எனது சொத்து, தாய் பத்திரத்தில் 1,044 சதுர அடி என உள்ளது. எங்கள் பாட்டி, அதனை எங்கள் அப்பா பெயரில் தான செட்டில்மென்டாக எழுதி வைத்தார். பின்னர் பிழைத் திருத்த பத்திரம் மூலம் 1,044 சதுர அடியை 780-ஆக மாற்றியுள்ளனர். ஆனால், 1044 சதுர அடி எங்களுக்கு உள்ளது என தெரிகிறது. மீண்டும் அதனை மாற்ற முடியுமா?

வெற்றிச் செல்வன், மதுரை.

வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்.

“தான செட்டில்மென்ட் செய்தவர் தற்போது உயிருடன் இருந்தால், மீண்டும் பிழைத் திருத்த பத்திரம் மூலம் 1,044 சதுர அடியை பத்திரப் பதிவு செய்யலாம். மேலும், பட்டாவில் எவ்வளவு சதுர அடி உள்ளது என்று பார்க்க வேண்டும். மேலும், விஏஓவிடமிருந்து ‘ஏ’ பதிவேட்டின் மூலமாகவும், எஃப்எம்பி நில அளவு வரைபடம் மூலமாகவும் அறியலாம். தற்போது மறுபடியும் பிழைத் திருத்த பத்திரம் பதியும்போது பதிவுத் துறைக்கு உங்களுக்கு இந்தத் சொத்தில் இருக்கும் உரிமையை நிலைநாட்ட வேண்டி வரும்’’.

?என் பிபிஎஃப் கணக்கில் ரூ.10 லட்சம் உள்ளது. இதனை மியூச்சுவல் ஃபண்டில் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்புகிறேன். வழிகாட்டவும். அதிக ரிஸ்க் எடுக்கவும் தயார்.?

தாமோதரன், கன்னியாகுமரி.

ராம.பெரியண்ணன், நிதி ஆலோசகர்.

“உங்களுக்கு இப்போது என்ன வயது என்பதை நீங்கள் சொல்ல வில்லை. நீங்கள் ரிஸ்க் எடுக்கத் தயார் என்று சொல்வதை வைத்துப் பார்க்கும்போது, நீங்கள் இளவயதினராக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ், ரிலையன்ஸ் ஸ்மால் அண்ட் மிட் கேப் ஃபண்ட், யூடிஐ டிரான்ஸ்போர்ட் அண்ட் லாஜிஸ்டிக் ஃபண்ட், ஐசிஐசிஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டுகளில் குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்யவும். இந்த ஃபண்டுகளில் 10 வருடங்களுக்கு முதலீட்டைத் தொடரும்பட்சத்தில் ஆண்டுக்கு 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.’’

?என் வயது 30. ஐந்து ஆண்டுகளுக்குப் பின் சம்பளம் தவிர்த்து, ஒவ்வொரு மாதமும் ரூ.20,000 கிடைக்க, நான் என்ன செய்யவேண்டும்? நான் அதிக ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை.

பரணி, கோவை

கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர், மதுரை

‘‘ஒவ்வொரு மாதமும் ரூ.20,000 உங்களுக்குக் கிடைக்க வேண்டும் எனில், வருடத்துக்கு ரூ.2,40,000 கிடைக்கவேண்டும். இதற்கு ஐந்து வருடங்கள் கழித்து, தங்களிடம் ரூ.30 முதல் 35 லட்சம் வரை தொகுப்பு நிதி இருக்கவேண்டும்.

நீங்கள் அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை என்பதால், ரூ.5 லட்சம் வீதம் நான்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் - நல்ல செயல்பாடு உள்ள இன்கம் ஃபண்ட் (ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாங் டேர்ம் பிளான்), பேலன்ஸ்டு ஃபண்ட் (ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்ட்), மன்த்லி இன்கம் பிளான் (பிர்லா சன் லைஃப் மன்த்லி இன்கம் பிளான் II - வெல்த் 25 பிளான்) மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட் (ஃப்ராங்க்ளின் இந்தியா அல்ட்ரா ஷார்ட் பாண்ட் பண்ட் ) போன்றவற்றில் பிரித்து, மொத்தம் ரூ.20 லட்சங்கள் முதலீடு செய்யவேண்டும். நீண்ட கால முதலீடு என்பதால், இந்த ஃபண்ட்களில் குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்யவும். ஆண்டுக்கு ஒரு முறை, ஃபண்ட் செயல்பாடுகளைக் கவனித்து, தேவை எனில் மாற்றம் செய்யவும். 5 வருடங்கள் கழித்து, நான்கு ஃபண்டுகளில் இருந்து, ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 வீதம், மொத்தம் ரூ.20,000 சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் பிளான் (SWP) மூலம் பணம் எடுக்கலாம்.”

?நான் பங்குச் சந்தையில் குறுகிய கால மூலதன ஆதாய மாக ரூ.2.2 லட்சம் லாபம் ஈட்டினேன். இதுமட்டுமின்றி, ஃபிக்ஸட் டெபாசிட் மூலமாக ரூ.20,000, டிவிடெண்ட் மூலமாக ரூ.5,000 லாபம் ஈட்டினேன். இதற்கு நான் வருமான வரி செலுத்த வேண்டுமா?

பரசுராம், மதுரை,

ஈ.எஸ்.முருகானந்தம், ஆடிட்டர்.

“ஒரு நபரின் மொத்த வருமானத்துக்கு ரூ.2.50 லட்சம் வரை வரி விலக்கு உள்ளதால், உங்கள் கேள்வியின்படி, அனைத்து வருமானமும் சேர்த்து ரூ.2.50 லட்சத்துக்குள் வருவதால், நீங்கள் வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை. அதேசமயத்தில், உங்களது இதர வருமானம், பிக்ஸட் டெபாசிட் வட்டி உட்பட ரூ.2.50 லட்சத்துக்கு மேல் இருக்கும் பட்சத்தில் அந்த வருமானத்துக்கு அடிப்படை வரி விகிதாசார அடிப்படையில் தனியாகவும், பங்கு விற்பனை மூலமான குறுகிய கால மூலதன ஆதாயத்துக்குத் தனியாக 15.45% வரியும் செலுத்த வேண்டும். டிவிடெண்ட் வருமானத்துக்கு ரூ.10 லட்சம் வரை வரி விலக்கு உள்ளது.”

உங்கள் எண்ணங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!

facebook.com/naanayamvikatan

twitter.com/nanayamvikatan

எவ்வித கட்டணமும் இல்லாமல் ஏராளமான தகவல்களைப் படித்து பயன்பெறுங்கள்!

nanayam.vikatan.com

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044 - 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள்.

எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.