Published:Updated:

ராகேஷ் ஜீன்ஜீன்வாலா... இந்தியாவின் பஃபெட்!

ராகேஷ் ஜீன்ஜீன்வாலா... இந்தியாவின் பஃபெட்!
பிரீமியம் ஸ்டோரி
ராகேஷ் ஜீன்ஜீன்வாலா... இந்தியாவின் பஃபெட்!

ஜெ.சரவணன்

ராகேஷ் ஜீன்ஜீன்வாலா... இந்தியாவின் பஃபெட்!

ஜெ.சரவணன்

Published:Updated:
ராகேஷ் ஜீன்ஜீன்வாலா... இந்தியாவின் பஃபெட்!
பிரீமியம் ஸ்டோரி
ராகேஷ் ஜீன்ஜீன்வாலா... இந்தியாவின் பஃபெட்!
ராகேஷ் ஜீன்ஜீன்வாலா... இந்தியாவின் பஃபெட்!

ந்தியாவின் வாரன் பஃபெட் என பங்குச் சந்தை முதலீட்டாளர்களால் புகழப்படுபவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. இவர் எந்தப் பங்குகளை வாங்குகிறார், எந்தப் பங்குகளை விற்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள லட்சக் கணக்கான முதலீட்டாளர்கள் இவரை ஃபாலோ செய்கிறார்கள். அவரைப் பற்றி 10 விஷயங்கள் இதோ.

1. மிடில் கிளாஸ் டு மில்லியனர்!

1960-ல் மும்பையில் பிறந்தார் ராகேஷ். அவருடைய அப்பா வருமான வரித்துறை அதிகாரி. நடுத்தரக் குடும்பம். படித்தது, சார்ட்டட் அக்கவுன்டன்ட். இன்று இவர் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் 53-வது நபராக இருக்கிறார். அவருடைய சொத்துக்களின் இன்றைய (22.11.16) மதிப்பு சுமார் 1.9 பில்லியன் டாலர். இந்திய ரூபாயில் கிட்டதட்ட ரூ.13,500 கோடி.

2. தந்தையிடமிருந்து கிடைத்த வரம்!

துறுதுறுவென்று இருந்த ஜுன்ஜுன்வாலா தனது தந்தையின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப்பார். பல வேலைகளைச் செய்யும் (மல்டி டாஸ்கிங் மைண்ட்) திறமை உடையவர். சிறு வயதில் அப்பாவுடன் குதிரைப் பந்தயத்தைப் பார்க்கப் போவார். சில பிசினஸ் மேன்களின் மகன்கள், தங்கள் தந்தையைக் கூர்ந்து கவனித்து பல விஷயங்களை சிறு வயதிலேயே கற்றுக்கொள்வதைப் போல, ராகேஷ் அவரது தந்தையிடம் இருந்துதான் பங்குச் சந்தையைப் பற்றித் தெரிந்துகொண்டார்.

பங்குச் சந்தை பற்றி பல கேள்விகளைக் கேட்டார். அவர் கேட்கும் ஒவ்வொன்றும் அவரை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. இந்த ஆர்வம்தான் இன்று அவரது சொத்தாக மாறியது. 

3. சந்தையில் கிடைத்த முதலீடு!

பள்ளிப் படிப்பை முடித்ததும் சிடென்ஹாம் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் ஐசிஏஐ கல்வி நிலையத்தில் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் படித்தார். சிஏ படித்து முடித்ததும் பங்குச் சந்தைக்குக் கிளம்பி விட்டார். அவர் முதன் முதலில் பங்குச் சந்தைக்குள் நுழையும்போது, பிஎஸ்இ சென்செக்ஸ் 150 புள்ளிகளில் இருந்தது. அப்போது வருடம் 1985. அவருக்கு வயது 25. அவர் கையில் முதலீடு செய்வதற்கு போதிய பணம் இல்லை. சிறிதளவு பணத்தை வைத்து,  வர்த்தகம் செய்து, தனக்கான முதலீட்டை சந்தையிலிருந்தே சம்பாதித்தார்.

4. லாபம் தந்த பங்குகள்!

ராகேஷ் ஜீன்ஜீன்வாலா... இந்தியாவின் பஃபெட்!பங்குச் சந்தை பற்றி முழுமையாகக் கற்றுக் கொள்ள ராகேஷுக்கு சார்ட்டட் அக்கவுன்டன்ட் படிப்பு மிகவும் உதவியது. ஏதோ ஒரு நிறுவனத்தில் ஆடிட்டராக ஆகியிருந்தால்கூட அவர் இந்த அளவுக்கு சம்பாதித்திருக்க முடியாது.

1986-ல் அவர் பங்குச் சந்தையில் பெரிய லாபத்தைப் பார்த்தார். அப்போது அவருக்குக் கிடைத்த லாபம் ரூ.5 லட்சம். அதற்கடுத்த மூன்று ஆண்டுகளில் 20 முதல் 25 லட்சம் ரூபாய் லாபமாக ஈட்டினார். அவருக்கு அதிக லாபம் தந்த முதல் பங்கு பங்கு டாடா டீ. 5000 டாடா டீ பங்குகளை ரூ.43-க்கு வாங்கியவர், மூன்று மாதத்தில் ரூ.143 என்ற விலையில் விற்றார்.

1986-1989-ம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் ரூ.20-25 லட்சம் சம்பாதித்தார். சேச கோவா என்ற இரும்பு சுரங்க நிறுவனப் பங்கில் அதிக லாபம் அடைந்தார். அந்தப் பங்குகள் 60 ரூபாயிலிருந்து 2,200 ரூபாய் வரையிலும் உயர்ந்தன. விலை உயர்ந்தபோதெல்லாம் விற்றுவிட்டு, இறங்கியபோதெல்லாம் வாங்கினார். இந்த அதிகபட்ச வருமானத்துக்குப் பிறகுதான் அவர் முதலீடுகளை அதிகரிக்கத் தொடங்கினார்.

5. நஷ்டம் சகஜமப்பா!  

யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல், ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கும் அவ்வப்போது நஷ்டம் வருவதுண்டு. 2008 பொருளாதார நெருக்கடி உருவான பிறகு, அடுத்தடுத்த ஆண்டு களில் அவர் வைத்திருந்த பங்குகள் நஷ்டமடைத் தொடங்கின. ஏறக்குறைய 30% வரை பங்குகள் விலை குறைந்தன.  2012-ல் அந்த நஷ்டத்திலிருந்து மீண்டு வந்தார். தான் செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டார்.

“வாழ்க்கையில் தவறுகள் நடப்பது சாதாரணம். ஆனால், அந்தத் தவறுகள் தரும் படிப்பினைகள்தான் வருங்கால வளர்ச்சிக்கான ஆற்றலை நமக்குத் தரும். அதனால் எந்தத் தோல்வியினாலும் துவண்டுவிடத் தேவையில்லை” என்பார். அந்த நஷ்டத்துக்குப் பிறகு, அவர் தனது போர்ட்ஃபோலியோவில் பங்குகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துக் கொண்டார். தரமான பங்குகளைத் தவிர, பிற பங்குகளை விற்று வெளியேறினார். அதன்பிறகு தனது போர்ட் ஃபோலியோவை மிகவும் கவனமாக நிர்வகித்து வருகிறார். 

6. ரூ.48, ரூ.700 - எது பெரிசு?

தங்கம், ரியல் எஸ்டேட் என பல முதலீடுகள் இருந்தாலும், பங்குச் சந்தைதான் ராகேஷுக்கு மிகவும் இஷ்டம். அவர் பங்குச் சந்தை தவிர வேறு எதிலும் முதலீடு செய்வதில்லை என அவரது நெருங்கிய உறவினர்கள் அடிக்கடி சொல்லவே, அவர்களின் ஆசையை நிறைவேற்றுகிற மாதிரி, 2004-ல் ரூ.27 கோடி மதிப்பிலான கிரிஸில் நிறுவனத்தின் பங்குகளை விற்று, கடற்கரையோரத்தில் அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்கினார். அந்த வீட்டை 10 வருடங்கள் கழித்து ரூ.48 கோடிக்கு விற்றார்.

‘‘ரூ.27 கோடிக்கு வாங்கி 10 வருடங்களில் ரூ.48 கோடிக்கு விற்றது நல்ல லாபம்தானே என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், நான் இந்த வீட்டை வாங்குவதற்காக, விற்ற கிரிஸில் பங்குகளை விற்காமல் இருந்திருந்தால், இந்தப் பத்து ஆண்டுகளில் எனக்கு ரூ.700 கோடி  வருமானமும், ரூ.50 கோடி டிவிடெண்டும் கிடைத்திருக்கும்’’ என்றார். 

7. முதலீட்டு வசீகரன்!

சந்தையின் போக்கை சரியாகக் கணிக்கும் அளவுக்கு பங்குச் சந்தை அவரது ரத்தத்தில் ஊறியது. கடந்த ஆண்டு அவர் கணித்ததன் படி, இந்தியப் பங்குச் சந்தை நன்றாக ஏற்றமடைந்தது. கிட்டதட்ட 44% ஏற்றமடைந்தது. இதற்காக அவரை ‘இந்தியப் பங்குச் சந்தையின் பைய்ட் பைப்பர் (Pied Piper)’ என்று குறிப்பிடுகிறார்கள். Pied Piper என்றால்...? மற்றவர்கள் நம்மை பின்பற்றக்கூடிய அளவுக்கு வசீகரம் கொண்டவர் என்று அர்த்தம். அந்த ஏற்றம் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கும் நல்ல வருமானத்தை ஈட்டித் தந்தது. போர்ப்ஸ் இதழின் இந்தியப் பணக்காரர் பட்டியலில் 2015-ல் 56-வது இடத்தில் இருந்த ராகேஷ், 2016-ல் 53-வது இடத்துக்கு முன்னேறினார். 2015-ல் வரியாக மட்டுமே ரூ.150 கோடியைச் செலுத்தினார்.

8. நோ டிப்ஸ், ப்ளீஸ்!

இவரது போர்ட்ஃபோலியோவில் அதிகபட்சமாக வருமானம் ஈட்டியவை அவர் அதிக நாட்கள் வைத்திருந்த பங்குகள்தான். அவற்றில் கிரிசில், டைட்டன், லூபின் ஆகியவற்றை அதிகபட்சமாக 10 ஆண்டுகள் தாண்டியும் வைத்திருக்கிறார். அவர் குறைந்தபட்சமாக ஒரு ஆண்டு வைத்திருக்கும் பங்குகள் சராசரியாக 9.23% வரை வருமானம் தரக்கூடியவையாக இருந்துள்ளன. 10 ஆண்டுகள் வரை வைத்திருக்கும் பங்குகள் 3,271.52% வருமானம் கொடுத்துள்ளன. அவற்றில் லூபின் (13,855.7%), கிரிஸில் (5,588.6%) மற்றும் டைட்டன்  (8,272%) வருமானம் கொடுத்துள்ளன. அவரின் விருப்பான துறைகள், பார்மா, ஐடி, கணினி, கட்டுமானத் துறை, ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிப்பாகங்கள். 

அவரிடம் பங்குகளைப் பரிந்துரைக்குமாறு கேட்டால் ஒரே பதில்தான் எப்போதும் வரும். “எந்த ஒரு பங்கையும் என்னால் பரிந்துரைக்க முடியாது. காரணம், இன்று நான் பரிந்துரைக்கும் பங்கு, நாளை எனக்கே மோசமானதாகத் தோன்றலாம். அப்போது நான் உங்களைத் தேடி வந்து இந்தப் பங்கை  வாங்கியிருந்தால் விற்று விடுங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்க முடியாது. எனவே, எந்தப் பங்கை வாங்குவது என்பது அவரவர் சொந்த முடிவாகவே இருக்க வேண்டும்” என்பார்.

9. கம்பெனிகளின் இயக்குநர்!

பல முன்னணி நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும், தலைவராக இருக்கிறார் ராகேஷ். அப்டெக் லிமிடெட் மற்றும் ஹங்கமா டிஜிட்டல் மீடியா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்களுக்குத் தலைவராக உள்ளார். பில்கேர் லிட், பிராஜ் இண்டஸ்ட்ரீஸ் லிட், புரோவோக் இந்தியா லிட் உள்பட பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

10. சினிமா படத் தயாரிப்பாளர்!


ராகேஷ், திரைப்படத் தயாரிப்பாளரும்கூட. ஸ்ரீதேவி நடித்த ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்,’ படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப் படம் ஜீ சினி அவார்ட்ஸ் விருதைப் பெற்றது. அமிதாப்பச்சன், தனுஷ் நடித்த ‘ஷமிதாப்’ படத்தை தயாரித்தவரும் இவர்தான். இந்த வருடத்தில் வெளியான ‘கி அண்ட் கா’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார். இன்னும் நிறைய சினிமாப் படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.