Published:Updated:

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 1

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 1
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 1

சுரேஷ் பார்த்தசாரதி Founder Myasstsconsolidation.com Registered investment advisor, INA200000878ஓவியம்: கோ.ராமமூர்த்திபுதிய தொடர்

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 1

சுரேஷ் பார்த்தசாரதி Founder Myasstsconsolidation.com Registered investment advisor, INA200000878ஓவியம்: கோ.ராமமூர்த்திபுதிய தொடர்

Published:Updated:
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 1
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 1
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 1

ம் எல்லோருக்குமே பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. அதற்காக கடுமையாக உழைக்கவும் செய்கிறோம். அப்படி உழைத்துக் கஷ்டப்பட்டவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் ஆகிவிட்டார்களா? நிச்சயம் இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலர் மட்டுமே ஆகியிருக்கிறார்கள்.

கஷ்டப்பட்டு உழைத்தவர்களால் ஏன் பணம் சேர்க்க முடியாமல் போகிறது? திட்டமிட்டதில் தவறா? தவறான திட்டத்தைத் தேர்வு செய்து விட்டார்களா? இப்படி பல நூறு கேள்விகள் எழத்தான் செய்கின்றன. பணக்காரர் ஆக என்ன செய்யவேண்டும் என்பதைவிட என்ன செய்யக் கூடாது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். கஷ்டப்பட்டு உழைக்கிறோம்; எதிர்கால மகிழ்ச்சிக்காக நிகழ்கால சந்தோஷங்களை தியாகம் செய்கிறோம். ஆனால், பணத்தை தவறான ஒன்றில் போட்டால், அது எப்படி ஒருவரை பணக்காரர் ஆக்கும்?

சிக்கல் இல்லாத சீரான வாழ்க்கைக்கு பணத்தை நிர்வாகம் செய்வதில் கில்லாடிகளாக இருக்க வேண்டும் என்பதில்லை. கொஞ்சம் கேள்வி ஞானம் இருந்தாலே போதும். ஒவ்வொரு தவறையும் நீங்களே செய்து, அதற்கான பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எத்தனையோ தவறுகளை செய்கிறார்கள். அந்தத் தவறிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொண்டாலே, எதிர்காலத்தில் அந்தத் தவறை செய்யாமல் தவிர்க்க முடியும் இல்லையா?

பணத்தை நிர்வாகம் செய்வதில் நாம் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறோம் என்பதற்கு இன்றைக்கு நம் கண் முன்னே பலரையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிரதமர் மோடி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தாலும் அறிவித்தார். பலரும் பல ஆயிரங்களை பீரோவிலுள்ள சேலைக்கடியில் இருந்தும், சமையலறை பானைகளில் இருந்தும் வெளியே எடுக்கிறார்கள். இவர்களைப் பார்த்தால், வேடிக்கையாக இருக்கிறது.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 1

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



பணத்தை வங்கிக் கணக்கில், ஆர்டியில் அல்லது எஃப்டியில் போட்டு வைப்பதை விட்டுவிட்டு, சேலைக்கடியில் போட்டு வைப்பதால் என்ன பயன்? வங்கியில் போட்டு வைத்திருக்கும் பணத்தை தேவையானபோது எடுத்துக்கொள்ளலாமே! வீடுகளில் இப்படி ஒளித்து வைக்கப்படும் பணம், வட்டி வருமானத்தை இழப்பதுடன், விலைவாசி உயர்வினால் மதிப்பையும் இழக்கிறது என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்?

அதுமட்டுமா, கிடைக்கும் பணத்தை எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு தங்கம், வீடு, மனையாக வாங்குகிறோம். இவற்றை மட்டும்தான் இந்த உலகத்தில் முதலீடா, இவைவிட சிறந்த முதலீடு என்று எதுவும் கிடையாதா, ஒரு முதலீட்டை சிறந்த முதலீடு என்று நாம் எப்படிச் சொல்கிறோம், அதற்கான அளவுகோல்கள் என்ன... இப்படிப்பட்ட கேள்விகளை நாம் கேட்பதும் இல்லை. அப்படியே கேட்டாலும் சரியான பதிலும் கிடைப்பதில்லை. நிதி சார்ந்த விஷயங்களில் தவறான முடிவுகளைத் தவிர்த்து, சரியான முடிவுகளை எடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த புதிய தொடர். கருணாகரன் செய்த தவறை எடுத்துச் சொல்வதன் மூலம் நாம் என்ன பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.

கருணாகரன் பெரிய நிறுவனம் ஒன்றில் அக்கவுன்ட்ஸ் பிரிவில் மேலாளராக இருக்கிறார். வயது 38. மாதம் ரூ.80 ஆயிரம் சம்பளம். சென்னை புறநகரில் சொந்தமாக வீடு இருக்கிறது. லோன் மூலம் காரும் வாங்கிவிட்டார். ஐந்து ஆண்டுகளுக்குமுன் என்னிடம் நிதித் திட்டமிடல் வேண்டுமென்று கேட்டு வாங்கிப் போனவர் இன்றைக்கு மீண்டும் வந்திருக்கிறார்.

நான் திட்டமிட்டுக் கொடுத்த எந்த விஷயத்தையும் அவர் செய்யவில்லை என்பதை விசாரித்துத் தெரிந்துகொண்டபோதே அவர் மீதிருந்த அக்கறை திடீரென்று காணாமல் போனது. சரி, இப்போது அவர் என்னைத் தேடி வரக் காரணம்..?

‘‘மறைமலை நகரில் என் நண்பர் ஒருவர் புதுசாக ஃப்ளாட் வாங்கினார். என்னையும் வாங்கச் சொன்னார். அவர் என் நெருங்கிய நண்பர் என்பதால்  ரூ.60 லட்சம் கடன் வாங்கி, ஃப்ளாட்டை வாங்கினேன். முன்பணத்துக்காக என் மனைவியின் நகைகளை அடமானம் வைத்தேன். இப்போது சம்பளத்தில் பெரும்பகுதி இஎம்ஐ செலுத்தவே போய்விடுகிறது. என்னால் இன்னும் நகையையும் மீட்க முடியவில்லை. புதிய வீட்டுக்கு வாடகை வருமானமும் பெரிதாக இல்லை. இதனால் குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ்கூட கட்ட முடியவில்லை. அவர்களை ஸ்டேட் போர்டு பள்ளிக்கு மாற்ற நினைத்தால், என் மனைவி சண்டை போடுகிறாள். 20,000 ரூபாய் சம்பளம் வாங்கும் என் உதவியாளர்கூட நிம்மதியாக இருக்கிறார். நான் மன உளைச்சலில் கஷ்டப்படுகிறேன்’’ என்று அழாத குறையாக புலம்பினார். பணத்தைக் கொடுத்து மருத்துவரிடம் ஆலோசனை வாங்கிவிட்டு, மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல் இஷ்டப்படி இருந்தால், எப்படி நோய் குணமாகும்? இனியாவது நான் சொல்கிற மாதிரி நடந்து கொள்வேன் என்று உறுதி அளித்தால், ஆலோசனை சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, அவருக்கான தீர்வைத் தந்தேன். அந்தத் தீர்வை உங்களுக்குச் சொல்லும் முன்பு அவர் செய்த தவறுகளை முதலில் சொல்கிறேன்.

கருணாகரன் செய்த முதல் தவறு, நான் சொன்ன நிதித் திட்டமிட கொஞ்சம்கூட பின்பற்றாமல் போனது. இரண்டாவது, குழந்தை களின் படிப்பு, திருமணம், அவரது ஓய்வுக்காலம் போன்ற எதிர்கால இலக்குகள் குறித்து கொஞ்சம்கூட யோசிக்காதது. மூன்றாவது, ரியல் எஸ்டேட்தான் மிகச் சிறந்த முதலீடு என்று நினைத்து, வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்கியது. அவர் செய்த தவறுகளைத் திருத்த வேண்டும் எனில் கொஞ்சம் கசப்பான மருந்து தந்துதான் ஆகவேண்டும். அந்த மருந்தை அவர் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. நான் அவரிடம் சொன்னேன்.

‘‘முதலில் நீங்கள் வாங்கிய வீட்டை விற்று விட்டு எல்லாக் கடன்களையும் அடைத்துவிடுங்கள். இந்த யோசனை உங்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் வேறு வழியில்லை. முதலீட்டில் தவறுகள் ஏற்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். அவற்றை திருத்திக்கொள்ள வேண்டியதே முக்கியம். நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களில் வருமானத்தில் 80% கடனை அடைப்பதற்கே செலவாகிவிட்டால், மற்ற செலவுகளுக்கு திண்டாடத்தான் வேண்டியிருக்கும். முக்கியமான இலக்குகளுக்கு முதலீடு செய்ய முடியாத நிலைக்கு ஆளாக்கிவிடும்.

பொதுவாக, ரியல் எஸ்டேட் முதலீடு ஆண்டுக்கு 10% வருமானம் தருவதாகவே வைத்துக்கொள்வோம். ஆனால், நீங்கள் 9.75% வட்டியில் வீட்டுக் கடனும், 12% வட்டியில் நகைக் கடனும் வாங்கி இருக்கிறீர்கள். ஒன்று, நீங்கள் சம்பாதிக்கும் வருமானம் வட்டி கட்டவே சரியாகப் போகிறது. அல்லது வருமானத்தைவிட அதிகமாக வட்டி கட்டுகிறீர்கள். இப்போதுள்ள நிலையில், குறுகிய காலத்தில் ரியல் எஸ்டேட் பெரிய அளவில் கைகொடுக்காது. எனவே, யோசிக்காமல் புதிதாக வாங்கிய வீட்டினை விற்றுவிட்டு கடனை அடைத்து விடுங்கள். பிறகு மீதமுள்ள பணத்தை எதிர்கால முதலீட்டுக்காக ஒதுக்கலாம்’’ என்றேன்.

‘‘வீட்டை உடனே விற்று காசாக்க முடியாதே!’’ என்றார். ‘‘அதுதான் அந்த முதலீட்டின் பெரிய மைனஸ் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். நீண்ட காலம் வைத்திருக்கப் போவதில்லை எனில் வீடு, மனையில் முதலீடு செய்ய நிச்சயம் யோசிக்க வேண்டும்!’’ என்றபடி, இனிவரும் காலத்தில் அவருக்கான அஸெட் அலோகேஷனை உருவாக்கித் தந்தேன்.

கருணாகரன் செய்த தவறிலிருந்து நம்மால் நிறைய பாடங்களை கற்றுக்கொள்ள முடிகிறதல்லவா? இன்னும் சிலரது கதைகளை அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்.

(தீர்வுகள் தொடரும்)

வங்கிக்கு வராமல் போகும் ரூ. 2.18 லட்சம் கோடி!

ற்போது மத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுக்களைச் செல்லாது என அறிவித்து, கணக்கில் வராத பணத்துக்கு அபராதமும் விதித்துள்ளது. இதேபோல கடந்த 1978-ம் ஆண்டும் இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிக்க 1,000, 10,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டன.

கணக்கில் காட்டதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்கிற பயத்தில் இப்போது புழக்கத்திலிக்கும் ரூ.14.5 லட்சம் கோடியில் 15 சதவிகிதப் பணம், அதாவது 2.18 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு திரும்பி வர வாய்ப்பில்லை.

- சேனா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism