Published:Updated:

ஐடியா முதல் ஐபிஓ வரை!

ஐடியா முதல் ஐபிஓ வரை!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா முதல் ஐபிஓ வரை!

சித்தார்த்தன் சுந்தரம்

ஐடியா முதல் ஐபிஓ வரை!

சித்தார்த்தன் சுந்தரம்

Published:Updated:
ஐடியா முதல் ஐபிஓ வரை!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா முதல் ஐபிஓ வரை!

புத்தகத்தின் பெயர்: ஆந்த்ரப்ரனர்ஷிப் சிம்ப்ளிஃபைட் ஃப்ரம் ஐடியா டூ ஐபிஓ (Entrepreneurship Simplified From Idea to IPO)

ஆசிரியர்கள்: அசோக் சூட்டா, எஸ்.ஆர். கோபாலன்

பதிப்பகம்: பெங்குவின்

ந்தவொரு தொழிலும் யோசனை என்கிற `ஐடியா’வில்தான் ஆரம்பிக்கிறது. அதன்பிறகு நிறுவனம் ஒரு நிலைக்கு வந்தபின், `ஐபிஓ’ வை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கின்றன.

ஐடியா முதல் ஐபிஓ வரை!

`ஐடியா’விலிருந்து `ஐபிஓ’-வுக்கு ஒரு நிறுவனத்தை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து ேஹப்பியஸ்ட் மைண்ட்ஸ் (Happiest Minds)’ என்கிற நிறுவனத்தின் சேர்மன் அசோக் சூட்டாவும், `டான் கன்சல்ட்டிங் அண்ட் பிஸ்வொர்த் இண்டியா (Dawn Consulting and Bizworth India)’ என்கிற நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.ஆர் கோபாலனும் எழுதிய புத்தகம்தான், `ஆந்த்ரப்ரனர்ஷிப் சிம்ப்ளிஃபைட் ஃப்ரம் ஐடியா டு ஐபீஓ (Entrepreneurship   Simplified From Idea to IPO) என்கிற புத்தகம். 

ஐடியா முதல் ஐபிஓ வரை!`உங்களால் எளிதாக எதையும் விளக்க முடியவில்லையென்றால் நீங்கள் அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையென்றுதான் அர்த்தம்’ என ஐன்ஸ்டீனின் வாசகங்களுடன் புத்தகம் ஆரம்பிக்கிறது.

எந்தவொரு தொழிலும் `சரியான யோசனை’ என்கிற ஆரம்பப்புள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது. உங்களுடைய அந்த யோசனை, நுகர்வோர்களின் சிரமத்தைப் போக்குவதாகவோ அல்லது வழமையிலிருந்து மாறுபட்டதாகவோ இருந்தால் அந்த தொழில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒரே ஒரு யோசனையை மட்டும் வைத்துக்கொண்டு தொழிலை ஆரம்பிப்பதைவிட இரண்டு, மூன்று யோசனைகளைக் கைவசம் வைத்திருப்பது நல்லது. ஒரு யோசனையை தெரிவு செய்து அது தொடர்பான தொழிலை ஆரம்பிப்பதற்கு முன்பு, அந்தத் துறை குறித்தத் தகவல்களைச் சேகரிப்பது முக்கிய மானதாகும்.

நீங்கள் ஆரம்பிக்கும் நிறுவனம் வித்தியாசமாக இருக் கிற அதே நேரத்தில்,  தொழிலில் நுழைவதற்கான `நேரம்’ மிகவும் முக்கியம். உதாரணமாக, போதுமான அலைவரிசைக் கட்டமைப்பு (Broadband infrastructure) இல்லாதபோது 1990-களின் இறுதியில், `ஃபேப்மார்ட்’ (FabMart) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட `ஆன்லைன்’ ஸ்டோர், சில ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தது. ஆனால், இன்றைக்கோ ஆன்லைன் வணிகம் `சக்கைப் போடு’ போடு கிறது. எனவே, எந்தவொரு தொழிலுக்கும் நேரம் என்பது முக்கியமாகும்.

ஐடியா முதல் ஐபிஓ வரை!

சரி, யோசனையை முடிவு செய்தபின் நிறுவனத்துக்கான முதலீட்டை எப்படித் திரட்டுவது? `பூட்ஸ்ட்ராபிங் (Bootstrapping)’ என அழைக்கப்படும் தங்களிடம் இருக்கும் பணத்தை முதலீடு செய்வது, ஏஞ்சல் முதலீட்டாளர்களை அணுகி முதலீடுபெறுவது, துணிகர முதலீட்டாளர்களை (venture capitalists) அணுகி தொழிலுக்குத் தேவையான நிதியைப் பெறுவது, பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களை அணுகுவது என பல முறைகளில் நிதி திரட்ட முடியும்.

இந்த முறைகளில் நிறைகளும், குறைகளும் இருக்கின்றன. தங்களிடமிருந்த சேமிப்பை முதலீடாகப் போட்டு ஆரம்பித்த `SignEasy, Zoho, Fusioncharts’ போன்ற நிறுவனங்கள் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கின்றன. ஆனால், இந்த அதிர்ஷ்டம் எல்லா நிறுவனங்களுக்கும் கிடைப்பதில்லை. ஏஞ்சல் முதலீட்டாளர்கள், 1 மில்லியன் டாலருக்கு மேல் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வ தில்லை. துணிகர முதலீட்டாளர் களிடமிருந்து முதலீடு பெறுவது பல வகைகளில் நன்மை அளிப்பதுடன், நிறுவன வளர்ச்சிக்கான யோசனைகளையும் அவர்களிடமிருந்து பெற முடியும்.

வென்சர் கேப்பிட்டல்  நிறுவனம் மூன்று காரணிகளின் அடிப்படை யில்தான் முதலீடு செய்யவிருக்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும். அவை,  1. யோசனை, 2. அந்த தொழில் சார்ந்த சந்தை நிலவரம் 3. நிறுவனத்தை வழிநடத்திச் செல்லக்கூடிய குழு. அதுபோல அவர்கள் எப்போது முதலீடு செய்யவேண்டும், எப்போது அதிலிருந்து வெளியேற வேண்டும் என்பதையும் தீர்மானம் செய்து கொள்வார்கள். தொழில்முனைவு என்பது தொழில்முனைவோரும், முதலீட்டாளரும் சேர்ந்து ஒரு நிறுவனத்தின் மதிப்பை உருவாக்குவதே. தொழில்முனைவு என்கிற பயணத்தில், வென்ச்சர் கேப்பிட்டல்  நிறுவனத்துடனான உறவு மிகவும் முக்கியமானது.
 
யோசனையைத் தெரிவு செய்தபின், எந்தவிதமான முதலீட்டைப் பெறுவது என்பதை தீர்மானித்தபின், நிறுவனத்துக்கான  குறிக்கோள் (Mission), தொலைநோக்கு (Vision), பண்புகள் (Values), பண்பாடு (Culture) ஆகியவற்றை நிர்ணயிக்க வேண்டும். அப்படி தீர்மானிக்கப்படும் அனைத்தும், அந்த நிறுவனத்தோடு தொடர்புடைய அனைவருக்கும் எளிதாகப் புரியுமாறு இருக்க வேண்டும். உதாரணமாக, ஆப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனத்தின் மிேஹன் மற்றும் வேல்யூஸ்
Mission: Happiest People, Happiest Customers

Values: Sharing, Mindful, Integrity, Learning, Excellence, Social Responsibility (SMILES)

இதுபோல அவர்கள் தங்களுடைய ஐந்து வருடத்துக்கான தொலைநோக்குத் திட்டத்தையும் தீர்மானித்துக் கொண்டனர்.

இந்த நிறுவனத்தில் ஏதாவது ஒரு பிரிவு சிறப்பான முறையில் செயல்பட்டு, தங்களது இலக்கைத் தொடும்பட்சத்தில் அந்தப் பிரிவின் பேரில் பள்ளி செல்லும் ஏழைக் குழந்தைகளுக்கு `மதிய உணவு திட்ட’த்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படும். நிறுவனம் ஆரம்பித்ததி லிருந்து இதுவரை அவர்கள் 6,90,000 குழந்தைகளுக்கு மதியச் சாப்பாடு  வழங்கி இருக்கின்றனர்.

ஐடியா முதல் ஐபிஓ வரை!

அதுபோல, தங்களது நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு அது ஒரு `சிறந்த நிறுவனமாக’ இருக்க வேண்டும் என்பதற்காக பலவிதமான திட்டங்களையும் முன்னெடுத்து `க்ரேட் ப்ளேசஸ் டு ஒர்க்’ என்கிற ஆய்விலும் ஆண்டுதோறும் பங்கெடுத்து வருகிறது. இவையெல்லாம் ஒரு நிறுவனத்தின் மதிப்பை தொழில்துறையில் அதிகரிக்க உதவி செய்யும்.

ஒரு நிறுவனத்தை புதிதாக ஆரம்பிக்கும்போது அதன் நிறுவனர்கள் ஒன்றாகப் படித்தவர்களாகவோ அல்லது ஒரே நிறுவனத்தில் வேலை செய்தவர்களாகவோ இருப்பார்கள். எனவே, அவர்களுடைய சிந்தனையும் ஒன்று போலவே இருக்கும். இதைவிட அவர்களின் சிந்தனைகள் ஒருவருக்கொருவர் வித்தியாசமாக இருந்தால், அது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும்.

நிறுவனம் ஆரம்பிக்கும்போதே நிறுவனக் கட்டமைப்பையும் (Organization Structure) வரையறுத்துக் கொள்வது நல்லது. அதாவது, யார் சிஇஓ, சிஓஓ–வாக இருப்பது, ஒவ்வொருக்குமான பொறுப்புகள் என்னென்ன என்பதையும் தெளிவாக வரையறுத்துக் கொள்வதோடு, திறமையானவர்களைத் தேர்ந்தெடுப்பது, நிறுவனத்துக்கான இயக்குநர் குழுவை உருவாக்குவது என பல முக்கியமான செயல்பாடுகளையும் சிறந்த முறையில் வடிவமைக்க வேண்டும்.
 
அடுத்து ‘பிசினஸ் ஸ்ட்ராடஜி’ என்கிற  தொழில் உத்தி. ஸ்டார்ட்-அப் ஸ்ட்ராடஜி, ஸ்கேல்-அப் ஸ்ட்ராடஜி, போட்டியாளர் களை எதிர்த்துப் போட்டியிடும் உத்தி, நேரிடர்களை (risks) குறைத்துக் கொள்வதற்கான உத்தி, மற்ற நிறுவனங்களைக் கையகப்படுத்து வதற்காக உத்தி என பல உத்திகளை தங்களது அனுபவத்தின் அடிப்படையில் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். குறிப்பாக, வாடிக்கையாளர்களைக் கவர வேண்டுமென்பதற்கான உற்பத்தி விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு விற்பது அல்லது சேவையை வழங்குவது என்பது தற்கொலைக்குச் சமானம் என்கிறார்கள் நூலாசிரியர்கள்.

அடுத்து மார்க்கெட்டிங் ஸ்ட்ராடஜி. பிராண்ட் உருவாக்கம் என்பது நிறுவனத்தின் பெயரில் இருந்து ஆரம்பிக்கிறது. அது சுவராஸ்யமாகவும், எளிதில் நினைவு வைத்துக்கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும். சிறந்த விளம்பரம் எதுவெனில், இலவச விளம்பரம்தான். அதாவது, ஊடகத்தில் நிறுவனம் பற்றி வெளிவரும் செய்திகள், வாடிக்கையாளர்களின் நற்சான்றிதழ் போன்றவற்றுக்கு சந்தையில் அதிக மதிப்புண்டு நிறுவனம், சம்பந்தப்பட்டவர்கள் இடையே நம்பிக்கையை உருவாக்குவது மிகவும் முக்கியமான காரியமாகும்.

அடுத்து சொத்து உருவாக்கமும், பங்கீடும். பகிர்வதற்கு முன்பாக நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். நிறுவனம் நன்றாக செயல்பட்டால், அதற்காகவே காத்திருக்கும் வென்சர் கேப்பிட்டல்  நிறுவனங்கள், தங்களது பங்குகளை விற்று தங்களது முதலீட்டுக்கும் அதிகமாக சம்பாதித்து அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்.  எனவே பணியாளர்களுக்கு நிறுவனத்தின் பங்குகளைத் தருவதன் மூலம் அவர்களையும் செல்வந்தர்கள் ஆக்கலாம்.

அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்கள் 16.67% முதல் 20% வரையிலான பங்குகளை, நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்குக் கொடுப்பதெற்கென்று ஒதுக்கீடு செய்கின்றன. இந்தியாவில் இந்த சதவிகிதம் மிகவும் குறைவாகும். பணியாளர் களிடையேயான சொத்து உருவாக்கத்துக்கு சிறந்த உதாரணம் இன்ஃபோசிஸ் நிறுவனமாகும்.

அடுத்து, ஐபிஓ. நாம் ஒரு காரியத்துக்காக காத்திருப்பது என்பது நமக்கு உற்சாகம் அளிக்கக் கூடிய ஒன்றாகும். ஒரு தொழில் முனைவோருக்கு உற்சாகமான தருணம் என்பது அவரது நிறுவனம், பங்குச் சந்தையில் பட்டியிலிடப்படுவதுதான். ஐபிஓ செல்வதற்கானத் திட்டமிடலை பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை, நிறுவனங்கள் சட்டப்படி 49-ம் பிரிவுக்கு முழுவதும் இணக்கமாக இருந்தால்தான் ஐபிஓ பற்றி சிந்திக்கலாம். ஐபிஓ–வுக்கு 12 அல்லது 18 மாதங்களுக்கு முன்பாக இயக்குநர் குழுவை (Board of Directors) திருத்தி அமைக்க வேண்டும்.  ஐபிஓ–வுக்குப் பிறகு நீங்கள் அதிக கண்காணிப்புக் கும் ஆய்வுக்கும் உட்பட வேண்டியிருக்கும்.

வெற்றிகரமான ஐபிஓ என்பது நூலாசிரியர் களைப் பொறுத்தவரையில், ஏற்கெனவே முதலீட் டாளர்களாக இருப்பவர்களுக்கு, மூன்றாண்டு காலத்தில், ஆரம்ப விலையைவிட நான்கு அல்லது ஐந்து மடங்கும், புதிய முதலீட்டாளர்களுக்கு அந்தத் தொழிலைச் சேர்ந்த நிறுவனங்களின் சராசரியைவிட 10% அதிகமாகவும்  `ரிட்டர்ன்’ இருக்கவேண்டும். `தோல்வி என்பது நமது ஆசிரியரே ஒழிய, ஈமச்சடங்கு செய்பவர் இல்லை; தோல்வி என்பது தாமதம்தானே ஒழிய, வீழ்ச்சி இல்லை. இது தற்காலிகமானதுதானே ஒழிய முடிவு இல்லை’ என்கிறார் டெனிஸ் வெயிட்லே.

 இந்தப் புத்தகம், தொழில்முனைவோர்களின் முயற்சியில் தோல்வியைக் குறைத்து வெற்றியை அதிகரிக்க உதவும் நோக்கத்தைக் கொண்டு எளிமையான முறையில் அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டு இருக்கிறது. தோல்வியும் வெற்றியும் அலைக் கற்றையின் இரண்டு முனைகள் ஆகும். வெற்றிகரமான முயற்சி என்பது முதலீட்டின் மீது பெறப்படும் ஆதாயம் மட்டுமில்லை; மாறாக, சிறப்பான செயல்பாடு என்கிற அடித்தளத்தின் உதவி கொண்டு உருவாக்கப்படும் நிறுவனம் ஆகும்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும், அந்த அத்தியாயத்தில் பேசப்பட்ட கருத்துகளின் சாரம்சத்தைத் தந்திருப்பதும், புத்தகத்தின் இறுதியில் தொழில்முனைவு, தொடக்கநிலை வணிகம் குறித்த கலைச் சொற்களை விளக்கத்துடன் தந்திருப்பதும் கூடுதல் சிறப்பு.