Published:Updated:

பிசினஸ்கள் பலவிதம்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 2

பிசினஸ்கள் பலவிதம்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 2
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ்கள் பலவிதம்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 2

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன் - மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

பிசினஸ்கள் பலவிதம்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 2

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன் - மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

Published:Updated:
பிசினஸ்கள் பலவிதம்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 2
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ்கள் பலவிதம்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 2
பிசினஸ்கள் பலவிதம்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 2

பிசினஸ்மேனாக ஆவதற்கு மனதளவில் தயாராவது மிகவும் அவசியம் என சென்ற வாரம் சொல்லி இருந்தேன். பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தொடர்ந்து உங்கள் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு இருந்தால், நீங்கள் மனதளவில் தயாராகிவிட்டீர்கள் என்றே அர்த்தம். சரி, அடுத்து என்ன?

ஜாக் மாவைப் பாருங்கள்!

பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு என்ன பிசினஸ் செய்வது என்பதில் மிகப் பெரிய குழப்பம் ஏற்படும். ‘தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்’ என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், அது முற்றிலும் உண்மை என்று சொல்ல முடியாது. ஏனெனில் அனுபவமில்லாத முற்றிலும் புதிய தொழில்களில் இறங்கி பெரும் சாதனை படைத்த பலரும் இந்த உலகத்தில் உதாரண புருஷர்களாக இருக்கவே செய்கிறார்கள்.

உதாரணமாக, ஜாக் மா-வைச் சொல்லாலாம். இவருக்கு ஆங்கிலம் தெரியாது. முன்பின் பிசினஸ் செய்த அனுபவம் இல்லை. வேலை தேடிக் கடைகடையாக அலைந்தார். ஆனால், இன்று அவரது அலிபாபா நிறுவனம், உலகம் முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங் பிசினஸில் கொடிகட்டிப் பறக்கிறது.

அவர் செய்ததெல்லாம் ஒன்றுதான். திறந்த மனதுடன் சந்தையை அணுகினார். அவருக்குள் இருந்த தேடல் அவருக்கு பிசினஸுக்கான வழியைக் காண்பித்தது.

அதேநேரம், பிசினஸை வளர்ப்பதற்கான திறனையும் அறிவையும் வளர்த்துக்கொள்ள தன்னை ஒரு மாணவனாக மாற்றிக்கொண்டார். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்துவிடுவதில்லை. எனக்கு ஒன்றும் தெரியவில்லையே என்று முயற்சிக்காமல் இருந்துவிடக் கூடாது. எந்த உயரத்துக்குப் போனாலும் கற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருந்தால், கற்றுக் கொடுக்க இந்த உலகமே காத்திருக்கிறது.

உங்களுக்காகக் காத்திருக்கும் சந்தை!

பிசினஸ்கள் பலவிதம்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!உங்கள் முன்னே விரிந்து கிடக்கும் சந்தை, பிசினஸ் மேனாக விரும்பும் உங்களுக்கு பல்வேறு வாய்ப்புகளுடன் காத்திருக்கிறது. உங்கள் மனதைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். சந்தையைக் கூர்ந்து கவனியுங்கள். வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அவற்றில் உங்களுக்குத் தேவையானதை நீங்கள் நிச்சயம் கண்டடைவீர்கள்.

இப்போது சந்தையில் என்னென்ன தொழில்கள் உள்ளன, அவற்றில் எதை நீங்கள் தேர்ந்தெடுப்பது என்பதைப் பற்றி பார்க்கலாம். ஏனெனில் சரியான  தொழிலை நாம் தேர்வு செய்தாலே போதும், நம் வெற்றியின் 50 சதவிகிதம் நிச்சயமாகிவிடும். 

உற்பத்தி (Manufactruing), வர்த்தகம் (Trading) மற்றும் சேவை (Service) ஆகிய துறைகள் உள்ளன. பெரும்பாலும் அனைத்து பிசினஸ்களும் இந்தத் துறைகளுக்குள் அடங்கிவிடும். இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள், நுகர்வுப் பொருட்கள் போன்றவை உற்பத்தித் துறையிலும், பேங்கிங், ஓட்டல், சுற்றுலா, மருத்துவம், ஆடிட்டிங் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் போன்றவை சேவைத் துறையிலும் அடங்குகின்றன.
வர்த்தகத்தில் பொருட்களை ஒருவரிடம் இருந்து வாங்கி இன்னொருவரிடம் விற்கும் அனைத்தும் அடங்கும். அது நேரடி வர்த்தகமாகவும் இருக்கலாம், ஆன்லைன் வர்த்தகமாகவும் இருக்கலாம்.

உற்பத்தித் துறை!


உற்பத்தித் துறையில் மிகப் பெரும் வாய்ப்புகள்  நமக்குக் காத்திருக்கின்றன. ஏனெனில் பெரும்பாலான பொருட்களை நாம் இறக்குமதிதான் செய்துகொண்டு இருக்கிறோம். 130 கோடி மக்கள் தொகைக் கொண்ட ஒரு நாடு இறக்குமதி நாடாக இருப்பது நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பெருமளவு தடுக்கிறது. இதற்காகவே ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைத் தீவிரமாக பிரதமர் மோடி முன்னெடுத்து வருகிறார். இதற்காக பெருமளவில் முதலீடு செய்ய அரசு தயாராக இருக்கிறது. எனவே, வாய்ப்புகளும் நிறையவே உள்ளன. 

உற்பத்தித் துறையில் பிசினஸ் செய்ய விரும்பினால், விவசாயமோ, இயந்திரமோ எந்தப் பொருளை உற்பத்தி செய்ய விரும்புகிறீர்களோ, அந்தப் பொருள், உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம், உபகரணங்களைக் கையாளும் அறிவு ஆகியவை அவசியம் தேவை. அல்லது இவை குறித்த அறிவும் அனுபவமும் கொண்ட நபர்களை வேலைக்கு வைக்கும் அளவுக்கு கையில் மூலதனம் இருக்க வேண்டும்.

சரி, பொருளை உற்பத்தி செய்து விட்டீர்கள். உற்பத்தி செய்த பொருளைத் தேடி வந்து வாங்குவார்கள் என்று காத்திருந்தால், காலம் முழுக்கக் காத்திருக்க வேண்டியதுதான். நீங்கள் யாருக்காக அந்தப் பொருளை உற்பத்தி செய்தீர் களோ, அவர்களைத் தேடி நீங்கள்தான் போக வேண்டும். வாடிக்கையாளர்களைக் கண்டு பிடிப்பதும், அவர்களிடம் உங்கள் தயாரிப்புகளை விற்பதும் ஒரு கலை. அதைப் பற்றி விரிவாகப் பின்பு பார்க்கலாம்.

விவசாயம் தனித்துறையாக எடுத்துக் கொள்ளப் பட்டாலும், அதனையும் உற்பத்தித் துறையாகவே எடுத்துக் கொள்ளலாம். விவசாயம் தற்போது பிசினஸாக உருவெடுக்கத் துவங்கியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாக விவசாயத் தில் ஈடுபடத் துவங்கியுள்ளன. இயற்கை விவசாயம் என்று சொல்லப்படும் ஆர்கானிக் விவசாயத்துக்கு மக்களிடையே மவுசு அதிகரித்து உள்ளது. இதனால் பெரும்பாலான படித்த இளைஞர்கள் விவசாயத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பிசினஸ்கள் பலவிதம்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 2

வர்த்தகம்!

பிசினஸ் செய்ய விரும்பும் பெரும்பாலானோர் தேர்வு செய்வது வர்த்தகம்தான். ஏனெனில் இதில் உற்பத்தி யாளரிடமிருந்து பொருட்களை வாங்கி வாடிக்கையாளரிடம் விற்பதுதான் வேலை. இது பலருக்கு எளிதாகவும் அதிக லாபம் தருவதாகவும் இருப்பதால் வர்த்தகம் அதாவது, டிரேடிங் செய்வதில் அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்குப் பணமும் வாடிக்கையாளர்களைப் பிடிக்க தேவையான முயற்சியும் இருந்தால் போதுமானது. தற்போது ஆன்லைன் வர்த்தகம் பரவலாக வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் வாய்ப்புகள் உள்ளன.

சேவைத் துறை!

தொழில்நுட்ப வளர்ச்சியும், நவீன யுகமும் சேவைத் துறையில் மிக விரைவாக பணம் சம்பாதிக்க தேவையான வழிகளைத் தனக்குள் வைத்திருக்கின்றன. பொருளை உற்பத்தி செய்பவருக்கும், பொருளை வாங்குபவருக்கும் இடையில் பாலமாக இருப்பதுதான் சேவைத் துறை.

சேவைத் துறையில் பல வகை பிசினஸ்கள் உள்ளன. தற்போது ஸ்மார்ட்போன் பயன்பாடும், இணையப் பயன்பாடும் அதிகரித்துவிட்டதால், சேவைத் துறையில் பிசினஸ் செய்வோர் களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதில் நீங்களும் ஒருவராக ஆக விரும்பினால், ஸ்மார்ட்போன், இணையம் மற்றும் ஆப் ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும், மக்களின் மனநிலை குறித்தும் தெரிந்திருக்க வேண்டும். மக்களின் தேவையும், மனநிலையும் மாறுவதற்கேற்ப நாமும் மாறிக்கொண்டே இருக்க வேண்டும்.

நீங்களும் உங்களது முன்னோடிகளும்!

மேற்கண்ட துறைகளில் கொடிகட்டிப் பறந்த முன்னோடிகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாமே அடிபட்டு அடிபட்டு கற்றுக் கொள்ள சில வருடங்கள் ஆகிறது என்றால், ஏற்கெனவே அடிபட்டு அனுபவப்பட்டு வெற்றி அடைந்த முன்னோடிகளைப் பற்றி தெரிந்து கொண்டால், சில மாதங்களில் நீங்கள் செய்யும் தொழிலின் சூட்சுமங்களைத் தெரிந்துகொள்ளலாம்.  சாதனை படைத்தவர்கள் மட்டுமல்ல, முன்பின் தெரியாதவர்கள்கூட நமக்கு சில விஷயங்களைக் கற்றுத் தருவார்கள். அதனால் நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு மாணவனாக எப்போதும் இருக்க முயற்சி செய்யுங்கள்.

எந்தத் துறை உங்களுக்குச் சரியாக இருக்கும், எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி முடிவு செய்யும்  முன் நீங்கள் உங்களைப் பற்றி முதலில் முழுதாகத் தெரிந்திருப்பது அவசியம். பிறரைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டும் நாம் நம்மைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று யோசிப்பதே இல்லை. 

நம்மை எப்படித் தெரிந்துகொள்வது? நம் பலம் என்ன, பலவீனம் என்ன? நம் திறமை என்ன?  அவற்றை நம்முடைய பிசினஸுக்கு எப்படி  பயன்படுத்துவது.? அடுத்த பகுதியில் ஒரு சோதனைப் பயிற்சியுடன் பார்க்கலாம்.

(ஜெயிக்கலாம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism