புத்தகத்தின் பெயர்: த பவர் ஆஃப் லெஸ்: த 6 எஸ்ஸென்சியல் புரடக்டிவிட்டி பிரின்சிபல்ஸ் தட் வில் சேஞ்ச் யுவர் லைஃப் (The Power of Less: The 6 Essential Productivity Principles That Will Change Your Life)

ஆசிரியர்: லியோ பாபெளட்டா (Leo Babauta)

பதிப்பகம்: HAY HOUSE PUBLISHING

புத்தகத்தின் நோக்கம்:

இன்றைய உலகத்தில் எல்லாமே நமக்கு அதிகமாக இருக்கவும் கிடைக்கவும் செய்கிறது. கடன் அதிகம், வேலை அதிகம், தகவல்கள் அதிகம் என அனைத்துமே அதிகமாக இருக்கிறது. இவற்றை வைத்துக்கொண்டு நாம் எதைச் சாதிக்கிறோம்?

நம்மில் சிலர் குடும்பத்தைக் கவனிப்பது இல்லை; ரிலாக்ஸாக இருப்பது இல்லை; உடல்நலம் பேணுவது இல்லை; சரியான உணவு சாப்பிடுவது இல்லை; சந்தோஷமாக இருப்பது என்பது இல்லவே இல்லை.
கிடைத்தற்கரிய மானுடப் பிறவியைப் பரப்பான வாழ்க்கைச் சூழலில் நாம் வீணடிக்கவே செய்கிறோம். இதை எப்படிச் சரிசெய்வது என்பதைச் சொல்வதுதான் புத்தகத்தின் நோக்கம்.

ஆறு கொள்கைகள்!

திருப்திகரமான வாழ்க்கையை வாழ நாம் சில கொள்கைகளை கொண்டிருக்க வேண்டும் என்கிறது இந்தப் புத்தகம். அந்தக் கொள்கைகள் இனி:

1. எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள்!

இதுதான், இவ்வளவுதான் என்ற எல்லைகளை வகுத்துக்கொண்டு செயல் படுவது முதல் கொள்கை. உதாரணமாக, ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளைப் பாருங்கள். கவிதை என்று எழுதினால் எக்கச் சக்கமான சொற்றொடர்களைப் போட்டு அலங்காரமாக எழுதலாம். அதேசமயம், ஹைக்கூ கவிதை எழுத நினைத்தால், குறைந்த வார்த்தைகளில் நிறைய அர்த்தங்களைச் சொல்ல வேண்டியிருக்கும். இன்றியமையாத அளவுக்குத் தேவையானதை மட்டுமே சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கும். அதேபோல்தான் வாழ்க்கையும். குறைந்த அளவை நிர்ணயம் செய்து கொண்டு செயல்பட பழகிக்கொள்ளுங்கள்.

2. இன்றியமையாத விஷயங்களை மட்டுமே செய்யுங்கள்!

உங்களுக்குத் தேவையானவற்றை இன்றியமையாத அளவுக்குச் சுருக்கிக் கொண்டால் என்னவாகும்? தேவைப்படும் அத்தனை விஷயங்களுமே குறைவாக இருக்கும். ஒரு செயலைச் செய்ய நினைக்கும் போது, இன்றியமையாத விஷயங்களை மட்டுமே செய்ய நினைத்தால், அது உங்களுடைய நேரத்தையும் எனர்ஜியையும் குறைவாகவே எடுத்துக்கொள்ளும். இந்த இரண்டு விஷயங்களே இந்தப் புத்தகத்தின் மூலக் கருவாகும்.

அது எப்படி இன்றியமையாத விஷயங்களை மட்டுமே செய்வது என்று கேட்கிறீர்களா?
ஒரு நாளைக்கு எத்தனை முறை இ-மெயில் செக் பண்ணுவீர்கள். நாளை முதல் ஒரு நாளுக்கு இரண்டு முறை மட்டுமே இ-மெயில் செக் செய்வேன். வந்த மெயில்களில் ஒரு நேரத்தில் முக்கியமான ஐந்து மெயில்களுக்கு மட்டுமே பதில் எழுதுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டால் எப்படி இருக்கும்? இதுவேதான் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றுக்கும். ஏகப்பட்ட நேரம் உங்களுடையதாகிவிடும் இல்லையா?

இது நடைமுறைக்கு சாத்தியமா என்று கேட்பீர்கள். பொதுவாக, மனித இனமே எல்லையில்லா வாழ்வுக்கே பழக்கப்பட்டு உள்ளதாக இருக்கிறது. கையில் காசிருந்தால் எல்லையில்லா ஷாப்பிங் போல. நிறைய விஷயங்களைச் செய்யவேண்டும் என்ற எல்லையில்லா ஆசைகள் நமக்கு இருக்கிறது. ஆனால், நேரமோ மிக மிகக் குறைவாக உள்ளது. அதனாலேயே, எல்லையை வகுக்க வேண்டியது கட்டாயமாகிறது. எல்லைகள் வகுக்கப் பட்டால், வாழ்க்கை சுலபமாகிவிடுகிறது. நம் கவனம் அதிகரிக்கிறது. எது முக்கியம் என்பதை மட்டுமே நாம் பார்க்க ஆரம்பிக்கிறோம். மற்றவர்களுக்கு நம்முடைய நேரத்தின் முக்கியத்துவம் குறிப்பால் உணர்த்தப் படுகிறது. இதனால் நேரம் மிச்சமாவதால், மிகவும் திறமையாக நம்மால் செயல்பட முடிகிறது.

எதிலெல்லாம் எல்லையை வகுக்க வேண்டும்? இ-மெயில், தினசரி வேலைகள், போன் பேசுதல், கையில் இருக்கும் புராஜெக்ட்கள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் குரூப், இன்டர்நெட்டில் உலாவுதல், உங்கள் டேபிளின் மேல் இருக்கும் பேப்பர்கள் என எல்லாவற்றுக்குமே!

எப்படி எல்லையை வகுப்பது? எல்லை வகுப்பதை சும்மா குத்துமதிப்பாக செய்ய முயலக் கூடாது. நம்முடைய முந்தைய அனுபவத்தை வைத்து இது முடியும், இது முடியாது, இது இத்தனைதான் முடியும் என எல்லாவற்றிலும் தெளிவான எல்லையை வகுத்துக் கொள்ளவேண்டும். பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை ஃபேஸ்புக் அப்டேட் போட்டு வந்தீர்கள் என்றால், நாள் ஒன்று பத்து தரம் என்று முதல் எல்லையை வகுத்துக் கொண்டு, பிற்பாடு அதிலிருந்து கணிசமாகக் குறைப்பது.

அதெல்லாம் சரி. எல்லை என்றால் என்ன? எனக்கு என்ன எல்லை? ஏன் எல்லை என்கிறீர்களா?

அதற்கும் பதில் உள்ளது இந்தப் புத்தகத்தில். உங்களுடைய குறிக்கோள் என்ன, எது உங்களுக்குப் பிடிக்கிறது, எது உங்களுக்கு முக்கியம், எது நிச்சயமாக உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும், அதில் எவையெல்லாம் நீண்ட நாட்களில் பலன் தரும், தேவை என்ன, ஆசை என்ன, எது தேவை இல்லாதது என்பதைப் பொறுத்தே எல்லைகள் வகுக்கப்பட வேண்டும். எல்லை என்பது ஒரு முறை வகுத்துவிட்டு, மாற்றவே முடியாமல் இருக்கும் ஒரு விஷயமல்ல. சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றங்களை அதில் செய்துகொள்ள வேண்டி இருக்கும்.

3. தேவையற்றவற்றை வெளியேற்றுவது!

மூன்றாவது முக்கியக் கொள்கை, தேவை யற்றவற்றை வெளியேற்றுவது. அலுவலகத்தில் நாம் சீரியஸாக வேலை பார்த்துக் கொண்டிருக்க, பொழுது போகாத நண்பர்கள் சிலர் அரட்டை அடிக்க நம்மைத் தேடி வந்தால், அவர்களுடன் பேசத் தொடங்கிவிடுவது. நாம் செய்யும் வேலையின் அவசியத்தை அவர்களிடம் நாசூக்காக எடுத்துச் சொன்னால், அவர்களே வெளியேறி விடுவார்கள். இதை செய்ய நாம் தயங்கும்போதுதான் நம் நேரம் வீணாகிறது.

4. இன்றியமையாத விஷயங்களில் மட்டும் கவனம்!

நான்காவது, கையில் இருக்கும் இன்றியமையாத விஷயங்களின் மீது மட்டும் கவனம் செலுத்துவது. கவனம் எப்படி இருக்கவேண்டும்? இலக்கின் மீது, நடப்பின் மீது, கையில் இருக்கும் செயலின் மீது, அதில் இருக்கும் பாசிட்டிவ்வான விஷயங்களின் மீது என பல்வேறு விஷயங்களின் மீது கவனம் இருத்தலே சிறந்ததொரு கவனமாகும்.

5. மாறிய செயல்பாட்டை பழக்கமாக்கிக் கொள்வது!

ஐந்தாவது முக்கிய கொள்கை, நம்முடைய இந்த மாறிய செயல்பாட்டை ஒரு பழக்கமாக ஆக்கிக்கொள்வது. எதையுமே ஒரு பழக்கமாக (ஹேபிட்) மாற்றிக் கொண்டால், அதில் சிரமங்கள் மிக மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் இந்த இன்றியமையாத வற்றை மட்டுமே கவனத்தில் கொள்வது என்பதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இதில் முக்கியம் என்னவென்றால், ஒரு நேரத்தில் ஒரே ஒரு பழக்கத்தை மட்டுமே கொண்டுவர முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுமொத்த திட்டமும் தோல்வியைத் தழுவும்.

6. படிப்படியாக மாறுவது!

ஆறாவது முக்கியக் கொள்கை, எந்த ஒரு பழக்கத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்கு கொண்டுவருவது. ஏனென்றால், நான் நாளை முதல் இன்றியமையாத விஷயங்களை மட்டுமே தேர்ந்தெடுத்துச் செய்வேன் என்று நீங்கள் வேண்டுமென்றால் ஒரே மூச்சில் முடிவெடுத்து விடலாம். ஆனால், வீடு, ஆபீஸ், நட்பு வட்டம் போன்றவற்றின் இடையேதான் நாம் குடித்தனம் நடத்தி வருகிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். அவர்களுக்கு உங்கள் திட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய வைத்தால் மட்டுமே உங்கள் திட்டம் வெற்றி பெறும். அதிலும் உங்கள் தலைமை அதிகாரிக்கோ அல்லது முதலாளிக்கோ இது புரியாவிட்டால் உங்கள் பாடு திண்டாட்டமாகி விடும். எனவே, பழக்கங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வாருங்கள் என்கிறது இந்தப் புத்தகம்.

யாருக்கு இந்தப் புத்தகம்?

பணிச்சுமையிலும், நேரமின்மையிலும் தவிப்பவர்களுக்கு வழி காட்டுகிறது இந்தப் புத்தகம்.

- நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)