Published:Updated:

இனி சரியான முதலீட்டு முடிவுகளை எடுப்போம்!

இனி சரியான முதலீட்டு முடிவுகளை எடுப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
இனி சரியான முதலீட்டு முடிவுகளை எடுப்போம்!

ஈரோடு, கோவையில் திரண்ட முதலீட்டாளர்கள்...மு.சா.கெளதமன், கோ.ப.இலக்கியா.

இனி சரியான முதலீட்டு முடிவுகளை எடுப்போம்!

ஈரோடு, கோவையில் திரண்ட முதலீட்டாளர்கள்...மு.சா.கெளதமன், கோ.ப.இலக்கியா.

Published:Updated:
இனி சரியான முதலீட்டு முடிவுகளை எடுப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
இனி சரியான முதலீட்டு முடிவுகளை எடுப்போம்!
இனி சரியான முதலீட்டு முடிவுகளை எடுப்போம்!

ஷ்டப்பட்டுத்தான் பணத்தை சம்பாதிக்கிறோம். அப்படி சம்பாதித்த பணத்தை சரியாக முதலீடு செய்து, பல மடங்காக பெருக்குகிறோமா என்றால் நம்மில் பலரும் அதைச் செய்வதே இல்லை. வருமானம் குறைவோ அல்லது அதிகமோ, எல்லோரும் தங்கள் பணத்தை எப்படி பெருக்க வேண்டும் என்பதை வாசகர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக நாணயம் விகடன், இன்டகிரேடட், என்.எஸ்.டி.எல், என்.எஸ்.இ, சிட்டி யூனியன் பேங்க் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஈரோடு (03.12.2016) மற்றும் கோவை (04.12.2016) ஆகிய நகரங்களில் ‘செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்’ என்கிற பெயரில் முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டங்களை நடத்தியது. 

அரசு ஊழியர்கள், பெண்கள், தொழில்முனை வோர்கள், முதலீடு செய்வோர், டிரேட் செய் பவர்கள் என பலதரபட்டவர்களும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய என்.எஸ்.டி.எல் உதவி மேலாளர் ஆரோக்கியராஜ், என்.எஸ்.டி.எல் நிறுவனம் குறித்தும், அந்த நிறுவனம் அளித்துவரும் டீமேட் சேவைகள் குறித்தும் விரிவாக விளக்கினார்.

ஈரோட்டில் ‘அஸெட் அலோகேஷன்’ என்ற தலைப்பில் பேசிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் பத்மநாபன், “ரிஸ்க் என்பது நம் எல்லோரது வாழ்கையிலும் இருக்கிறது. ஆனால், அந்த ரிஸ்க்கை நாம் எப்படி சாதுர்யமாக எடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். நிதி சார்ந்த முதலீடுகளில் என்ன ரிஸ்க் இருக்கிறது என்பது நமக்குத் தெளிவாக தெரிகிறது. அதனால்தான் அதில் முதலீடு செய்ய பயப்படுகி றோம். ஆனால், நிலம் மற்றும் தங்கத்தில் இதைவிடக் கூடுதல் ரிஸ்க் இருக்கவே செய்கிறது; அவற்றை நமக்கு யாரும் சொல்வதும் இல்லை; நாமும் கணக்கு போட்டுப் பார்த்து தெரிந்துகொள்வதும் இல்லை. இனியாவது அஸெட் அலோகேஷன் மூலம் இந்தத் தவறுகளைச் சரிசெய்து, நல்ல லாபம் தரும் ஒரு அட்டகாசமான போர்ட்ஃபோலியோவை அமைத்துக் கொள்வோம்” என்றார்.

இனி சரியான முதலீட்டு முடிவுகளை எடுப்போம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவரைத் தொடர்ந்து இன்டகிரேட்டட் நிறுவனத்தின் பொது மேலாளர் ரவிச்சந்திரன் பேசினார். “கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்கிற நமது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மிகவும் ஏற்றது. மியூச்சுவல் ஃபண்டில் பல விதங்களில், பல தரப்பட்ட ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஆனால், நிதித் துறை சார்ந்த விஷயங்கள் குறித்து பெரிய அளவில் தெரியாத சாதாரண மக்களுக்கு, மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வது நல்லது. உதாரணமாக, மாதம் 1,500 ரூபாய் என்று 30 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்து ஆண்டுக்கு 15% வருமானம் கிடைத்தால், 30 வருட முடிவில் நீங்களும் கோடீஸ்வரர்தான். இதுதான் கூட்டு வட்டி செய்யும் அதிசயம். கூட்டு வட்டியின் அவதாரம்தான் மியூச்சுவல் ஃபண்ட்’’ என்றார்.

லைஃப் இன்ஷூரன்ஸ் குறித்து இன்டகிரேட்டட் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர் குருராஜன், “நம் குடும்பம் நம் பணத்தில்தான் இயங்குகிறது என்றால், நாம்தான் நம் குடும்பத்துக்கு ‘மணி மேக்கிங்’ இயந்திரமாக இருக்கிறோம். இந்த இயந்திரத்துக்கும் இன்ஷூரன்ஸ் வேண்டும்தானே? நாம் வாங்கும் வாகனங்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கிறோம். அதன் உரிமையாளரான நமக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பதும் அவசியம்தானே! ஒரு  குடும்பத்தின் தலைவர் இல்லாத நிலையிலும் அந்தக் குடும்பம் அதேபோல இயங்க, ஒருவர் தனது ஆண்டு சம்பளத்தை போல 15 மடங்குக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியம்’’ என்றார்.

இனி சரியான முதலீட்டு முடிவுகளை எடுப்போம்!

கோவையில் ‘அஸெட் அலோகேஷன்’ பற்றி பேசிய நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி, “ஐந்தாம் வகுப்பில் சொல்லிக் கொடுத்த வட்டிக் கணக்கு சூத்திரங்களைக்கூட நம்மால் பயன்படுத்த முடியவில்லை. பலருக்கு தெரியவே இல்லை. இதை எல்லாம் சரிசெய்யத்தான் ‘அஸெட் அலோகேஷன்’ வந்திருக்கிறது. நம் உணர்வுகள் எப்போதும் நம் முதலீட்டு முடிவுகளை பாதிக்கக்கூடாது. அப்படி முதலீடுகளை பாதித்தால், தவறான முடிவுகளையே நாம் எடுப்போம். இந்த அஸெட் அலோகேஷனை பயன்படுத்தி, நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி நல்ல முடிவுகளை எடுப்போம்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாசகர்கள், ‘‘தவறான முதலீட்டு முடிவுகளை எடுத்து கஷ்டப்படுகிறோம். இனி சரியான முதலீட்டு முடிவுகளை எடுப்போம்’’ என்று சொன்னார்கள். கூட்டத்தை விட்டுச் செல்லும்போது அவர்கள் மனநிறைவுடன் வெளியேறினார்கள்.

படங்கள்: ரமேஷ் கந்தசாமி,  க.மணிவண்ணன்.