Published:Updated:

நீங்கள் வெற்றிகரமான தொழில் முனைவோரா?

நீங்கள் வெற்றிகரமான தொழில் முனைவோரா?
பிரீமியம் ஸ்டோரி
நீங்கள் வெற்றிகரமான தொழில் முனைவோரா?

நாணயம் லைப்ரரி!

நீங்கள் வெற்றிகரமான தொழில் முனைவோரா?

நாணயம் லைப்ரரி!

Published:Updated:
நீங்கள் வெற்றிகரமான தொழில் முனைவோரா?
பிரீமியம் ஸ்டோரி
நீங்கள் வெற்றிகரமான தொழில் முனைவோரா?

புத்தகத்தின் நோக்கம்!

ல்லோருக்கும் தொழில்முனைவோராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், நூற்றில் ஒரு வருக்கே அது சாத்தியமாகிறது. அலெக்ஸ் மெக்மில்லன் எழுதிய ‘பி எ பிரில்லியன்ட் என்டர்ப்ரனர்’ என்னும் புத்தகம் அதற்குப் பதில் சொல்கிறது.  ஒருவர் தொழில் முனைவோராவதைத் தடுப்பது எது? பணமில்லாமையா, ஐடியா இல்லாமையா என்று பார்த்தால், உறுதியாகத் தீர்மானிக்காததே காரணமாக இருக்கிறது.

நீங்கள் வெற்றிகரமான தொழில் முனைவோரா?

புத்தகத்தின் பெயர்: பி எ பிரில்லியன்ட் என்டர்ப்ரனர் (Be a Brilliant Entrepreneur)

ஆசிரியர்: Alex McMillan

பதிப்பாளர்: HODDER EDUCATION

இரண்டு நோக்கங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்கள் வெற்றிகரமான தொழில் முனைவோரா?

தொழில் முனைவில் பொதுவாக இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. ஒன்று, பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் தொழில் முனைவோராக மாறுவது. இரண்டாவது, ஒருவர் தனது  ஐடியாக் களையும் புதுமைகளையும் ஒரு துறையில் செயல்படுத்திக் காட்டுவதற்காக தொழில்முனை வோராக ஆவது. பெரும்பாலான தொழில்முனை வோர்கள் இந்த இரண்டு காரணங்களுக்காகவுமே தொழில்முனைவோர் ஆகின்றனர்.
 
இப்படி இரு நோக்கங்களுக்காகவும் ஒருவர் தொழில்முனைவோராக மாறுகிறார் என்றால் எப்போது அவர் வெற்றி பெறுகிறார்? அதிக பணம் சம்பாதிக்கும் தருணத்திலா அல்லது மனதிலிருக்கும் ஐடியாவை நினைத்தாற் போல் செயல்வடிவம் கொடுக்கும் தருணத்திலா?

தொழில்முனைவில் இரண்டு விதங்கள் இருக்கின்றன. 1. தன்னுள் இருக்கும் புதுமை படைத்தல் (இன்னோவேஷன்), கற்பனைத் திறன் (கிரியேட்டிவிட்டி), தீர்க்க தரிசனம் (போர்சைட்) போன்றவற்றுக்கான கமர்ஷியல் வாய்ப்பைக் கண்டுபிடித்து தொழில் செய்வது 2. எனக்கென்று  தனியாக ஐடியா எல்லாம் கிடையாது; எதிலெல்லாம் வாய்ப்பு இருக்கிறது என சுலபத்தில் என்னால் கண்டுபிடிக்க முடியும். அதை எல்லாம் உபயோகப்படுத்தி சம்பாதிப்பேன் என்று சொல்வது.

தொழில்முனைவோர்கள் பொதுவாக மற்றவர்கள் கண்ணுக்கும் புலப்படாத வாய்ப்பைக் கண்டறிய வல்லவராக இருக்கின்றனர் என்பதே உண்மையாகும். இதையெல்லாம் உபயோகித்து இவற்றைச் செய்தால், இவ்வளவு லாபம் பார்க்கலாம் என்று சுலபத்தில் கணக்குப்போடும் குணம் இவர்களிடத்தில் நிரம்பவே இருக்கும்.

எது தொழில்முனைவு?


பணியில் இருப்பவர்களிடமும் தொழில் முனை வோர்களிடமும் பின்வரும் கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள்.பணியில் இருக்கும் ஒரு எக்ஸிக்யூட்டிவிடம், ‘உங்கள் பணியை எப்படிப் பார்க்கிறீர்கள்?  பாதுகாப்பு, சொகுசு, சமூக அந்தஸ்து, புரஃபஷனல் அனுபவம், வீட்டுக் கடனை அடைக்க பணம் தரும் ஒரு வேலை, நல்ல பென்ஷன், நிறைய பயிற்சி,  விருப்பமான வேலை போன்ற பதில்களில் எவற்றைத் தேர்ந்தெடுப்பீர்கள்?’ என்று கேளுங்கள்.

அதே எக்ஸிக்யூட்டிவ்களை, ‘நீங்கள் தொழில் முனைவோரை எப்படி பார்க்கிறீர்கள்?’ என்று கேளுங்கள். அதற்கான பதிலாக, ‘பாதுகாப்பின்மை, வீட்டுக் கடனை அடைக்க முடியாதோ என்ற பயம், மிகவும் அபாயகரமானது, மாதம் பிறந்தால் டிங்டாங் என்று மணியடித்தாற்போல் சம்பளம் வராது, பலபேர் தோற்ற இடம், சுதந்திரம், எக்கச் சக்கமாக சம்பாதிக்க வாய்ப்பு, வேண்டுமென்றால், சீக்கிரமே ஓய்வு பெறலாம்’  என்கிற வாய்ப்பைத் தாருங்கள்.

இதேபோல், தொழில்முனை வோர்களிடம் சென்று ‘நீங்கள் ஒரு கார்ப்பரேட் எக்ஸிக்யூட்டிவ் பதவியை எவ்வாறு பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டுப் பாருங்கள். ‘மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்தது, சம்பளம் மாதம் பிறந்தால் வந்துவிடும், பாஸிடம் ரிப்போர்ட் செய்யவேண்டும், ஆபீஸ் அரசியல், பெரிய வளர்ச்சி எல்லாம் எதிர்பார்க்க முடியாது, பாதுகாப்பு இல்லாத வாழ்க்கை (எதிர்காலம்), பெரிய அமைப்பில் வேலை பார்க்கவேண்டும், நம் ஐடியாவுக்கெல்லாம் தனி மரியாதை கிடைக்காது, கம்பெனியை மூடினால் நம் கதி அதோகதி’ போன்ற பதில்களை சாய்ஸாக கொடுங்கள். அதே தொழில் முனைவோர்களிடம் ‘நீங்கள் சுயதொலில்/தொழில் முனைவு என்பதை’ எப்படிப் பார்கிறீர்கள்?’ என்று கேட்டு, ‘பாதுகாப்பு, பணரீதியான சுதந்திரம், கிரியேட்டிவிட்டியை உபயோகப்படுத்திக்கொள்ள வாய்ப்பு, பொதுவான சுதந்திரம், அதிக பணம் சம்பாதிக்க வாய்ப்பு’ ஆகியவற்றைப் பதிலுக்கான சாய்ஸாகக் கொடுங்கள்.

தெருவில் பார்க்கும் பலரையும் நிறுத்தி இந்தக் கேள்விகளைக் கேட்டால், பல சுவாரஸ்யமான பதில்கள் கிடைக்கும். பதில்களை ஆராய்ந்தால், ஒன்றே ஒன்று தெளிவாகத் தெரியும். தொழில் முனைவு என்பது மனநிறைவைத் தள்ளி வைப்பது. நம்மைச் சுற்றியிருக்கும் உலகில் அனைவருமே உடனடி மனநிறைவு  என்பதற்கே தயாராக இருக்கின்றனர். வேலை என்பது உடனடி மனநிறைவை அளிப்பதாக இருக்கிறது. 

ஸ்மைல் ஃபார்முலா!


பெரும்பாலான தொழிலதிபர்களை, ‘நீங்கள் ஏன் தொழில்முனைவில் ஈடுபட்டீர்கள்?’ என்று கேட்டால், ‘நம் வாழ்க்கை நம் கையில் என்ற காரணத்தினால்’ என்ற பதிலே கிடைக்கும். தொழில்முனைவில் வெற்றிக்கு ஸ்மைல்  (SMILE, S-System, M-Money, I-Innovator, L-Lifestyle, E- Empire builders) கருத்தாக்கத்தின் படி இருக்க வேண்டும்.

நீங்கள் வெற்றிகரமான தொழில் முனைவோரா?

இதில் ‘எஸ்’ என்பது சிஸ்டம்.  வாடிக்கையாளர்கள் நாம் செய்யும் தொழிலில் வாடிக்கையாளரானால் அவர்களுக்கு சரியானதொரு டீல் கிடைக்கும் என்று நம்புவது. அதாவது, இந்த நிறுவனத்தில் பொருட்கள் வாங்கினால் ஏதும் பிரச்னை வராது. வந்தாலும் அவர்கள் அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு சரிசெய்வார்கள் என்ற நம்பிக்கையை அளிக்கும் வண்ணம் சிஸ்டங்கள் இருப்பது.

‘எம்’ என்பது பணம் (மணி). வங்கியில் இருக்கும் பணத்தைக் குறிப்பதே தவிர, அதை வைத்து நாம் என்னென்ன விஷயங்களை வாங்கிக் குவிக்கிறோம் என்பது அல்ல என்று புரிந்துகொண்டு செயல் படுவது.

‘ஐ’  என்பது இன்னோவேட்டர். ‘எல்’ என்பது லைஃப் ஸ்டைல்.  செய்யும் வேலையை முழு ஈடுபாட்டுடன் ஒரு விருப்பமான வேலையாகச் செய்வது. ‘இ’ என்பது, ‘எம்ப்பையர் பில்டிங்’ என்பதைக் குறிப்பிடுகிறது. என் தயாரிப்பு, எங்கள் பிராண்ட் என எல்லா இடத்திலும் பிராண்டின் பவர் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இயங்குவது. இந்த ஸ்மைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட குணாதிசயங்களைக் கொண்டிருப்பவர்களே தொழில்முனைவில் வெற்றி பெறுகின்றனர்.

உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்வதே தொழில்முனைவு. தொழில்முனைவோர்கள் எந்த அளவுக்கு ஒரு ஐடியா நிச்சயம் ஜெயிக்கும் என்று நினைக்கிறார்களோ, அதை அந்த அளவுக்கே நடைமுறைப்படுத்தவும் இறங்கிவிடுவார்கள்.

‘இதெல்லாம் சும்மா,  அதிர்ஷ்டமும் கொஞ்சம் வேண்டும்’ என்று சொல்கிற டைப்பா நீங்கள்?

தொழில்முனைவோர் எப்படி அதிர்ஷ்டத்தை  நிர்ணயிக்கிறார்கள்? அவர்கள் எல்லா கால கட்டங்களிலும் வாய்ப்புகளை நேசித்தும் சுவாசித்தும் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் வாய்ப்புகளுக்குப் பஞ்சமே இல்லை என்ற எண்ணம் அவர்களிடத்தில் இருக்கும். அதேபோல், ஒவ்வொரு செயலில் ஈடுபடும்போதும் எதிர்பாராத விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டிருப்பார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக மனிதர்கள் எதற்கு காசு தருவார்கள், எதற்கு காசு தர மாட்டார்கள் என்பதைத் துல்லியமாக கணிக்கும் திறனைக் கொண்டிருப்பார்கள் என்கிறார் ஆசிரியர். இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட விஷயங்களோடு உங்களைப் பொருத்திப் பார்த்தால், நீங்கள் வெற்றி           கரமான தொழில் முனைவோரா என்பது உங்களுக்கேத் தெரியும்.

தொழில்முனைவோருக்கான பல்வேறு நல்ல விஷங்களைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒரு முறை படித்துப் பயன் பெறலாம்.

- நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்  வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism