Published:Updated:

யாருக்கு எந்த பிசினஸ்? - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 3

யாருக்கு எந்த பிசினஸ்? - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 3
பிரீமியம் ஸ்டோரி
யாருக்கு எந்த பிசினஸ்? - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 3

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

யாருக்கு எந்த பிசினஸ்? - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 3

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

Published:Updated:
யாருக்கு எந்த பிசினஸ்? - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 3
பிரீமியம் ஸ்டோரி
யாருக்கு எந்த பிசினஸ்? - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 3
யாருக்கு எந்த பிசினஸ்? - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 3

பிசினஸ் செய்ய முடிவெடுத்ததும், அடுத்து எழும் கேள்வி என்ன பிசினஸ் என்பதுதான். எல்லா பிசினஸையும் எல்லோரும் செய்துவிட முடியாது. நமக்கான பிசினஸ் எது  என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு நம்மை நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். நம் பலம் என்ன, பலவீனம் என்ன? நம்மிடம் உள்ள திறமை என்ன? நாம் என்ன படித்திருக்கிறோம்? நம் ஆர்வம் எதில் இருக்கிறது? இவற்றை எல்லாம் நாம் தெரிந்துகொண்டால்தான்  நம்முடைய பிசினஸ் பாதையை நம்மால் சரியாகக் கண்டுபிடிக்க முடியும்.

பிசினஸ் செய்ய விரும்பும் நீங்கள் எந்தத் துறையில் பிசினஸ் செய்ய விரும்புகிறீர்களோ, அது சார்ந்த அறிவும், அனுபவமும் அவசியம் தேவை. அப்போதுதான் அவற்றை நீங்கள்  திட்டமிட்டு செயல்படுத்த முடியும். முன்பின் அனுபவமில்லாத துறையாக இருந்தால், அதற்குத் தேவையான அடிப்படைகளைக் கற்றுக்கொண்ட பிறகே அந்த பிசினஸில் ஈடுபடுவது  நல்லது.  

பொதுவாக, பிசினஸில் உற்பத்தியாளர், விற்பனையாளர், வாடிக்கையாளர் ஆகிய மூன்று பேரையும், மூலதனம், பொருள், தொழில்நுட்பம், மனிதவளம் ஆகிய நான்கு விஷயங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். இவற்றில் எதை வேண்டுமானாலும் ஒருவர் தனது பிசினஸாகத் தேர்வு செய்யலாம்.

ஆனால், அதற்கு உங்களது துறை சார்ந்த திறமை  உங்களுக்கு எவ்வளவு இருக்கிறது? எந்தத் துறையை நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் முடிவு செய்தாக வேண்டும்.

1.  ஒரு பொருளைத் தயாரிக்கத் தேவையான  தொழில்நுட்ப  அறிவும் அனுபவமும், அந்தப் பொருளை மேலும் சிறப்பாக தயாரிக்க புதிய யோசனைகளும் உங்களிடம் உள்ளனவா?

2. ஒரு பொருளை விற்பதில் நீங்கள் சிறப்பாகச் செயல்படு பவரா? உங்களுடைய பொருட்களுக்கான வாடிக்கையாளரை சரியாகக் கண்டுபிடித்து விற்கக்கூடியவரா?

3. பணியாளர்களைக் கையாள்வதும், அவர்களிடம் இருந்து வேலை வாங்குவதும் உங்களுக்குக் கைவந்த கலையா?

4. கணினி, இணையம், ஆப்ஸ் போன்ற தொழில்நுட்பங்களில் புகுந்து விளையாடும் அபாரமான திறமை உங்களுக்கு உண்டா?

இந்த நான்கு கேள்விகளையும் பல முறை உங்களுக்கு நீங்களே கேட்டுப் பாருங்கள்.

முதல் கேள்விக்கான திறமை உங்களிடம்  இருந்தால், உற்பத்தித் துறையில் நீங்கள் தாராளமாக பிசினஸைத் தொடங்கலாம். ஆனால், அடுத்த மூன்று திறமைகளையும் கொண்டவர்களை உங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

யாருக்கு எந்த பிசினஸ்? - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


இரண்டாவது கேள்விக்கான திறமை உங்களிடம் இருந்தால், உற்பத்தியாளரிடம் பொருளை வாங்கி விற்கும் வர்த்தக பிசினஸில் நீங்கள் தாராளமாக ஈடுபடலாம். ஆனால், மூன்றாவது, நான்காவது திறமைகளைக் கொண்டவர்களை உங்களுடன் வைத்துக் கொள்வது பிசினஸ் வளர்ச்சிக்கு உதவும். உங்களுடன் வைத்துக்கொள்ள முடியாவிட்டாலும் அவர்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மூன்றாவது திறமை  கொண்டவராக நீங்கள் இருந்தால், உங்களால் சேவைத் துறையில் பிசினஸ் செய்ய முடியும். உங்கள் திறமையை வைத்து மற்றவர்களிடம் பணி புரிவதைக் காட்டிலும் அதையே பிசினஸாக செய்ய லாம். தனியாக ஒரு ஏஜென்சி அமைத்து நிறுவனங்களுக்கு சேவையாக வழங்கலாம்.

நான்காவது திறமை உங்களிடம் இருந்தால், மற்ற திறமைகள் உள்ள அனைவருக்கும் நீங்கள் நிச்சயம் தேவைப்படுவீர்கள். சரியான பிசினஸ் மாடலுடன் களமிறங்கினால் நிச்சயம் உங்களுக்கான சந்தையைப் பிடித்து விடலாம். உங்களுக்கான துறையை நீங்கள் தேர்ந்தெடுத்துவிட்டீர்களா? பிசினஸைத் தொடங்கும் நடைமுறைகளை அடுத்த இதழில் பார்க்கும்முன் வெற்றிகரமான பிசினஸுக்குத் தேவைப்படும் மூன்று மேனேஜ்மென்ட் விஷயங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

  இடர் நிர்வாகம் (Risk Management)

பிசினஸ் என்பது எப்போதும் ரிஸ்க்குகள் நிறைந்தது என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ரிஸ்க் எடுக்காமல் எந்த பிசினஸ் முடிவையும் எடுக்க முடியாது என்றாலும் நீங்கள் எடுக்கும் ரிஸ்க் என்பது உங்களுக்கு தரும் லாபத்தையும், நஷ்டத்தையும் பொறுத்தே முடிவு செய்யப்பட வேண்டும். நாம் எடுக்கும் ரிஸ்க் எந்தளவுக்கு ஈடானது (Worth) என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ரிஸ்க் எடுக்கும் போது அதன் பின்விளைவுகளையும் யோசிக்க வேண்டும்.

  கால நிர்வாகம் (Time Management)

பிசினஸுக்கு நேர மேலாண்மை மிக முக்கியம். நம் ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். சிறு சிறு வாய்ப்புகளையும் தவறவிடக் கூடாது. இரவு 1.30 மணிக்கு அமெரிக்காவில் உள்ள ஒரு வாடிக்கையாளரிடம் பிசினஸ் குறித்து பேச வேண்டும் என்றாலும், அதனைத் தவறவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தவறவிடும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பல வாய்ப்புகளை முடக்கிவிடும். அதேபோல், ஆர்டர் டெலிவரி, பேமென்ட் விஷயங்களையும் சொன்ன நேரத்தில் முடித்துத் தந்துவிட வேண்டும்.

  மனிதவளம் (Human Resource)

நல்ல பணியாளர்களால்தான் ஒரு நல்ல பிசினஸை நிறுவ முடியும். அதனால் நம் பணியாளர்களைத் திறமையாகக் கையாள வேண்டும். அவர்களின் பிரச்னைகளைக் கேட்பது, ஆலோசனைகளைக் கேட்பது, தேவையான வசதிகளைத் தருவது போன்றவற்றை நம் பிசினஸுக்கேற்ப திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.

  வாழ்க்கை நிர்வாகம் (Life Management)

வாழ்க்கையையும் பிசினஸையும் பிரச்னை இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் பிசினஸ் செய்பவர்களுக்கு குடும்பச் சூழ்நிலை என்பது பெரிய தடையாக இருக்கும். பிசினஸ் செய்யக் குடும்பத்தினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியம் தேவை. அது கிடைக்காமல்தான் பிசினஸ் செய்ய விரும்பும் பலர் திண்டாடுகிறார்கள். 

இனி பிசினஸைத் தொடங்கத் தேவையான நடைமுறைகளை பார்க்கத் தொடங்குவோம்.

(ஜெயிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism