Published:Updated:

ஜீவனாம்சத்துக்கு வரி உண்டா?

ஜீவனாம்சத்துக்கு வரி உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
ஜீவனாம்சத்துக்கு வரி உண்டா?

கேள்வி - பதில்

ஜீவனாம்சத்துக்கு வரி உண்டா?

கேள்வி - பதில்

Published:Updated:
ஜீவனாம்சத்துக்கு வரி உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
ஜீவனாம்சத்துக்கு வரி உண்டா?
ஜீவனாம்சத்துக்கு வரி உண்டா?

?எனக்கு சமீபத்தில் விவகாரத்து ஆனது. எனக்கு வேறு எந்த வருமானமும் இல்லை. ஜீவனாம்சமாக ரூ.10 லட்சம் கிடைத்தது. இதற்கு வரி கட்ட வேண்டுமா?
 
சரண்யா, சென்னை

ஈ.எஸ்.முருகானந்தம், ஆடிட்டர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜீவனாம்சத்துக்கு வரி உண்டா?



‘‘இந்திய வருமான வரிச் சட்டத்தில் ஜீவனாம்சம், வரிக்கு உட்பட்டதா அல்லது வரிக்கு அப்பாற்பட்டதா எனத் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. பிரதிபலன் இல்லாமல் ரூ.50,000-க்கு மேல் கிடைக்கப்பெறும் தொகைக்கு வருமான வரிப் பிரிவு 56(2) (VI)-ன் கீழ் வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜீவனாம்சம் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் டெல்லி தீர்ப்பாயம் ஜீவனாம்சத் தொகையை மூலதன வரவாகக் கருதி வரி விதிப்புக்கு உட்படாது எனத் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் உங்களுக்குக் கிடைத்த ஜீவனாம்சத் தொைகக்கு வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இன்றைய சூழ்நிலையில், இதுபோன்ற சமூகப் பிரச்னைக்களுக்கு வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது அவசியம்.”

?கணவன் - மனைவி இரண்டு பேரும் வெளிநாட்டில் வேலை செய்து இந்தியாவுக்குத் திரும்ப வந்து விட்டார்கள் எனில், அவர்களது என்ஆர்ஐ கணக்கை கூட்டுக் கணக்காக மாற்ற முடியுமா?


மோகன், சென்னை

கே.ஆர்.சத்தியநாரயணன், ஆடிட்டர்

ஜீவனாம்சத்துக்கு வரி உண்டா?



‘‘என்ஆர்ஐ-கள், என்ஆர்இ மற்றும் என்ஆர்ஓ என இரண்டு வகையான கணக்குகளை இயக்க முடியும். என்ஆர்இ கணக்கு வைத்திருப்பவர்கள், இந்தியாவில் இருந்து இந்தக் கணக்கை இயக்க முடியாது. இந்தியாவில் இருந்து பணத்தைப் பெற முடியும். ஆனால், வெளிநாட்டில் மட்டுமே பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.

அதேசமயம், என்ஆர்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள் இந்தியாவிலிருந்து பணத்தை டெபாசிட் செய்யவும், பணத்தைப் பெறவும் முடியும். இங்கு இருந்துகொண்டே கணக்கை இயக்க முடியும். என்ஆர்இ மற்றும் என்ஆர்ஓ இரண்டுக்கும் அவர்கள் என்ஆர்ஐ-ஆக இருக்க வேண்டும். ஒருவேளை என்ஆர்ஐ அந்தஸ்தை இழக்க நேர்ந்தால், இரண்டு கணக்கையும் இயக்க முடியாது. என்ஆர்ஐ கூட்டுக் கணக்கு சாத்தியம். இதில் அவர்கள் ஒரு கணக்கை முடித்துவிட்டு, இன்னொரு கணக்குடன் இணைத்துக் கொள்ள முடியும்.”

?பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை பப்ளிக் லிமிடெட் ஆக மாற்ற என்ன விதிமுறைகள்?


ராமதாஸ், மன்னார்காடு, கேரளா

எஸ்.சிவக்குமார், தொழில் நிதி ஆலோசகர்

ஜீவனாம்சத்துக்கு வரி உண்டா?



“பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை, பப்ளிக் லிமிடெட் ஆக மாற்ற குறைந்தபட்சம் ஏழு உறுப்பினர்கள் வேண்டும். குறைந்தபட்ச முதலீடு 5 லட்சம் ரூபாய். குறைந்தபட்சம் ஐந்து இயக்குநர்கள் இருக்க வேண்டும். இயக்குநர்களே உறுப்பினர்களாகவும் இருக்கலாம். உறுப்பினர் அடையாள எண் (Director Identification Number) எல்லா இயக்குநர்களுக்கும் வேண்டும். பான் மற்றும் டிஜிட்டல் கையெழுத்து (Digital Signature) எல்லா உறுப்பினர்களுக்கும் தேவை. ஒரு ஆடிட்டர் மூலம் மாற்றிய விவரங்களை (Memorandum and Article of Association) சமர்ப்பித்து 25 நாட்களுக்குள் ஒப்புதல் பெறலாம்.”

?எனது நண்பர் இணையதள நிறுவனத்தில் ஆன்லைன் முறையில் ஒரு பொருளை வாங்க முயற்சித்தார். ஆனால், அவருடைய கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டது. பொருள் வாங்கியதற்கான எந்த ஒரு குறுஞ்செய்தியும், மின் அஞ்சலும் வரவில்லை. வங்கிக் கணக்கில் இருந்து பணம் டெபிட் ஆனதற்கான அத்தாட்சி மட்டுமே என்னிடம் உள்ளது. இதுகுறித்து யாரிடம் புகார் செய்ய வேண்டும்? 

சுகுமார், மேட்டுப்பாளையம்

எஸ்.சரோஜா, இயக்குநர் (நுகர்வோர் ஆலோசனை), சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக் ஷன் குரூப்

ஜீவனாம்சத்துக்கு வரி உண்டா?



‘‘ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள், எந்த நிறுவனத்தின் மூலமாக பொருள் வாங்குகிறார்களோ, அந்த நிறுவனத்தின் இ-மெயில் முகவரிக்கு இதுகுறித்து முதலில் தகவல் தெரிவிக்க வேண்டும். இ-மெயிலில், “உங்கள் நிறுவனத்தில் ஒரு பொருளை வாங்கினேன். ஆனால், நான் பொருள் வாங்கியதற்கான எந்த ஆதாரமும் எனக்கு கிடைக்கப் பெறவில்லை. அதேசமயம், என் வங்கிக் கணக்கில் இருந்து பணம் டெபிட் ஆகியுள்ளது. உடனடியாக நான் வாங்கிய பொருளை அனுப்புங்கள் அல்லது என்னுடைய பணத்தைத் திருப்பித் தாருங்கள் என்று குறிப்பிடலாம். இ-மெயில் அனுப்பிய பிறகு எந்தவொரு நடவடிக்கையும் இல்லை என்றால் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

 வழக்குப் பதிவு செய்ய இரண்டு ஆண்டுகள் வரை கால அவகாசம் உள்ளது. ஆனால், முடிந்தவரை 10 நாட்கள் பொறுமையாகக் காத்திருக்கலாம். அதன்பின், அந்த நிறுவனத்திடம் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என்றால், நுகர்வோர் குறை தீர்ப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதே நல்லது”.

?என் திருமண செலவுக்கு வங்கியில் தனிநபர் கடன் ரூ.5 லட்சம் வரை வாங்கலாம் என நினைக்கிறேன். என் பெயரில் உள்ள சொத்துக்களை அடமானம் வைக்காமல் கடன் வாங்க முடியுமா?

நரேன், விழுப்புரம்

ஜீவனாம்சத்துக்கு வரி உண்டா?



ஜி.பத்மநாபன், முதுநிலை மேலாளார், ஐஓபி, தஞ்சாவூர்

“பொதுவாக, சம்பளம் வாங்கும் நபர் ஒருவர், எந்த வங்கியில் சம்பளம் வாங்குகிறாரோ, அந்த வங்கியில் மட்டுமே பெரும்பாலும் தனிநபர் கடன் பெற முடியும். சில வங்கிகள், வாடிக்கையாளரின் மாதச் சம்பளத்தைப் போல, 10 மடங்கு வரை கடன் வழங்குகின்றன. இன்னும் ஒரு சில வங்கிகளில் 15 முதல் 20 மடங்கு வரைகூட கடன் வழங்கப்படுகிறது. தனிநபர் கடனுக்கு சொத்தை அடமானம் வைக்கத் தேவையில்லை.”

போன் மூலமாகவும்  கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

ஜீவனாம்சத்துக்கு வரி உண்டா?

உங்கள் எண்ணங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!

facebook.com/naanayamvikatan twitter.com/nanayamvikatan

எவ்வித கட்டணமும் இல்லாமல் ஏராளமான தகவல்களைப் படித்து பயன்பெறுங்கள்!

nanayam.vikatan.com

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism