Published:Updated:

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 3

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 3
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 3

நல்ல வருமானம்... ஆனால் நஷ்டம்!சுரேஷ் பார்த்தசாரதி , Founder, Myassetsconsolidation.com Registered investment advisor, INA200000878ஓவியம்: கோ.ராமமூர்த்தி

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 3

நல்ல வருமானம்... ஆனால் நஷ்டம்!சுரேஷ் பார்த்தசாரதி , Founder, Myassetsconsolidation.com Registered investment advisor, INA200000878ஓவியம்: கோ.ராமமூர்த்தி

Published:Updated:
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 3
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 3

பிரபாகருக்கு வயது 40 இருக்கும். சென்னையில் ஏழு இடங்களில் இசைப் பள்ளிகளை நடத்தி வருகிறார். நான்கு பள்ளிகளை சொந்தமாகவும், மூன்று பள்ளிகளை ஃபிரான்சைஸியாகவும் நடத்தி வருகிறார். இனிமையான இசையைப் போல சென்றுகொண்டிருந்த அவர் வாழ்க்கையில் திடீரென ஒரு இக்கட்டு வந்துசேர்ந்தது. அந்தச் சூழலில்தான் அவர் என்னைச் சந்தித்தார்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 3

‘‘என் பிசினஸ் நல்லபடியாகத்தான் போகிறது. நல்ல வருமானம் வருகிறது. ஆனால், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன்தான் இருக்கிறது. ஒரு கடனிலிருந்து தப்பிக்க இன்னொரு கடனை வாங்கி மாட்டிக்கொள்கிறேன். இந்தக் கடன் வலை யிலிருந்து எப்படி வெளியேறுவது என்று புரியவில்லை” என்றார் குழப்பத்துடன்.

அவர் வைத்து நடத்தும் அனைத்துக் கிளைகளின் கணக்குவழக்குகளை எடுத்துக்கொண்டு வரும்படி சொன்னேன். அப்படியே செய்தார். அதை எல்லாம் நான் அலசி ஆராய்ந்து பார்த்ததில், அவர் ஃபிரான்சைஸியாக விட்டிருந்த மூன்று கிளைகளில் எந்தப் பிரச்னையும் இல்லை. நல்ல லாபத்தில் போய்க்கொண்டிருந்தது என்று தெரியவந்தது.

அவர் சொந்தமாக வைத்து நடத்தும் கிளைகளில் தான் ஏகப்பட்ட குளறுபடிகள். எந்தக் கணக்கு வழக்கும் சரியாக இல்லை. பிறகு பிரபாகரிடம் வெகுநேரம் விசாரித்துப் பார்த்தபின்புதான் அவருடைய சிக்கலுக்கான முடிச்சுகள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தன.

அவர் சொந்தமாக நடத்தும் நான்கு பள்ளி களிலும் நிர்வாகம் செய்யவும் கணக்கு வழக்குகளை எழுதவும் அவரது சொந்தக்காரர்களை நியமித்திருந் தார். எந்தவித முன்னனுபவமும் இல்லாத அவர்கள் இஷ்டத்துக்கு செலவுகளைச் செய்துள்ளார்கள். பயிற்சி மாஸ்டர்களுக்கும், வேலை பார்ப்பவர் களுக்கும் ஏகப்பட்ட சலுகைகளை வாரி வழங்கி உள்ளனர். இசை நிகழ்ச்சிகளுக்கான ரிகர்சல் களுக்கு பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் ஹால் புக் செய்துள்ளனர். தடபுடலான சாப்பாடு, எடுத்ததற்கெல்லாம் கார் எனக் கண்ணை மூடிக் கொண்டு செலவு செய்ததால், வரவு நிறைய வந்தும் நஷ்டத்தில்தான் இயங்கிக்கொண்டிருந்தன.

ஏற்கெனவே வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கியதிலும், புறநகரில் ரூ.45 லட்சம் மதிப்பில் வீட்டு மனை வாங்கியதிலும், வங்கிக் கடன் ரூ.60 லட்சம் இருந்தது. இதனால் பிசினஸுக்காக வெளியில் கடன் வாங்கியுள்ளார். அது கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து, ரூ.1 கோடியாக வளர்ந்து நின்றது.

வெளிக் கடனுக்கு 18 முதல் 24% வரை வட்டி கட்டி வந்தார். புறநகர் மனையில் குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டாததால், 13% வட்டி கட்டினார். மொத்தமாக ரூ.2.5 லட்சம் மாதத்துக்கு கடன் கட்டவே போய்க்கொண்டிருந்தது. தவிர, குடும்பத்திலும் ஆடம்பரமாகச் செலவு செய்து வந்துள்ளனர். ஏதாவது இசை நிகழ்ச்சி வெளியூரில் நடக்கும்பட்சத்தில் குடும்பத்தோடு அங்கு சென்று மூன்று, நான்கு நாட்கள் ஸ்டார் ஹோட்டல்களில் தங்கி தாறுமாறாகச் செலவு செய்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 3

குடும்பச் செலவு மட்டுமே மாதத்துக்கு               70,000 ரூபாயைத் தாண்டியது. கடன் ரூ.2.5 லட்சத்துடன் சேர்த்து மாதம் ரூ.3.2 லட்சம் செலவானது. கடன் மூலம் சொந்தமாக வாங்கிய வீடு சிறியதாக இருக்கிறது என்று, அதனை ரூ.13 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டுவிட்டு, ரூ.40 ஆயிரம் வாடகையில் பெரிய வீட்டுக்கு மாறி இருந்தனர்.

பிரச்னையை முழுமையாக உணர்ந்துகொண்ட நான் அவருக்குத் தந்த ஆலோசனைகள் இதுதான்...

முதலில் அவருடைய நிறுவனத்தில் பணியாற்றிய அவர் உறவினர்களுக்கு நிர்வாகப் பொறுப்பை மட்டும் தந்துவிட்டு, அக்கவுன்ட்ஸ் வேலை களை அவுட்சோர்ஸ் செய்யச் சொன்னேன். ஆடம்பரச் செலவுகள் குறைந்தன. அநாவசிய சலுகைகள் நிறுத்தப்பட்டன. அதுவரை சலுகைகளை அனுபவித்து வந்த நல்ல மாஸ்டர்கள் சிலர் வேலையை விட்டு நின்றுபோனார்கள். உடனே நான்கு நிறுவனத்தில் இரண்டினை ஃபிரான்சைஸிக்குக் கொடுத்துவிடச் சொன்னேன். செலவுகள் குறைந்தவுடன், மேற்கொண்டு கடன் வாங்குவது நின்றுபோனது. வெகுசீக்கிரத்தில் 80% பிசினஸ் கடனைக் கட்டி முடித்தார். வீடு மற்றும் வீட்டு மனைக்கான கடனுக்கு இஎம்ஐ அநாவசியமாகப் போய்க்கொண்டிருந்தது. உடனே வீட்டையும், மனையையும் விற்றுக் கடனை அடைக்கச் சொல்லியுள்ளேன். இதனால் இஎம்ஐ செலுத்தும் பணம் மிச்சமாகிவிடும்.

கடனை அடைத்துவிட்டு சிட்டிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனை வாங்கி கீழ்த்தளத்தை இசைப் பள்ளி மற்றும் ரிகர்சல் ஹால் அமைக்கவும், மேல்தளத்தைக் குடியிருக்கும் வீடாகவும் கட்டுமாறு சொல்லி உள்ளேன். ஹோட்டல்களில் ஹால் வாடகைக்கு எடுக்கும் பெரும் செலவு மிச்சமாகும்.

இசை வகுப்புகள், நிகழ்ச்சிகள் இருக்கும் நேரம் போக, மற்ற நேரங்களில் பணியாளர்களை மார்க்கெட்டிங் செய்யுமாறு அறிவுறுத்தினேன். இதனால் இசை வகுப்புக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, வருமானமும் அதிகரிக்க ஆரம்பித்தது.

பிரபாகரின் மனைவி கிருத்திகா நன்றாகப் படித்தவர். எனவே, வீட்டில் ஒரு சமையல்காரரை அமர்த்திவிட்டு, கிருத்திகாவை இரண்டு சென்டர்களையும் அவ்வப்போது சென்று கவனித்துக்கொள்ளுமாறு சொன்னேன். இதனால் பணியாளர்களின் வேலைத்திறன் அதிகரிக்கத் தொடங்கியது. உங்கள் நிறுவனத்துக்கு பிராண்ட் வேல்யூ இருக்கிறது. எனவே, கடன் முழுவதையும் முடித்த பிறகு, மற்ற மாநிலங்களில் இசைப் பள்ளிகளைத் தொடங்கலாம் என்றும் யோசனை கூறியுள்ளேன்.

இப்போது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக மாதத்துக்கு ரூ.1,40,000 வரை எஸ்ஐபி மூலம் சேமிக்கத் தொடங்கியுள்ளார். பிரபாகரின் ஓய்வுக் காலத்துக்கு ரூ.8 கோடி சேர்க்கவேண்டும். குழந்தை களுக்கு நல்ல கல்வி தரவும், பிரமாண்டமாகத் திருமணம் நடத்தவும் விரும்புகிறார். அதற்கும் நிறைய முதலீடு செய்ய வேண்டும். நான் சொல்லியபடி செய்யும்பட்சத்தில் 2018-ல் மாதம் ரூ.3 லட்சம் வரை அவரால் சேமிக்க முடியும்.
           
(கற்போம்)

நீங்களும் உங்கள் நிதித் தவறுகளைச் சொல்லித் தீர்வு பெறலாம். அனுப்ப வேண்டிய மெயில் முகவரி : finplan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism