Published:Updated:

மாதச் சம்பளம்... கொண்டாட்டமும் திண்டாட்டமும்!

மாதச் சம்பளம்... கொண்டாட்டமும் திண்டாட்டமும்!
பிரீமியம் ஸ்டோரி
மாதச் சம்பளம்... கொண்டாட்டமும் திண்டாட்டமும்!

ஜெ.வி.பிரவீன்குமார்

மாதச் சம்பளம்... கொண்டாட்டமும் திண்டாட்டமும்!

ஜெ.வி.பிரவீன்குமார்

Published:Updated:
மாதச் சம்பளம்... கொண்டாட்டமும் திண்டாட்டமும்!
பிரீமியம் ஸ்டோரி
மாதச் சம்பளம்... கொண்டாட்டமும் திண்டாட்டமும்!
மாதச் சம்பளம்... கொண்டாட்டமும் திண்டாட்டமும்!

மாதச் சம்பளம் வாங்குறவங்களோட முகத்தையும், ஆக்டிவிட்டிகளையும் மாசத்தோட முதல் வாரத்துக்கும் கடைசி வாரத்துக்கும் கம்பேர் பண்ணி பார்த்தீங்கனா குறைந்தபட்சம் 107 வித்தியாசங்களாவது இருக்கும் மக்களே...

* மாசத்துல ஐந்தாம் தேதிங்கிறது ரெமோவுல சிவா, கீர்த்தி சுரேஷை முதன் முதல்ல பார்க்கிறப்ப பல்ப் எரியுற மாதிரி இருக்கும். அடுத்த சில நாள்ல நமக்கு தரையுல கால் பாவாது. ஆனா, இருபது தேதி ஆயிட்டா போதும், ‘காவியா, ஓவியா, ஓ வேணாம்யா...’ன்னு பாட்ற மாதிரி ஆயிடும்.

* பெல்ட் கம்பெனிக்காரன்ல இருந்து பேனா கம்பெனிக்காரன் வரைக்கும் ஒரு நாளைக்கு 150 மெசேஜை  நான்-ஸ்டாப்பா நமக்கு அனுப்பிட்டே இருப்பாங்க. அந்த மேசேஜ் எல்லாம் நமக்கு வர்றதும் தெரியாது; போறதும் தெரியாது. ஆனா, ‘salary credited’-ங்கிற மேசேஜ் மட்டும் எப்படித்தான் வந்த அடுத்த செகண்டே எல்லாரும் பார்த்துடறாங்கங்கிறதை எல்லாம் ஆராய ஆரம்பிச்சா, விஞ்ஞானமே குழம்பிடும்.

* சம்பளம் வந்து பத்து தேதி ஆன பின்னும் அந்த எஃபெக்ட் மிச்சம் மீதி இருக்கும். ‘ஸ்கூலுக்கு புராஜெக்ட் செய்யணும், தெர்மாகோல் சீட் வாங்க 50 ரூபா குடுங்க’னு போன மாசம் மாசக் கடைசியில கேட்டு, திட்டு வாங்கின எஃபெக்ட்டுலேயே பயந்துகிட்டே பையன் கேட்டா, ‘யார்கிட்ட கேட்கிறே, அப்பாகிட்டதானே கேட்கிறே... நல்லா கேளு’ன்னு 100 ரூபாய் நோட்டெல்லாம் அசால்ட்டா தானம் பண்ணுவாங்க. எல்லாம் 15-ம் தேதி வரைக்கும்தான்!

* பத்தாம் தேதி ஆயிடுச்சா, பால்காரர் கணக்குல இருந்து பக்கத்துக் கடைக் கணக்கு வரைக்கும்னு போக அப்படியே கடைசியா தியேட்டர் பக்கம் போயிட்டு வருவாங்க. படத்துக்குப் போயிட்டு வந்த அடுத்த நாள்ல இருந்து இவங்க படம் ஸ்டார்ட் ஆகிடும். வேற என்ன? காசெல்லாம் முடிஞ்சிடுச்சு ஐயா முடிஞ்சிடுச்சு.

* 15-ல இருந்து 25-ம் தேதி வரைக்கும் இவங்களோட நிலைமை டிராவிட் பேட் பண்ணுற டெஸ்ட் மேட்சைப் பார்த்த கதைதான். ஊட்டியில பிரேக் டவுன் ஆன உருளைக்கிழங்கு லாரி மாதிரி எவ்வளவு தள்ளினாலும் போகவே போகாது. அதுலயும் 31-ம் தேதி வர்ற, மாச காலண்டரையெல்லாம் பார்த்தா, பாவக்காயைப் பச்சையா வெச்சு வாயில திணிச்ச மாதிரி அவ்வளவு ஆனந்தமா(!) இருக்கும்.

* ஐந்தாம் தேதியில் சிக்னல்லகூட வண்டியை ஆஃப் பண்ணாம விராட் கோஹ்லி பேட்டை சுழட்டுற மாதிரி, எனக்கென்னன்னு சத்தமா திருகிவிட்டுக்கிட்டு இருந்த பல பேர், மாசக்கடைசியில் சத்தமே இல்லாம பஸ்ல ஐக்கியம் ஆயிடுவாங்கனா பாருங்களேன்.

* ஒரு வழியாக ‘வாழ்க்கையே ஒரு வட்டம், வழக்குனாவே சட்டம்’னு அந்த சம்பளத் தேதிக்காக வழி மேல விழி வெச்சுக் காத்திருப்பாங்க. கிரெடிட் மெசேஜ் வந்துட்டா போதும், ‘வேதாளம்’ படத்துல தெறிக்கவிடலாமானு கேட்டு ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆகிற அஜித் மாதிரி திரும்பவும் ஆரம்பிச்சுடுவாங்க.

* ஆனா ஒண்ணுங்க, கிரெடிட் கார்டு, ஹோம் லோனு, பைக் தவணை, ஃபைனான்ஸுனு வாங்கி வெச்சிருக்கவங்களுக்கெல்லாம் இந்தப் பிரச்னையே இல்லை. ஏன்னா அவங்களுக்கெல்லாம் எல்லா நாளுமே மாதக்கடைசிதான்.