Published:Updated:

ஓசூரில் வாசகர்களால் நிறைந்த அரங்கம்!

ஓசூரில்  வாசகர்களால் நிறைந்த அரங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
ஓசூரில் வாசகர்களால் நிறைந்த அரங்கம்!

மு.சா.கெளதமன்

ஓசூரில் வாசகர்களால் நிறைந்த அரங்கம்!

மு.சா.கெளதமன்

Published:Updated:
ஓசூரில்  வாசகர்களால் நிறைந்த அரங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
ஓசூரில் வாசகர்களால் நிறைந்த அரங்கம்!
ஓசூரில்  வாசகர்களால் நிறைந்த அரங்கம்!

டிசம்பர் 11 அன்று நாணயம் விகடனும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து, ‘மியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தை பெருக்கும் முதலீடு’ என்கிற தலைப்பில் ஓசூரில் முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தின. இதில் ஓசூர், பெங்களூரு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடியைச் சார்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.

முதலில் பேசிய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழக பிராந்திய தலைவர் கே.சுவாமிநாதன், எப்படி பட்ஜெட் போட வேண்டும், நிதி இலக்குகள் வைத்துக்கொள்ள வேண்டும், அதற்கு மியூச்சுவல் ஃபண்ட் எப்படி உதவும் என்று விளக்கினார்.

ஓசூரில்  வாசகர்களால் நிறைந்த அரங்கம்!

தொடர்ந்து பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை பயிற்றுநரும் முதலீட்டாளர் விழிப்பு உணர்வு கல்வி, விற்பனை மற்றும் மேம்பாட்டுத் துறையின் துணைத் தலைவருமான எஸ்.குருராஜ் பேசியபோது, மியூச்சுவல் ஃபண்டில் எத்தனை வகையான ஃபண்டுகள் இருக்கின்றன; அதில் எப்படி முதலீடு செய்யலாம் என விளக்கினார். அதோடு நம்முடைய சிறுவாட்டு பணம் பீரோவில் தூங்கிக் கொண்டிருந்தால் என்ன ஆகும், லிக்விட் ஃபண்டுகளால் ஏற்படும் நன்மைகள், சரியான காலத்தில் முதலீடுகளை தொடங்கவில்லை என்றால் என்ன ஆகும் என்பனவற்றை வீடியோ மூலம் விளக்கினார்.

ஓசூரில்  வாசகர்களால் நிறைந்த அரங்கம்!

நிறைவாக முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் பேசியபோது, ‘‘முதலீடு செய்யும் தொகைக்கு வரிச் சலுகை, கிடைக்கும் வருமானத்துக்கு வரிச் சலுகை, முதலீட்டை வெளியே எடுக்கும்போது வரிச் சலுகை என மூன்று ‘இ’ (EEE)-க்கள் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். நாம் நூற்றுக்கணக்கான பொருட்களையும், சேவை களையும் பயன்படுத்துகிறோம். ஆனால், அந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில்லை என்றால், எப்படி நம் முதலீடு வளரும். ஆக, நம் முதலீடு வளர வேண்டும்’’ என்றார்.

அறிவுக்கு விருந்தாக அமைந்திருந்த இந்தக் கூட்டத்தை முழுக்க கேட்டுவிட்டு, புறப்பட்டனர் முதலீட்டாளர்கள்.

படங்கள்: க.தனசேகரன்