Published:Updated:

சவால்களை வென்று சரித்திரம் படைக்கும் உதய் கோட்டக்!

சவால்களை வென்று சரித்திரம் படைக்கும் உதய் கோட்டக்!
பிரீமியம் ஸ்டோரி
சவால்களை வென்று சரித்திரம் படைக்கும் உதய் கோட்டக்!

ஜெ.சரவணன்

சவால்களை வென்று சரித்திரம் படைக்கும் உதய் கோட்டக்!

ஜெ.சரவணன்

Published:Updated:
சவால்களை வென்று சரித்திரம் படைக்கும் உதய் கோட்டக்!
பிரீமியம் ஸ்டோரி
சவால்களை வென்று சரித்திரம் படைக்கும் உதய் கோட்டக்!
சவால்களை வென்று சரித்திரம் படைக்கும் உதய் கோட்டக்!

பதினான்கு பேரில் ஒருவர்!

அப்போது உதய் கோட்டக்கின் வயது 22.

  “உதய், என்ன செய்வதாக இருக்கிறாய்?” என்று கேட்டார் அவருடைய அப்பா.

“தெரியவில்லை. ஆனால், கட்டாயம் குடும்ப பிசினஸ் செய்ய விருப்பமில்லை. 14 பேரில் ஒருத்தனாக இருக்க என்னால் முடியாது” - தெளிவாகச் சொன்னார் உதய்.

“அப்படியானால் புதிதாக என்ன செய்யப் போகிறாய்?’’ மீண்டும் கேட்டார் அப்பா.

“ஃபைனான்ஷியல் கன்சல்டன்சி செய்ய  விரும்புகிறேன்” என்று சட்டென்று பதிலளித்தார்.முன்பு தெரியவில்லை என்றவர், தந்தை ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் என்று தெரிந்ததும் தனது மனதுக்குள் பல நாட்களாக வைத்திருந்த எண்ணத்தைப் போட்டு உடைத்தார். சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து கச்சிதமாக செயலாற்றுவதில் வல்லவர் உதய் கோட்டக். கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர். இந்தியாவின் நான்காவது பெரிய தனியார் வங்கியின் சொந்தக்காரர்.

  குடும்பத் தொழிலும் பங்குச் சந்தையும்!

இந்தியா - பாகிஸ்தான் இரண்டும் பிரிந்தபோது உதய் கோட்டக்கின் தந்தை கராச்சியில் இருந்து இந்தியாவுக்கு வந்தார். அவரது குடும்பம் பருத்தி உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை வாங்கி விற்கும்  தொழிலை செய்து வந்தது.

பள்ளிப்படிப்பை முடித்த உதய், பல்கலைக் கழகத்தில் காமர்ஸ் படிப்பில் முதலிடம் பிடித்தார். சார்ட்டட் அக்கவுன்டன்ட் படித்து முடித்து பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்பையும் முடித்தார். படிப்பு அறிவுடன் சேர்ந்து, குடும்ப பிசினஸில் இருந்து டிரேடிங், கிளியரிங், ஃபார்வேர்டிங், ஷிப்பிங் அனைத்தையும் கற்றார்.

உதய்க்கு பங்குச் சந்தை வர்த்தகமும் அத்துப்படி. அவருடைய பேராசிரியர் சிவானந்த் மன்கேகர். பங்குச் சந்தையில் மிகத் திறமையாக வர்த்தகம் செய்பவர். தினமும் அவருடன் வர்த்தகம் செய்யும் இடத்துக்குப் போவார். ஃபைனான்ஸ் சந்தையை அறிந்துகொள்ள, ஃபைனான்ஸ் துறையில் பெரும்புள்ளியாக இருந்த தனது தந்தையின் பழைய நண்பர் முகுல் ஹர்கிசன்தாஸை தனக்கு அறிமுகம் செய்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார் உதய். இவர்கள் மூலம் இந்தியாவில் உள்ள ஃபைனான்ஸ் சந்தையையும் அதன் பிசினஸ் உத்திகளையும் கற்றுக்கொண்டார்.

  குடும்பப் பெயரில் சொந்தத் தொழில்!

முதலில் ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார். 1982-ல் ஹிந்துஸ்தான் லீவர், பிரச்னைகளைச் சந்தித்து வந்தது. அப்போதுதான் கோட்டக் கேபிட்டல் மேனேஜ்மென்ட் கம்பெனி தொடங்கும் திட்டம் தீட்டப்பட்டது. அவரது தந்தை சொன்னபடி, அவருக்கு இடம் ஏற்பாடு செய்துதர, 1986-ல் கோட்டக் கேபிட்டல் மேனேஜ்மென்ட் என்று சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். தனது நிறுவனத்துக்கு குடும்பப் பெயரையே வைத்தார். நிறுவனத்துக்கு குடும்பப் பெயரை வைப்பதில் ஒரு காரணம் இருக்கிறது. ‘‘குடும்பப் பெயரின் மீது ரிஸ்க் வைத்து பிசினஸ் செய்யும்போது பொறுப்புணர்வு அதிகரிக்கிறது. உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் பெரும்பாலும் குடும்பப் பெயரைத் தாங்கியவைதான்’’ என்பார் உதய். 

ஃபைனான்ஸ் சந்தையைப் பற்றி நன்கு அறிந்திருந்த உதய் கோட்டக், பில் டிஸ்கவுன்டிங் மூலம் ஃபைனான்ஸ் செய்யும் பிசினஸை செய்து வந்தார். அப்போது ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, பேங்க் டெபாசிட் வட்டி 6%, கடன் வட்டி விகிதம் 17%. வங்கிகள் 11% லாபம் பார்த்து வந்தன.  ஆனால், கோட்டக், டாடா போன்றவை பில் டிஸ்கவுன்ட் மூலம் 5% மட்டும் லாபம் வைத்து பிசினஸ் செய்தன. அப்போது ஃபைனான்ஸ் செக்டார் முழுமையான நெறிப்படுத்துதலுக்குள் இல்லை. அதனால் சந்தையில் தனியார் நிறுவனங்களுக்கு என்று ஒரு முழுமையான செயல்முறை வடிவம் இல்லாமல் இருந்தது. இந்த சூழலிலும் தன் தொழிலை வளர்த்தார் உதய்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சவால்களை வென்று சரித்திரம் படைக்கும் உதய் கோட்டக்!

  மஹிந்திராவுடன் கூட்டு!

தனது நிறுவனத்தை மக்கள் உடனே ஏற்றுக் கொள்ள ஒரு பிராண்ட் வேல்யூ உதய்க்குத் தேவைப்பட்டது. உதய் கோட்டக்கின் மனதில் மஹிந்திரா இருந்தது. ஆனந்த் மஹிந்திராவைச் சந்தித்து மஹிந்திரா குழுமத்தின் மஹிந்திரா யூஜின் ஃபைனான்ஸுடன் இணைந்து, பிசினஸ் செய்ய ஆரம்பித்தார். பின்னரே கோட்டக் கேபிட்டல் மேனேஜ்மென்ட், கோட்டக் மஹிந்திரா ஃபைனான்ஸாக மாறியது.

படிப்படியாக தனது நிறுவனத்தை செக்யூரிட்டீஸ், புரோக்கிங், இன்ஷூரன்ஸ், இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் என்று விரிவுபடுத்தி னார். கார் லோன் பிசினஸை தொடங்கியபோது சிட்டி குரூப், கார் லோன் பிசினஸில் இருந்தது. அதற்குப் போட்டியாக செய்ய முடியவில்லை என்றாலும், சிட்டி குரூப்பின் கார் லோனில் ஒரு சிக்கல் இருந்தது. சிட்டி குரூப்பில் கார் லோன் வாங்குபவர்கள் ஆறு  மாதம் வரை காத்திருந்து காரைப் பெற்றனர். ஆனால், கோட்டக் நிறுவனம் கார் லோன் மட்டும் வழங்காமல் வாடிக்கையாளர்கள்  விரும்பும் காரை அவர்களே முன்நின்று விரைவில் வாங்கித் தரவும் செய்தனர். இதனால் அவர்களைத் தேடிவரும் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகமானது.
 
  நான்காவது பெரிய தனியார் வங்கி!

கோட்டக் மஹிந்திரா வங்கியை மேலும் விரிவுபடுத்த ரூ.15 ஆயிரம் கோடி கொடுத்து ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை வாங்கினார் உதய். இந்த புதிய இணைப்பு மூலம் கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு நாடு முழுவதும் 1,200-க்கும் மேலான  கிளைகள் கிடைத்தன. இதன் மூலம் இந்தியாவின் நான்காவது பெரிய தனியார் வங்கி என்ற பெயரைப் பெற்றது.

  ஊழியர்களே காரணம்!

உதய் கோட்டக்கின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அவருடைய நம்பிக்கைக்குரிய ஊழியர்கள் மிக முக்கிய காரணம். அவர் ஊழியர்களிடம் வேலை வாங்கும் விதமே வித்தியாசமாக இருக்கும். அவர் தனது ஊழியர்களுடன் வைத்திருக்கும் உறவு, அதே சமயம் அவர்களிடம் வேலை வாங்கும் விதம் ஆகியவற்றுக்காகவே  கோட்டக்கின் ஊழியர்கள் எப்போதும் அவரது ஊழியர்களாகவே இருக்க விரும்புவார்கள். கோட்டக் நிறுவனம் தொடங்கப்பட்டபோது சிறிய பதவியில் வேலைக்கு சேர்ந்த சிவாஜி, இன்று கோட்டக் மஹிந்திரா ஓல்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இயக்குநர் எனில் பார்த்துக் கொள்ளுங்கள்.

அவரது ஒவ்வொரு ஊழியர்களிடமும் அவர் சொல்வது இதுதான்...  “இந்த இடம் உங்களுக்கானது என்று நீங்கள் உணரும் வரை நீங்கள் இங்கு பணி புரியவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்” என்பதே. அதனாலேயே அவரது ஊழியர்களும் அவர்களது சொந்த பிசினஸை நடத்துவது போலவே உழைப்பார்கள். அவருடன் எந்தப் பயமும் இல்லாமல் விவாதம் செய்வார்கள். ஐஎன்ஜி  வைஸ்யாவுடன் இணையும்போது, அது குறித்து விவாதிக்க நடந்த கூட்டம் காலை முதல் இரவு வரை நடந்தது.

  முடியாத விஷயங்களை முடித்துக் காட்டுவார்!

முடியாத விஷயங்களை முடிந்த வழிகளில் எல்லாம் முயற்சிப்பதுதான் உதய் கோட்டக். ஒரு பிரச்னையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு சின்ன விஷயங்களையும் பார்த்து ஆராய்ந்து அதற்கேற்ப முடிவெடுப்பார். வழக்கறிஞர்கள், மேனேஜர்கள் கூட ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கும்போது, சரியானதொரு வழியைக் கண்டுபிடித்து சொல்வார். அவர்முன் இருக்கும் நூறு விஷயங்களில் பிரச்னைக்குரிய விஷயம் எது என்று கண்டுபிடிக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. பிரச்னைக்கான தீர்வு கிடைக்கும் வரை அவருக்குத் தூக்கம் வராது.

  மன்னிப்பார், மறக்க மாட்டார்!

எம் அண்ட் எம் ஃபைனான்ஸ் ஜாயின்ட் வென்சரிலிருந்து வெளியே வந்தது அவர்கள் செய்த பெரிய தவறு என்று கூறுவார். நகரவாசிகளிடம் பிசினஸ் செய்து வந்த அவர்கள், கிராம மக்களுடனான பிசினஸை புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் பொறுமையாக, மொத்தமாக பணத்தை திருப்பிக் கட்டினாலும் கட்டிவிடுவார்கள் என்பது பின்னர்தான் அவர்களுக்குத் தெரிந்தது. ரூ.100 கோடியில் வெளியேறிய அவர்களுடைய பங்கின் மதிப்பு இப்போது ரூ.4,000 கோடி. அதனை அவ்வப்போது உதய், தனது நெருக்கமான அதிகாரிகளுக்கு நினைவூட்டுவார். அவர் தவறுகளை மன்னிப்பார்; ஆனால் மறக்க மாட்டார்.

“வெற்றியோ, தோல்வியோ வாழ்க்கை அல்ல. மாறாக, அந்த வெற்றி, தோல்விகளால் ஏற்படும் விளைவுகள் நம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும். எப்படிப்பட்ட விளைவுகளோடு உங்கள் வாழ்க்கையை வாழப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் உங்கள் வெற்றியும் தோல்வியும் அமையும்” என்பதே அவரது செயல் பாடுகளின் ரகசியம்.

இன்று அவருடைய மொத்த பிசினஸ் மதிப்பு 20 பில்லியன் டாலர். உதய் கோட்டக்கின் சொத்து மதிப்பு 7.5 பில்லியன் டாலர். ஃபோர்ப்ஸ் இதழின் நிதி உலகத்தின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் 33-வது இடத்தைப் பிடித்தார் கோட்டக். பிசினஸில் சாதிக்கும் எண்ணம் உடையவர்களுக்கு உதய் கோட்டக் ஒரு சிறந்த முன் உதாரணம்! 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism