Published:Updated:

நின்றுகொண்டே கற்றுக்கொண்ட முதலீட்டாளர்கள்!

நின்றுகொண்டே கற்றுக்கொண்ட முதலீட்டாளர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நின்றுகொண்டே கற்றுக்கொண்ட முதலீட்டாளர்கள்!

மதுரை, தேவகோட்டையில் முதலீட்டுக் கூட்டம்...

நின்றுகொண்டே கற்றுக்கொண்ட முதலீட்டாளர்கள்!

மதுரை, தேவகோட்டையில் முதலீட்டுக் கூட்டம்...

Published:Updated:
நின்றுகொண்டே கற்றுக்கொண்ட முதலீட்டாளர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நின்றுகொண்டே கற்றுக்கொண்ட முதலீட்டாளர்கள்!

துரை, தேவகோட்டை நகரங்களில் நாணயம் விகடன், இன்டக்ரேட்டட் நிறுவனத்துடன் இணைந்து ‘செல்வதை சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அசெட் அலோகேஷன்’ என்னும் நிகழ்ச்சியை கடந்த வாரத்தில் நடத்தியது. 

நின்றுகொண்டே கற்றுக்கொண்ட முதலீட்டாளர்கள்!

தேவகோட்டையில் நடந்த கூட்டத்தில் முதலில் பேசிய நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் (NSE) துணை மேலாளர் ராகேஷ் ராமன், ‘‘சின்ன ஊர் என்றாலும்  இத்தனை முதலீட்டாளர்கள் திரண்டு வந்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் பங்கு வாங்குங்கள்; மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள். டிரேடிங்கூட செய்யுங்கள். ஆனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொண்டு செய்யுங்கள். முதலீடு என்பது அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது’’ என்று முதலீட்டாளர்கள் ஃபாலோ செய்ய வேண்டிய விதிமுறைகள் பற்றி தெளிவாக எடுத்துச் சொன்னார்.

 என்.எஸ்.டி.எல் நிறுவனத்தின் உதவி மேலாளர் சிவப்பழம், அந்த நிறுவனம் தரும் பல்வேறு வசதிகள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார். ‘பங்குகளை வாங்குகிறோம், விற்கிறோம். ஆனால், என்.எஸ்.டி.எல் நிறுவனம் எங்களுக்கு இத்தனை வசதிகளைச் செய்து தருகிறதா?’ என ஆச்சர்யத்துடன் முதலீட்டாளர்கள் அவரது பேச்சைக் கேட்டனர்.  இந்தக் கூட்டத்தில் பேசிய சிட்டி யூனியன் வங்கியின் தேவகோட்டை பிராஞ்ச் மேலாளர் கே.பழனியப்பன், பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க தனது வங்கி வழங்கும் ஆன்லைன் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நின்றுகொண்டே கற்றுக்கொண்ட முதலீட்டாளர்கள்!

தேவகோட்டையில் நடந்த கூட்டத்திலேயே முதலீட்டாளர்கள் திரண்டுவந்தால், மதுரை மக்கள் சும்மா இருப்பார்களா? அதுவும் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு, மோசடித் திட்டங்களில் பல கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் கண்டவர் களின் வேதனை அவர்களுக்கு மட்டுமே தெரியும்.  மதுரை மக்கள் இப்போது சரியான முதலீட்டுத் திட்டங்களை நோக்கி வேகமாக வருவதை இந்தக் கூட்டத்தின் மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. ‘உட்கார இடமில்லை என்றாலும் பரவாயில்லை. நின்றபடியே முதலீடு தொடர்பான விஷயங்களை நாங்கள் கற்றுக்கொள்கிறோம்’ என பல வாசகர்கள் நின்றபடி பேச்சாளர்களின் பேச்சைக் கேட்டதே இதற்கு சிறந்த உதாரணம். 

முதலீட்டின் அவசியத்தைக் குறித்தும், மற்ற  எல்லா முதலீடுகளையும்விட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எந்தளவுக்கு சிறந்தது என்பதைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துச் சொன்னார் இன்டக்ரேட்டட் நிறுவனத்தின்  உதவித் துணை மேலாளர் ரவிச்சந்திரன். எஸ்ஐபி மூலம் ஒருவர் தொடர்ந்து முதலீடு செய்வதினால் கிடைக்கும் வருமானம் குறித்து அவர் காட்டிய பல்வேறு கணக்குகளைப் பார்த்து முதலீட்டாளர்கள் பலரும் ஆச்சர்யப்பட்டனர். ‘‘இளம் வயதிலேயே முதலீடு செய்ய ஆரம்பியுங்கள். சரியான திட்டத்தைத் தேர்வு செய்யுங்கள். இடையில் நில்லாமல் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். இந்த மூன்று விஷயங்களை நீங்கள் செய்தால், நீங்கள் நிச்சயம் கோடீஸ்வரர்தான்’’ என்று சொன்னதை, முதலீட்டாளர்கள் மனதில் எழுதிக் கொண்டனர்.

நின்றுகொண்டே கற்றுக்கொண்ட முதலீட்டாளர்கள்!

இன்டக்ரேட்டட் நிறுவனத்தின் ஏஜிஎம் குருராஜன், ‘‘நம் எதிர்காலத் தேவைக்கான நிதித் திட்டமிடல் செய்யும்போது, இன்ஷூரன்ஸ் பாலிசியை முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். யாரோ சொல்லும் பாலிசியை எடுக்காதீர்கள். உங்களுக்குத் தேவையான இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தேர்வுசெய்யுங்கள்’’ என்றார்.

நிறைவாகப் பேசிய குடும்ப நிதித் திட்டமிடல் நிபுணரான சுரேஷ் பார்த்தசாரதி, ‘‘மிகப் பெரிய அளவில் செல்வம் சேர்த்தவர்கள் எல்லாம் தன் வாழ்நாளிலேயே அத்தனை செல்வத்தையும் இழந்ததற்குக் காரணம், ‘அசெட் அலோகேஷன்’ என்கிற விஷயத்தில் கவனம் செலுத்தாமல் போனதினால்தான்’’ என்றவர், ‘‘இனியாவது முதலீட்டாளர்கள் அனைவரும் அசெட் அலோ கேஷன் செய்துகொள்வது அவசியம்’’ என்றார்.

‘‘அசெட் அலோகேஷன் குறித்த எங்கள் அனைத்து குழப்பங்களும் தீர்ந்தது. நாணயம் விகடனுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்” என்று பாராட்டினார் ஒரு பெண்மணி. 

படங்கள் : சாய் தர்மராஜ்  கா.விக்னேஸ்வரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism