Published:Updated:

வேலைக்குச் செல்லும் பெண்களின் வெற்றி மந்திரங்கள்!

வேலைக்குச் செல்லும் பெண்களின் வெற்றி மந்திரங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
வேலைக்குச் செல்லும் பெண்களின் வெற்றி மந்திரங்கள்!

நாணயம் லைப்ரரி!

வேலைக்குச் செல்லும் பெண்களின் வெற்றி மந்திரங்கள்!

நாணயம் லைப்ரரி!

Published:Updated:
வேலைக்குச் செல்லும் பெண்களின் வெற்றி மந்திரங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
வேலைக்குச் செல்லும் பெண்களின் வெற்றி மந்திரங்கள்!
வேலைக்குச் செல்லும் பெண்களின் வெற்றி மந்திரங்கள்!

புத்தகத்தின் பெயர் : த கேரியர் கோட் (The Career Code) 

ஆசிரியர்கள் : Hillary Kerr & Katherine Power     

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பதிப்பாளர் : Harry N. Abrams

ன் நமக்கு இந்த நல்ல வேலை கிடைக்கவில்லை? ஏன் இந்த சூப்பர் கம்பெனி இன்டர்வியூவில் நாம் தேர்வாகவில்லை? எனக்கு மாத்திரம் ஏன் பதவி உயர்வும் பெரிய அளவிலான சம்பள உயர்வும் கிடைக்க மாட்டேன் என்கிறது? இதுமாதிரியான கேள்விகள் நம்மில் பலருக்கும் உண்டு. குறிப்பாக, பெண்களுக்கு நிறையவே உண்டு. இதற்கான பதில்களைத் தரும் புத்தகம்தான் ஹிலாரி கெர் மற்றும் கேத்ரின் பவர் என்ற இரண்டு பெண்மணிகள் இணைந்து எழுதிய ‘த கேரியர் கோட்’.

வேலைக்குச் செல்லும் பெண்களின் வெற்றி மந்திரங்கள்!

  ஆராய்ச்சி பண்ணுங்க!

இந்தப் புத்தகம் 17 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு, 17 தனித்தனியான விஷயங்களைச் சொல்கிறது. இறுதியாக, திறமையான, பயனுள்ள மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ, பெண்களுக்கு 27 போனஸ் விஷயங்களையும் தருகிறது.

முதல் வேலையைத் தேடிக்கொள்வது கொஞ்சம் குதிரைக் கொம்புதான். முதல் வேலையைத் தேடும்போது கொஞ்சம் அதிகமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆராய்ச்சியே சரியானதொரு வேலைக்கு முதல் கட்டமாக செய்ய வேண்டிய நடவடிக்கை ஆகும். முதலில் உங்களுக்கு அறிமுகமான கம்பெனியில் ஆரம்பித்து, உங்களுக்குப் பிடித்த கம்பெனியில் முடியும் அளவுக்கான ஆராய்ச்சிகளை செய்யுங்கள். இதுதான் உங்களுக்குத் தேவையான சரியான வேலையைப் பெற்றுத் தரும் சூத்திரமாகும்.

உங்களுக்குப் பிடித்த இருபது நிறுவனங்களை நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் பட்டியல் இடுங்கள். பிராக்டிக்கலாக பார்த்தால், நீங்கள் இருக்கும் ஊரில் இருக்கும் நிறுவனங்களில் சிலவற்றையே நீங்கள் பட்டியலிட வாய்ப்புள்ளது. இந்தப் பட்டியலில் சிறிய நிறுவனங்களும் பெரிய நிறுவனங்களும் தென்பட வாய்ப்புள்ளது. சிறிய நிறுவனங்களில் வேலைக்குப் போனால், நல்ல அனுபவமும், பல்வேறு ஏரியாக்களில் உள்ள நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள முடியும்.

அதே சமயம், சிறிய நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களையே கொண்டிருக்கும். செலவுக்குப் பயப்படும். அதனால் செளகரியக் குறைபாடு அதிகம் இருக்கும். பெரிய நிறுவனங்களில் வேலைக்குப் போனால், அது கொஞ்சம் வசதியாக இருக்கும். பணியும் ஓரளவுக்கு நிரந்தமாக இருக்கும்.  அன்றாடா நிகழ்வுகள் பலவற்றிலும் இதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும். இது குறித்து இவர்கள்தான் முடிவெடுக்க முடியும் என்று புரோட்டோகால்கள் எக்கச்சக்க மாக இருக்கும். உங்களுக்கு வரையறுக்கப்பட்ட எல்லைகளை தாண்டமுடியாது. உங்களுடைய சாய்ஸ் என்ன என்பதை முடிவு செய்யுங்கள்.

அடுத்து என்ன? பயோடேட்டாதான். பயோ டேட்டா பழைய பஞ்சாங்கம் போல் இல்லாமல், ‘அட, எதையோ புதிதாக சொல்கிறாரே!’ என்று சுவாரஸ்யமாக இருக்கும் அளவுக்கு இருக்க வேண்டும். ‘நான் ஸ்மார்ட்டானவள். என் டேஸ்ட் உயர்ந்தது. அதனாலேயே நீங்கள் என்னை வேலைக்குச் சேர்த்துக்கொள்ள வேண்டும்’ என்கிற மாதிரி  உங்கள் பயோடேட்டா இருக்கவேண்டும்.

  இன்டர்வியூ டிப்ஸ்!

இன்டர்வியூவுக்கு அழைக்கிறார்கள்? என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால், ஏற்கெனவே செய்த கம்பெனி குறித்த ரிசர்ச்சை மீண்டும் தெளிவாகச் செய்து கம்பெனி குறித்த முழு தகவலையும் மூளைக்குள் சேமித்துக்கொள்ள வேண்டும். நண்பர் ஒருவரை நம்மை இன்டர்வியூ செய்யச் சொல்லி, ரிகர்சல் பார்த்துக்கொள்வது நல்லது. இரண்டு செட் பயோடேட்டாவை கொண்டு செல்லுங்கள். என்ன மாதிரி உடை என்பதில் குழப்பம் இருந்தால், கம்பெனிக்கும் போன் போட்டு கேட்டுக்கொள்வது நல்லது.

சோஷியல் மீடியாவில் கொஞ்சம் அடக்கி வாசிப்பது வேலைக்கு வழிவகுக்கும். வார்த்தை ரெளடிகளையும், கலகக்காரர்களையும் அவர்கள் என்ன திறமைமிக்கவர்களாக இருந்தபோதிலும் வேலைக்குச் சேர்ப்பதை நீங்கள் நிர்வாகியாக இருந்தாலும் விரும்ப மாட்டீர்கள்தானே என்று நறுக்கென்று ஊசியேற்றுகிறார்கள் ஆசிரியர்கள்.

  வேலை கிடைத்தபின்...?


வேலை கிடைத்தபின் அலுவலகத்தினுள் எப்படி நடந்துகொள்வது என்பதை அறிந்து வைத்துக்கொண்டு தொடர்ந்து அதனை அப்டேட்டும் செய்துகொள்ளுங்கள்.  அலுவலகத்தின் உள்ளேயும் வெளியேயும் தகவல் பகிர்தல் என்பதில் கவனமாக இருங்கள். ஷேரிங் நல்லது. ஓவர் ஷேரிங் வேலைக்கு உலைவைத்துவிடும்.

  ரகசியம் காப்பது நல்லது!

பணியிடத்தில் எந்த நிலையில் இருந்தாலுமே வருமுன் காப்போரும், வருமுன் தயாராக இருப்போருமே மதிக்கப்படுவார்கள். அதாவது, ஒரு ஸ்டெப் அதிகமாக சிந்தித்துச் செயல்படுபவர்களே முன்னேற்றப்பாதையில் பயணிப்பர்.  உதாரணத்துக்கு, ஆரம்ப நிலை பணியாளராக இருந்தீர்கள் எனில்,  வேலையை சுலபமாக முடிக்கும் வழிகளையும், செலவைக் குறைக்கும் வழிகளையும், பிரச்னைகள் உருவாவதை தவிர்க்கும் வழிகளையும்  கண்டறிவதே சிறந்த பணியாகும்.

இடை நிலைப் பணியாளராக (மிடில் மேனேஜர்கள்) இருப்பவர்கள் தங்களுக்குத் தரப்பட்டிருக்கும் இலக்கினைத் தாண்டி செய்யும் வேலைகளே சிறந்த பணியாக கருதப்படும். சீனியர் லெவல் மேனேஜர் களாக இருந்தால், தொழிலில் என்ன மாறுதல்கள் வரப்போகிறது என்பதை முன்னரே உணர்ந்து செயல்படுதலே சிறந்த பணியாகும்.

வேலைக்குச் செல்லும் பெண்களின் வெற்றி மந்திரங்கள்!

வேலைக்குப் போகும் அனைவருமே ஏதாவது ஒரு சூழலில் கொடூரமான நபர்களை கையாள வேண்டியிருக்கும். பல  வகையான கொடூரர்களுடன் வேலை செய்ய வேண்டியிருக்கும். இவர்களுடன் தகவல் தொடர்பு வைத்திருத்தல் (கம்யூனிகேஷன்) என்பது மிகப் பெரிய கலையாகும். இதில் தவறு நேர்ந்தால், சேதாரம் நமக்குத்தான். ஏனென்றால், அவர்கள் அப்படித்தான் என்று நிர்வாகம் சப்பைக்கட்டு கட்டவே செய்யும். சமாளிக்க வேண்டியது மிக மிக அவசியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

  தீர்வுகளே முக்கியம்!

வேலைக்கு என்று போய்விட்டால், பிரச்னைகளை எதிர்கொண்டேயாக வேண்டும். உங்கள் பாஸிடம் பிரச்னையை மட்டுமே ஒருபோதும் எடுத்துச் செல்லாதீர்கள். தீர்வுகளுடன் சேர்த்து பிரச்னையை எடுத்துச் செல்லுங்கள்.

சம்பளம் பற்றி நிர்வாகத்துடன் பேசுவது கஷ்டமான காரியம்தான். கிளார்க் முதல் சிஇஓ வரை அவரவர் லெவலுக்கு ஏற்றாற்போல் இந்தப் பிரச்னை இருக்கவே செய்கிறது. தெளிவான திட்டம், நமக்கு என்ன வேண்டும், ஏன் வேண்டும், எதனால் வேண்டும் என முதலில்  நமக்கு நாமே தெளிவுபடுத்திக் கொண்டால் அதை நிர்வாகத்திடம் சொல்வதில் கஷ்டம் இருக்காது. உங்கள் பாஸைப் போல் நினைத்துக்கொண்டு உங்கள் செயல்பாடுகளை எடை போட்டுப் பாருங்கள். அப்போது புரியும் எங்கே நீங்கள் வீக், எங்கே நீங்கள் ஸ்ட்ராங் என்பது.

டென்ஷன், டென்ஷன் என வேலையில் எதிர்கொள்ளும் டென்ஷன் குறித்து டென்ஷன் ஆகாதீர்கள். உங்களுக்குத் தரப்படும் சம்பளம் அந்த டென்ஷனுக்கும் சேர்த்துதான். அதிகப் பொறுப்புகள் அதிக சம்பளத்தைப் பெற்றுத் தரும். அதிக பொறுப்புகள் என்பது அதிக  டென்ஷனையும் கொண்டுவரவே செய்யும். வேலையைப் போல் டென்ஷனையும் நிர்வாகம்  செய்தே ஆகவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

  முடிவாக..!

‘இது என் வேலை இல்லை’ என்ற நான்கு வார்த்தைகளை கோர்வையாய் ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். இது நெகட்டிவ் மனப்பான்மை என்று கருதப்படும். எல்லாப் பணி நிலைகளிலும் பாசிட்டிவ் மனப்பான்மையே மதிக்கப்படும் என்று முடிகிறது இந்தப் புத்தகம்.

ஏற்கெனவே தெரிந்த சில விஷயங்களும் சேர்த்துச் சொல்லப்பட்டிருந்தபோதிலும் அவை சொல்லப்பட்டிருக்கும் விதமும், வழிமுறைகளும் வேலைக்குப் போகும் அனைத்து பெண்மணிகளும் படிக்க வேண்டிய புத்தகம்!

- நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்  வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism