Published:Updated:

அடுத்த வீட்டைப் பார்க்காதீங்க!

அடுத்த வீட்டைப் பார்க்காதீங்க!
பிரீமியம் ஸ்டோரி
அடுத்த வீட்டைப் பார்க்காதீங்க!

ஜெ.வி.பிரவீன்குமார், ஓவியம்: ஹரன்

அடுத்த வீட்டைப் பார்க்காதீங்க!

ஜெ.வி.பிரவீன்குமார், ஓவியம்: ஹரன்

Published:Updated:
அடுத்த வீட்டைப் பார்க்காதீங்க!
பிரீமியம் ஸ்டோரி
அடுத்த வீட்டைப் பார்க்காதீங்க!

டுத்த வீட்ல அது பண்றாங்க, எதிர் வீட்ல இது பண்றாங்கனு எப்ப ஆராய்ச்சி பண்ண ஆரம்பிக்கிறோமோ, அப்பதான் சனி, ஞாயிறு நம்மை வெச்சு செய்ய ஆரம்பிக்குதுனு அர்த்தம்.

சாப்பாட்டில் எவ்வளவோ விஷயங்கள் கடைபிடிக்கச் சொல்லியிருக்காங்க முன்னோர்கள். ஆனா, எந்தப் புண்ணியவான் ஆரம்பிச்சு வெச்சதோ தெரியலை, சண்டே வந்திட்டா நான்வெஜ் சாப்பிடணும்கிற மேட்டரை மட்டும் மறக்காம செஞ்சிக்கிட்டு இருக்கிறாங்க. அட, ஒரு வாரம் இல்லைன்னாலும் அவ்வளவு அலுத்துக்கிறாங்க. சண்டேவிலதான் சாப்பிடணுமா? மண்டேவில் நான்வெஜ் சாப்பிட்டா, போலீஸ் பிடுச்சுடுமா என்ன?

க்கத்து வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்குதுனா இருந்துட்டுப் போகட்டுமே! அவங்க தேவைக்கு அது வெச்சிருக்காங்க. வாரத்துல ரெண்டுநாள் 10 ரூபாய்க்கு மல்லிகைப்பூ வாங்கி உள்ளே வைக்கவும், எப்பவோ 15 ரூபாய்க்கு வாங்கி மிஞ்சப்போகிற இட்லி மாவுக்கு அடைக்கலம் கொடுக்கவும் நாள் முழுக்க ஓடும் ஃபிரிட்ஜ் நமக்குத் தேவையா? கரன்ட் பில் கட்டுற காசுக்கு ஃப்ரஷ்ஷாவே வாங்கிச் சாப்பிடலாமே!

அடுத்த வீட்டைப் பார்க்காதீங்க!

ந்தப் பசங்க பண்ற அலப்பறை இருக்கே, தாங்க முடியல.  முன்னாடில்லாம் ஸ்கூல் படிக்கிற பசங்க பப்பர மிட்டாய் வாங்கிக் கொடுங்கனுதான் அடம் பிடிப்பாய்ங்க. இப்பெல்லாம் பைக் வாங்கிக் கொடுங்கனு அசால்ட்டா கேட்க ஆரம்பிச்சுட்டாய்ங்க. காரணம், கேட்டா க்ளாஸ்ல சுரேஷ் வெச்சிருக்கான்; ரமேஷ் வெச்சிருக்கான்னு பதில் சொல்றாங்க. அவங்க பத்து கிலோமீட்டர் ட்ராவல் பண்ணி வர்றாங்க. உங்க வீடு பத்தடி தூரத்துலதான் இருக்குது! உனக்கெதுக்கு பைக்கு ராஜேஷுன்னு கேட்டே ‘ஙே’ன்னு பார்க்குறதோட சரி!

க்கத்து வீட்டு அக்கா பச்சை கலர்ல கல் வெச்ச நெக்லஸ் போட்டுருக்கு, அதே மாதிரி ஒண்ணு வாங்கித்தாங்கன்னு வீட்டுக்காரர் தலையில கல்லைத் தூக்கி வைக்கிறதை யெல்லாம் தாய்க்குலம் எப்பத்தான் நிறுத்தப் போகுதோ!  அவங்களுக்கு அந்த நெக்லஸ் நல்லாயிருக்குது. உங்களுக்கு ஆல்ரெடி போட்டிருக்கிற செயினே நல்லாத்தானே இருக்கு! பிறகு புதுசு எதுக்கு?

ஃபாரீன்ல ஒருத்தர் வேலை பார்க்கிறார்னா, நெட்வொர்க்கே கிடைக்காத ஊரா இருந்தாலும் அவரோட வீட்ல யாராவது அல்ட்ரா மாடர்ன்ல ரொம்ப அப்டேட்டான வெர்சன்ல காஸ்ட்லியான செல்போன் ஒண்ணை வெச்சிருப்பாங்க. பச்சை பட்டனும் சிவப்பு பட்டனையும்தான் அழுத்தத் தெரியும்னாலும் ஏன் அதை வாங்கி வெச்சிருக்காங்கன்னா... எதிர்வீட்டு அக்கா அதே மாதிரி செல்போன் வெச்சிருக்குல அதுக்குதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism