Published:Updated:

விவேக் ராமசாமி: 30 வயதில் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்!

விவேக் ராமசாமி: 30 வயதில் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்த  தமிழர்!
பிரீமியம் ஸ்டோரி
விவேக் ராமசாமி: 30 வயதில் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்!

ஞா.சக்திவேல் முருகன்

விவேக் ராமசாமி: 30 வயதில் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்!

ஞா.சக்திவேல் முருகன்

Published:Updated:
விவேக் ராமசாமி: 30 வயதில் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்த  தமிழர்!
பிரீமியம் ஸ்டோரி
விவேக் ராமசாமி: 30 வயதில் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்!
விவேக் ராமசாமி: 30 வயதில் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்த  தமிழர்!

முப்பது வயதில் எந்த வேலையும் கிடைக்க மாட்டேன் என்கிறது என்பதும், கிடைத்த வேலையில் திருப்தி இல்லாமல் தடுமாறிக்கொண்டு இருக்கிற இளைஞர்களுக்கு மத்தியில் முப்பதே வருடத்தில் நூறு கோடி ரூபாய்க்குச் சொந்தக் காரராகி இருக்கிறார் விவேக் ராமசாமி. இவரது வியக்கத்தக்க வளர்ச்சி, ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இளம் தொழில்முனைவோர் பட்டியலில் இவரது பெயரை இடம்பிடிக்கச் செய்திருக்கிறது. 

 யார் இந்த விவேக்?

இவர் அமெரிக்காவில் ரொய்வன்ட் சயின்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அதில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். இவரது நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இவரது நிறுவனப் பெயரை கேட்டாலே பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கிலியும், சிறிய பயோ டெக்னாலஜி, பார்மா நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியும் தருகிறது.

இதற்குக் காரணம், ‘‘பல மருந்துகளைக் கால ஓட்டத்தில் மறந்துவிட்டோம் அல்லது அந்த மருந்துகளைத் தயாரிக்க முதலீடு செய்யாமல் இருந்துவிட்டோம். பெரிய பார்மா நிறுவனங்கள் மட்டுமே அனைத்துக்கும் மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பதில்லை. மிகச் சிறிய நிறுவனம் கூட மிகப் பெரிய மருந்தினைக் கண்டுபிடிக்க வேண்டும்’’ என்கிறார் விவேக்.

 கவர்ந்திழுத்த மருந்து தயாரிப்பு!


தென் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வில் வேலைவாய்ப்புக்காக இடம்பெயர்ந் தவர்கள் இவரது பெற்றோர்கள். அப்பா, ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியா ளர். அம்மா, முதியோர் மனநல மருத்துவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயாலஜி மூலம் உலகை மாற்ற முடியும் என்று நம்பி பயாலஜி படித்தார் விவேக்.  பள்ளியிலும், கல்லூரியிலும் அதிக நாட்கள் ஓட்டக்கூடாது என்று முடிவெடுத்தவரின் ஆர்வம், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது கவனம் பதிந்தது. உலகம் எந்த மருந்து பொருளைத் தேடி ஓடுகிறது என்பதைக் கணித்து அதனைத் தயாரிக்க ஆரம்பித்தார். 

அல்சைமர்  என்ற மறதி நோய் அமெரிக்காவில் பெரிய பிரச்னையாக உருவெடுக்க சட்டெனப் புரிந்துகொண்டார். அதற்கான மருந்தைத் தயாரிக்கும் புதிய நிறுவனத்துக்கு அசோவன்ட் என்று பெயரிட்டு மருந்து தயாரிப்பிலும் இறங்கினார். மொத்த பணியாளர்கள் 12 பேர் மட்டுமே. அதில் அவரது அம்மாவும், சகோதரரும் அடங்குவர். இவரின் நிறுவனத்தில் கல்லூரி படித்து முடித்தவர்கள் சில பேரையும், இரண்டு பயோடெக்னாலஜி ஜாம்பவான்களையும் வேலைக்கு வைத்திருக்கிறார். இந்த இருவரும் ஏற்கெனவே ஆராய்ச்சித் துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். 

அசோவன்ட் நிறுவனம் தொடங்கி ஒரே வருடத்தில் 360 மில்லியன் டாலர் முதலீட்டை எட்டியது. இந்த நிறுவனத்தை வாங்க கிளக்சோஸ்மித் கிளைன் முயற்சி செய்ய, அதன் பின்பு இந்த நிறுவனத்தின் மதிப்பு கடகடவென ஐந்து பில்லியன் டாலர் வரை உயர்ந்தது.  கிளக்சோஸ்மித் நிறுவனம் வாங்கும் முயற்சி தோல்வியில் முடியவே, அதன் பங்கு விலை கடுமை யாக சரிந்தது. ஆனாலும், விவேக்கின் வளர்ச்சியை ஒன்றும் செய்ய முடியவில்லை. 

மருந்து தயாரிப்பு டு முதலீடு!

கிளக்சோஸ்மித் கிளைன் கற்றுக்கொடுத்த பாடத்தை வைத்தும், அசோவன்ட் நிறுவனத்தின் மூலம் கிடைத்த லாபத்தை வைத்தும் தனியார் (ஹெச் ஃபண்ட்) முதலீட்டு நிறுவனத்தை ரொய்வன்ட் என்ற பெயரில் ஆரம்பித்தார்  விவேக். இந்த நிறுவனம் பயோடெக்னாலஜி நிறுவனங்களுக்கும், பார்மா நிறுவனங்களுக்கும் முதலீட்டு உதவி செய்யும். குறிப்பாக, அரிதான நோய்களுக்கு மருந்து தயாரிக்கும் சிறு நிறுவனங்களிலும் முதலீடு செய்ய ஆரம்பித்தார்.  இதன் மூலம் பார்மா துறை வளர்ச்சி அடையும் போது பெருமளவில் வருமானம் கிடைக்கும்.

2008-ம் ஆண்டு பார்மாசெட் என்ற நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தார். பார்மாசெட் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 5 டாலர். 2011-ம் ஆண்டு அதே பங்கின் விலை 137 டாலர். மூன்று வருடத்தில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஒருவராக உயர்ந்திருக்கிறார். இதைப்போலவே, பல சிறிய பார்மா நிறுவனங்களில் முதலீடு செய்து மூன்றே வருடத்தில் பில்லியனராகி இருக்கிறார். இதன் மூலம் இவர் மிகவும் இளம் வயதில் பில்லியனர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார். போர்ப்ஸ் நிறுவனம் ரொய்வன்ட் நிறுவனத்தின் மதிப்பு 3.5 பில்லியன் என மதிப்பிட்டு இருக்கிறது.

 இளம் வயது பில்லியனர்!

கடந்த ஐந்து வருடத்தில் நியூயார்க் பங்கு சந்தையில் பயோ டெக்னாலஜி இண்டெக்ஸ் 300% உயர்ந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் நாஸ்டாக் இண்டெக்ஸ் 100% உயர்ந்திருக்கிறது. எஸ் அண்ட் பி 500 பங்குகள் இண்டெக்ஸ் 70% மட்டுமே உயர்ந்திருக்கிறது. கேன்சருக்கு மருந்து தயாரிப்பு, ஹெபடைடிஸ் சி-க்கான மருந்துகள், ஜீன் குறைபாட்டால் வரும் பிரச்னைகளுக்குத் தீர்வுகள் எனப் பலவிதமான முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. மேலும், அரசு அதிக விலைக்கான மருந்துகளை நிறுத்தி, குறைந்த விலையில் தரமான மருந்துகள் தயாரிப்பு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இந்த விஷயங்கள் எல்லாம் விவேக் ராமசாமி நிறுவனத்துக்கு உதவியாக இருக்கிறது.

மருந்து தயாரிப்பில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்தவர், ஹெபடைடிஸ் சி, ரத்த செல் நுரையீரல் வைரஸ் போன்றவற்றுக்கு மருந்து தயாரிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்த இரண்டு நோய்களும் 30 லட்சம் அமெரிக்கர் களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. மருத்துவத் துறையில் பல புதிய ஆராய்ச்சி களுக்கான முதலீட்டை இவரது நிறுவனம் செய்து வருகிறது. 

இந்திரா நூயி உள்ளிட்ட பல பிரபலங்கள்    2016-ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த டாப் 25 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள வேளையில், இப்போது ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் இளம் தொழில் முனைவோர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் விவேக். ‘‘விரைவில் உலக அளவில் மிகப் பெரிய பயோடெக்னாலஜி நிறுவனத்தின் தலைவராகவும், அறிவுசார் அனுபவத்திலும் உலக அளவில் இடம்பிடிப்பார்’’ என்கிறார் இவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த யேல் பல்கலைக்கழக பேராசிரியர்.

விவேகமாக முதலீடு இவரை புதிய உச்சிக்குக் கொண்டு செல்லும் என்று எதிர்பார்ப்போம்! வாழ்த்துகள் விவேக்! 

விவேக் ராமசாமி: 30 வயதில் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்த  தமிழர்!

அபூர்வா மேத்தா: பெருமை சேர்த்த இன்னொரு இந்தியர்!

ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் பட்டியலில் இன்னொரு இந்தியரும் இடம் பிடித்திருக்கிறார். இந்தப் பட்டியலில் 31-வது இடம் பிடித்திருக்கிறார் அபூர்வா மேத்தா.  இவரது  சொத்து மதிப்பு 360 மில்லியன் டாலர். இவரது குடும்பம் 2000-ம் ஆண்டில் கனடாவுக்கு குடிபெயர்ந்தது. இவர் கனடாவில் வட்டார்லு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு படித்தார். பிளாக்பெரி, குவால்காம், அமேசான் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.  2012-ம் ஆண்டு மளிகைப் பொருட்களை வீடு தேடி கொண்டு சேர்க்கும் வகையில் நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். மொபைல் ஆப்ஸ் மூலம்  மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்தால்போதும், உங்கள் வீட்டுக்கு மளிகைப் பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள். இப்போது இவரது நிறுவனத்தின் மதிப்பு இரண்டு பில்லியன் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.  இவரது நிறுவனத்துக்கு  பல பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்யத் தயாராக இருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism