Published:Updated:

ரகுராம் முதல் பணத் தட்டுப்பாடு வரை! - 2016 ஸ்கேன் ரிப்போர்ட்

ரகுராம் முதல் பணத் தட்டுப்பாடு வரை! - 2016  ஸ்கேன் ரிப்போர்ட்
பிரீமியம் ஸ்டோரி
ரகுராம் முதல் பணத் தட்டுப்பாடு வரை! - 2016 ஸ்கேன் ரிப்போர்ட்

சோ.கார்த்திகேயன்

ரகுராம் முதல் பணத் தட்டுப்பாடு வரை! - 2016 ஸ்கேன் ரிப்போர்ட்

சோ.கார்த்திகேயன்

Published:Updated:
ரகுராம் முதல் பணத் தட்டுப்பாடு வரை! - 2016  ஸ்கேன் ரிப்போர்ட்
பிரீமியம் ஸ்டோரி
ரகுராம் முதல் பணத் தட்டுப்பாடு வரை! - 2016 ஸ்கேன் ரிப்போர்ட்

பல பாசிட்டிவ் மற்றும் சில நெகட்டிவ் சம்பவங்களுடன் 2016-ம் ஆண்டு நிறைவுபெறும் தருணம் இது. பரபரப்பான பல சம்பவங்களில், சில முக்கிய நிகழ்வுகளை மட்டும் சற்று திரும்பிப் பார்ப்போம்.

 பிப்ரவரி 29 :
பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்!


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்     2016 பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கியது. 25-ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 29-ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. பட்ஜெட்டில், தனிநபர் வருமானத்தின் மீதான வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை; கம்பெனி கள் மீதான வரி குறைக்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ.12 செலுத்தினால் ரூ.2 லட்சம் இழப்பீடு கிடைக்கும் விபத்துக் காப்பீட்டுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைத்து ஒரே பட்ஜெட்ஆக தாக்கல் செய்யவும், பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டை இனி பிப்ரவரி 1-ம் தேதி அன்றே தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

  ஜூன் 23 : பிரெக்ஸிட் விவகாரம்!

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பதா, விலகுவதா என்பது குறித்து பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு ஜூன் 23-ம் தேதி நடந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற 52% பேரும், ஐரோப்பிய ஒன்றியத்தி லேயே நீடிக்க 48% பேரும் கருத்துத் தெரிவித்தனர்.

முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், உலக அளவில் பங்குச் சந்தைகள் மற்றும் கரன்சிகளின் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்தன. டேவிட் கேமரூன் பதவி விலக வேண்டும் என போர்க் கொடி உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக டேவிட் கேமரூன் அறிவித்தார்.

ரகுராம் முதல் பணத் தட்டுப்பாடு வரை! - 2016  ஸ்கேன் ரிப்போர்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

  ஜூன் 27 : புதிய நிதிக் கொள்கை குழு!

ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையில் ஆறு பேர் கொண்ட புதிய குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவில், ரிசர்வ் வங்கி கவர்னர் உள்பட, அதன் சார்பில் மூன்று பேரும், ரிசர்வ் வங்கிக்கு வெளியிலிருந்து பொருளாதார நிபுணர்கள் மூன்று பேரும் நியமிக்கப்பட்டனர். இந்த ஏழு பேரும் இணைந்து நிதிக் கொள்கை குறித்து முடிவு செய்வார்கள். நிதிக் கொள்கை குறித்து முடிவெடுப்பதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் அளிக்கும் வாக்கின்படி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

  ஜூலை 20 : ரூ.23,000 கோடி நிதியுதவி!

பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன், முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. பொதுத் துறை வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம் மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. வங்கிகள் அளித்த கடன் வசூலிக்கப்படாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னைகளில் இருந்து வங்கிகளை மீட்கும் வகையில், பாரத ஸ்டேட் வங்கி உள்பட, 13 பொதுத் துறை வங்கிகளுக்குப் புத்துயிர் அளிக்க, 23 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது.

  ஆகஸ்ட் 3 : ஜிஎஸ்டி நிறைவேற்றம்!

சரக்கு மற்றும் பொருட்களுக்கான வரி (GST) மசோதா மிக முக்கியமானது. இது ஐக்கிய முற்போக்கு அரசால் கடந்த 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவை சில காரணங்களால் நிறைவேற்ற முடியவில்லை. பா.ஜ.க அரசு வெற்றி பெற்று இந்த மசோதாவை மக்கள் அவையில் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியது.

ஆனால், மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. மக்களவையைப் போல், மாநிலங்களவையில் பா.ஜ.க அரசுக்குப் பலம் இல்லாததே காரணம். இந்த நிலையில், நீண்ட காலமாக நிறைவேறாமல் இருந்த ஜிஎஸ்டி மசோதாவானது எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையில் ஆகஸ்ட் 3-ம் தேதி நிறைவேறியது.

  ஆகஸ்ட் 20 : புதிய கவர்னர் உர்ஜித் படேல்!

ரகுராம் ராஜன் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே அவர் மீது பல விமர்சனங்களை எழுப்பினார் பா.ஜ.கவின் மூத்த தலைவரான சுப்பிரமணியம் சுவாமி. அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா, படாதா என்கிற சூழலில் அவரே கவர்னர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று அறிவித்தார்.

ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிந்த நிலையில், மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் படேல் (52) ஆகஸ்ட் 20-ம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் இதற்குமுன் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்தார். ரிசர்வ் வங்கி கவர்னராக பலரது பெயர்கள் பரிசீலிக்கப் பட்ட நிலையில், அமைச்சரவைச் செயலாளர் தலைமையிலான நிதித் துறைக் கட்டுப்பாடு நியமனங்கள் கமிட்டி மேற்கொண்ட பரிந்துரையின் அடிப்படையில் உர்ஜித் படேல் கவர்னராக நியமிக்கப்பட்டார். 

  அக்டோபர் 24 :
சைரஸ் மிஸ்திரி நீக்கம்!


டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி அக்டோபர் 24-ம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டார். இவருக்குப் பதிலாக, சில மாத காலத்துக்கு ரத்தன் டாடா தலைவராக இருப்பார் என டாடா சன்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இதன்பிறகு மிஸ்திரி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்திய ரத்தன் டாடா தலைமை, அவரை டாடாவின் பிற நிறுவனங்களின் தலைமையில் இருந்தும் நீக்கியது. 

  நவம்பர் 8 : பண மதிப்பு நீக்கம்!

உள்நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, நவம்பர் 8-ம் தேதி, இரவு 8.15 மணி அளவில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் டெபாசிட் செய்யலாம். இதற்கு எவ்வித வரம்பும் கிடையாது என்று சொன்னார். கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்கும் ஒரு நடவடிக்கை என்று சொன்னார்.

பிரதமரின் கோரிக்கையை மனமுவந்து ஏற்றுக்கொண்ட மக்கள், தங்களிடம் உள்ள பணத்தை எல்லாம் வங்கிகளில் டெபாசிட் செய்தனர். ஆனால், பழைய பணத்துக்கு ஈடாக புதிய பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பணத் தட்டுபாட்டினால் இன்றும் மக்கள், வங்கிகள்,  ஏடிஎம்-கள் முன்பு வரிசையாக நிற்கின்றனர்.

  நவம்பர் 9 : அமெரிக்க அதிபர் ஆனார் டொனால்ட்!

அமெரிக்க அதிபராகப் பதவி வகிக்கும் ஒபாமாவின் பதவிக் காலம் வருகிற ஜனவரியில் முடிகிறது. இதனை அடுத்து அதிபர் பதவிக்கு, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் (70), ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் (69) ஆகியோர் இடையே நிலவிய கடும் போட்டி நிலவியது. உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தத் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்று அமெரிக்க அதிபர் ஆனார்.

  நவம்பர் 23 : பேமென்ட் வங்கிகள்!

நிதிச் சேர்ப்பினை ஊக்குவிப்பதற்காக பேமென்ட் வங்கிகளுக்கு அரசு அனுமதி அளித்தது. நாட்டின் முதல் பேமென்ட் வங்கியை ஏர்டெல் நிறுவனம் ராஜஸ்தானில் நவம்பர் 23-ம் தேதி துவங்கியது.
பேமென்ட் வங்கிகள் இந்திய வங்கித் துறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதும்  வங்கிச் சேவை பெறாமல் இருக்கும் பிரிவினருக்கு எளிதாக பணப் பரிவர்த்தனை மற்றும் பணம் செலுத்தும் வசதிகளை இந்த வங்கிகள் சாத்தியமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரகுராம் முதல் பணத் தட்டுப்பாடு வரை! - 2016  ஸ்கேன் ரிப்போர்ட்

  டிசம்பர் 14 : வட்டி விகிதத்தை உயர்த்தியது அமெரிக்க ஃபெட்!

அமெரிக்க மத்திய வங்கி டிசம்பர் 14-ல் வட்டி விகிதத்தினை உயர்த்தியது. இதற்குமுன் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் 0.50 சதவிகிதமாக இருந்தது. இப்போது 0.25% அதிகரிக்கப்பட்டு 0.75 சதவிகிதமாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், அமெரிக்காவில் இரண்டாவது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதாக மத்திய வங்கியின் தலைவர் ஜேனட் யெலன் தெரிவித்தார்.

  டிசம்பர் 19 :
ரூ.5,000 மட்டுமே டெபாசிட்!


பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஒரு நாளைக்கு ரூ.5,000 மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என முதலில் ஆர்பிஐ அறிவித்தது. பிறகு கட்டுப்பாட்டை நீக்கியது.

படம் : ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism