இந்தியாவில் அதிகமாக சம்பளம் வழங்கும் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கின்றன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள். அபரிமிதமான வளர்ச்சியும், நல்ல சம்பளமும், நிறைய கற்றுக்கொள்வதற்கான தளமாகவும் இருப்பதால், இளைஞர்களுக்கு நல்ல களமாக இருக்கிறது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள். தற்போது மத்திய அரசும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், இந்தத் துறையில் இருப்பவர் களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கிறது. இப்போது இன்ஃபோசிஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து, அவர்களின் ஐடியாக்களுக்கு செயல்வடிவம் கொடுத்து அதனை வளர்த்து வருகிறார்கள்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறித்து, வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் முராய் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (Muraai Information Technology) நிறுவனத்தின் இணை நிறுவனர் செந்தில் நடராஜனிடம் பேசினோம்.

“உலக அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ந்து இருந்தாலும், இந்தியாவில் இப்போதுதான் ஆரம்பக் கட்ட வளர்ச்சியில் இருக்கிறது. இப்போதுதான் நம் நாட்டில் டிஜிட்டலைஷேசனுக்கு அதிக முக்கியத்துவம் தர ஆரம்பித்திருக்கிறோம். இனி டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷனில் இயங்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதால், நிச்சயம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் ஏராளமாகக் கிடைக்கும். இந்த டெக்னாலஜி பெருமளவிலான மக்களைச் சென்றடைய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் சாஃப்ட்வேரை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமல்லாமல், ஹார்டுவேர் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி நிலையினை எட்ட இன்னும் ஐந்து ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை ஆகும். இந்த சமயத்தில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் நுழைபவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்த துறையில் ஆண்டுக்கு 15 - 20% வளர்ச்சி இருக்கும்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் புது ஐடியாக்களைச் செயல்படுத்தி அதன் மூலம் வருமானத்தைப் பெருக்கலாம். ஆகையால், புதிய ஐடியாக்களுடன் வலம் வரும் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, காப்புரிமை பெறத்தக்க அளவில் ஐடியாக்களை வைத்திருப்பவர் களுக்கு மிகப் பெரிய வாய்ப்புகள் உண்டு. இவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

பேடிஎம் போன்ற நிறுவனங்கள் எல்லாம் அவர்களுக்குள் ஒரு புராடக்டை வைத்து, அதன் மூலம் சர்வீஸ் துறையில் இறங்கி இருப்பதால், இவர்களுக்கு வாய்ப்புக் கூடி வருவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இப்போது பெருமளவில் வருமானத்தையும் பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இவர்களைப்போல் நுகர்வோர் சார்ந்து இருக்கும் ஸ்டார்ட் அப்கள், இனி வரும் காலங்களில் வேகமாக வளர்வார்கள்.

வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

இப்போது தினந்தோறும் புதிய டெக்னாலஜி அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்த புதிய டெக்னாலஜியை யார் வேகமாகக் கற்றுக்கொண்டு, அதனை மக்களின் பயன்பாட்டுக்கு தகுந்தளவில் மாற்றுகிறார்களோ, அவர்களுக்கு வேலை நிச்சயம் கிடைக்கும். அட்வான்ஸ்டு வெப் டெக்னாலஜி, மொபைல் டெக்னாலஜி, கிளவுட் டெக்னாலஜியையும் நன்கு கற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய டெக்னாலஜி அறிமுகமாகும்போது அதனையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். இவர்கள் முதலாவது ஆண்டில் வேலை பெறும்போது ஆண்டுச் சம்பளமாக மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் பெறுவார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு இவர்களது சம்பளம் இரண்டு முதல் நான்கு மடங்காகி, கை நிறைய சம்பளம் கிடைக்கும்.

யார் தேர்ந்தெடுக்கலாம்?

நல்ல ஐடியாக்களுடன் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருப்பவர்களுக்கு நிச்சயம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்தான் வேலை செய்ய சரியான இடம். செய்த வேலையையே செய்துகொண்டிருக்காமல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார்ந்த வகையில் புதியதாகவும், சவாலாகவும் எடுத்துக்கொண்டு பணி செய்ய வேண்டும். இங்கு பிரச்னைகளுக்குத் தீர்வு தேடுபவராகவும், வேகமான வகையில் செயல்படுபவராகவும் இருக்க வேண்டும்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் குறைந்த வளத்தைக் கொண்டு, அதிக அளவிலான மக்களைச் சென்றடைய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. இங்கு நேரம், காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். கொஞ்சம் ஆர்வத்துடன் உழைத்தால், தன்னாலேயே ஸ்மார்ட்டாக மாறிவிடுவார்கள். நீங்கள் நினைக்கும் விஷயங்களைச் செயல்படுத்தி பார்க்கும் வாய்ப்புகளும் அதிகம்.

எதிர்கால வளர்ச்சி!

இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது. இன்னமும், இந்தியாவில் உற்பத்தித் துறையில் பெரும்பாலான நிறுவனங்கள் காலங்காலமாக கடைபிடித்த பழைய தொழில்நுட்பங்களையே பயன்படுத்தி வருகின்றன. இவர்கள் நவீன தொழில்நுட்பத்தை கையாள ஆரம்பித்தால், உற்பத்தியும் அதிகரிக்கும். வருமானமும் உயரும்.

தற்போதுதான் நாம் சரியான திசையினை நோக்கி பயணிக்க ஆரம்பித்து இருக்கிறோம். இதற்கு உறுதுணையாக, இந்தியாவின் பொருளாதாரமும் முன்னேற்றத்தில் இருக்கிறது. நிலையான அரசும் மத்தியில் அமைந்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பல முக்கிய மாற்றங்களையும் செய்து வருகிறது. இதனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி தவிர்க்க முடியாது.

மத்திய அரசு இப்போது ஸ்டார்ட் அப் குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறது. நிதி அளவிலும், நிர்வாக அளவிலும் எளிமைப்படுத்தும் போது உலக அளவில் கவனத்தை ஈர்க்கலாம். ஆரம்ப காலத்தில் பெங்களூரு, மும்பை, டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெறலாம்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இன்னொரு சிறப்பு, நெகிழ்வுத் தன்மை (Flexible) கொண்ட வகையில் வேலை நேரம் இருக்க வாய்ப்புள்ளது. வீட்டில் இருந்துகூட பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது. நிறுவனங்கள் பணியில் இறுதி விளைவுகள் குறித்துதான் கவனம் செலுத்தும் என்பதால் மிகுந்த நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும்.

பெரிய நிறுவனங்களோடு ஒப்பிடும்போது, இங்கு வளர்ச்சியும் அதிகம். நிறைய கற்றுக்கொள்ளவும் முடியும். பெரிய நிறுவனத்தில் இரண்டு வருடம் வேலை பார்த்தாலும், குறிப்பிட்ட அளவுதான் சம்பளம் உயரும். ஆனால், ஸ்டார்ட் அப்பில் சம்பளம் அபரிமிதமாக உயரும். புதுமையான வேலையைப் பிடித்த மாதிரி செய்ய நினைப்பவர்களுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் வேலை செம விருந்துதான்” என்று முடித்தார் செந்தில் நடராஜன்.

இ்ன்றைக்குப் படித்து முடித்து வரும் இளைஞர்கள் பலர், கால மாற்றங்களுக்கேற்ற வகையிலான புதிய சிந்தனைகளோடு மிளிர்வதைப் பார்க்கலாம். மிகக் குறுகிய காலத்தில் அதிவேக உற்பத்தித் திறனைக் காட்டக்கூடிய டெக்னாலஜியிலும் வல்லவர்களாக இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள். பயிற்சியுடன் கூடிய முயற்சி அவர்களை ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஜொலிக்க வைப்பதாக இருக்கும் என நம்பலாம். 2017-ல் படித்து முடிக்கும் இளைஞர்களின் பட்டியலில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இடம் பெறட்டும்!

விஜயா வங்கியில் 44 பேருக்கு வேலைவாய்ப்பு!

பணியின் பெயர்: புரபஷேனரி ஆபீஸர் பணி (பாதுகாப்பு / மொழி / சட்டம்)

கல்வித் தகுதி : பட்டதாரி / முதுகலை ஆங்கிலம் / முதுகலை ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ் படிப்பு. 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மற்றும் மாற்றுத் திறனாளிகள் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 20 - 45 வயது வரை. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு வயது வரம்பு விலக்கு உண்டு.

விண்ணப்பக் கட்டணம் : தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு 100 ரூபாயும், மற்றவர்களுக்கு 600 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 09-01-2017.

மேலும் விவரங்களுக்கு : https://www.vijayabank.com/Careers/Careers-Details?jobid=01/2016

ஏர் இந்தியா நிறுவனத்தில் 191 பேருக்கு பணி

பணியின் பெயர் : துணை முனைய மேலாளர் மற்றும் துணை நிர்வாக அலுவலர் பணி.

கல்வித் தகுதி: பட்டப்படிப்பு

விண்ணப்பிக்க கடைசி நாள் : 16-01-2017.

மேலும் விவரங்களுக்கு : http://www.airindia.in/careers.htm

பிரசார் பாரதி நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகள் 33 பேருக்கு பணி!

பணியின் பெயர்: அலுவலகப் பணி

கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு / ஐடிஐ பயிற்சி

வயது வரம்பு: 25 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 23-01-2017.

மேலும் விவரங்களுக்கு: http://www.prasarbharati.gov.in/Opportunities/Employment/Pages/default.aspx

மத்திய அரசில் பல்வேறு பணிகளுக்கு தேர்வு!

பணியின் பெயர் : உளவுப் பிரிவில் அதிகாரி பணி

கல்வித் தகுதி: எலெக்ட்ரிக்கல் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இளநிலை இன்ஜினீயரிங் படிப்பு

வயது வரம்பு : 35

விண்ணப்பிக்க கடைசி நாள் : 12-01-2017.