Published:Updated:

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 6

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 6
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 6

பிடிவாதத்தால் இழந்த வாழ்க்கை!சுரேஷ் பார்த்தசாரதி Founder, Myassetsconsolidation.com Registered investment advisor, INA200000878

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 6

பிடிவாதத்தால் இழந்த வாழ்க்கை!சுரேஷ் பார்த்தசாரதி Founder, Myassetsconsolidation.com Registered investment advisor, INA200000878

Published:Updated:
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 6
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 6
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 6

முருகேஷ், நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சார்ந்தவர். அமெரிக்காவில் பணிபுரிகிறார். மனைவி லலிதா, மகன் தினேஷுடன் அங்கேயே வசித்து வந்தார். ஒரு கட்டத்தில் லலிதாவுக்கு அமெரிக்காவில் வசிக்கப் பிடிக்கவில்லை. இந்தியாவில் தன் பெற்றோர் இருப்பதால், தானும் குடும்பத்துடன் இந்தியா வந்துவிட வேண்டும் என்று விரும்பினார். ஆனால், மாமனார் வீட்டினர் தனது தனிப்பட்ட  விஷயங்களில் தலையீடு செய்ததால், முருகேஷ் இந்தியா வருவதை விரும்பவில்லை.

அமெரிக்காவில் வேறு ஏதோவொரு தவறான தொடர்பு இருப்பதால்தான், இந்தியா வர மறுப்பதாக கணவர் மீது குற்றம் சுமத்தினார் லலிதா. ஒருகட்டத்தில் மகனை அழைத்துக்கொண்டு லலிதா இந்தியாவுக்கு வந்துவிட்டார். டெல்லியில் தன் அம்மாவின் வீடு இருப்பதால், அங்கேயே குடியேறினார். டெல்லியில் தனக்காக சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கினார்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 6

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



பலமுறை கணவரை டெல்லிக்கு அழைத்தும் முருகேஷ் வர சம்மதிக்காததால், லலிதா விவாகரத்துக் கேட்டு விண்ணப்பித்தார். முருகேஷும் தன் மகனின் எதிர்காலத்துக்காக சப்போர்ட் செய்வதாக நீதிமன்றத்தில்  சொல்லிவிட்டார். மாதம் ரூ.75 ஆயிரம் செலவுக்குத் தருவதாகச் சொல்லியுள்ளார்.

பல சொத்துக்களையும் மனைவி பெயரில் வாங்கியிருந்திருக்கிறார் முருகேஷ். சில முதலீடு களையும் மனைவி பெயரில் மட்டுமே செய்திருக்கிறார். எனவே, விவாகரத்தான சூழலில் பெரும்பகுதியான சொத்துகளும் லலிதாவுக்கு சேர்ந்துவிட்டன.

இதெல்லாம் நடந்து ஒரு சில வருடங்கள் கழித்து முருகேஷ் என்னைத் தேடி வந்தார். தன் அப்பா நெல்லையில் கிராமத்தில் தனியாக இருப்பதாகவும், தான் சென்னை வந்துவிட்டால், அவரையும் சென்னைக்கு அழைத்துவந்து கவனித்துக்கொள்ள முடியும். எனவே, தான் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்துவிடலாமா என்று கேட்டார்.

சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றையும் வாங்கி வைத்திருந்தார். முருகேஷ் சென்னைக்கு வந்துவிடலாமா என முடிவெடுக்கும்போது அவருக்கு 54 வயது.

முருகேஷுக்கு இன்னுமொரு பிரச்னையும் இருந்தது. இந்தியாவுக்கு வந்துவிட்டால் லலிதாவுக்கு மாதம் 75 ஆயிரம் ரூபாய் தரமுடியாது என்பதுதான் அது. சம்பாதிக்கும் வரையில் பணம் கொடுப்பதாக நீதிமன்றத்தில் சொல்லியுள்ளார். இந்தியாவில் வந்து வேலை பார்க்கும் நிலையில் சம்பாதிக்கும் மொத்தப் பணத்தையும் லலிதாவுக்கே தர வேண்டியிருக்குமே எனக் கவலைப்பட்டார். ஆனால், தான் பணம் தராவிட்டால் பையனின் எதிர்காலம் பாதிக்குமே என்றும் நினைத்தார்.

ஏற்கெனவே சென்னையில் மனை ஒன்றினை முருகேஷ் வாங்கிப் போட்டிருக்கிறார். அதனுடைய மதிப்பு இப்போதைக்கு ரூ.45 லட்சம். அதுதவிர, முருகேஷ் தன் மொத்த பணத்தையும் என்ஆர்இ அக்கவுன்டிலேயே வைத்திருக்கிறார். ஃபிக்ஸட் டெபாசிட்டிலேயே வைத்துள்ளதால், பெரிதாக வட்டி வருமானம் இல்லை.

அவர் பிரச்னைகள் மொத்தத்தையும் அலசிப் பார்த்து, அவர் செய்த தவறுகளை முதலில் கண்டுபிடித்தேன். சொத்துக்களை வாங்கும் போதும், முதலீடுகளை செய்யும்போதும் ஜாயின்டாக செய்யாமல், மனைவி பெயரில் மட்டும் செய்தது தவறு.

அடுத்ததாக, மொத்தப் பணத்தையும் ஃபிக்ஸட் டெபாசிட்டிலேயே போட்டு வைத்திருந்தது.  வேறு லாபகரமான முதலீட்டுத் திட்டங்களில் அந்தப் பணத்தை முதலீடு செய்திருந்தால், இன்னும் கூடுதல் வருமானம் கிடைத்திருக்கும்.

 அடுத்ததாக, மனைவிக்குப் பணம் தரும் விஷயத்தில் அதிகப்படியான உத்தரவாதத்தை அளித்தது. அடுத்து, கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்தது. இப்போது இந்தியாவுக்கு வர நினைப்பவர் அப்போதே அது பற்றி யோசித்து முடிவு செய்திருந்தால், இத்தனை பிரச்னையையும் தவிர்த்திருக்கலாமே!

முதல் தீர்வாக, மகன் படிப்பு முடியும் வரை ரூ.75 ஆயிரமும், அதற்குப் பிறகு மாதம் 30 ஆயிரமும் லலிதாவுக்கு தரக்கூடிய வகையில்  பேசச் சொல்லி சொன்னேன். லலிதாவின் அதிகப்படியான செலவுகளைக் குறைக்கும்படி  எடுத்துச்சொல்லச் சொன்னேன்.

சென்னைக்கு வந்துவிட்டாலும் சில வருடங்களில் ஓய்வு காலம் வந்துவிடும். அப்போது மாதம் ரூ.30,000 தனக்கு வேண்டும் என்றார். அப்படியானால் அவருக்கு கார்பஸ் தொகையாக ரூ.1 கோடி தேவைப்படும். அவர் சில முதலீடுகள், ஃபிக்ஸட் டெபாசிட் பணம் எல்லாம் சேர்த்து ரூ.70 லட்சம் வைத்துள்ளார். எனவே, இப்போதைக்கு சென்னை வரும் முடிவை இரண்டு வருடத்துக்கு தள்ளி வைக்குமாறு சொன்னேன். இரண்டு வருடத்தில் இன்னும் ரூ.50 லட்சம் பணத்தை அமெரிக்காவில் இருந்தால் சேர்த்துவிட முடியும்.

முருகேஷின் தேவை போக மீதம் ரூ.20 லட்சத்தை மகனின் மேற்படிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சொன்னேன்.

அமெரிக்காவில் இன்னும் இரண்டு வருடங்கள் சம்பாதிப்பது உங்கள் ஓய்வு காலத்துக்கு  தேவையான பணத்தைச் சேர்க்கத்தான். எனவே, அதிலிருந்து லலிதாவுக்கு பணம் தந்தால், சரியாக இருக்காது. எனவே, சென்னையில் உள்ள மனையை விற்று, எஸ்டிபி (STP) முறையில் முதலீடு செய்து விட்டு, அதிலிருந்து வரும் வருமானம் மூலம் ஒவ்வொரு மாதமும் லலிதாவுக்கு பணம் தருமாறு சொன்னேன். அடுத்த ஆறு மாதங்களில், இந்தியாவுக்கு வந்துபோகும்போது மெடிக்ளெய்ம் பாலிசி ரூ.10 லட்சத்துக்கு எடுத்துக்கொள்ளும்படியும் சொன்னேன்.

நிறைய பணம் சம்பாதிப்பதால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்று நினைப்பது தவறு.  சம்பாதிக்கும் பணத்தை சரியான முதலீட்டுத் திட்டங்களில் எதிர்கால  இலக்குகளுக்காக சேமிப்பது அவசியம். இன்னொரு முக்கிய விஷயம், இல்லற வாழ்க்கையில் ஈகோ பார்த்தீர்கள் எனில், எவ்வளவு சம்பாதித்தாலும் நிம்மதி கிடைக்காது. சில பிடிவாதங்களால், நல்ல வாய்ப்புகள் அமைந்தும் வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ளும் சிலருக்கு முருகேஷின் வாழ்க்கை ஒரு பாடம்.

(கற்போம்)

நீங்களும் உங்கள் நிதித் தவறுகளைச் சொல்லித் தீர்வு பெறலாம். அனுப்ப வேண்டிய மெயில்

முகவரி : finplan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism