Published:Updated:

பிசினஸுக்குப் பெயர் வைக்கும் கலை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 6

பிசினஸுக்குப் பெயர்  வைக்கும்  கலை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 6
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸுக்குப் பெயர் வைக்கும் கலை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 6

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன் மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

பிசினஸுக்குப் பெயர் வைக்கும் கலை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 6

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன் மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

Published:Updated:
பிசினஸுக்குப் பெயர்  வைக்கும்  கலை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 6
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸுக்குப் பெயர் வைக்கும் கலை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 6
பிசினஸுக்குப் பெயர்  வைக்கும்  கலை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 6

குழந்தைப் பிறப்பதற்கு முன்பே என்ன பெயர் வைக்கலாம். அழகு தமிழில் வைக்கலாமா, ஸ்டைலாக ஆங்கிலத்தில் வைக்கலாமா, அல்லது முன்னோர்கள் பெயரை வைக்கலாமா என்று யோசிக்கத் தொடங்கிவிடுகிறோம். அதே நேரம், நாம் வைக்கும் பெயர் அந்தக் குழந்தைக்குப் பிரகாசமான எதிர்காலத்தைத் தருமா என்பதையும் பார்க்கிறோம். ஒரு குழந்தையின் பெயர், அந்தக் குழந்தையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறதோ இல்லையோ, உங்களுடைய நிறுவனத்துக்கு நீங்கள் வைக்கும் பெயர்தான் உங்கள் தலையெழுத்தை  நிர்ணயிக்கும்.

பிசினஸுக்குப் பெயர்  வைக்கும்  கலை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 6

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



ஒரு பிசினஸ், மக்களின் மனதில் பதிய வேண்டும். பிராண்டாக வளர வேண்டும். பின்பு ஒரு  சாம்ராஜ்யமாக வளர்ந்து காலத்துக்கும்  நிலைத்து நிற்க வேண்டும். அப்படி ஒரு வளர்ச்சியை நம்  பிசினஸ் அடைய நாம் கவனிக்க வேண்டிய மூன்று முக்கியமான விஷயங்கள்: 1. பெயர், 2. லோகோ,    3. இவற்றில் பயன்படுத்தப்படும் நிறம்.  

பிசினஸ் என்பது வேலை பார்ப்பது போல அல்ல, அடிக்கடி மாறிக்கொண்டே இருக்க. அது பரம்பரை பரம்பரையாக வளரக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பிசினஸுக்கு அதன் பெயர், லோகோ போன்றவை எத்தனை தலைமுறை  கடந்தாலும், மக்கள் மறக்க முடியாத  வகையில் உருவாக்க வேண்டும்.

ஏனெனில் பிசினஸைப் பொறுத்தவரை, பெயர் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல. ஆப்பிள், டாடா, ரிலையன்ஸ், அதானி போல, சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் போல, நாம் நம் பிசினஸுக்கு வைக்கும் பெயர் நம் பிசினஸின் வளர்ச்சிக்கு காலத்துக்கும் உதவும் வகையில் அமைய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பெயரை உங்கள் பிசினஸுக்கு எப்படி வைப்பது, உங்கள் நிறுவனத்துக்கான லோகோவை (logo) எப்படி உருவாக்குவது என்பதை இப்போது  பார்ப்போம்.

   பெயர்:

பிசினஸுக்குப் பெயர் வைப்பது ஒரு கலை என்றே சொல்லலாம். ஏனெனில் அந்தப் பெயரில் பல விஷயங்கள் அடங்கியிருக்கிறது. நீங்கள் வைக்கும் பெயர், வெறும் பெயராக மட்டுமே இருந்துவிடாமல் பிராண்டாக வளர வேண்டும்.

1. நீங்கள் வைக்கும் பெயரானது மக்கள் எளிதாக உச்சரிக்கும் வகையில் இருக்க வேண்டும். ஒருவர் பிறரிடம் சொல்லும் வகையில் எளிதாக இருக்க வேண்டும். சர்வதேச சந்தையில் உங்கள் பொருளை விற்பதாக இருந்தால், பொதுவாக உள்ள பெயர்களை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி வைக்கலாம். உதாரணத்துக்கு ப்ளூ மூன், கேன்டி க்ரஷ்.

பிசினஸுக்குப் பெயர்  வைக்கும்  கலை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 6

2. நீங்கள் வைக்கும் பெயர் கிரியேட்டிவ்வாக இருக்க வேண்டும். மக்களை எளிதில் கவரும் வகையில் இருக்க வேண்டும். ஏற்கெனவே அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட பெயரை நீங்களும் பயன்படுத்தக் கூடாது. என் புராடக்ட் ஒன்றுக்கு நான் ‘ப்ளூ ஆப்பிள்’ என்று பெயர் வைத்திருக்கிறேன். ‘ப்ளூ ஆப்பிள்’ என்று ஒன்று இல்லைதான். ஆனால் இந்தப் பெயர் வித்தியாசமாக இருப்பதால், மக்களை அது எளிதில் கவர்கிறது. சில உதாரணங்கள்: கிட்சன் குக், மேஜிக் சிம்னி.

3. உங்கள் நிறுவனத்துக்குப் பெயர்  வைக்கும்போது பழங்களின் பெயர் களையோ, நிறங்களின் பெயர்களையோ வைக்கலாம். ஏனெனில் பலருக்கு பிடித்த நிறங்கள், பழங்கள் எளிதில் ஞாபகத்தில் இருக்கும். பிறருக்குச் சொல்வதற்கும் அவை எளிமையாக இருக்கும். உதாரணத்துக்கு: ப்ளூ ஆப்பிள், பிங்கி இன்னர்வேர்ஸ், கிரீன் லேபிள் டீ, ரெட் லேபிள் டீ, கிரீன் ட்ரென்ட்ஸ் போன்றவை நிறங்களை அடிப்படையாகக் கொண்ட பெயர்கள்.

4. பெரும்பாலானோர் தங்கள்  குடும்பப் பெயர்களை அல்லது நபரின் பெயர்களை வைப்பார்கள். உதாரணமாக, டாடா குழுமம், அதானி குழுமம், மெக்கன்சி குளோபல். குடும்பப் பெயர்களை அல்லது முன்னோர்களின்  பெயர்களை வைத்தால்  தவறில்லை. ஆனால், அந்தப் பெயர் அடிக்கடி பயன்படுத்தப்படும் பெயராக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், அவை பத்தோடு பதினொன்றாக மக்களின் கவனத்தைப் பெறத் தவறிவிடும்.  எனவே, தனிநபரின் பெயரை வைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

5. பிற பெயர்களை காப்பி அடிக்கக் கூடாது. தமிழகத்தில் பல இடங்களில் சரவண பவன், சங்கீதா, தலப்பாகட்டி போன்ற பெயர்களைக் காப்பி அடித்து சிறு மாற்றம் செய்து வைக்கிறார்கள். காப்பி அடிக்கும் பழக்கம் ஒருபோதும் நம்மை உயர்த்தாது. உண்மையான வளர்ச்சியை அடைய ஒவ்வொன்றிலும் நாம் தனித்துவம் காட்ட வேண்டியது அவசியம்.

6. நம் நிறுவனத்துக்கு நாம் வைக்கும் பெயர் நாம் விற்கும் பொருளுக்கு அல்லது செய்யும் தொழிலுக்கு தொடர்புடையதாக இருந்தால் அதையும் பெயரோடு சேர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக, லாஜிடெக் சாஃப்ட்வேர், பாலாஜி ஹார்டுவேர்ஸ் என்று வைக்கலாம்.  

7. அதேபோல், குழந்தைகள், பெண்களுக்கான பிசினஸை நீங்கள் செய்வதாக இருந்தால், அவர்களுக்குப் பிடிக்கிற மாதிரி சில பெயர்கள் இருக்கும்.  உதாரணமாக, பார்பி, டோரா போன்றவை குழந்தைகளுக்குப் பிடித்த பெயர்கள். குழந்தைகளுக்குப் பிடித்தமான விளையாட்டுகளையும் பெயராக்கலாம்.

8. நாம் விற்கும் பொருளுக்கு தொடர்பான விஷயங்களை இணைக்கும் வகையிலும் பெயர்களை வைக்கலாம். உதாரணத்துக்கு, மம்மிஸ் கிட்சன், மம்மிபோகோ பேன்ட்ஸ் போன்றவை.
காபி டே போல, மிக நேரடியாகவும் தொழிலுடன் சம்பந்தப்பட்ட பெயர்களையும் வைக்கலாம். ஆனால், நாம் வைக்கும் பெயரை ஏற்கெனவே யாராவது வைத்திருக்கிறார்களா என்பதை ஒருமுறைக்கு இரண்டு முறை பார்த்துவிடுவது நல்லது.  

9. தற்போது பழமையைக் கொண்டாடும் ட்ரெண்ட் மக்களிடையே இருக்கிறது. எனவே, பலரும் பழமையான, மக்கள் மறந்து போன விஷயங்களை, பொருட்களை எல்லாம் தங்களுடைய பிசினஸுக்குப் பெயராக வைக்கிறார்கள்.

10. மூன்று எழுத்துகளில் சுருக்கமாக வைக்கும் பெயர்களும் மக்களிடையே சீக்கிரம் பிரபலமாகும். கே.பி.என்,  எஸ்.ஆர்.எம், எம்.டி.ஆர் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

இப்படி உங்கள் நிறுவனத்துக்கு நீங்கள் என்ன பெயர் வைத்தாலும், நீங்கள் வைக்கப்போகும் பெயரை வேறு யாரேனும் ரெஜிஸ்டர் செய்திருக்கிறார்களா என்பதையும் இணையம் மூலம் தேடித் தெரிந்துகொள்வது அவசியம். இதற்கு கூகுள்   தேடுபொறியில் நீங்கள் தேடிப் பார்ப்பது அவசியம். ஜஸ்ட் டயல் இணையதளத்திலும் பெயரைத் தேடினால் ஏதேனும் ஒரு நிறுவனம் அந்தப் பெயரில் இருக்கிறதா என்பதையும் எளிதில் கண்டறிய முடியும். 

பிசினஸுக்குப் பெயர்  வைக்கும்  கலை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 6

   லோகோ:

உங்கள் நிறுவனத்துக்கான லோகோ, உங்கள் நிறுவனத்தின் பெயரைப் போல முக்கியமானது.  அது உங்கள் நிறுவனத்தின் பெயராகக்கூட  இருக்கலாம் அல்லது ஒரு வரையப்பட்ட படமாகவும் (Illustrated Image) இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது பார்ப்பதற்கு தெளிவாக, கண்ணை உறுத்தாமல் இருக்க வேண்டும்.

நல்ல லோகோ வேண்டுமென்றால், ஒரு டிசைனரை வைத்து உங்களுக்கான லோகோவை தயார் செய்ய வேண்டும். இதற்கு கொஞ்சம் செலவு செய்யத்தான் வேண்டும். இதற்கு செலவு செய்ய முடியாதபட்சத்தில் logogarden.com என்ற இணையதளத்தில் இலவசமாகவே உங்களுக்கான லோகோவை தயார் செய்துகொள்ளலாம். மேலும், உங்கள் லோகோவை ரெஜிஸ்டர் செய்து கொண்டால் யாராலும் காப்பி அடிக்க முடியாது. www.ipindia.nic.in என்ற இணையதளத்தில் உங்கள் லோகோவை டிரேட் மார்க்காகவோ (TM)  அல்லது ரெஜிஸ்டர்ட் (R) என்றோ பதிவு செய்யலாம். லோகோவில் பெரும்பாலும் ஸ்டைலான எழுத்துருக்களை (Font) தவிர்க்க வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரியும் வகையில் தெளிவாக எழுத்துகள் இருக்க வேண்டும்.

   நிறம்:

உங்கள் நிறுவனத்தின் பெயரையோ, லோகோவையோ நீங்கள் பெயர்ப் பலகையிலோ, விளம்பரங்களிலோ அச்சிட்டோ, விஷுவலாகவோ வெளியிடும்போது அவை பார்ப்பவரைக் கவரும் வகையில் இருக்க வேண்டும். அதற்கு அதன் நிறம் பார்ப்பவர்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும்.

லோகோ, பெயர் மட்டுமல்ல, நம் விற்பனை நிலையத்தின் இன்டீரியர் முதற்கொண்டு அனைத்திலும் பயன்படுத்தப்படும் நிறத்தில் மிகவும் கவனம் தேவை. ஏனெனில் ‘ஃபர்ஸ்ட் லுக் இஸ் தி பெஸ்ட் லுக்’ என்பார்கள். இப்போது ஃபேஸ்புக் என்றால் நீலம், வாட்ஸ்அப் என்றால் பச்சை என்கிற அளவுக்கு நாம் வைக்கும் நிறம் நம் பிராண்டைக் குறிப்பிடும் அளவுக்கு இருக்க வேண்டும்.

அதேபோல், நாம் வைத்துள்ள பெயருக்கேற்ப நாம் பயன்படுத்தும் நிறம் இருக்க வேண்டும். பிங்கி என்று பெயர் வைத்துவிட்டு, அதன் லோகோவிலோ அல்லது பெயர் பலகையிலோ கறுப்பு நிறத்தைப் பயன்படுத்தக் கூடாது. ப்ளூ ஆப்பிள் என்று பெயர் வைத்துவிட்டு, சிவப்பு நிற ஆப்பிள் படத்தைப் போடக்கூடாது. எனவே, நாம் பயன்படுத்தும் நிறங்களில் கவனம் தேவை. பொதுவாக, கறுப்பு நிறத்தைத் தவிர்ப்பது நல்லது. நம் வாடிக்கை யாளர்களுக்கு அதிகம் பிடிக்கும் நிறங்களைப் பயன்படுத்தலாம். 

அடுத்த இதழில், நாம் தயார் செய்த பொருளை பேக்கிங் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி சொல்கிறேன்.

  (ஜெயிப்போம்)