கடந்த இதழில் வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் (எஃப்.டி) பற்றி பார்த்தோம். இந்த இதழில் கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் பற்றி பார்ப்போம்.

கம்பெனி எஃப்.டி என்பது வங்கி எஃப்.டி போல்தான். ஆனால், இரண்டு வித்தியாசங்கள் உள்ளன. முதல் வித்தியாசம், இதனை வெளியிடுவது வங்கிகளுக்குப்பதில், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள். இரண்டாவது, வங்கி எஃப்.டி-யை விட, கம்பெனி எஃப்.டி-யில் வட்டி அதிகம். ரிஸ்க்கும் இருக்கிறது.

கம்பெனி எஃப்.டி-யை உற்பத்தி நிறுவனங்கள், நிதிச் சேவை நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி), வீட்டு வசதி நிறுவனங்கள் போன்றவை வெளியிடுகின்றன. இந்த நிறுவனங்கள் அவற்றின் செயல்பாட்டுச் செலவுகள், விரிவாக்க நடவடிக்கைகளுக்காக எஃப்.டி-யை வெளியிட்டு நிதியைத் திரட்டுகின்றன. சில நிறுவனங்கள் அதிக வட்டியிலான கடன்களை அடைக்கவும் எஃப்.டி வெளியிடுவது உண்டு.

எப்படி முதலீடு செய்வது?

கம்பெனிகள் இதற்கான அறிவிப்பை வெளியிடும்போது, விண்ணப்பிக்க வேண்டும். நிறுவனங்கள் அல்லது அவற்றின் ஏஜென்ட்கள் மூலம் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

இதில் முதலீடு செய்ய வேண்டும் எனில், அடையாளத்துக்கான ஆதாரம் (ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ்), முகவரிக்கான ஆதாரம் (ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ்), மார்பளவு புகைப்படங்கள் இரண்டு தேவைப்படும்.

யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?

சிறார்கள், இந்துக் கூட்டுக்குடும்பங்கள், இந்தியர்கள் அனைவரும் இதில் முதலீட்டை மேற்கொள்ளலாம். குறைந்தபட்ச முதலீடு கம்பெனிகளைப் பொறுத்து மாறுபடும். இது ரூ.5,000 அல்லது ரூ.10,000 ஆக இருக்கும்.

முதலீட்டுக் காலம்!

கம்பெனி டெபாசிட்களின் முதலீட்டுக் காலம் மற்றும் முதிர்வுக் காலம் என்பது அதனை வெளியிடும் நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடும். உற்பத்தி நிறுவனங்கள் வெளியிடும் ஃபிக்ஸட் டெபாசிட்களின் முதிர்வுக் காலம் 6 மாதங்கள் தொடங்கி 3 ஆண்டுகள் வரைக்கும் இருக்கும். இதுவே, என்பிஎஃப்சி வெளியிடும் எஃப்.டி-களின் முதலீட்டுக் காலம் 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக இருக்கும். வீட்டு வசதி நிறுவனங்கள் வெளியிடும் எஃப்.டி-களின் முதலீட்டுக் காலம் 1 முதல் 7 ஆண்டுகளாக இருக்கின்றன.

வட்டி, வட்டி வருமானம்!

கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்களின் வருமான மானது, வங்கித் திட்டங்கள் தரும் வருமானத்தை விட அதிகம் என ஏற்கெனவே பார்த்தோம். தற்போதைய நிலையில், வங்கி எஃப்.டி-க்கான வட்டி விகிதம் 7% அளவுக்குக் குறைந்திருக்கிறது. இதனைவிட 2 - 3% கூடுதலான வட்டி, கம்பெனி எஃப்.டி-யில் கிடைக்கும்.

கம்பெனி எஃப்.டி மூலமான வட்டியை மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு என தேவைக்கு ஏற்ப பெற்றுக்கொள்ளலாம். வட்டியானது காசோலை மூலம் அனுப்பப்படும் அல்லது இ.சி.எஸ் மூலம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்கான ஆப்ஷனை முதலீட்டை மேற்கொள்ளும்போதே தேர்வு செய்துவிட வேண்டும். வட்டி இடையிலேயே வழங்கப்பட்டு விடுவதால், எஃப்.டி. முதிர்வடையும்போது அசல் தொகை மட்டும் திரும்பக் கிடைக்கும்.

முதிர்வுக்கு முன்பே முடித்தல்!

பெரும்பாலான கம்பெனிகள் ஃபிக்ஸட் டெபாசிட்டை, முதலீடு செய்ததில் இருந்து ஆறு மாதத்துக்கு முன்பே எடுக்க அனுமதிப்பதே இல்லை. அப்படி எடுக்க வேண்டியிருந்தால், அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் சுமார் 0.5-1 சதவிகிதமாக இருக்கும். ஓராண்டுக்கு மேல் என்றால், முன்கூட்டியே முடிப்பதற்கான அபராதம் இருக்கும். எவ்வளவு காலம் முதலீடு இருந்ததோ, அதற்கான வட்டிதான் கணக்கிடப்பட்டுத் தரப்படும்.

இடையில் எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும் என நினைக்கிறவர்கள் மொத்த தொகையை ஒரே கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டில் போடாமல், பிரித்துப் போடலாம்.

கடன் வசதி!

கம்பெனி எஃப்.டி பத்திரத்தை அடமானமாக வைத்துக் கடன் பெறலாம். பத்திரத்தின் மதிப்பில் சுமார் 90% வரை கடன் கிடைக்கும். இந்தக் கடனுக்கான வட்டி, எஃப்.டி வட்டியைவிட 1-2% அதிகமாக இருக்கும். இந்தக் கடனை நிதிச் சேவை நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் அவற்றின் எஃப்.டி-களுக்கு வாங்கிக்கொள்ள முடியும். உற்பத்தி நிறுவனங்கள் போன்றவற்றின் எஃப்.டி பத்திரத்தை வங்கிகள், நிதி நிறுவனங்களில், கடன் அடமானம் வைப்பதன் மூலம் பெறலாம்.

வரிப் பிடித்தம்!

கம்பெனி எஃப்.டி-யைப் பொறுத்தவரை, முதலீடு, வட்டி வருமானத்துக்கு வரிச் சலுகை கிடையாது. இது குறித்து சென்னையின் முன்னணி ஆடிட்டர் எஸ். சதீஷ்குமார் விளக்கம் தந்தார்.

“வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களில் ஒருவர் போட்டிருக்கும் மொத்த முதலீட்டின் மூலம் நிதி ஆண்டில் 10,000 ரூபாய்க்கு மேல் வட்டி கிடைத்தால், மூலத்தில் (Source) வரிப் பிடிக்கப்படும் (டிடிஎஸ்). இந்த வட்டித் தொகை கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்களில் ரூ.5,000-ஆக இருக்கிறது. இந்த வரிப் பிடித்தத்தைத் தவிர்க்க, வருமான வரித் துறையிடமிருந்து, எனது வருமானம், அடிப்படை வரி வரம்புக்குக் கீழே இருக்கிறது, எனக் கடிதம் வாங்கித் தர வேண்டும். இப்படி செய்யும்போது, முந்தைய ஆண்டுகளில் வரி எதுவும் கட்டி இருக்கக்கூடாது.

சில வங்கிசாரா நிதி நிறுவனங்கள் பொதுப் பிரிவினர் 15G படிவம், மூத்த குடிமக்கள், 15H படிவம் சமர்பித்தாலும் ஏற்றுக்கொள்கின்றன. வரிப் பிடித்தம் செய்வதைத் தவிர்க்க நினைத்தால், குடும்பத்தில் உள்ளவர்கள் பெயரில் பிரித்து முதலீடு செய்யலாம். வட்டி வருமானம், ஒருவரின் வருமானத்துடன் இதர வருமானமாகச் சேர்க்கப் பட்டு, அவரின் அடிப்படை வரி வரம்புக்கேற்ப 10%, 20%, 30% வரி கட்ட வேண்டியிருக்கும்” என்றார்.

மூலதனத்துக்கு உத்தரவாதம் இல்லை!

வங்கி எஃப்.டி-யில் முதலீடு மற்றும் வட்டி சேர்த்து ரூ.1 லட்சம் வரைக்கும் இன்ஷூரன்ஸ் மூலம் உத்தரவாதம் அளிக்கப்படும். அந்த மாதிரியான உத்தரவாதம் கம்பெனி டெபாசிட்களில் இல்லை. டெபாசிட்களை வெளியிட்ட நிறுவனம் சரியாகச் செயல்படவில்லை எனில், வட்டி மற்றும் முதிர்வுத்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அந்த வகையில், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டில் அதிக ரிஸ்க் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

கவனிக்க வேண்டியவை!

கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்களைத் தேர்வு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்...

1. கம்பெனியின் பாரம்பர்யம் மிக முக்கியம்.

2. எஃப்.டி. வெளியிடும் நிறுவனங்கள் குறைந்தது கடந்த 5 ஆண்டுகளாவது லாபகரமாக இயங்கி வர வேண்டும்.

3. க்ரைசில், இக்ரா, கேர், ஃபிட்ச் போன்ற நிறுவனங்களின் நல்ல தரக்குறியீட்டைப் (AA or AAA) பெற்றிருப்பது அவசியம்.

4. நிறுவனத்தின் நம்பகத்தன்மையை, அந்த நிறுவனம் பற்றி இணையதளங்களில் வந்திருக்கும் விமர்சனங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

5. எஃப்.டி மூலம் திரட்டப்படும் நிதி எதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கவனித்து முதலீடு செய்வது அவசியம். கடனை அடைக்க என்றால் முதலீட்டைத் தவிர்ப்பது நல்லது.

(முதலீடு பெருகும்)