Published:Updated:

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 8

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 8
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 8

‘அப்புறம் பார்க்கலாம்’ என்ற ஆபத்து!ஓவியம்: கோ.ராமமூர்த்தி

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 8

‘அப்புறம் பார்க்கலாம்’ என்ற ஆபத்து!ஓவியம்: கோ.ராமமூர்த்தி

Published:Updated:
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 8
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 8
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 8

சுரேஷ் பார்த்தசாரதி
 Founder, Myassetsconsolidation.com Registered investment advisor, INA200000878


ராம்தேவ், மும்பையைச் சேர்ந்தவர். தாத்தா காலத்திலேயே புதுச்சேரிக்கு வந்துவிட்ட வசதியான குடும்பம் அவருடையது. ராம்தேவுக்கு நான்கு மகன்கள். கடைசிப் பையன்  விகாஷ். முதல் மூன்று மகன்களும் நன்றாகப் படித்து முடித்து பெரிய வேலையில் செட்டிலாகி விட்டார்கள். பெரிய இடங்களில் பெண் அமைந்து திருமணமும் ஆகிவிட்டது.

ஆனால், விகாஷ்  மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்தபின்பும்  நல்ல வேலை அமையவில்லை. என்றாலும் விகாஷுக்குப் பெண் தேடிக் கொண்டிருந்தார் அவர் அப்பா ராம்தேவ். ஆனால், விகாஷ் செய்த காரியத்தினால் எல்லாம்  திசை மாறிப் போனது. எதிர்வீட்டில் குடியிருக்கும் பள்ளிக்கூட ஆசிரியரின் மகள் லலிதாவைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டு, மாலையும் கழுத்துமாக வந்து நிற்க, விகாஷின் அப்பா அதை   ஏற்றுக்கொள்ளவில்லை.  விகாஷும் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

சென்னை அடையாறில் தன் நண்பர்கள் உதவியுடன் வீடு பார்த்து புதுமனைவியுடன் குடியேறினார் விகாஷ். ஆனால், சென்னையிலும் அவருக்கு  நல்ல வேலை அமையவில்லை. நிறைய கம்பெனிகள் மாறிக்கொண்டே இருந்தார்.   இதற்கு இடையே அவருக்குக் குழந்தையும் பிறந்தது.

வயது 35 ஆகிவிட்ட நிலையில், நிறைய சம்பாதிக்க முடியவில்லையே என்ற வருத்தம் விகாஷுக்கு இருக்கவே செய்தது. இந்த நிலையில், வீட்டுக் கடன் மூலமாக பெரம்பூரில் சொந்தமாக வீடு வாங்கிக் குடியேறினார். ஆனால், லலிதாவுக்கு  அந்த ஏரியா பிடிக்கவில்லை. இரண்டு, மூன்று வருடங்கள் சமாளித்துவிட்டு,  பிறகு அடையாறுக்கே வாடகை வீடு பார்த்து வந்துவிட்டார்கள். பெரம்பூர் வீட்டை வாடகைக்கு விட்டார் விகாஷ். வாடகை குறைவாகக் கிடைத்ததால், குறைவான சம்பளத்தில் கஷ்டப்பட்டுத்தான் வீட்டுக் கடன் இ.எம்.ஐ கட்டினார்.

வயது நாற்பதைத் தாண்டவும் விகாஷுக்கு பயம் அதிகமாகிவிட்டது. போதிய பணம் இல்லையே என்ற கவலை அதிகரித்தது. அப்பா ராம்தேவின் கோபம் தணிந்து, இரண்டு முறை உறவினர் மூலம் சொல்லி அனுப்பியும் அப்பாவைப் போய் பார்க்காமல் வீம்பாக இருந்துவிட்டார் விகாஷ்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 8

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியில் வெளிநாட்டுக்குச் சென்றார். ஆனால், அங்கும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை.

ஒருவழியாக வெளிநாட்டில் விகாஷின் 46 வயதில் பெரிய சம்பளத்தில் வேலை அமைந்தது. நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், இனிமேலாவது எதிர்காலத்துக்கு ஏதாவது சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்தபோது என்னைச் சந்தித்தார் விகாஷ்.

விகாஷின் மகன் பிரணவ் அப்போது 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். மகனைப் பெரிய டாக்டர் ஆக்க அவனை எம்.டி படிக்க வைக்க வேண்டும் என்று விகாஷுக்கு ஆசை.

நான் சில முதலீட்டு ஆலோசனைகளைக் கொடுத்தேன். அடுத்த ஆண்டு விகாஷ் என்னைச் சந்தித்தபோது, நான் சொன்னவற்றில் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை. அடுத்த விடுமுறைக்கு வந்தபோதும் நான் சொன்ன  எதையும் அவர் செய்திருக்கவில்லை. இதைப் பார்த்து, எனக்கே கொஞ்சம் கோபம் வந்துவிட்டது.

‘‘தள்ளிப்போடும் உங்கள் குணத்தை மாற்றிக் கொண்டால்தான் உருப்படியாக எதையும் செய்ய முடியும்’’ என்று சொன்னேன். அவருடைய தள்ளிப்போடும் குணத்தை மாற்றுவதற்காக ‘Eat  That  Frog’  என்ற புத்தகத்தைத் தந்து, படித்துவிட்டு வருமாறு சொன்னேன். மூன்றே நாட்களில் படித்துவிட்டதாகச் சொல்லி வந்தார். இனி சரியாக செய்வதாகச் சொன்னார்.

அப்போது அவருடைய என்ஆர்ஓ கணக்கில் ரூ.35 லட்சம் வைத்திருந்தார். அதில் ரூ.30 லட்சத்தை எடுத்து 10.5% வருமானம் கிடைக்கக்கூடிய இரண்டு, மூன்று கம்பெனி பாண்டுகளில் முதலீடு செய்யச் சொன்னேன். இது பிரணவ்வை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க உதவும். தவிர, குறிப்பிட்ட தொகையை அப்போது முதலே எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யச் சொன்னேன். இது அடுத்தடுத்த வருடங்களில் பிரணவ்வின் படிப்புச் செலவுகளுக்குப் பயன்படும் என்று சொன்னேன். நான் சொன்ன எல்லாவற்றையும் செய்ய ஆரம்பித்தார். 2016-ல் மேனேஜ்மென்ட் கோட்டாவில் மகனை எம்.பி.பி.எஸ் சேர்த்தார்.

விகாஷுக்கு அடுத்த சோதனை வந்தது. அவருடைய உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. அவரைச் சென்னைக்குத் திரும்ப வந்துவிடும்படி  அவர் மனைவி சொல்ல, அவரும் அதை ஏற்றுக் கொண்டார். அதிர்ஷ்டவசமாக வெளிநாட்டில் வேலை பார்த்தபோது அவருக்கு உயர் அதிகாரியாக இருந்தவர், சென்னையில் பெரிய கம்பெனி ஒன்றில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவர் மூலமாக விகாஷுக்கு நல்ல வேலை அமைந்தது. 

விகாஷ் சென்னை வரும்போது ரூ.55 லட்சம் வைத்திருந்தார். அதில் 20 லட்சம் ரூபாயை பிரணவ் எம்.டி படிக்க வைக்க முதலீடு செய்யச் சொன்னேன். விகாஷ் இன்னும் நான்கு வருடத்தில், அதாவது 55 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று விரும்பினார். ஏற்கெனவே குடும்பத்தினரின் லைஃப் ஸ்டைல் மாறியிருந்தது. எனவே,  விகாஷ் ஓய்வுபெறும்போது மாதம் ரூ.1 லட்சம் தேவையாக இருக்கும். அப்படியானால், ரூ.1.8 கோடி கார்பஸ் தொகை தேவை. இருக்கும் செலவுகளில் நான்கு வருடத்தில் அது சாத்தியமே இல்லை.

இந்தக் குழப்பமான சூழலில்தான் ஒரு நல்ல விஷயம் நடந்தது. தனது கோபத்தை மறந்து,  தனது அப்பாவைச் சந்தித்தார் விகாஷ். மகன் மனம் மாறி வந்துவிட்ட மகிழ்ச்சியில் ஏற்றுக்கொண்டார் ராம்தேவ். மற்ற மகன்கள் பெரிய நிலைமையில் இருக்க, விகாஷின் நிலையை நினைத்து  அவர் வருத்தப்பட்டார். தன் பெயரில் உள்ள ரூ. 1 கோடி மதிப்பிலான பங்குகளை விகாஷுக்கு மாற்றித் தந்தார். தன் பெயரில் உள்ள வீட்டையும் விகாஷுக்கு மாற்றித் தருவதாகச் சொன்னார். எனவே, பெரம்பூரில் இருக்கும் வீட்டை நான்கு ஆண்டு கழித்து விற்பனை செய்தால், ரூ.60 லட்சம் கிடைக்கும். இன்னும் சில ஆண்டுகள் கழித்து தேவைப்படும்போது விற்பனை செய்தால், அதன் இன்னும் மதிப்பு உயர்ந்திருக்கும். இதனையும், அப்பா தரும் பங்குகள் மூலம் கிடைக்கும் பணத்தையும் ஓய்வுக்காலத்துக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆலோசனை சொன்னேன்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 8

விகாஷ் செய்த தவறுகளுக்குக் காரணம், எல்லா காரியங்களையும் ‘அப்புறம் பார்த்துக்கலாம்’ என தள்ளிப்போட்டதே. அடுத்ததாக, குறைவாகச் சம்பாதித்தாலும், கொஞ்சமாவது முதலீடு செய்திருக்க வேண்டும். அவர் அதை சுத்தமாகச் செய்யவில்லை. குடும்பத்தினரின் விருப்பம் இல்லாமல், பெரம்பூரில் வீட்டை வாங்கியதும், பெரியவர்களை அனுசரிக்காமல் மொத்தமாக உதாசீனப்படுத்தியதும் தவறுதான்.

அப்பா கைகொடுக்கவில்லை என்றால், தன் நிலை  இன்னும் மோசமாகி இருக்கும் என விகாஷ் இப்போது சொல்கிறார். தனது தவறுகள் என்ன என்பதை உணர்ந்துகொண்டார் விகாஷ்.  அவரது வாழ்க்கை நம் எல்லோருக்கும் நல்ல பாடம்தான்!             
       
(கற்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism