Published:Updated:

மார்க்கெட்டிங் உத்திகள்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 9

மார்க்கெட்டிங் உத்திகள்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 9
பிரீமியம் ஸ்டோரி
மார்க்கெட்டிங் உத்திகள்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 9

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

மார்க்கெட்டிங் உத்திகள்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 9

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

Published:Updated:
மார்க்கெட்டிங் உத்திகள்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 9
பிரீமியம் ஸ்டோரி
மார்க்கெட்டிங் உத்திகள்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 9
மார்க்கெட்டிங் உத்திகள்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 9

வாடிக்கையாளர்களைக் கவர்வது ஒரு  கலை. அதற்கு உதவியாக இருப்பதுதான் மார்க்கெட்டிங் உத்திகள். மார்க்கெட்டிங் செயல்பாட்டில் முக்கியமானது, விளம்பரம். விளம்பரம் செய்வது எப்படி என்பதைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம், இப்போது நம்முடைய பொருளை எப்படி மார்க்கெட் செய்யப் போகிறோம், அதாவது எப்படியெல்லாம் விற்கப் போகிறோம் என்று விரிவாகப் பார்க்கலாம்.

நாம் எந்த வகை பிசினஸ் செய்தாலும் சரி, அதற்கு மார்க்கெட்டிங் செய்வது முக்கியம். நம்முடைய பொருளை அறிமுகப்படுத்துவதிலிருந்து அதை வாடிக்கையாளர்களுக்கு விற்று, பிற்பாடு   அந்த வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து  தக்க வைத்துக்கொள்வது வரை பல பிரிவுகளாக மார்க்கெட்டிங் உத்திகள் செயல்படுத்தப்பட வேண்டும்.

மார்க்கெட்டிங் உத்திகள்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 9

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



மார்க்கெட்டிங் செய்ய இவ்வளவு தொகையை செலவழிக்க வேண்டும் என்று  கணக்கும் வேண்டும். ஒரு ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்து, பல வகைகளில் மார்க்கெட்டிங் செய்ய முடியும்.

மார்க்கெட்டிங்கை மூன்று வகைகளாகப்  பிரிக்கலாம். நேரடி மார்க்கெட்டிங் (Direct Marketing), மறைமுக மார்க்கெட்டிங் (Indirect Marketing) மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங். இவற்றை விளக்கமாகப் பார்ப்போம்.

 நேரடி மார்க்கெட்டிங் (Direct Marketing)

நேரடி மார்க்கெட்டிங் முறையில் நாமே நேரடியாக வாடிக்கையாளர்களிடம் சென்று நமது பொருளை அறிமுகப்படுத்தி விற்பது. இதில் பெரும்பாலும் நம்முடைய திறமைதான் முக்கியம். நன்றாகப் பேசத் தெரிந்திருந்தால் போதும், எளிதில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துவிட முடியும்.

நேரடி மார்க்கெட்டிங்கில் முதலில் நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் நம் பொருளைப் பற்றி எடுத்துக் கூறி, அவர்களிடம் பயன்படுத்தச் சொல்லி பிரபலப்படுத்தலாம். நாம் தொழில் செய்யக்கூடிய இடத்தில் இருப்பவர்களிடம் நம் பிசினஸ் மற்றும் பொருள் பற்றி எடுத்துச்சொல்ல வேண்டும்.

விற்பனை முகவர்களை வைத்து நம்முடைய பிசினஸின் பிரத்யேகமான வாடிக்கையாளர் களிடம் நேரடியாக அனுப்பி விற்பனை செய்ய வேண்டும். இதற்கு கையில் நம்முடைய பொருட்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய நோட்டீஸ், புரோஷர் மற்றும் பவர் பாயின்ட் பிரசன்டேஷன் போன்றவற்றை வைத்துக்கொள்ள வேண்டும்.

விற்பனை முகவர்கள் சென்று விற்பனை செய்யும்போது, நுகர்வோர்கள் உடனடியாகப் பொருட்களை வாங்கிவிட மாட்டார்கள். எனவே, நேரடியாகச் சென்று விற்பனை செய்யும்போது, சாம்பிள் எடுத்துச் செல்ல வேண்டும். பொருளைப் பற்றி விளக்கமாகச் சொல்லிவிட்டு, இலவச சாம்பிள் கொடுத்து பயன்படுத்திப் பார்க்க சொல்ல வேண்டும். சாம்பிளை அளவாகக் கொடுக்க வேண்டும். மேகி நூடுல்ஸை ஆரம்பத்தில் பள்ளிக்கூடங்களில் இலவசமாகக் கொடுத்தார்கள். பிற பிராண்டுகளுடன் சேர்த்தும் இலவசமாகக் கொடுத்தார்கள். இப்போது நூடுல்ஸ் விற்பனையில் அதுதான் டாப்பில் உள்ளது.

சாம்பிள் கொடுப்பது ஒருவழி என்றால், ஆஃபர்கள் தருவது இன்னொரு வழி.  ‘நேரடியாக வீட்டுக்கே வந்து விற்பதால்தான் இந்த ஆஃபர், பிற நேரங்களில் உங்களுக்கு ஆஃபர் கிடைக்காது’ என்று சொல்லி விற்கலாம்.

நாம் விற்பனை செய்யும் பொருளை நம்முடைய வாடிக்கையாளர்கள் பிறரிடம் சொல்லும் வகையில் நம் அணுகுமுறை இருக்க வேண்டும். அவர்களிடம் பேசும் விதம், பழகும் விதம், அவர்களின் கேள்விகளுக்கும் யோசனைகளுக்கும் செவி சாய்ப்பது என அனைத்தையும் முகம் கோணாமல் செய்ய வேண்டும். தொழில் செய்பவர் மட்டுமல்லாமல், நம்மிடம் வேலை பார்ப்பவர்களையும் அப்படிப் பேசுமாறு மாற்ற வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு நாம் தரும் அனுபவம் என்பது செலவே இல்லாமல் செய்யும் அருமையான மார்க்கெட்டிங் உத்தி ஆகும். எவ்வளவு செலவு செய்தாலும் இதில் கிடைப்பது போல் பலன் கிடைக்காது.

அதிக மக்கள் கூடும் இடங்களான கண்காட்சிகள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றில் ஒரு அரங்கை அமைத்து நேரடியாகவும் விற்கலாம். சங்கங்களின் கூட்டமைப்பில் உறுப்பினராகச் சேர்வது, லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்ற வற்றில் இணைந்து செயல்படுவது போன்ற வையும் பல இடங்களில் நம் பொருளை அறிமுகப்படுத்த உதவியாக இருக்கும்.

 மறைமுக மார்க்கெட்டிங் (Indirect Marketing)

இந்த வகை மார்க்கெட்டிங் உத்தியில் கணிசமான விற்பனை நிச்சயம் சாத்தியம். ஏனெனில் நம்முடைய பொருளைப் பற்றி நாம் நேரடியாகச் சொல்லும்போது காது கொடுத்து கேட்கும் அளவுக்கு மக்களுக்கு பொறுமை இல்லை. ஆனால், இந்த மறைமுக மார்க்கெட்டிங்கில் நம்முடைய வாடிக்கையாளர்கள்  யார் என்பதை அடையாளம் கண்டுபிடித்து அவர்களுக்கு நம்முடைய பொருளைப் பற்றிய விவரங்களை மறைமுகமாகத் தெரிவித்தால் போதும். இப்போது எல்லோரும் மொபைல், இன்டர்நெட், சமூக வலைதளம் போன்றவற்றைப் பயன்படுத்து கிறார்கள். எனவே, இப்போது இந்த மார்க்கெட்டிங்கை செய்வது மிகவும் எளிது.

மார்க்கெட்டிங் உத்திகள்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 9

உதாரணத்துக்கு, நாம் ஒரு சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கிறோம் என்றால், நம்முடைய ஏரியாவில் வசிப்பவர்களின் மொபைல் எண்களை வைத்து வாட்ஸ் அப் குரூப் ஒன்றை உருவாக்கி, அவர்களுக்கு பொருட்களின் அறிமுகம், விற்பனை, மற்றும் சலுகை போன்றவற்றை அனுப்பலாம். அதேபோல், மின்னஞ்சல் மூலம் நம்மிடம் உள்ள அனைத்து முகவரிகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம்.

மறைமுக மார்க்கெட்டிங்கில் இருக்கும் இன்னொரு உத்தி, பிற பிராண்டுகளுடன் சேர்த்து நம் பொருட்களையும் விற்பனை செய்வது. அதாவது, ஹமாம் சோப்புடன் சேர்த்து சோப்பு டப்பாவை விற்பனை செய்யலாம். நம்முடைய பொருள் அந்த பிராண்டுக்குத் தொடர்புடையதாக இருந்தால் மிகவும் நல்லது. இதன் மூலம் நம்முடைய பொருளை அறிமுகப்படுத்துவது மிகவும் எளிது. ஒரு பொருள் மக்களுக்கு அறிமுகமாகிவிட்டால் போதும், விற்பனையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்.

இதுபோக டெலி மார்க்கெட்டிங் (Tele marketing) என்ற முறையும் இதில் பயன்படுத்தப்படுகிறது. இது, இருந்த இடத்திலிருந்தே நம்மிடம் இருக்கும் தொலைபேசி எண்கள் மூலமாக செய்யும் மார்க்கெட்டிங். தற்போது எல்லோரும் இந்த முறையைப் பயன்படுத்துவதால், எளிதில் மக்கள் தவிர்த்துவிடுகிறார்கள். அதனால் டெலி மார்க்கெட்டிங்கில் மிகப் பெரிய வெற்றிடம் இருக்கிறது. நம்முடைய அணுகுமுறையை வித்தியாசப்படுத்திக்கொண்டால் இதிலும் நாம் இடம்பிடிக்க முடியும். உதாரணமாக, எடுத்ததுமே பொருளைப் பற்றி விளக்காமல் ஒருவர் பேசும் சூழ்நிலையில் இருக்கிறாரா, அவருடைய விருப்பம் என்ன என்பதைக் கேட்டுவிட்டு, பின்பு  பொருளைப் பற்றி பேசலாம். அப்படிப் பேசினால் நிச்சயம் வாடிக்கையாளர்களைக் கணிசமாகக் கவர்ந்து விற்பனையை அதிகரிக்க முடியும்.

இவை மட்டுமல்லாமல் செய்தித் தாள், இதழ்கள், பேனர்கள் போன்றவற்றில் விளம்பரம் செய்வதன் மூலமும் விற்பனையை அதிகரிக்கலாம். வட்டாரச் செய்தித்தாள்களில் விளம்பரம் தருவது செலவு குறைவாக இருப்பதோடு, நல்ல பலனையும் தரும். 

 ஆன்லைன் மார்க்கெட்டிங் (Online Marketing)

உங்கள் பொருட்களை ஆன்லைனில் விற்பதுதான் ஆன்லைன் மார்க்கெட்டிங். இப்போது ஆன்லைன் வர்த்தகம் என்பது பெருமளவில் அதிகரித்து வருகிறது. இ-காமர்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது. இ-மெயில், சோஷியல் மீடியா, மொபைல் அப்ளிகேஷன்கள் என பெருகிவரும் தொழில்நுட்பங்களாலும், அதிக அளவு மக்கள், இணையம் பயன்படுத்த தொடங்கி இருப்பதாலும் இந்த மார்க்கெட்டிங் முறை பெருமளவில் தொழில்முனைவோர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.

ஃப்ளிப்கார்ட், அமேசான், ஸ்நாப்டீல், ஓஎல்எக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் பொருட்களை ஆன்லைனில் விற்கலாம் என்ற வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளன. அத்தகைய இ-காமர்ஸ் தளங்களைப் பயன்படுத்தி, நம் பொருளை விற்கலாம்.

இந்த இணையதளங்களில் நம்முடைய பொருட்களைப் புகைப்படம் எடுத்து, பதிவேற்றினால் போதும். நம்முடைய பொருட்களை வாங்க விரும்புபவர்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலம் வாங்கி விடுவார்கள். அவற்றை நாம் சரியாக, பாதுகாப்பாக அனுப்பி வைத்தால் போதும். இதில் லாஜிஸ்டிக்ஸ்தான் முக்கியம். அதைக் கவனமாக செய்தால் எளிதில் நாம் ஆன்லைனில் நம் பொருட்களை விற்கலாம்.

மேலும், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் போன்றவற்றிலும் நம்முடைய பொருட்களை விற்கலாம். பொருளை வாடிக்கையாளர்கள் கவரும் விதத்தில் விளம்பரம் செய்து, அதனை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு நம்மைத் தொடர்புகொள்வதற்கான விவரங்களுடன் மார்க்கெட் செய்யலாம். இதை இலவசமாகவே செய்யலாம்.

நம்முடைய பிசினஸுக்கு ஒரு இணையதளம் இருப்பது அவசியம். நம்முடைய பொருட்களையும், பொருட்கள் கிடைக்கும் இடங்களின் விவரங்களையும், பொருட்கள் பற்றியும் நம்முடைய இணையதளத்தில் குறிப்பிட வேண்டும். ஃபேஸ்புக், இ-மெயில், வாட்ஸ் அப் போன்ற அனைத்திலும் நம்முடைய இணையதள முகவரியைக் குறிப்பிட வேண்டும். வெளிநாட்டு ஆர்டர்கள் வருவதற்கு இணையதளம் மிகவும் உதவியாக இருக்கும்.

 யாருக்கு எந்த மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜி?

இந்த எல்லா உத்திகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலன்களை அளித்துவிடாது. பொருள், தொழிலின் வகை மற்றும் முதலீடு ஆகியவற்றுக்கேற்ப மார்க்கெட்டிங் உத்திகளும் மாறும். புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் முதலில் தங்களுடைய வருமானத்தை நிலைப் படுத்திக்கொள்ளும் வகையில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும். குறைவான வாடிக்கையாளர் களாக இருந்தாலும் அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் நேரடி மார்க்கெட்டிங் உத்திகளைக் கையாள வேண்டும். நண்பர்கள், அருகாமையில் இருப்பவர்களை தங்களின் வாடிக்கையாளர்களாக முதலில் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுத்தடுத்த மார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்தலாம்.

தொழில் தொடங்கி சில வருடங்கள் ஆகியிருந்தால், தங்களின் விற்பனையை அதிகரிக்க நேரடி மார்க்கெட்டிங்குடன் சேர்த்து, மறைமுக மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்தலாம். பொருட்களை ஆன்லைனில் விற்பது, பிற பிராண்டுகளுடன் சேர்த்து பொருட்களை விற்பது போன்றவற்றைச் செய்யலாம்.

(ஜெயிப்போம்)