Published:Updated:

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 9

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 9
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 9

கண்ணை மறைத்த பாசம்!சுரேஷ் பார்த்தசாரதி, Founder, Myassetsconsolidation.com Registered investment advisor, INA200000878ஓவியம்: கோ.ராமமூர்த்தி

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 9

ரிசங்கர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மை, கனிவு, பாசம் மிகுந்தவர். அவருடைய அளவுக்கு மீறிய பாசமே அவரை இன்றைக்கு நிர்க்கதியாய் நிற்கவைத்திருக்கிறது. ஹரிசங்கர் என்னைத்தேடி வந்தபோது அவருக்கு வயது 60. அவர் நண்பர் சிவராமன்தான் ஹரியை என்னிடம் அழைத்து வந்தார். சிவராமன் என்னிடம் 15 ஆண்டுகளாக ஆலோசனை பெற்று வருகிறார்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 9

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘இத்தனை வயதுக்குப்பிறகு என்னைத்தேடி வந்திருக்கிறீர்களே, என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?’’ என்று நான் கேட்டதும், முட்டிக்கொண்டு நின்ற கண்ணீரின் இரண்டு சொட்டுகள் அவரின் கை மீது விழுந்து வழிந்தன.

நான் சட்டென நிலைமையை உணர்ந்து, “நீங்கள் அமைதியாக இருங்கள். நான் சிவராமனிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு, சிவராமனைப் பார்த்தேன். அவர் சொல்ல ஆரம்பித்தார். ‘‘ஹரிசங்கரை எனக்கு கல்லூரி படிக்கும்போது இருந்தே தெரியும். அப்போதே ஹரிதான் எங்கள் நண்பர் குழுவில் லீடர். சினிமா, டீக்கடை, ஹோட்டல் என எல்லா இடங்களிலும்  ஹரிதான் முந்திக்கொண்டு செலவு செய்வான். பின் நாட்களில் படித்து முடித்து திருமணமான  பிறகும் செலவு செய்யும் குணத்தை அவன் மாற்றிக் கொள்ளவில்லை.

ஹரிக்கு வயது 35-ஐ தாண்டியதும், பையன் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தான். அப்போதும் சம்பாதிக்கும் பணத்தைச் செலவு செய்தே அழித்தான். பையனை அமெரிக்காவுக்கு அனுப்பி மேற்படிப்பை படிக்கவைக்க விரும்பினான் ஹரி. கையில் பணம் இல்லை. கிராமத்தில் இருந்த பூர்வீக சொத்துகளை எல்லாம் விற்றுத்தான் படிக்க வைத்தான்.

‘ஹரி, உனக்குன்னு நீதான் சேர்த்து வைக்கலை. உன் அப்பா வைத்துவிட்டுப் போன சொத்து களையாவது வச்சிருந்தா உனக்கு கடைசி காலத்துக்கு உதவுமே’ என்று சொன்னேன். ‘அட, போப்பா, பெத்தபுள்ள படிப்புக்கு உதவாத சொத்து எதுக்குப்பா... பையன் படிச்சு முடிச்சு வேலைக்குப் போயிட்டான்னா நமக்கு என்னப்பா கவலை?’ என்றான்.

ஆனால், அவன் நினைத்தமாதிரி நடந்துவிட வில்லை. அமெரிக்காவிலிருந்து வரும்போதே ராஜஸ்தான் பெண் ஒருத்தியை கூடவே அழைத்துக் கொண்டு வந்துவிட்டான் பையன். அப்போதும், ஹரியும், அவனுடைய மனைவி சுமதியும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. பெண் வீட்டில் பேசித் திருமணத்தை நடத்திவைத்தார்கள். கையில் பணம் இல்லாத நிலையில் கடன் வாங்கித்தான் திருமணத்தை நடத்திவைத்தார்கள்.

அடுத்த மூன்று வருடங்களில் ஹரிக்கு ரிட்டையர்மென்ட். அப்போது கிடைத்த பணத்தை முழுவதுமாகக் கொட்டி பூந்தமல்லியில் ரூ.75 லட்சம் மதிப்பில் வீடு ஒன்றை வாங்கி மகன் பெயரில் எழுதி வைத்தான் ஹரி. மகன், மருமகளுடன் ஹரியும், சுமதியும் அதிக நாட்கள் ஒற்றுமையாக இருக்கவில்லை. கலாசாரச் சிக்கல்களால் சின்னச்சின்ன பிரச்னைகள் பெரிதாக, ஒருகட்டத்தில் சண்டை முற்றிவிட, வீட்டைவிட்டு ஹரியும் சுமதியும் வெளியேறினார்கள்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 9

மிச்சமுள்ள எதிர்காலத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள் இருவரும். நீங்கள் ஆலோசனை சொன்னால் நன்றாக இருக்கும்” என்று முடித்தார் சிவராமன்.

‘‘ஹரிக்கு ஏதாவது கடன் இருக்கிறதா?’’ என்று  நான் கேட்டேன். ‘‘ஆமாம். மகன் திருமணத்துக்கு வாங்கிய கடன் ரூ.10 லட்சம் இருக்கிறது. அதுகூட பரவாயில்லை. நான்தான் கொடுத்துள்ளேன். பத்து வருடங்களுக்கு முன்பு போரூரில் மெயின்ரோடு பக்கத்திலேயே ஒரு கிரவுண்ட் 15 லட்சம் ரூபாய்க்கு மனை கிடைத்தது. நான்தான் ஹரியைக் கட்டாயப் படுத்தி வாங்கலாம் என்றேன். ஆளுக்கு 2 கிரவுண்ட் லோன் போட்டு வாங்கினோம். நான் வாங்கும் போதே உங்களிடம் ஆலோசனை கேட்டுத்தான் வாங்கினேன்.

மனை வாங்கியவுடன் வீட்டு லோன் மூலம் ஹரி அரை கிரவுண்டில் வீட்டை கட்டிவிட்டான். நான்தான் மனையாக அப்படியே வைத்திருக்கிறேன்.மனை வாங்கியது, வீடு கட்டியது, திருமணக் கடன் என கடன் தொகை ரூ.35 லட்சம் வரை உள்ளது. அதுதான் பெரும் கவலை’’ என்றார் சிவராமன்.

நான் ஹரியின் பக்கம் திரும்பி, “ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துள்ளீர்களா?” என்றேன். ‘‘என் மனைவிக்கும், எனக்கும் சேர்த்து ரூ.3 லட்சத்துக்கு எடுத்துள்ளேன்’’ என்றார் ஹரி.

நான் சிவராமனிடம், “நீங்கள் வாங்கிப் போட்டுள்ள மனை இப்போது என்ன மதிப்பில் உள்ளது?” என்றேன்.  “எங்கள் பக்கத்து பிளாட்காரர் அபார்ட்மென்ட் கட்டுவதற்காக கிரவுண்ட் ரூ.85 லட்சத்துக்கு விற்றுள்ளார். என்னிடமும் கேட்டார்கள். மகள் திருமணத்துக்கு வரன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். கூடிவந்ததும் விற்பனை செய்ய வேண்டும்’’ என்றார் சிவராமன்.

‘‘நீங்கள் நல்ல விலைக்கு வரும்போதே விற்றுவிட்டு எஃப்.டி-யில் போட்டு வையுங்கள். ஹரியின் வீடு உள்ள அரை கிரவுண்ட் போக, மீதியுள்ள காலி மனை ஒன்றரை கிரவுண்டையும் விற்க உதவுங்கள். ஹரிக்கு ரூ.1.25 கோடி அளவுக்கு கிடைக்கும். கடன் தொகை ரூ.35 லட்சத்தை மொத்தமாகச் செலுத்திவிடலாம். ஹெல்த் இன்ஷூரன்ஸ் இன்னும் ரூ.3 லட்சத்துக்கு எடுத்துக்கொள்வது நல்லது. மீதியுள்ள பணத்தை எஃப்.டி-யில் வைத்துகொண்டால், அதன் மூலமான வட்டி வருமானத்தில் வாழ்க்கையை நடத்தலாம். வீடு சொந்தமாக இருப்பதால், மாதம் ரூ.15,000 இப்போதைக்குப் போதும். வட்டி வருமானத்தில் மீதப்படும் தொகையை மறுமுதலீடு செய்துவந்தால், எதிர்காலத்தில் வரக்கூடிய பணவீக்கத்தைச் சமாளிக்க உதவும்.

அப்படியே, மகனுடன் விரைவில் சமாதானம் செய்துவைக்க முயற்சி செய்யுங்கள். மகனுடைய கவனிப்பு ஹரிக்குக் கூடுதல் பலத்தையும் நிம்மதியையும் தரும்” என்று சொன்னேன்.

தேவையே இல்லாத நேரங்களிலும் வலிந்துபோய் செலவுகளைச் செய்தது ஹரியிடம் இருந்த தவறான குணம். அடுத்து, முதலீடு செய்ய வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் இருந்தது எல்லா சிக்கல்களுக்கும் காரணமாக அமைந்துவிட்டன. மகன் மீது பாசம்வைத்து வீடு வாங்கிக்கொடுத்தது தவறல்ல. தன் காலத்துக்குப் பிறகு சொத்துகள் பிள்ளைகளுக்குச் சென்று சேரும் வகையில் ஏற்பாடு செய்யாமல் விட்டதே தவறு.

சில மாதங்களில் ஹரி தனியாக வந்து என்னைச் சந்தித்தார். “நீங்கள் சொன்னபடி சிவராமன் செய்து தந்தார். நானும் என் மனைவியும் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம். என் மகனும் மருமகளும் பொங்கலுக்கு எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். எங்களையும் அவர்கள் வீட்டுக்கு வரும்படி அழைத்திருக்கிறார்கள்’’ என்று புன்னகைத்தபடி கிளம்பிப்போனார்.

(கற்போம்)